Saturday, November 03, 2007

பிரிகேடியர் சுப.தமிழ்செல்வனுக்கு என் வீரவணக்கம்!



ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய முதல் மரணம் இது. அவரின் குழந்தைத் தனமான சிரிப்பும் கண்ணியமிக்க பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தவை. தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய இழப்பு.


தமிழீழத் தோழர்களே கலங்காதீர்கள்!.


பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் அவர்களின் இழப்பு மாபெரும் இழப்பு தான் என்றாலும் போரில் இழப்புகள் இருக்கத்தான் செய்யும் என்று மனதை திடமாக்கிக்கொண்டு மீள்வோம்.


கடந்த 25 ஆண்டுகளில் இழந்த வீரர்கள் ஏராளம். அவர்கள் சிந்திய ரத்தம் மேன்மேலும் புலிகளை உத்வேகத்தில் களம் காணச்செய்யும்.


சிங்கள பேரின வாதத்திற்கு எதிராக பலநாடுகள் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. அவற்றின் பிரதிபலிப்பாக தமிழீழம் விரைவில் மலர இருக்கிறது. மாவீரர் நாள் நோக்கி மலர இருக்கும் தமிழீழத்தை நோக்கி உறுதி கொண்ட இதயத்துடன் பயணிப்போம்.


சிறிய அளவு கண்டனத்தை கூட இதுவரை வெளியிடாத இந்திய அரசின் குடிமகனாக, இந்தியத்தமிழனாக இருப்பதில் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.