ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஜெயேந்திரர் கைதான தினத்திலிருந்து அவரைப்பற்றிய பல செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செய்திகளில் ஒன் றிரண்டில் என் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ‘நடந்தது என்ன?’ என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று பல பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி அலை வரிசைகளும், என்மீது அன்பு வைத்திருக்கும் பலரும் கேட்டு வருகிறார்கள்.
வாழ்க்கையில் பல சோதனைகளைக் கடந்து வந்திருக்கும் நான், இப்பொழுது தேவையற்ற பரபரப்புகளிலிருந்து ஒதுங்கி வாழவே ஆசைப்படுகிறேன். ஆனாலும், என் னைப்பற்றிய செய்திகளை நானே சொல்லாமல், ஆளாளுக்கு நினைத்தபடி எழுதுவதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதாலேயே உங்களை யெல்லாம் சந்திக்கிறேன்.
உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். ‘அனுராதா ரமணன்’ என்கிற தனிப்பட்ட நபராக என் னைப் பார்க்காமல், உங்கள் சகோதரி உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வார்த் தைகளாகவே இவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சங்கர மடம் அழைப்பு1992-ஆம் ஆண்டு “சுப மங்களா” என்ற பத்திரி கையின் ஆசிரியராக இருந்து விலகி, “வளை யோசை” என்ற சொந்தப் பத்திரிகை நடத்தி நான் நஷ்டப்பட்டிருந்த நேரம்; சங்கர மடத்தில் இருந்து ஒரு ஆன்மீக பத்திரிகை வெளிவர இருப்பதாகவும், அது தொடர்பாக என்னை ஜெயேந்திரர் பார்க்க விரும் புவதாகவும் அழைப்பு வந்தது.
காஞ்சி சங்கர மடத்தின் மீதும், பரமாச்சார்யாள் மீதும் மிகுந்த மதிப்பு வைத் திருக்கும் குடும்பத்தில் வளர்ந்தவள் நான். ‘கட வுளே அழைத்திருக்கிறார்’ என்று சொல்லித்தான் என் தந்தை அனுப்பி வைத்தார். என்னை அழைத்துப் போக சங்கர மடத்திற்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்மணி வந்தார். அவருடைய காரிலேயே காஞ்சிக்கு அழைத்துப் போனார்.
முதல் சந்திப்பில் ஜெயேந்திரர் ‘அம்மா’ என்ற ஆன்மீகப் பத்திரிகை பற்றி விவரித்து, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்குமாறு என்னிடம் சொன்னார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். பத்திரிகை தொடர்பாக ஜெயேந்திரருடன் பேச ஒவ்வொரு முறையும் அந்தப் பெண் மணியே என்னைத் தன் காரில் காஞ்சிக்கு அழைத்துப் போவார். பத்திரிகை தொடர்பாக முழுமையான ஈடுபாட்டுடன் பலயோச னைகளை நான் முன்வைத் தேன்.
மதிய நேரம்பக்தர்களைச் சந்தித்து முடித்து ஜெயேந்திரர் ஓய் வெடுக்கும் மதிய நேரத்திலேயே ஒவ்வொரு முறை யும் சந்திப்பு நடந்தது. அந்த அறையில் ஒரு மூலையில், காணிக்கையாக வந்த பணத்தை எண்ணிப் பிரித்து அடுக்கும் வேலை யில் வேத பாடசாலை மாணவர்கள் மும்முரமாயி ருப்பார்கள். மற்றபடி நான், என்னை அழைத்துப் போகும் பெண்மணி, ஜெயேந்திரர் என்று மூவர் மட்டுமே அந்த அறையில் இருப்போம். பத்திரிகை பற்றி பேசும்போது, யாருடைய இடையூறும் இருக்க வேண்டாம் என்று அந்த மாணவர்களை ஜெயேந்திரர் வேறு வேலையாக வெளியே அனுப்பி விடு வதும் உண்டு.
முதல் நான்கு சந்திப்புகளில் ஆன்மீகத்தைப்பற் றியே இருந்த ஜெயேந்திர ரின் பேச்சு, திடீரென்று ஆபாசத்திற்கு மாறியது. அதிர்ந்து போனேன். எழுதிக் கொண்டிருந்ததிலிருந்து நிமிர்ந்து பார்த்தால், மேலும் அதிர்ச்சி, என்னை அழைத்துப் போயிருந்த பெண்மணியும், அவரும் இருந்த நெருக்கமான நிலை கண்டு புயலால் தாக்கப்பட்டவள்போல் நிலைகுலைந்து போனேன்.
காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர் கேவலமான காமுகன் பேசுவதுபோல் சில தகாத வார்த்தைகளைச் சொல்லி என்னைப்பற்றியும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
அதிர்ச்சி
ஆத்திரமும், அதிர்ச்சியும் என்னை நடுக்க, பதறி எழுந்தேன். ‘ச்சீ, நீ ஒரு மனுஷனா?’ என்று கத்தினேன். ‘இது உனக்குக் கிடைக்கும் பாக்கியம்’ என்று அந்தப் பெண்ணும் ஏதோ உளறினார். ‘வழக்கம்போல இவ கிட்டயும் சொல்லித்தானே அழைச்சிட்டு வந்தே?’ என்று அவர் அந்தப் பெண் ணிடம் கேட்டு, ‘இல்லை’ என்று அந்தப் பெண் சொன்னதால் அதிர்ந்தார். அந்தப் பெண்ணைப் பலவாறு திட்டினார்.
உடனடியாக அந்த அறையை விட்டு வெளி யேற முற்பட்டேன். அந்தப் பெண் என்னைவிட வலு வானவர். தடுத்து நிறுத்தி னார். ‘இதோ பார், சம்மதித்தால் உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறேன். இது என் இருப்பிடம், சுற்றி இருப்பவர்கள் என் மனிதர்கள். கணவனை இழந்த பின்னும், பொட்டும், அலங்காரமுமாக சுற்றிக் கொண் டிருப்பவள் நீ. என்னைப்பற்றி வெளியே நீ சொன்னால், உன் னுடன் தொடர்பு வைத்திருப் பதாக பத்து ஆண்களை உனக்கு எதிராக சாட்சி சொல்ல வைக்கும் செல்வாக்கு எனக்கு இருக்கிறது’ என்று ஜெயேந் திரர் சொல்ல, திரும்பிப் பார்க்காமல் வெளியேறி னேன். அந்தப் பெண் என் பின்னாலேயே வந்து சமா தானம் செய்ய முற்பட்டார்.
அழுகை
உள்ளே இருக்கும் மனிதரின் உண்மையான முகம் தெரியாமல், வெளியே காத்திருக்கும் நூற்றுக் கணக்கான பக்தர்களைப் பார்த்ததும், அழுகை குமுறிக் கொண்டு வந்தது. அந்தப் பெண்ணிடம் பேசக்கூடப் பிரியப்படா மல், அவர் காரைத் தவிர்த்து, ப° பிடித்து சென்னை திரும்பினேன். வீட்டிலும் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அன்றிரவு தூக்கம் போனது. பெண் எழுத்தாளராக இருந்துகொண்டு, பெண் களைக் கேவலப்படுத்தும் மனிதர்களைப்பற்றி வெளியே சொல்லாமல் மறைப்பதா என்று தவிப்பு ஒரு பக்கம், இந்த உண்மை வெளிப்பட்டால், ஒரு தனி மனிதனின் கேவலமான நடவடிக்கைகளால், இரண்டாயிரம் ஆண்டு களுக்குமேல் மிகச் சிறந்த பாரம்பரியம் கொண்ட சங்கர மடத்தின் மேன் மையே குலைந்து, நாட்டி லேயே பெரும் கலவரம் மூள நான் காரணமாகி விடுவேனோ என்ற தவிப்பு இன்னொரு பக்கம் என்று மனதில் போராட்டம்.
மறுநாளே அந்தப் பெண் என் வீடு தேடி வந்தார். வாய்க்கு வந்தபடி கத்தினார். என்னைக் கன்னத்தில் அறைந்து என் பெற்றோரையும் தாக்கினார்.
அடிபட்டு பொறி கலங்கிப்போன நான், உடனடியாக எனக்கு சிநேகிதியாக விளங்கிய ஒரு பெண் போலீ° அதிகாரியைச் சந்தித்து உடைந்து அழு தேன். நடந்தவற்றைக் கூறி னேன். துடித்துப் போனார். ‘எழுத்துப் பூர்வமாக புகார் கொடு. உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று ஆதரவாகச் சொன்னார்.
ஆனால், என் பெற்றோரைப் போலவே, கோடிக் கணக்கானவர்கள் மதிக்கும் சங்கர மடத்தின்கவுர வத்தையே பாதிக்குமே என்று புகார் கொடுக்கத் தயங்கினேன். போலீ° பாதுகாப்பை மட்டும் வேண்டினேன். உடல் ரீதியாக அடிபட்டதிலும், மன ரீதியாக பெரும் கொந்தளிப்பிற்கு ஆளான திலும், அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கேயே செயலிழந்து விழுந்தேன். உடனடியாக ஒரு வாகனம் வரவழைத்து என்னை போலீ° அதிகாரியான அந்த சிநேகிதி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பக்கவாதம்
என் இடதுகால் பக்க வாதத்தினால் பாதிக்கப் பட்டு விட்டதாக மருத்து வர்கள் சொல்லி சிகிச்சை களுக்கு ஏற்பாடு செய்தனர். தனிமையில் என் அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு உண்மைகளை அவரிடமும் சொன்னேன். மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். பொங்கி அழுதார். கிட்டத்தட்ட அடுத்த ஒரு வருடத்திற்கு எந்தப் பத்திரிகைக்கும் எழுத முடி யாதபடி என் உடல் நிலை மோசமாகவே இருந்தது.
இதற்கிடையில் ஜெயேந்திரரிடமிருந்து மறுபடி மிரட்டலும், கேட்கும் பணம் தருவதாக பேரங்களும் தொடர்ந்தன. எதையும் நான் பொருட் படுத்தவில்லை. ஜெயேந்திரர் கைப்பட எழுதியதாக ஒரு மன்னிப் புக் கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்டிய அவருடைய உதவியாளர் அதைக் கையோடு வாங் கிப் போய்விட்ட சம்பவமும் நடந்தது.
மன்னிப்பு
என்னிடம் நேரில் மன்னிப்பு கேட்க விரும்புவ தாக ஜெயேந்திரரிடமிருந்து மீண்டும் மீண்டும் தூது வர, மிகுந்த வற்புறுத் தலுக்குப் பின் என் நெருங் கிய உறவினர் துணை வர சென்னையில் தங்கியிருந்த ஜெயேந்திரரை சந்திக்கச் சம்மதித்தேன். என்னை சந்தித்ததும், “போதாத காலம். என் புத்தி பிசகி விட்டது. மன்னித்து விடு. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று ஜெயேந்திரர் கேட்டார். “காவியைத் துறந்துவிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற பதவியிலிருந்து இறங்கி சாதாரண மனிதராக வெளிநடப்பு செய்யுங்கள். கடவுள் உங்களை மன்னிப்பார்” என்றேன். ஆனால், என் காதுபட அங்கே வந்திருந்த வேறொரு வி.அய்.பி., பெண்ணை வர்ணித்து அவர் தரக்குறை வாகப் பேசியதும் கொதித்துப் போனது மனது.
உண்மைத் தொடர்
ஜெயேந்திரர் துறவிக் கோலத்தைத் துறக்க வில்லை. எத்தனையோ அப்பாவிக் குடும்பங்களும், குறிப்பாய்ப் பெண்களும் ஜெயேந்திரர் போன்றவர் களின் உண்மையான முகத்தைத் தெரிந்துகொள்ளாமல், பத்திற்குள்ளாவதைத்தடுக்கு பொறுப்பு எனக்கிருப்பதாக உள் மனம் அரித்துக் கொண்டே இருந்ததால், மிகுந்த யோச னைக்குப் பிறகு, ஒரு பத்தி ரிகையில் என் பெயரைச் சொல்லாமல் ஒரு உண்மைத் தொடர் எழுதத் தொடங்கினேன். ஜெயேந்திரருக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கு காரணமாக அத்தொடர் முழுமையாக வெளிவரும் முன், நிறுத்தப் பட்டது.
சமூகத்தில் எனக்கு அவரால் தொடர்ந்து பல இன்னல் கள் இழைக்கப்பட்டன. என் உயிருக்கே ஆபத்து வரும் என்று மிரட்டல்கள் வந்தன. என்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த சில பெரிய மனிதர் களின் நல்லெண்ணத்தால் தான் நான் உயிர் பிழைத்திருந்தேன் என்றுகூட சொல்வேன். அவர்களுக்கு என் றைக்கும் நன்றிக் கடமைப் பட்டிருக்கிறேன்.
என் மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பும் வரையிலாவது உயிர் பிழைத்தி ருக்க வேண்டுமே என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் வாழ்ந்திருந்தேன்.
பக்குவப்பட்டது
யோகா வகுப்புகளுக் குப் போய் வந்து என் மனம் மேலும் பக்குவப் பட்ட ஒரு கட்டத்தில், ஜெயேந்திரர் ஒன்றும் தெய்வப் பிறவி அல்ல, சாதாரண மனிதன்தானே என்று, அந்த தனி மனி தனை மன்னித்து மறக்கும் நிலையை ஏற்றேன்.
பெண்களுக்கு துணையிருக்க வேண்டிய பெண் தெய்வங்களே ஸ்ரீ ஜெயேந்திரரைப் போன்றவர்களின் அநியாயங் களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதா என்று கோவில் களில் குமுறி அழுதிருக்கிறேன். தெய்வங்கள் இப்போது ஜெயேந்திரரை வேறு வழியில் பொதுவிற்குக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு எதிராக எதையும் சொல்லிவிடாதே என்ற மிரட்டல்கள் ஒரு புறம், உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள் என்று வற்புறுத் தல்கள் ஒருபுறம். மறுபடியும் சொல்கி றேன். இந்த மேடையை ஜெயேந்திரருக்கு எதிராக குற்றம் சுமத்த நான் பயன் படுத்தியதாக நினைக்க வேண்டாம். யாரிடமிருந் தும் எந்த ஆதாயத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. எந்த நீதிமன்றத்திலும் நான் அவர்மீது வழக்கு தொடர வில்லை.
தவறான தகவல்கள்
எதைப்பற்றியும் சொல்லாமல், அமைதியாக இருப் பதையே நான் விரும்பி னேன், விரும்புகிறேன். ஆனால், ஜெயேந்திரருடன் என்னைத் தொடர்பு படுத்தி யூகங்களின் அடிப் படையில் தவறான தகவல் களை சில பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்ததால் இந்த தன்னிலை விளக் கத்தை நான் தர முடிவு செய்தேன். ஜெயேந்திரரையும், என்னை காஞ்சிக்கு அழைத் துப்போன பெண்ணை யும் மேலும் இழிவுபடுத் தும் சில விவரங்களை நான் இங்கே முழுமையாக சொல் லாமல் தவிர்த்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு உறுதியை மட்டும் என்னால் தர முடியும். நான் சொன்னவை அத்தனையும் பொய்க் கலப்பற்ற சத்திய வார்த் தைகள்.
உங்கள் மனதில் எழுகின்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த அறிக்கையி லேயே விடைகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து என்னைத் தொடர்ந்து வேறு கேள்விகள் கேட்டு துரத்தாதீர்கள். ஏற்கெ னவே மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்.
துணிச்சல்
என்னைப் போல பாதிப்புக் குள்ளாகி வெளியே சொல்ல முடியாத வேறு சில பெண்களும் நிச்சயம் இருப்பார்கள். அவர்களும் துணிச்சல் கொண்டு பிற்பாடு வெளியே வரக் கூடும். ஒரு தனிப்பட்ட மனிதரின் மோசமான அணுகு முறை பற்றி நான் வெளிப் படையாக சொல்லியிருக் கிறேனே தவிர, நான் பெரிதும் மதிக்கிற காஞ்சி மடத்தையோ, இந்துக்களின் உணர்வுகளையோ அவமதிக்கும் எந்த நோக்க மும் சிறிதளவும் எனக்கு இல்லை.
பத்திரிகைகளையும் என்னையும் பிரித்து பார்க்க முடியாதபடி, என் வாழ்வின் முக்கியத் திருப்பங் களில் எல்லாம் பத்திரிகை கள் பெரும் பங்கு வகித் திருக்கின்றன. இப்போதும் உங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரியாகவே என்னை நினைத்து மேற்கொண்டு என்னைப்பற்றிய அவதூறுகளை எழுதாமல் நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
- இவ்வாறு அனுராதா ரமணன் தனது அறிக்கை யில் கூறியிருக்கிறார்.
0 Comments:
Post a Comment
<< Home