கடவுளைப் பற்றி இவர்கள்
எந்த ஒரு கடவுளால் அல்லது மதத்தால் ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியவில்லையோ! ஓர் அனாதையின் பசித்த வாய்க்கு உணவளிக்க முடியவில்லையோ! அந்தக் கடவுளையும், மதத்தையும் நான் ஒருபோதும் நம்புவதற்கில்லை.- சுவாமி விவேகானந்தர்
கடவுள் - இந்த நான்கு எழுத்துச் சொல் பல கோடி மக்களை சோம்பேறிகளாக மாற்றியிருக்கிறது. திறமைமீது நம்பிக்கை குறைந்து கடவுளிடம் கையேந்த வைத்திருக்கிறது.- சிங்காரவேலர்
நான் ஒரு கம்யூனி°ட். கடவுளை நம்புவது இல்லை. கம்யூனி°டுகள் கடவுளை நம்புவதில்லை. மனிதனை நம்புகிறவர்கள். மனிதனை நேசிப்பவர்கள்.- சேகுவேரா
விதியில் நம்பிக்கை வைக்காதே! உன்னுடைய வலிமையின்மீது நம்பிக்கை கொள். உன் அடிமைத்தனத்தை நீக்குவதற்காக கடவுளை நம்பிக்கொண்டிராதே.- டாக்டர் அம்பேத்கர்
கடவுள் இருப்பாரேயானால் அவர் நல்லவர் என நாம் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? அவர் கருணைமிக்கவர்; மாந்தருடைய குழந்தைகளைப் பற்றி அக்கறை கொள்பவர் என நாம் எப்படி நிரூபிக்க முடியும்?- இங்கர்சால்
மனிதனே கடவுளைப் படைத்தான் என்று நான் உணர்கிறேன். வாழ்க்கையின் தொடக்கத்தைப் பற்றிய ஒரு மறைபுதிர், எப்போதுமே இருக்கிறது. காலத்தின் தொடக்க நிலைக்குப் பின்னோக்கிச் சென்று சிந்திக்க விரும்புகிறேன். ஆனால் நம்பிக்கை வைக்கத்தக்க அளவுக்கு கடவுள் பயனுள்ளது என்று நான் நினைக்கவில்லை. இதற்கெல்லாம் ஓர் அவசியம் இருப்பதாக தெரியவில்லை. இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கிறபோது அறிவியல் ஞானத்தை நம்புவதே இப்போது மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.- சத்யஜித்ரே (வங்க கலைஞர்)
தேச பக்தரும், முன்னாள் தினமணி ஆசிரியருமான டி.எ°. சொக்கலிங்கம் அவர்கள் 12.7.1933இல் ‘காந்தி’ இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து, “தெய்வத்தின் பெயரால் உலகில் நடக்கும் அக்கிரமங்களைப் போல வேறு எதன் பெயராலும் நடக்கவில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் தரகனாக எப்போது புரோகிதன் ஏற்பட்டானோ, மோட்சமோ நரகமோ அவன் தயவால்தான் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது மனிதன் உள்ளத்தில் தோன்ற ஆரம்பித்ததோ அப்போதே மனிதனின் சுயேச்சை உணர்ச்சியும் ஒழுக்கமும் கெட்டுப்போக ஆரம்பித்தன.மனிதனின் ஒழுக்கத்தை விருத்தி செய்வதற்காகத் தோன்றிய மதம் முடிவாக ஒழுக்கக் கேட்டிற்கு மூலமாய் நின்றது. காம வெறி கொண்ட அயோக்கியர்களுக்கும் ஒரு காசுக்கும் உதவாத மூடர்களுக்கும் சன்னியாசம் ஒரு சரியான புகலிடமாய் இருக்கிறது.
2 Comments:
நல்ல பதிவு.
ஆழமான உண்மைகளை அடக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
பெரியவர்களின் சிந்தனை துளிகளும், கூற்றுகளும் வீண் போகாது.
இருந்தாலும் மக்களை மயககத்தில் ஆழ்த்தி இரத்தத்தை உறியும் கூட்டத்தினர் இடமிருந்து காப்பாற்ற தொடர்ந்த கடுமையான விழிப்புணர்வு தேவை.
நன்றிகள்.
அதை எல்லாம் விடுங்க..
கேடுகெட்ட பாப்பார பயல்கள் என்ன சொல்லுவார்கள் தெரியுமா?
பிரம்மன் முகத்தில் இருந்து வந்ததவன் பிராமனன். எனவே இறைவன் எங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறான் என்பார்கள்.
Post a Comment
<< Home