Tuesday, November 14, 2006

நூற்றுக்கு நூறு உண்மை

மடத்திலுள்ள சுவருக்கு மட்டு மல்ல; இங்கு சுற்றிச் சுழலும் காற் றுக்குக்கூட காது இருக்கும். சின்ன அதிருப்தியை வெளிப்படுத் தினால்கூட அது ஜெயேந்திரருக் குத் தெரிந்துவிடும் அவ்வளவு தான்! கூப்பிட்டு `குங்குமம் கொடுத்து’ அனுப்பி விடுவார் என்பான். இந்த குங்குமம் கொடுத்து அனுப்புவார் என்பதற்கு, `கவனித்து விடுவார் கள்’ என்று வேறொரு அர்த்தமும் இருக்கிறது. அதாவது எதுவும் நடக்கும். அதைக் கண்டு கொள்ளக் கூடாது. அப்படி கண்டுகொண்டால் ஏதாவது ஒரு விதத்தில் கவனிப்பு தான் என்று அதற்கு அர்த்தமாம்.

இரவு பத்து மணிக்குமேல் ஜெயேந்திரருக்கு வேண்டியவர் களை மடத்துக்கு அழைத்து வருவது, சமயம் பார்த்து அவர் களை வெளியே அனுப்புவது என்று நடந்த ஒவ்வொன்றை யும் சுவார°யமாகக் கூறுவான். ஆக, ஜெயேந்திரருக்குப் பெண்கள் சகவாசம் இருந்ததென்பது நூற்றுக்கு நூறு உண்மை.அதுவும் அந்த மனுஷா (பெரியவர்) புத்தி ஆரம்பத்தி லிருந்தே அப்படித் தான்.

மகா பெரியவர் இருந்தப்போ நடந்த முதல் தவறைச் சொல்கிறேன். அப்போ அந்தப் பகுதி யிலிருந்த வங்கி அதிகாரி ஒருவர் அடிக்கடி மடத்திற்கு வருவார். அவரது மனைவியும் வருவார்.எப்படியோ ஜெயேந்திரரின் கண் அந்தக் குடும்பப் பெண்மணிமீது விழுந்து விட்டது. இந்தத் தகவல் மகா பெரியவருக்குத் தெரிந்து ரொம்பவே வேதனைப் பட்டாராம்.உடனே, ஜெயேந்திரரைக் கூப்பிட்டு கடுமையாக எச்சரித்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில்தான் ஜெயேந்திரர் தண்டத்தைப் போட்டுவிட்டு மடத்தை விட்டு வெளியேறினார்.

ஜெயேந்திரரின் பூஜை பலனுக்காக ஆறு பேர் மடத்திற்குள்ளாகவே நித்திரை சமாதியாகிட்டதாகவும் சொல்வான். அவன் சொல்வதெல்லாம் மர்மமாகவே இருக்கும். மேலும் ஒரு மாதிரி சகிக்க முடியாத நீலப்பட விஷயத்தையும் கண்ணன் சொல்வதுண்டு.

டாக்டர்.சீனிவாசன்,
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சர°வதிவி°வா மகாவித்யாலயாவின் முன்னாள் பதிவாளர்
(குமுதம் ரிப்போர்ட்டர் 23-12-2004)

Source from Viduthalai.com

0 Comments:

Post a Comment

<< Home