Wednesday, November 08, 2006

புரோக்கர் வேலை செய்த நாரதர்

சிந்தித்து வாழ்வதற்கு கல்வி அடிப்படையாக அமை கிறது. கல்வியின் வழியில் கவின்மிகு வாழ்க்கை வாழ தமிழ் இலக்கியங்கள், சுடராக நிற்கின்றன. இச்சுடரொளியில் வாழ்ந்த தமிழ் இன முன்னோடி களின் பாதை நமக்குப் பாடமாகயிருக்கிறது. தமிழ் இனம், தலைநிமிர்ந்து நடக்க, இத்தகைய செம்மையான வழியிருந்த போதிலும், மதம் என்கிற மயானப் பாதையில் செல்வது ஏன்?இப்படி மதப்பாதையில் சென்ற ஒரு மங்கை மானம் இழந்த கதையொன்றை நக்கீரனில் நவின்றுள்ளார் தாத்தாச்சாரியார். கடவுளே காமுகனாக களம் புகுந்த இக்கதையைப் படித்த பின்பாவது, இழிவான மதப்பாதையைப் பழித்து இனிய பாதையில் நடப் பார்களா பக்தர்கள்?

27.11.2005 நக்கீரனில்:- பஞ்சாப் மாநிலம், ஜலந்தர்-பிருந்தா கணவன் மனைவி. இவர்களின் வாழ்க்கை அமைதியாகயிருந் தது. இவர்களின் மகிழ்ச்சியான வாழ்வை சீர்குலைக்க புரோக்கராக நுழைகிறார், நாரதர். ஒரு நாள் ஜலந்தர் தனியாகயிருக்கும்போது, நாரதர் அவனைச் சந்திக்கி றார். “என்ன ஜலந்தர்? நீயோ சிவனை வழிபடுகிறாய் உன் மனைவியோ விசுணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால், சிவனுடைய மனைவி பார்வதியையே அடையலாமே, எதற்கு இந்த பிருந்தாவுடன் போரா டிக் கொண்டிருக்கிறாய்? இந்த பிருந்தாவை விட அந்தப் பார்வதி எவ்வளவு அழகு” என புரோக்கர் போல் இழைந்தார் நாரதர்.

நான் பார்வதியை அடைய வழி என்ன? என ஜலந்தர் கேட்டான்.“சிவனுக்கு சாம வேதம் மிக வும் பிடித்தமான ஒன்று. எங்கே சாம வேதம் ஒலித்தாலும் அந்தப் பக்கம் போய்விடுவான். சாம வேதம் பாராயணம் செய்ப வர்களைப் பிடித்து நல்ல சத்தமாக சாம வேதம் ஒலிக்கச் செய், அதனைக் கேட்டு சிவன் மயங்கியி ருக்கும் வேளையில் கயி லாயத்திற்குச் சென்று காரியத்தை முடித்து விடு” என புரோக்கர் நாரதர் திட்டம் கொடுக்கிறார். இத்திட்டப் படி ஜலந்தர் செயல்பட்டான். சாம வேதம் கேட்டு சிவன் லயித்தி ருக்க கயிலாயம் சென்று கட்டிப் பிடித்தான் பார்வதியை ஜலந்தர்.

ஜலந்தர் காம வேதம் ஓத, ஈடு கொடுக்க இயலாத பார்வதி கத்துகிறாள். இங்கே பார்வதியும் ஜலந்தரும் மஞ்சத்தில் கிடக்க அங்கே கணவனைக் காணாது பிருந்தா தவிக்கிறாள். தனது பரம தெய்வமான விசுணுவிடம் தன் கணவனைத் தேடித் தரும்படி வேண்டுகிறாள். தவிக்கும் பக்தையை தழுவும் நோக்கத்தில் ஜலந்தரைப் போல் வேடமிட்டு காமுகன் விசுணு பிருந்தாவுடன் மஞ்சத்தில் இணைகிறான். இங்கே பார்வதியின் இடைவிடாத அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிவன் ஜலந்தர் பார்வதி இணைந்திருந்த நிலைகண்டு கடுங்கோபத்தில் ஜலந்தர் தலையை வெட்டுகிறான். வெட்டுப்பட்ட தலை - விசுணு பிருந்தா மஞ்சத்தின் அருகில் ஓசையுடன் விழுகிறது! இதனைக் கண்டு பிருந்தா அதிர்ச்சியடைகிறாள். வேடம் கலைத்து தன் சுயரூபத்தைக் காட்டுகிறான் விசுணு. பக்தையான என்னையே கெடுத்து விட்டாயே! சண்டாளனே!! நீ கல்லாகப் போ!!! என சபித்தாள் பிருந்தா.

இப்படி ஹிந்து மத ஒழுக்கக்கேட்டை விவரித்து எழுதியிருக்கிறார் தாத்தாச்சாரியார்.தாத்தாச்சாரியார் ஹிந்து மதம் என்கிற குட்டையில் ஊறிய மட்டை. இவரே, ஹிந்து மதம் எப்படிப்பட்ட ஒழுக்கக் கேட்டை அடிப்படையாகக் கொண்டது என்றும், மதத்தின் கதாநாயகர்களே இழிவானவர்களே என்றும் எச்சரிக்கிறார். இதைவிட ஒரு மட்டமான மதம் உலகில் உண்டா?இத்தகைய மதத்தில் தமிழர்களா?கற்பழிப்பவனெல்லாம் கடவுள் என்றால், எத்தனை பயல்களுக்கு கோயில் கட்டுவது?

4 Comments:

Blogger Subhash said...

You are unnecessarily abusing Hinduism. Don't think I am a fanatic. Some useless fellow has written some nonsense story just for the sake of writing. Based on the idiotic writing you are abusing Hinduism. Hinduism is a way of life like Islam, Christianity, etc. Don't think beyond this about any religion.
K.Subhash Chandiran

April 10, 2007 6:47 am  
Blogger Sivamjothi said...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
www.youtube.com/watch?v=FOF51gv5uCo


Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

November 05, 2011 11:57 am  
Blogger ADHIRAMAN M said...

It is the voice of the Idikasas of India. As per our traditional Folk drama 'Therukoothu' Jalantharan Vathai Nadagam is a witness for the Story. As per the drama both Jalandharan and Bridnavathi were innocents. Jalandharan request from Shiva immortality only, not his wife Parvathy. As per Shiva's word as the Brinda lives with virginity there is no death to Jalandharan. In order to kill Jalandharan who rule with Dharma to get Indhira post the Lord Shiva sent Vishnu to rape Brindha. As per the plan Brindha reped by Vishnu and Jalandharan killed by Shiva. Brindha suicide with fire. Before his suicide Brindha cursed Vishnu that his wife will be kidnapped by a Rakshasa. Thus the Ramayana born.

January 25, 2013 3:37 pm  
Blogger ADHIRAMAN M said...

It is the voice of the Idikasas of India. As per our traditional Folk drama 'Therukoothu' Jalantharan Vathai Nadagam is a witness for the Story. As per the drama both Jalandharan and Bridnavathi were innocents. Jalandharan request from Shiva immortality only, not his wife Parvathy. As per Shiva's word as the Brinda lives with virginity there is no death to Jalandharan. In order to kill Jalandharan who rule with Dharma to get Indhira post the Lord Shiva sent Vishnu to rape Brindha. As per the plan Brindha reped by Vishnu and Jalandharan killed by Shiva. Brindha suicide with fire. Before his suicide Brindha cursed Vishnu that his wife will be kidnapped by a Rakshasa. Thus the Ramayana born.

January 25, 2013 3:38 pm  

Post a Comment

<< Home