பரமசிவனின் திருவிளையாடல்
துரோணாச்சாரி பாண்டவர் களின் குரு. அர்ச்சுனனுக்கு அபார மானவில் வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவன். ஏகலைவன் எனும் ஆதிவாசி - கிரிஜன் - வித்தை கற்றுக்கொள்ள இவனை அணுகினான். என்ன ஜாதி என்று கேட்டான் துரோணாச்சாரி. ஆதிவாசி என்றான் ஏகலைவன்! தாழ்ந்த ஜாதிக்காரனுக்குச் சொல் லித்தர மாட்டேன். இது சத்திரியர் களுக்குரியது என்றான்.
ஏகல்யவா (இப்படித்தான் வடமொழியில் பெயர்) போய் விட்டான். ஒரு மண்பொம்மையை வைத்து அதன் முன்னால் பயிற்சி தொடங்கி வில்வித்தையில் மிகத் திறமை பெற்றவனானான். அவனது திறமையை ஒரு நாள் கண்ணால் கண்ட துரோணன் அவனது குரு யார் என்று கேட்டான். தாங்கள் தான் என்றான் ஏகல்யவன். குரு தட்சணையாக உன் வலது கட்டை விரலை கொடு என்றான் குரு. நம் ஆள் வெட்டிக் கொடுத்து விட்டான். (தொடர்ந்து இன்று வரை அவாளுக்குக் கொட்டிக் கொடுத்துக் கொண்டு வருகிறான்) குரு மகிழ்ந்தான்... பயல் இனிமேல் நாணேற்றி அம்பு தொடுக்க முடி யாதல்லவா என்று குரூரச் சந் தோஷப்பட்டான் துரோனாச்சாரி!
தெரிந்த கதைதானே எனச் சொல்லாதீர்கள்.துரோணனுக்கு ஒரு மனைவி உண்டு. பிரம்மச்சரியம், கிருக°தம், வானப்பிர°தம் பின்னர்தான் சன்யாசம். காஞ்சி மடத் தலைவர் போன்று பிரம்மச்சர்யம் முடிந் ததும் "டிரிப்பிள் ஜம்ப்' செய்து சன்யாசம் வாங்கியவரல்லர் துரோணர். (கட்டினால் தான் மனைவியா? மனைவியோடு வாழ்ந்தால்தான் கிருக°தமா? தலைக் காவேரி "ஜாலி டூர்" கிருக°தம்தானே என்றெல்லாம் கேட்கப்படாது)
துரோணர் மனைவி கிருபி (சரியாகப் படியுங்கள் - குரூபி அல்ல) என்பவள் நிரம்ப அழகு! 'ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே' என்று வெளிப்படையாகவே சொல்லக் கூடிய அழகு. அவளழகு மூன்று லோகத்திலும் பிரசித்தம். முக் கண்ணன் கவனத்திற்கும் அவளழகு போனது. பார்த்தான் பரமசிவன். அப்படியே உருகிப் போனது - அவனது மனதுதான்!"அடைந்தால் மகாதேவி. இல்லையேல் மரணதேவி என வீரப்பா வசனம் பேசிக் கொண்டான் மனதுக்குள். (60 வயதுக்கு மேற்பட்டவர்கட்கு இந்த வசனம் வந்த சினிமா பார்த்த நினைவிருக்கும்)
ஒரு நாள் -வழக்கம் போல கிழட்டு "பிராமணன்" வேடம் போட்டுக் கொண்டு - (சிவனடியார் என்றால் அப்படித்தான் ஒப்பனை செய்து கொள்ள வேண்டும்) துரோணர் இல்லாத நேரத்தில் வீட்டுக்குப் போய் பிச்சை கேட்டான், பிச்சாண்டி!கிருபி வெளியே வந்தாள். சிவனடியாரைப் பார்த்தாள். உள்ளே அழைத்தாள். கை, கால் அலம்பிக் கொள்ளச் செம்பில் நீர் தந்தாள். பிச்சாண்டியும் கழுவிக் கொண்டு உள்ளே போனான்.ஆசனம் தந்து அமரச் சொன்னாள். அமர்ந்தவன் முன் இலை வைத்து அமுது படைத்தாள். வாய் திறந்தான் பிச்சாடணன் - பரமசிவன்.
"அம்மையே! அடியவனுக்கு ஓர் அவா""சொல்லுங்கள், சுவாமி""வெறும் அமுதுண்டு போக வரவில்லை, நான்""வேறென்ன வேண்டும்? தயங்காமல் சொல்லுங்கள். அடிய வள் தட்டாமல் செய்கிறேன்""புதிதாக ஏதும் செய்ய வேண்டாம்""புதிர் போடாமல் சொல்லுங் கள், சுவாமி""ம்... ம்... நீ ஆடை ஒன்றும் அணியாமல் - அம்மணமாக வந்து அமுது படைக்க வேண்டும். அதுதான் என் நெடுநாள் அவா""அதற்கென்ன சுவாமி! அப்படியே" என்று கூறிய கிருபி மளமளவெனச் சேலையை அவிழ்த்து எறிந்துவிட்டுக் கையில் கரண்டியை எடுத்தாள் - குழம்பு ஊற்ற.
பரமசிவன் °தம்பித்து விட்டான். கண்கள் அவளது குறியையே குறி வைத்து பார்த்தன. அவன் ஜென்ம சாபல்யமடைந்து விட்டது போன்ற பெரு மகிழ்ச்சி அவன் உடலெங்கும் பரவியது. மாறன் கணை தைக்க வேண்டிய இடத்தில் தைத்து விட்டது.சோற்றில் முனிவனின் மனைவி குழம்பு ஊற்றுவதற்கு முன்னால் - முப்புரமெரித்த விரிசடைக் கடவு ளின் காமாந்தகாரத்தால் - மன விகாரத்தால் - உடலில் விவகார மாகி - குழம்புக்குப் பதில் விந்து ஊற்றப்பட்டுவிட்டது. முனிவனின் மனைவி பதைபதைத்தாள். "அய்யோ, அடியவர் அன்ன மருந்துவதற்குமுன் அபச்சாரமாகி விட்டதே! வேறு அமுது படைக்க வேண்டும்" என்று எண்ணி விந்துடன் கூடிய சோறு இருந்த இலையை எடுத்தாள் கிருபி.
"பெண்ணே! நான் இச்சித்து வந்தது நிறைவேறி விட்டது. இந்தச் சோற்றை வாசலில் கட்டியிருக்கும் குதிரையின் முன் வை. அது சாப்பிடட்டும்" என்று கூறிப் போய்விட்டார். ஆணின் தவிப்பு அடங்கி விட்டது.குதிரைக்கு விந்து நிறைந்த சோற்றை வைத்தாள். குதிரை சோறு தின்றது.
அசுவத்தாமன் பிறந்தான்.
1 Comments:
இந்தக் கதையைப் படித்து விட்டு LORD OF THE RINGS படம் எடுத்தவன் நாண்டுக்கிட்டு சாகணும்
Post a Comment
<< Home