Friday, October 06, 2006

ரஜினி - மூன்றெழுத்து மந்திரம்

ரஜினி - மூன்றெழுத்து மந்திரம்

உண்மையில் ரஜினி, தன்னை மனதிலும் தோலிலும் சுமந்த தமிழ்னாட்டு ரசிகர்களுக்கு ஏதாவது செய்தாரா? வாழ்வாதாரா உதவிகளை செய்தாரா? ரசிகர்கள் உண்மையில் என்ன எதிர்பார்க்கிறார்கள். அரசியல் மட்டுமே போதுமா? அரசியலில் அவர், அவர் ரசிகர்கள் தாக்கு பிடிப்பார்களா? வேறு என்ன அவர் தன் ரசிகர்களுக்காக செய்யலாம்?

ரஜினி ரசிகர்களை பொருத்தவரை அவர் அரசியலில் இறங்கி அதன் மூலம் ஆட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்று நினைப்பது அவர்கள் விருப்பம். ஆனால் அவரால் ஒரு இரவில் வரமுடியுமா என்பது சந்தேகமே. புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து 10வருடமாவது உழைக்காமல் பல இடங்களை வெல்ல முடியும் என்பது சற்று யோசிக்க வேண்டிய விசயம். அவ்வளவு நாட்கள் அவர் ரசிகர்களால் பொருக்கமுடியுமா? அவர்களால் பணத்தேவைகளை ஏற்ற முடியுமா என்பது என்னைப் பொருத்தவரை சற்று கடினம். ரஜினிக்கு முதலில் அரசியலுக்கு வர விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை. ஏன் என்றால் அவருக்கு அவரின் அமைதி, விருப்பட்ட இடங்களுக்கு சென்று வருதல் போன்றவை அரசியலில் கிடைக்காது. ஓயாத உழைப்பும், அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தலும் வளர்ச்சிக்கு மிக முக்கியம். இந்த இரண்டுமே அவரிடம் சற்று குறைவு என்பது அவரின் கடந்த தேர்தலின் போதே தெரிந்தது. அவருக்கு விருப்பம் இல்லாத ஒன்றில் இறங்கி அடிபடுவதை விட வேறு ஏதாவது செய்யலாம்.

ஊடகங்களில் வரும் செய்திகளின் படி அவர் தான் பிறந்த கர்னாடகாவில் முதலீடு செய்துள்ளதாகவே தெரிகிறது. தமிழ்னாட்டில் சம்பாரித்து அதை இங்குள்ள மக்களின் வளர்ச்சிக்கும், அவர் ரசிகர்களின் உயர்வுக்கும் ஏற்க தக்க வகையில் முதலீடு செய்திருந்தால் அவரை வாயர வாழ்த்தலாம். முதலீடு என்பது அவரின் பணத்தை பெருக்கவே தவிர செலவழிக்க சொல்லவில்லை. உதாரணமாக அவர் ரசிகர்கள் தமிழ்கத்தில் மூலை முடுக்கெல்லாம் உள்ளனர். அவர்களை பயன்படுத்தி கூரியர் சர்வீசோ அல்லது பார்சல் சர்வீசோ அல்லது கால் டேக்ஸி சர்வீசோ நடத்தலாம். அதன் மூலம் அவர் ரசிகர்களுக்கு ஒரு வியாபரமும், பணம் சம்பாரிக்க வழியும் ஏற்படுத்தியது போல் இருக்கும். அவர் என்றும் அவர்களின் மனங்களில் வீற்றிருப்பர். இதுபோல் ஏதாவது ஒன்று அவர் ஏற்கனவே செய்திருந்தால் அவரை நிச்சயமாக பாரட்டலாம்.

1 Comments:

Blogger Muthu said...

வாய்யா வடிவேலு...விஜயகாந்த்தை பற்றி எழுதுமய்யா...

October 07, 2006 1:56 pm  

Post a Comment

<< Home