திராவிடர் கழகத் தலைவருடன் ஒரு சந்திப்பு:
நேற்று திராவிடர் கழகத் தலைவருடன் ஒரு இனிமையான சந்திப்பு நிகழந்தது. ஞாயிறு அன்று காலை 11.30 மணி அளவில் சந்திப்பு நிகழ உள்ளதாகவும் வர இயலுமா என்று கேட்டிருந்தார் லக்கி. தமிழ்நாடுடாக் களத்தின் பதிவாளர்கள் லக்கிலுக், தமிழ்குரல் மற்றும் நான், வலைப்பூக்களில் எழுதும் முத்து தமிழினி, வரவனையான், பாலபாரதி, ஆர்குட் பதிவாளர் பிராபகரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டோம். வரவனையான் இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இச்சந்திப்பின் நோக்கம் திராவிட இயக்கத் தலைவர்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் இணையத்தில் எழுதப்படுவது குறித்தும், பெரியாரின் நூல்களை மின்னூல்களாக மாற்றுவது குறித்தும், திராவிட கழக இணையதளங்களை யுனிகோடாக மாற்றுவது குறித்தும் பேசப்பட்டது.
அறிமுகப்படலம் முடிவுற்றதும் சமீபத்தில் "வீரமணியின் சொத்து மதிப்பு 6000 கோடி" என வலைப்பூக்களில் எழுதப்பட்டது குறித்து திராவிடர் கழகத் தலைவரிடம் கூறப்பட்டது. அவர் இது பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். அக்கட்டுரையை எழுதிய அய்யங்காரின் பெயர் சொல்லி ஆச்சர்யப்பட வைத்தார். கம்யூனிச வேடம் பூசி இது போல் எழுதி வருவதாக கூறினார். லெளதீக பார்ப்பானுக்கும் வைதீக பார்ப்பானுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள உதாரணத்தை எடுத்துக்கூறினார். அவர்களின் உண்மை சொரூபத்தை கண்டு கொள்ள இடஒதுக்கீடு பற்றி பேசினாலே போதும் என்றார். வைதீக பார்ப்பனிடம் உள்ள ஆயுதம் வெளிப்படையானது அதனால் அவனை எதிர்கொள்ளமுடியும். ஆனால் லெளதீக பார்ப்பானிடம் ஜாக்கிரதையாக இருக்கும் வேண்டும் என்று பெரியார் கூறியதை நினைவு கூர்ந்தார். அய்யா அன்றே சரியாகத்தான் கூறியுள்ளார். இன்றும் அதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கோடைஇடி எம்.கே.குப்தாவை பற்றி பேசினார். வெற்றி கொண்டான் போல் அக்காலத்தில் பேசியதிலிருந்து சிலவற்றை எடுத்துக்கூறினார். ஆண் சாமியும், பெண் சாமியும் இருக்கும் போது அய்யர் பெண் சாமியோட சேலையை அவிழ்த்து குளிப்பாட்டுவதை எப்படி ஆண் சாமி பார்த்துக் கொண்டிருக்கிறது என வினவினார் பேச்சின் போது (யாருக்காவது ஏதாவது தெரிந்தால் சொல்லவும்)
பெரியாரை பெரியமாமா என்றும் வீரமணியை சின்னமாமா என்று பார்ப்பனர்கள் எழுவதை சொன்ன போது, சரி மாமா வேலை பார்ப்பவர்கள் கண்களுக்கு மற்றவர்கள் அதே மாதிரி தெரிவதில் ஆச்சர்யம் இல்லை என்றார். அரங்கேற்றம் படத்தில் அக்ரஹாரத்தில் ஒருவாரம் நடப்பவற்றைத்தான் எடுத்துள்ளார்கள் அதை முதலில் பார்த்துவிட்டு பின் வந்து பேசட்டும் என்றார்.
சந்திப்பின் போது திரு.வீரமணி அனைத்து உதவிகளையும் செய்யத்தயாராக இருப்பதாகவும் மின்னூல்களாக மாற்றவும், யுனிகோடக மாற்றவும் உத்தரவிட்டார்.
திராவிடக்கழகத் தலைவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டோம். அய்யாவின் கருவூலத்தில் நடந்த இச்சந்திப்பு ஒரு மகிழ்ச்சிகரமான சந்திப்பு. சந்திப்பு முடிந்து அய்யா உபயோகப்படுத்திய பொருட்கள் அருகே நின்றும், அய்யாவின் நினைவிடத்திலும் நிழற்படங்கள் எடுத்துக்கொண்டோம். அய்யாவின் இறுதி ஊர்வலம் சம்பந்தமான புகைப்படங்கள் கருவூலத்தில் நிறந்திருந்தது.
கூடிய விரைவில் பெரியார் திடலில் திராவிட இயக்கக் கொள்கைகளை பற்றிய கருத்தரங்கம் சனி மற்றும் ஞாயிறு நடத்த முடிவு செய்யப்பட்டது. வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வலைப்பதிவாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை திராவிடர்கழகம் ஏற்பாடு செய்ய உள்ளது.
இச்சந்திப்பிற்கு என்னை வரவழைத்த லக்கிலுக்கிற்கு மனமாரந்த நன்றிகள்.
6 Comments:
நல்லது . தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .
நல்லதொரு சந்திப்பு மற்றும் முயற்சி. திராவிடர் தலைவரின் மேல் சில பாம்புகள் கொத்தும் வேளையில் பயனுள்ள பதிவு
நல்லதொரு சந்திப்பு மற்றும் முயற்சி. திராவிடர் தலைவரின் மேல் சில பாம்புகள் கொத்தும் வேளையில் பயனுள்ள பதிவு
அருமையான செய்தி தோழர்! தொடரட்டும் அய்யா பணி!
அழியட்டும் பார்ப்பனீயப் பிணி!
why is this Blog stopped at july 2007
Why is that the blog is not getting updated
Post a Comment
<< Home