டாக்டர்.கோவூரின் சவால்கள்
கடவுள் சக்திக்கு வக்காலத்து வாங்கும் சங்கராச்சாரி முதல் சாய்பாபா வரை மதவாதிகள் எவரும் சந்திக்க முடியாத கோவூரின் சவால்கள் வருமாறு :
1. முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.
2. ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.
3. கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.
4. நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.
5. மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.
6. தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.
7. பிரார்த்தனை, அத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.
8. யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.
9. யோக சக்தியால் அய்ந்தே மணிதுளி அய்ந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.
10. நீரில் நடந்து காட்டுக.
11. உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.
12. யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.
13. ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.
14. நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.
15. நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.
16. மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.
17.பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்த காட்டுக.
18. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளை கண்டுபித்துக் காட்டுக.
19. வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.
20. ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.
21. ஜோதிடமும், கைரேகை சா°திரமும் விஞ்ஞான ரீதியிலானவை என்று உரிமை பாராட்டி ஏராளமான ஏமாந்த சோணகிரிகளை ஏமாற்றி வரும் ஜோதிடர்களும், கைரேகை வல்லுநர்களும் பின்வரும் சவாலை ஏற்பார்களா? மிகச் சரியாக அட்சதீர்க்காம்சங்களுக்கு இணங்க துல்லியமான பிறந்த நேரம், பிறந்த இடம் இவற்றோடு கணிக்கப்பட்டு தரப்படும் 10 ஜாதகங்கள் அல்லத கைரேகை பதிவுகளிலிருந்து இவை ஆண்களுடையன, இவை பெண்களுடையன, இவை இறந்தவர்களுடையன, இவை உயிரோடு இருப்பவர்களுடையன என்று அய்ந்த விழுக்காடு பிழைக்குட்பட்டு தேர்ந்ததெடுத்துக்காட்டுக.
என் சவால்களை ஏற்க அற்புதம் செய்பவர்கள் எனப்படுவோர் எவரேனும் முன் வருக. ஏற்ற என்னை வென்று ரூ.நூறாயிரம் பரிசு பெறுக.-டாக்டர் கோவூர்.
தான் செய்து காட்டும் அற்புதத்தைப் புலனாய்வுக்கு உட்படுத்த அனுமதிக்காதவன் ஓர் அயோக்கியன்! ஓர் அற்புதத்தைப் புலனாய்வு செய்யும் மனத் துணிவற்றவன் ஏமாளி!! சரி பார்ர்தல் இன்றியே ஓர் அற்புதத்தை அப்படியே நம்பத் தயாராய் இருப்பவன் முழு மூடன்!!-டாக்டர். கோவூர்.
4 Comments:
சூப்பர் கேள்விகள். இந்தக் கேள்விக்கு எந்தப் பயலும் ஒன்னும் சொல்ல முடியாது.
இன்று மதவாதிகளைப் பொறுத்துக் கொண்டும்,போற்றிக் கொண்டுமிருப்பவர்கள் தங்கள் எதிர்காலச் சந்ததிகட்குப்பெருந்துரோகம் செய்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.
பிரமானந்தசாமியின் முன் எத்துனை படித்த,பதவி வகித்தோர் ஏமாந்தனர்?
சந்திரசாமியின் முன்னே ஏமாந்தவர் சாட்சாத் நரசிம்ம ராவ் அவரே!
சாயிபாபாவின் ஏமாற்று வித்தைகள் அவர் செய்யும் சில நல்ல காரியங்களால் மறைக்கப் பட்டுள்ளன்?அங்கு நடந்த கொலைகளுக்கு என்ன பதில்?
பட்டப் பகலிலே கோவிலிலேயே தன்னுடையப் பழைய உழைப்பாளியைக் கொன்றதாக்வும்,மற்ற காமக் களியாட்டங்களிலும் ஈடுபட்டுள்ள சுப்பிரமணி இன்னும் சங்கராச்சியாக உலா வருவது எவ்வளவு பெரிய அநியாயம்,துரோகம்.இந்த் ஆளின் அக்கிரமங்களை முன்னரே தெரிந்திருந்தும் வெளி உலகிற்குச் சொல்லாத வெங்கட்ராமன் எப்பேர் பட்டத் துரோகத்தை மக்கட்குச் செய்துள்ளார்?
David Blaine performs most of these feats...
பிரபு,
David Blaine இதைச் செய்தாலும் இதை கடவுளின் செயல் என்று தன்னை அவதாரமாகச் சொல்வது இல்லை. அவர் செய்வது Magic With strong focus on spectator and showmanship.பார்வையாளர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் கலை.
சும்மா 10 வித்தை தெரிந்தவர்களே தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லும் இந்த உலகில் ,இன்றும் தன்னை street Magician ஆகத்தான் அடையாளப்படுத்துகிறார்.இவர் தன்னை சாய்ந்த பாபாவாகவோ அல்லது சாயாத பாபாவாகவோ சொல்வது இல்லை.
உதாரணம்:
இதில் அவர் அந்த பெண்ணின் கையில் ருந்து watch ஐ கழற்றுவதை நாம் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=s7Wvk-CVN-Y
Post a Comment
<< Home