Thursday, October 09, 2008

நாதியற்றது நம் தமிழினமா?



மேலே உள்ள இருபடங்களும் பிபிசி செய்தியில் வந்த புகைப்படங்கள். படத்தைப் பார்த்தும் தமிழர்களுக்கு உணர்வு வரவில்லை என்றால் பிறப்பு சந்தேகத்துக்குரியது, அர்த்தமற்றது.

தமிழினமே உமக்கு சிந்திக்கும் திறன் குறைந்துவிட்டதா? 30கிமீ தொலைவில் அங்கே கேயேந்தி ஆதரவு கேட்கும் குரல் கேட்கவில்லையா?

1983ல் கொடுத்த குரல்கள் எங்கே போய்விட்டது. ? இணைந்த கைகள் எங்கே?

அரசியலுக்கு அப்பாற்பட்டு அங்கே இன்னலுரும் நம் இனத்திற்காக ஒரு சொட்டு கண்ணீராவது விடுவாயா?

அமைதி தவழவேண்டிய நம் குழந்தைகளின் முகத்திலே குண்டுகளின் சத்தம் கேட்கமுடியாமல் காதை அடைத்துக்கொண்டிருப்பது கண்டும் உன்மனம் கலங்கவில்லையா?

நம் இனம் அழிக்கப்படவேண்டிய இனமா? நாதியற்றது நம் தமிழினமா?
தமிழா இன உணர்வு கொள்ளடா!



4 Comments:

Blogger தேவன் said...

தமிழ் அரசு ஒன்று உலகில் இல்லாமையின் நட்டத்தை தோல் உரித்துக் காட்டுகின்றது.

October 09, 2008 12:49 pm  
Blogger Unknown said...

Dont you kill appavi sinhalese. Yesterday only LTT has killed 22 people in anuradhapura.எதோ அப்பாவி போல வேஷம்போடுறிங்க

October 10, 2008 7:07 am  
Blogger யூர்கன் க்ருகியர் said...

சாட்டையடி கேள்விகள்.
பதில் வரும் காலம் அதிக தூரமில்லை!

November 24, 2008 11:13 am  
Blogger Thamizhan said...

மிகவும் படித்துள்ள மன்மோகன் சிங்கும்,
கிருத்துவத்தில் பிறந்த சோனியாவும்
இந்தப் பச்சிளங் குழந்தைகளைக் கொல்லும் சிங்களத்திற்கு வான் படை உதவியாளர்களையும்,மற்றும் படைத் தளவாளங்கள் அனுப்புவதும் இனப் படு
கொலைக்குத் துணை போவதும் வெட்கக் கேடு.
ஹிட்லருக்கு உதவும் இவர்களைத் தமிழினம் மன்னிக்காது!

December 26, 2008 2:38 am  

Post a Comment

<< Home