சிறீரங்கம் போகாமல்தான் இருப்போமா?
Article by மின்சாரம்
1) கடவுள் நம்பிக்கையைப் பழித்தவர், ஹிந்து தெய்வங்கள்பற்றி மிகக் கேவலமாகப் பேசியவர், தெய்வங்களின் சித்திரங்களைச் செருப்பாலடித்தவர், விநாயகர் சிலைகளை உடைத்தவர் பெரியார். அவர் சிலையை, ஒரு கோவிலுக்கு முன்பாக வைப்பது, உள் நோக்கத்துடன் செய்யப்படுகிற காரியமே!’’ என்று வாய் நீளம் காட்டியுள்ளார் - பூணூல் திருமேனியான திருவாளர் `சோ’ ராமசாமி (`துக்ளக்’ 20.12.2006).
பொத்தாம் பொதுவில் பேசுவது என்பது கீழ்த்தரமான குணமாகும். கடவுள் நம்பிக்கையாளரை தந்தை பெரியார் எப்பொழுதுமே பழித்ததில்லை; தவத்திரு குன்றக்குடி அடிகளாரை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளை எந்த அளவுக்கு மதித்தார் என்பது ஊருக்கும் உலகுக்கும் தெரியுமே. தந்தை பெரியாரின் மனிதப் பண்பை பாராட்டாதார் யாருமிலர். கடவுள் நம்பிக்கை என்பதை பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு அவர் விமர்சித்திருக்கிறார்.
கடவுள் நம்பிக்கைதான் எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் மூல ஊற்று என்பதே அவரின் ஆழமான அறிவியல் கணிப்பு! உலகில் தோன்றிய சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் தெரிவித்த கருத் துகளை ஜீரணிக்க முடியாமல் ஆத்திரப்படுபவர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இருக்கவே செய்திருக்கிறார்கள்.
(2) ஹிந்து தெய்வங்கள்பற்றி மிக மிகக் கேவலமாகப்பேசியவராம்.
ஹிந்துதெய்வங்களை யாரும் கேவலமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஹிந்து தெய்வங்களின் ஆபாசமான பிறப்புகளும் (எடுத்துக்காட்டு, அரி, அரன் என்கிற இரு ஆண் கடவுள்களுக்கும் பிறந்தவன்தான் ஹரிஹரப்புத்திரன் என்ற அய்யப்பன்) கேவலமான நடத்தைகளும் (எடுத்துக்காட்டு: தாருகாவனத்து ரிஷிப் பத்தினிப் பெண்களை சிவன் கற்பழித்தான்) மனித சமூகத்திற்குக் கேடானவை. கடவுள்களே இவ்வளவுக் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டு இருந்தால், அவற்றை நம்பும் மக்களின் ஒழுக்க நிலை என்னாவது என்ற சமூகக் கவலையுடன், மானுடப் பற்றுடன் விமர்சிப்பது எப்படி ``கேவலமான’’ தாகும்? இந்தக் கேவலத்தை வழிபட வேண்டும் என்று கூறுபவர் கள்தான் உண்மையிலேயே மக்களைக் கேவலப்படுத்துபவர்கள் அல்லவா!
3) தெய்வங்களின் சித்திரங்களைச் செருப்பால் அடித்தவர்.
இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு. 1971-இல் சேலத்தில் நடத்தப்பட்ட மாநாட்டின் போது ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை பெரியார்மீது செருப்பு வீசியவர்கள்யார்? இன்றைய பா.ஜ.க.வின் முன்னோடியான ஜனசங்கத்தினர்தாம். அந்தச் செருப்பு பெரியார்மீது விழாமல் தடுக்கப்பட்டு, எந்த நோக்கத்துக்காக அன்று ஜனசங்கத்தினர் தந்தை பெரியார்மீது செருப்பை வீசினார்களோ, அதன் தன்மையைப் புரிந்து கொண்டு பேரணியில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் படத்தினை தொண்டர்கள் செருப்பு அபிஷேகம் செய்தனர் என்பதுதான் உண்மை.
1971 முதல் இன்று வரை திருவாளர் `சோ’ இந்த உண்மையின் பின்னணியை அப்படியே கருந்திரை போட்டு மறைத்துவிட்டு கோயபல்சு பிரச் சாரம் செய்து வருகிறார் என்பது அவரின் தகுதியை நிர்ணயிப்ப தாகும். மற்றபடி தந்தை பெரியாரோ -திராவிடர் கழகமோ ஒரு போராட் டமாக அறிவித்தோ, அறிக்கை வாயிலாகத் தெரிவித்தோ எந்தக் கடவுளையும் செருப்பாலடிக்கச் சொல்லவில்லை என்பதை ஆணித் தரமாகத் தெரிவித்துக் கொள்கி றோம். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.
4) விநாயகர் சிலையை உடைத்தவர் பெரியார் என்பது இனனொரு குற்றச்சாற்று
மகாராட்டிரத்தில் விநாயகனை முன்னிலைப்படுத்தி பால கங்காதர திலகர் மதவாத அமைப்பினைத் தூக்கி நிறுத்தினார். தமிழ்நாட்டிலும் கடைவிரித்து போனி செய்யலாம் என்று நினைத்தபோது, விநாயகர் கடவுள் சக்தி வாய்ந்தவர் என்ப தெல்லாம் பொய்ப் பிரச்சாரம், வெறும் மண் உருண்டைதான், சிலைகள்தான்; அவற்றிற்கு எந்தவித சக்தியும் கிடையாது என்பதை நிரூபிக்க, முன்கூட்டியே தேதியையும் அறிவித்து (27.5.1953) அந்த நாளில் நாடெங்கும் விநாயகன் சிலை உடைப்புப் போக்ரட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார். கோயிலுக்குள் இருக்கும் விநாயகர் சிலைகளையோ, பொம்மைகளையோ கவர்ந்து வந்து உடைக்கச் செய்யவில்லை. கடைகளில் விற்கும் விநாயகர் பொம்மைகளைக் காசு கொடுத்து வாங்கி வந்து உடைக்கச் செய்தார்.
கடவுள் இல்லை அதற்குச் சக்தியும் இல்லை என்று நிரூபணம் செய்து காட்டுவதற்காக ஒரு செயல்முறை விளக்கத்துக்காகசெய்து காட்டப்பட்ட ஓர் அறப்போராட்டம்தான் அது. இதனைக் கொச்சைப் படுத்திக் காட்ட முனைபவர்களின் மூளைதான் விஷமத்தனமானது - கொச்சைத்தனத்துக்குக் குத்தகை போனதுமாகும்.
இவற்றை மட்டுமே உண்மைக்கு மாறாக உயர்த்திப் பிடித்துக் காட்டும் இந்தக் கும்பல் - தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், ஜாதி ஒழிப்புக் கொள்கைகள், பெண்ணுரிமைக் கோட்பாடுகள், மனிதநேயச் செயல்பாடுகள், சமூகநீதி எண்ணங்கள் இவற்றைப்பற்றிப் பேசுவ தில்லையே ஏன்?
பெரியார் ஒரு தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக் ரட்டீ°, மூடநம்பிக்கைகளின் கடும் எதிரி என்று அய்.நா.வின் யுனெ°கோ விருது வழங்கியதே அதைப்பற்றி கணக்கில் கொள்ளாத தேன்?
இவற்றின் அடிப்படையில் தந்தை பெரியார் சிலையைக் கோவில்களுக்குமுன் நிறுவுவதில் என்ன தவறு என்று இன்னொரு கோணத்தில் காணத் தவறுவது - ஏன்?
காரணம் உண்டு; இந்த மாபெரும் தலைவர் அல்லவா பார்ப்பன ஆதிக்கத்தை ஆணிவேர் வரை சென்று அழித்தார்; அவர்களின் பாதுகாவல் அரண்களான ஹிந்து மதத்தையும், அவற்றின் ஆபாசமான கடவுள்களையும் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டி வெற்றியும் பெற்றார். அந்த ஆத்திரத்தின் தாக்குதலால் துடிதுடித்தவர்களின் துஷ்ட வார்த்தைகள்தான் இவை.இதற்கெல்லாம் பதிலடி சவுக்கைக் கட்டைகஇளால் அல்ல - சத்தான நமது கொள்கை வழிப் பிரச்சாரக் கோடை இடிப் பெரு முழக்கம்தான்!
3 Comments:
தேவையான பதிவு.
ஓரின சேர்க்கைக்கு அப்போதே அச்சாரம் போடிருந்தார்களா இதுகள்.
தெரியாத அசிங்கத்தை பகிர்ந்தமைக்கு ........
நன்றி.
விட்டுத்தள்ளுங்கள் ஐயா, அந்த முண்ட கண்ணனை.
வரும் இந்தியாவை ஆளப்போவது தமிழ்நாட்டு பகுத்தறிவாளர்களே!
பார்த்தீரா இப்போதே, நம் தமிழ் மத்திய அமைச்சர்கள் சாக்கை போடு போடுவதை!
கவனத்தை, விழிப்பை தளரவிடாமல் பாய்வதற்கு தயாராகுவோம்!
கணக்கு தீர்க்க வேண்டிய நேரம் நெருங்கி வந்து விட்டது!
"எடுத்துக்காட்டு, அரி, அரன் என்கிற இரு ஆண் கடவுள்களுக்கும் பிறந்தவன்தான் ஹரிஹரப்புத்திரன் என்ற அய்யப்பன்) கேவலமான நடத்தைகளும்"
what is wrong with that? On one side, you guys speak about free sex, gay rights etc; on the other side, you ridicule them. Hypocrisy and periyarites are so related to one another??? thats right!! hahaha
maasila,
"கணக்கு தீர்க்க வேண்டிய நேரம் நெருங்கி வந்து விட்டது!"
endha kanakku? evvalavu nalaikku sakkai podu poduvargal. nalaikku BJP powerkku vara madhiri irundha avanga pinnalaye oduvargal. indha madhiri leadersa nambi irukkeenga.super!!
what is required is positive, pro-active progress. unga leaders kitta nepostism, casteism idhellam irukkannu illayannu honesta yosichu paathirukkengala? evvalavu deserving Dalits mela vandhirukkanga oru survey ungalala kudukka mudiyuma?
Post a Comment
<< Home