கிருஷ்ணன் மாமாவா?
கிருஷ்ணன் மாமாவா?
(பகவான்) விஷ்ணு எடுத்த அவதாரங்கள் ஒன்றல்ல, இரண் டல்ல! பத்து. அவற்றில் இராமா வதாரம் “பூர்ண அவதாரம்” என்றும் கிருஷ்ணாவதாரம் “பரி பூர்ண அவதாரம்” என்றும் பரம பாகவதர்கள் சொல்லிச் சொல்லி பூரிப்பார்கள். ஏன் அப்படி என்கி றீர்களா?இராமனுக்கு ஒன்றோ, இரண்டோதான். ஆனால் கிருஷ் ணனுக்கோ ஆயிரக்கணக்கில், இது என்ன கணக்கு? புரியவில்லையே! இது “அந்த”க் கணக்கு தான். இராமா வதாரத்தை விட கிருஷ்ணாவதாரம் “சிரேஷ்டமானது” “உத்தமமானது” என்கின்றனர் பரம பாகவதர்கள்.கிருஷ்ணன் யாருக்கு மாமன்? பாண்ட வருக்கு. பாண்டவர் தாய் குந்தியும் கிருஷ்ணனின் தந்தை வசுதேவனும் உடன் பிறந்த வர்கள்.
துரியோதனனிடம் சூதாடி வனவாசமும், அஞ்ஞாத வாசமும் முடிந்து நாடின்றி தவித்த பாண்டவருக்குப் பாதி காசைப் பெற்றுத் தர கிருஷ்ணன் துரியோதனனிடம் தூது செல்கிறான். தூது சென்ற “கோகுல” கிருஷ்ணன் அங்கு பல “கோல் மால்”களைச் செய்கிறான்.கர்ணனைக் கண்டு அவனைப் பாண்டவர் பக்கம் வருமாறு அழைக்கிறான்.தாய், தந்தை யாரென்று தெரியாது தேரோட்டியின் வளர்ப்பு மகனாக வளர்ந்து வரும் அவனுக்குத் தாய் குந்தியும், தந்தை சூரியனும் ஆவர் என்ற உண்மையைத் தெரிவிக்கிறான். மேலும் அவன் பாண்ட வர்க்கு மூத்த சகோதரனாக ஆகிறான்.
மேம் கிருஷ்ணன் கூறுகிறான், “கர்ணா! சநாதனமான வேத வாதங்களை நீயே அறிகி றாய். சா°திரங்களை அறிந்த ஜனங்கள் கன்னிகையிடம் பிறந்த காளீனனுக்கும், ஸஹோடனுக்கும் அந்தக் கன்னிகையை விவாகம் செய்தவனைப் பிதாவாகச் சொல்கிறார்கள். கர்ணா! நீ அப்படிப்பட்டவனாய் இருக்கிறாய்! (கர்ணன், குந்திக்கு விவாகத்திற்கு முன்னமா பிறந்தவன் - காளீனன்). அப்படிப் பிறந்த நீ சா°திரங்களுடைய நிச்சயத்தினாலே தர்மமாகப் பாண்டுவினுடைய புத்திர னாகிறாய்!தகப்பன் வழி பார்த்தர்கள், (கவுரவர்) தாயின் வழி விருஷ்ணிகள் (யாதவர்) உன்னைச் சேர்ந்தவர். அய்ந்து பாண்டவர், அவர்களின் அய்ந்து புத்திரர்கள், அபிமன்யு பிற அரசர்களும் உன் பாதங்களைப் பிடிப்பர், நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரன் போல் இந்த உலகை நீ ஆளுவாய்!கர்ணா! வந்துவிடு! பாண்டவர் பக்கம் வந்து விடு! வா! வா!! இந்த கூற்று வரையில் கிருஷ்ணன் சொன்னது சரியே!இறுதியாகப் “பகவான்” கிருஷ்ணன் கர்ணனுக்குச் சொல்லும் “உபதேசம்”“அப்படியே, திரவுபதியானவள் ஆறாவது காலத்தில் அடையப் போகிறாள்!”(அத்யா. 140 - உத்யோக பருவம்)இதற்கு அடிக்குறிப்பு: பாண்டவர் அய்வரிடத் திலும் ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொரு காலத்தில் இருக்கிறாள்.
கர்ணனிடம் இருந்தால் அது ஆறாவது காலமாகும்.கிருஷ்ணன் கர்ணனுக்குத் தர விரும்பும் “கவர்ச்சி”யான யைப் பார்த்தீர்களா? கிருஷ்ணன் கர்ணனுக்கும் தாய் மாமன் மகன் தான். மாமன் மகன் எப்படி “மாமா”வாகச் செயல்படுகிறான் பாருங்கள்! திரவுபதியைப் பொருத்தவரை “அய்வருக்கும் தேவி”யாய் இருந்து பெற்ற “பத்தினித் தன்மை” ஆறாவதாய் கர்ணனையும் “அனுமதித்தால்” கெட்டு விடவா போகிறது?ஆனால் கர்ணனை விட வயதில் பல ஆண்டு சிறியவன் கிருஷ்ணன்.
சிறிய வன் பெரியவனுக்கு இவ்வாறு ‘ஆசை’ காட்டுவது “மாமா” வேலைதானே!பல பெண்களோடு ‘லீலை’ செய்த கிருஷ்ணன் இப்படி இருப்பதில் வியப்பு ஏதும் உண்டோ?எனவேதான் இந்திய சமூகவியல் ஆய்வாளர் டி.டி.கோசாம்பி அவர்கள் “மகாபாரத கிருஷ்ணன் எவ்வித நற்பண் பையும் போதிக்கத் தகுதி பெற்றவ னல்லன்” எனத் திட்டவட்டமாக கிருஷ்ண னைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.(மாயையும் யதார்த்தமும், பக்கம் 33)
பின்குறிப்பு: “இந்து மதத் தலைவர் களையும், துறவிகளையும் கேவலப் படுத்திப் பேசினால் பேசுவன் வீட்டுக்குப் போய் சேருமுன் அவன் கைகள் வெட்டப் படும்”- ஒரு தர்ப்பைபுல் வீரன்“அது சரி! இப்படி “பகவானையே” கேலி செய்து எழுதினால்....? என்ன செய்வீர்? தர்ப்பைப்புல் வீரரே! பதில் சொல்லும்! “காலை வெட்டுவோம்!”நம் பரம்பரை அருவாவீரர்: டேய்! வெட்றதுக்கு அருவாவைத் தேடி எங்கிட்டே தானேடா வரணும், வாடா பார்க்கலாம்! தர்ப்பைப்புல் வீரன் ஓடுகிறான்...
Source - Unmaionline.com
0 Comments:
Post a Comment
<< Home