Thursday, January 11, 2007

பெரியார் படப் பாடல் - பகவான் ஒருநாள்....

பகவான் ஒருநாள்.... பாடல்
எழுதியவர்: வைரமுத்து
பாடியோர்: மதுபாலகிருஷ்ணன் குருசரண், சூர்யபிரகாஷ், முரளிதரன்

லட்சுமண அய்யர்: பகவான் ஒருநாள்....ஆகாயம் படைச்சார் பூமியும் படைச்சார்வாயு அக்கினி ஜலமும் படைச்சுட்டு...கடைசியாத் தானே மனுஷாளப் படைச்சார்கடவுள் உலகத்தப் படைச்சார் -

ராமசாமி :இருக்கட்டும் - கடவுள யாரு ஓய் படைச்சார்?
(பெரியார்)

(கடவுள்...)லட்சுமணன்:கடவுள யாரு படைக்கமுடியும் ஓய் அவா சுயம்பு
பின்பாட்டு:ஆமா...
லட்சுமணன்:தானா உண்டானவா
பின்பாட்டு:ஆமா...
லட்சுமணன்:தான் தோன்றி
பின்பாட்டு:ஆமா...

ராமசாமி: கண்காணா உன் கடவுள்தான்தோன்றி ஆகிறப்போ -கண் கண்ட பேரண்டம்தான்தோன்றி ஆகாதோ?

(கடவுள்...)லட்சுமணன்:அசுரகுணம் உள்ளவாதான் - இப்படி அப°வரமாக் கேள்வி கேப்பா... தேவகுணம் இருந்தா இப்படிக்குதர்க்கமாப் பேசமாட்டா

ராமசாமி: இந்திரன் யாரு ஓய்...

லட்சுமணன்:தேவர்குலத் தலைவன்

ராமசாமி: இராவணன் யாரு ஓய்

லட்சுமணன்:அசுரர் குல அரசன்

ராமசாமி: காட்டில் இருந்த முனிவன் மனைவியின்கற்பைக் கெடுத்தவன் இந்திரன்
கவர்ந்து சென்ற மாற்றான் மனைவியைக்கற்போடு விட்டவன் இராவணன்
இப்பச் சொல்லும்குணத்தில் உயர்ந்தவன் யார்?தேவனா?அசுரனா?

லட்சுமணன்:அசுரகுலத்திலயும் அப்பப்போ நல்லவா இருந்திருக்காளே!நந்தனுக்கு மோட்சம் கொடுக்கலியோ நடராஜப் பெருமான்?

பின்பாட்டு:இல்லயா பின்ன?

ராமசாமி: நந்தனுக்கு மோட்சம் கொடுத்தீரா தீயிட்டு எரிமூட்டிமோசம் புரிந்தீரா?
மோட்சம் தந்தது.. மோட்சம் தந்ததுமுற்றிலும் உண்மையென்றால் -
அவன்சந்ததியெல்லாம் சந்நிதியிழந்து சந்தியிலே ஏன் நின்றான்?

லட்சுமணன்:மனுஷாளா இருந்தா மடியா இருக்கணுமோ இல்லியோ?தீட்டுன்னு பெரியவாதெரியாமலா சொன்னா?

ராமசாமி: தீட்டு என்னய்யா தீட்டு...
குடிக்கிற தண்ணியத் தொடப்படாது
குளத்துலயும் கால் படப்படாது
எப்படிய்யா வரும் சுத்தம்?
ஒங்க மேலதான் குத்தம்
குளிக்காத பசுவக் கும்புடுறீங்க
அதக்குளிப்பாட்டும் மனுசன ஏனய்யா கொல்றீங்க?

ராமசாமி: புராணம் இதிகாசம் - வெறும் பொய் மோசம்
பொய் பேசிப் பேசியே பொய்யாப் போச்சே தேசம்!!

லட்சுமணன்:புராணம் இதிகாசம் பொய்யில்லேங்காணும்

ராமசாமி: அப்படியாங்காணும் ஆதாரம் கூறும்!

லட்சுமணன்:அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்டகோடு மூணும்
அப்படியே இருக்குது ஓய் அழியலையே பாரும்

ராமசாமி: ஓகோ!முதுகத் தொட்டதும் மூணுகோடு விழுந்திருச்சோ?ஏங்காணும்!சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா - இல்லசீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?

லட்சுமணன்:நீர் விதண்டாவாதி. பேசப்படாது

ராமசாமி: இனிமேதான் சுவாமி பேசவே போறேன்

0 Comments:

Post a Comment

<< Home