Tuesday, December 12, 2006

இராம.கோபாலனுக்கு நெரிகட்டியது

Article by மின்சாரம்

சிறீரங்கத்தில் தந்தை பெரியாரின் சிலை என்றதும் பார்ப்பனர்களுக்கு நெரி கட்டிவிட்டது. இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திருவாளர் இராம. கோபால அய்யர்வாள் வழக்கம்போல தமது உளறல் பாராயணத்தைப் பாட ஆரம்பித்து விட்டார்.கேள்வி மன்னன் என்ற நினைப்பு அவருக்கு - அதுதான் கேள்விகளைத் தொடுத்துள்ளார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஒழுங்கான கேள்விகளைக் கேட்க புத்திசாலித்தனம் வேண்டும். இவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் வேடிக்கையானவை. ``நாட்டில் ஆயிரம் இடம் இருக்கும்போது குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவில் முன்பு சிலை அமைக்க வேண்டும் என்பதன் காரணம் என்ன? அந்த இடம் பெரியார் பிறந்த இடமா? அல்லது மறைந்த இடமா? இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும் - இது ஒரு கேள்வி என்று கேட்டுள்ளார் இராம. கோபால வா(ல்)ள்.

திருவாளர் இராம. கோபாலவாளின் `ஆசைப்படி’ இன்னும் ஆயிரம் ஆயிரம் இடங்களில் கண்டிப்பாக தந்தை பெரியார் சிலையை வைப்போம் - கவலைப்பட வேண்டாம். சிறீரங்கம் பெரியார் பிறந்த இடமா - அல்லது மறைந்த இடமா என்று கேட்கிறார். இந்தக் கேள்வியை காந்தியாரிடமிருந்து, பாலகங்காதர திலகர் வரை சம்பந்தப்படுத்திக் கேட்க முடியுமே - ஏன் கேட்கவில்லை?

திருவரங்கத்தில் தந்தை பெரியார் சிலை வைக்கக் கூடாது என்பதற்காக மடடும் `குயுக்தியாக’ இந்தக் கேள்வி கிளம்புகிறது என்று தானே பொருள். பெரியார் ஓர் ஊருக்கோ குறிப்பிட்ட இடத்துக்கோ மட்டும் சொந்தமானவர் அல்லர். ஒட்டு மொத்தமான தமிழர் சமுதாயத்துக்கே சொந்தமானவர் `தந்தை பெரியார்’ கட்சி, ஜாதி மதங்களைக் கடந்து போற்றப்படுபவர்; ``தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீ°’’ என்று அய்.நா.மன்றத்தால் பாராட்டப்பட்டு விருது அளிக்கப்பட்டவர். அத்தகைய ஒரு தலைவருக்கு ஈரோட்டில் மட்டுமோ, வேலூரில் மட்டுமோ, சென்னையில் மட்டுமோதான் சிலை வைக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது பித்துக்குளித்தனம்தான்!

உத்தரப்பிரதேசத்தில் லக்னோவிலும், ஆந்திர மாநில விசாகப்பட்டினத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும்கூட தந்தை பெரியார் சிலை வைக்கப்பட உள்ளதே - அப்பொழுது என்ன செய்யப்போகிறார்? ஒருக்கால் `தற்கொலை’ செய்து கொண்டு விடுவாரோ! கருத்துகளைக் கருத்துகளால் சந்திக்க முடியாத தொடை நடுங்கிகள் இப்படி கீழ்த்தரமான புத்தியின் - கேவலமான சிந்தனையின் வெளிப்பாடாகத் தங்களைத் தாங்களே அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள்படும்.

பெரியார் பிறந்த இடத்திலோ, மறைந்த இடத்திலோ தான் சிலை வைக்க வேண்டும் என்று கூறுகிற இதே பேர் வழிதான், அதே வரியில் பெரியார் சிலை வைக்க நாட்டில் ஆயிரம் ஆயிரம் இடங்கள் இருக்கிறனவே என்று கூறுகிறார். ஏனிந்த முரண்பாடு? புத்தி பேதலிக்கும்போது, ஆத்திரம் அலைமோதும்போது இப்படித்தான் முரண்பாடுகள் பிய்த்துத் தின்னும். அந்த `நோய்க்கு’ ஆளாகி இருக்கிறார் போலும்! கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபடும் கோவில் இருக்கும் ஸ்ரீரங்கமாம் - அதனால் அங்கு பெரியார் சிலை கூடாதாம் - இப்படி ஒரு (வி)வாதம். மற்ற மற்ற ஊர்களில் எல்லாம் கோயில்கள் இல்லையா? அந்தக் கோயில்களில் உள்ள கடவுள்களுக்கெல்லாம் சக்தியில்லையா - பவர் கட்டா? அவர்கள் சொல்லுகிறபடி திருவாளர் ரெங்கநாத பெருமாளுக்குச் சக்தியிருக்குமேயானால், பெரியார் சிலையை எழுப்பாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? அவர் சக்திதான் ஊரறிந்ததாயிற்றே. பல ஆண்டுகளுக்குமுன் அக்கோயில் தீ பிடித்து எரிந்தபோது பள்ளிகொண்ட ரெங்கநாதன் சிலையும் வெடித்துச் சிதறவில்லையா? அதன்பின் பூர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, வேறு சிலையும் வைக்கப்படவில்லையா? தீயையே கட்டுப்படுத்த முடியாத அந்தத் தூங்கும் சாமி (பள்ளிகொண்டான்) யார் என்ன செய்தாலும், ஒரு துரும்பைக்கூட அசைக்கும் சக்தியற்றது அல்லவா!

நாட்டில் பீதி ஏற்பட்டுள்ளதாம். தமிழ்நாடு அமைதியாகத் தானிருக்கிறது. பீதி தமிழ்நாட்டில் அல்ல - இராம. கோபாலன் கூட்டத்துக்குத்தான். 1973 டிசம்பர் 24-இல் பெரியார் மரணம் அடைந்து விட்டார் என்று மனப்பால் குடித்துக் கொண்டு இருந்தோம் - அந்த ஆசையில் மண் விழுந்து விட்டதே என்கிற சுயநலத்தில் பீதியாகிக் கிடக்கிறார்கள். ஆற்றில் அடித்துப் போகப்பட்ட குள்ளநரி `உலகம் போச்சு, உலகம் போச்சு!’ என்று கத்திய கதைதான் இது. காப்பாற்றப்பட்டுக் கரையில் சேர்த்தவுடன் அப்படிக் கத்தியதற்கு விளக்கம் சொன்னதாம் அந்தக் குள்ளநரி.``என்னைக் காப்பாற்றாமல் விட்டு இருந்தால் நான் செத்து இருப்பேன் அல்லவா, அப்படியானால் என்னைப் பொருத்தவரை உலகம் போச்சுதானே’’ என்று விளக்கம் சொல்லிற்றாம். இராம. கோபாலனின் இந்தக் கத்தல் அந்தக் குள்ள நரி கதையைத் தான் நினைவூட்டுகிறது. மத்திய அரசு தலையிட வேண்டுமாம்; கோணிப்பைக்குள் இருக்கும் பூனை இதன் மூலம் வெளிவந்து விட்டதே!

நாட்டில் மதக் கலவரத்தை எந்த வகையிலாவது உருவாக்கி, கலைஞர் தலைமையிலான அரசுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்கிற உள்நோக்கம் இதில் புதைந்து கிடக்கிறது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? தமிழர்கள் கட்டுப்பாடாக இருந்து, வன்முறைக்கு வன்முறை என்கிற ரீதியில் செயல்படாமல், உணர்ச்சி வயப்படாமல், தந்தை பெரியார் கருத்துகள் பரவிடக் கூடாது என்பதற்காகத்தானே இவ்வளவுக் கூச்சல் போடுகிறார்கள்? அந்த எண்ணத்தைத் தோற்றோடிப் போகச் செய்யும் வகையில் முன்னிலும் பன் மடங்காக கொள்கைப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுதான் அந்தச் சக்திகளுக்குக் கொடுக்கும் மரண அடியாக இருக்க முடியும் என்கிறார் தமிழர் தலைவர்.

மூலபலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர்முறை என்று அறிஞர் அண்ணா சொன்னார்களே, அதனை நினைவில் கொள்வோம் - வீறு கொள்வோம் - வெற்றி கொள்வோம்! ஓர் அஃறிணைப் பொருளை, ஒரு திடப் பொருளை, கல்லை அல்லது செம்பை, அல்லது பல உலேகங்களானான ஒரு பொம்மையை நிற்க வைத்தும், படுக்க வைத்தும், சில இடங்களில் நடனமாடுவது போல உருவாக்கியும் வைத்து, அது கடவுள் என்றும், சர்வ சக்தி வாய்ந்தது என்றும், கேட்ட வரம் கொடுக்கும் என்றும், இந்தந்த காணிக்கைகளைக் கொடுக்க வேண்டும்,, இன்னின்ன காணிக்கைகளைக் கொடுத்தால் இன்னின்ன வரங்கள் கிடைக்கும் என்றும் மளிகைக் கடை ஜாபிதாபோல் பட்டியலிட்டுக் காட்டி, பாமர மக்களின் பக்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சுரண்டல் தொழிலை நடத்திக் கொண்டு இருக்கும் பார்ப்பனர்கள் அலறுவதன் காரணம் நன்றாகவே புரிகிறது. அவர்களின் பிழைப்பே, சுரண்டல் தொழிலே, ஜாதி ஆதிக்கமே அந்தக் குழவிக்கல்லை வைத்தேதான் இருக்கிறது என்கிற காரணத்தால், அதற்கு மரியாதை போய் விட்டால் தங்கள் பிழைப்பின் அ°திவாரமே நொறுங்கிப் போய் விடுமே என்கிற பதைபதைப்பில் - அச்சத்தில் ஆடிப் போய் விட்டார்கள் என்று தெரிகிறது.

பேசாமல் கிடந்தாலாவது சிறீரங்கத்தோடு இப்போதைக்கு முடிந்து போயிருக்கும். இவர்கள் செய்த விஷமத்தனத்தால், தந்தை பெரியார் சிலை ஊருக்கு ஊர், ஏன் வீதிக்கு வீதிகூட வரப் போகிறது.பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர, புத்திசாலிகள் இல்லை என்றார் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்; பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே முன்புத்தி கிடையாது என்பார் தந்தை பெரியார் - இவை உண்மை என்பதைத்தான் இராம. கோபாலக் கூட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆடட்டும், இன்னும் ஆடட்டும் - அதிகமாகவே ஆடட்டும்! வட்டியும், முதலுமாகச் சேர்ந்து பெற்றுக் கொள்வார்கள்.

6 Comments:

Anonymous Anonymous said...

தெருவிற்குத் தெரு வைப்பீர்களா?
பள்ளிவாசல்கள், யேசுநாதர் ஆலயங்கள் இருக்கின்ற தெருக்களிலும் வைப்பீர்களா?
என்னே உங்கள் துணிவு! வாழ்க பெரியார்! வளர்க அவருடைய் சீடர்கள்1

December 12, 2006 9:18 am  
Blogger Pot"tea" kadai said...

ஊளையிடும் "ஓ"நாய்க்கூட்டம் இதைப் படித்தாவது பித்தம் தெளியட்டும். என்ன ஏது அறியாது கூச்சலிடும் கூட்டத்தின் அறியாமையைக் கண்டு சிரிப்பதா இல்லை விரட்டியடிப்பதாவென எனக்கு விளங்கவில்லை.

December 12, 2006 9:20 am  
Blogger Pot"tea" kadai said...

கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

December 12, 2006 9:21 am  
Blogger மாசிலா said...

நல்ல பதிவு.
புயலாக, நெருப்பாக, அறிவின் சிகரமாக வாழ்ந்து காட்டிய தந்தை பெரியாருக்கு தமிழ்நாட்டில் சுதந்திரமாக சிலை வைப்பதற்கு யாரிடமும் எந்த உத்தரவும் கேட்க வேண்டிய அவசியமில்லை.
நன்றி. வணக்கம்.

December 12, 2006 1:28 pm  
Blogger அறிவுடைநம்பி said...

ஸ்ரீரங்கத்திலா அய்யா பிறந்தார் என்று கேட்கும் அரை டவுசர் ராமகோபாலனிடம் நான் கேட்கிறேன்
"அயோத்திலதானே ராமன் பிறந்தாங்கறே? பிற இடங்களில் உள்ள ராமன் கோவில்களை இடித்துவிட்டு அய்யா சிலையை வைக்கலாமா?

December 12, 2006 5:32 pm  
Blogger Thamizhan said...

வாழ்த்துக்கள்.சரியான பதில்.
3 விழுக்காடு பிழைப்புக்கு அழுகிறது.
மற்ற சூத்திரர்கள் கூடக் குறைப்பது ஏன்?
அரசியல் ச்ட்டத்தில் இன்னும் சூத்திரன்தான் என்பது தெரியாததாலா?
இந்து லா படித்துப்பாருங்களேன்.அதைத்தானே பெரியார் எரித்தார்.மானமும் அறிவும் வேண்டாமா?சூத்திர இந்துதான் என்க்குப் பெருமை என்கிற உங்களூக்குத்தான் சொன்னார்.

December 13, 2006 2:01 am  

Post a Comment

<< Home