Thursday, October 05, 2006

குடும்ப அரசியல்:

குடும்ப அரசியல்:

காங்கிரஸ் : நேரு - இந்திரா - சஞ்ஜெய் காந்தி - ராஜிவ் காந்தி - மேனகா காந்தி - சோனியா காந்தி - ராகுல்

அதிமுக : எம்.ஜி.ஆர் - ஜானகி - ஜெயா - இவருடைய வளர்ப்பு மகன் (ஆக்டிவ் பாலிடிக்ஸில் இல்லை )

தே.மு.தி.க : விசயகாந்த் - மச்சான் - விசயகாந்தின் மனைவி

மதிமுக : வைகோ - அவர் மகன் கடந்த தேர்தலில் தொகுதி பங்கீட்டில் பேசியதாக செய்தி வந்தது

பா.ம.க : ராமதாஸ் - அன்புமணி

திமுக : மு.க - ஸ்டாலின் - அழகிரி (ஆக்டிவ் பாலிடிக்ஸில் இல்லை - தொண்டர் போல் வேலை செய்கிறார்)

எனக்கு தெரிந்த ஒரு லிஸ்ட் போட்டுள்ளேன். இதில் எல்லா கட்சிகளும் முகவை குறை கூறுவது குடும்ப அரசியல். சரி மற்ற கட்சிகளில் இருப்பது என்ன அரசியல்? விசயகாந்த் ரொம்ப சவுண்டு குடுத்தாரு.. இப்ப என்ன சொல்லப்போறாரு. எல்லா அரசியல்வாதியும் தன் குடும்பத்தில் யாராவது ஒருவர் தனக்கு பின்னால் வரவேண்டும் என்று நினைப்பர். அதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. மற்ற எல்லாத் துறைகளிலும் தனக்கு பின் தன் வாரிசு வறவேண்டும் என்று நினைக்கும் போது இதில் முக என்ன குற்றம் புரிந்தார். ஸ்டாலினின் வளர்ச்சி விகிதத்தை மற்ற வாரிசுகளுடன் ஒப்பிட்டு குடும்ப அரசியல் பற்றி பேசுவது சாலச்சிறந்தது. சாதாரண வேலைக்கே சிபாரிசு தேவைப்படும் இக்காலத்தில் அரசியலில் ஈடுபட்டு ஒரு பதவிக்காக சிபாரிசு பெறுவது யாரிடம் பெற்றால் என்ன? இதிலும் முகவின் தலையை உருட்டுவார்கள்.

இலவசம் - சைக்கிள் கொடுத்தால் மவராசி செயா கொடுத்தா என்பார்கள். அதே டிவி கொடுத்தால் அவன் பணத்தையா கொடுக்கிறான், அரசாங்க பணத்தில் கொடுக்கிறான். டிவி கொடுத்தா போதுமா? மின்சாரம், கேபிள் யார் கொடுப்பா? ரிப்பேர் ஆன என்ன பன்றது? ஏம்பா சைக்கிள் ரிப்பேர் ஆகாத. சைக்கிள் கதி என்ன என்று பேப்பரில் போட்டார்கள். சைக்கிளுக்கு என்ன செலவோ அது தான் டிவி வாங்க ஆகுது. இலவச திருமணம் நடத்துதே அங்கே போய் கேட்க வேண்டியது தானே - கல்யாணம் பண்ணி வச்சிங்க? யார் பணம் கொடுப்பா குடும்பம் நடத்த? பிள்ளை யார் கொடுப்பாங்கன்னு?

இலவசமா மாடு கொடுக்கவேண்டியது தானே? அப்படின்னு ஒருத்தர் கேள்விகேட்டாரு. டிவிய உருவாக்கலாம். மாட்ட உருவாக்க முடியுமா? அதுவா வந்தாத்தான் (குட்டி போட்டாத்தான்) ஆச்சி.. இலவச நிலமும் அப்படித்தான். செயா அமைச்சர் அறிவித்த போது எங்க போச்சி புத்தி... இருக்கறது கொடுக்கிறாங்க... கிடைச்சவங்க பொழைக்க வேண்டியது தான்.

முக பண்ற வேலையில குற்றம் கண்டு பிடிக்கறத விட்டுட்டு வேற என்ன பண்ணா ஆட்சிக்கு வராலம்னு பாருங்க...

2 Comments:

Blogger Subhash said...

For your question, why not the leaders want their sons to be their heirs in their party, my answer is that the political aprty is not their personal property making thier legal heirs to inherite it. It belongs to the true workers of the respective parties and the political parties are growing on the strength of the sacrifice of thousands of party workers, which cannot be simply inherited by the sons / daughters of the respective political parties at the whims and fancies of the person at the helm of affirs. Nehru family has inherited India because of the sycophancy of the spineless, shameless congressmen. Do you want all the party workers enact the same drama and want the sons / daughters of thier respective political parties rich and find a place among top 10 rich persons?
K.Subhash Chandiran

April 10, 2007 6:58 am  
Blogger BioHzrd said...

What a lame post!!
Do you need TV more than cycle.?
Many don't even have food to survive..where is the question of watching TV..
Don't blindly support someone be it DMK or ADMK. And, what is the use of giving free land if it is not arable?? Also, will u leave ur current residence and go somewhere just bcoz someone is giving useless peice of shit somewhere else..? Would you?
PS: I don belong to any party.

December 27, 2007 7:39 am  

Post a Comment

<< Home