Sunday, December 03, 2006

பெரியார் என்ன செஞ்சாரு?

சேகர் கடையில் ஓய்வாக அமர்ந்திருந்தார் - கையில் ‘விடுதலை’ நாளிதழ்.அருகில் குருமூர்த்தி நின்று கொண்டு சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.நான் மெதுவாகச் சென்று, அங் கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தேன்.என்னைப் பார்த்ததும் சேக ருக்கு மகிழ்ச்சி.“வாய்யா... வா. எங்கய்யா போன...? நீ வராம எனக்கு பொழுதே போக மாட்டேங்குது” என்றார் சேகர்.

பிறகு, குருமூர்த்தியை பார்த்துக் கொண்டே “குருமூர்த்தி என் னவோ சொல்றான். என்னான்னு கேளு” என்றார்.சேகரும், நானும் திராவிடர் கழகத்தில் பொறுப்பேற்று பணி செய்துகொண்டிருந்தோம். அலுவலக நேரம் முடிந்து ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், நான் சேகர் கடைக்குச் செல்வேன். அர சியல், சமுதாயம், இயக்கப்பணி உட்பட பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டிருப்போம்.குருமூர்த்தி சேகருக்கும், எனக்கும் பொதுவான நண்பன். பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவன். அவ் வப்போது சேகர் கடைக்கு வரு வான். எங்களுடைய விவாதங்களிலும் கலந்து கொள்வான். அவனைப் பற்றி என்ன சொன்னாலும் கோபமே வராது. ஆனால் காரியத்தில் கண்ணாய் இருப்பான். பார்ப்பான் குணமே அதுதானே...!நான் குருமூர்த்தியை பார்த் தேன். “ஏன்யா சேகருக்கு தொல்லை குடுக்குற...? உனக்கு என்ன சந்தே கம்னாலும் என்னை கேள். பதில் சொல்றேன்” என்றேன்.

குருமூர்த்தி என்னைப் பார்த்தான்.“நான் எப்ப இங்க வந்தாலும் பெரியார்... பெரியார்னு பெரியார் புராணமே பாடிண்டு இருக்கேளே... அப்படி என்னதாங்காணும் பெரியார் பண்ணி கிழிச்சுட்டார்...? இந்த ஒரு பெரியார் இல்ல, இன்னும் நூறு பெரியார் வந்தாலும் எங்களை ஒண்ணும் பண்ண முடியாது. உங்களையும் திருத்த முடியாது. இதுவரைக்கும் சாமி... சாமின்னு சாமிய கட்டி அழுதுண்டு இருந்தோம். இப்பதான் ஒயிட் காலர் ஜாடிக்கு போறோம்... நன்னாவும் இருக்கோம்” என்றான் படபடப்பாக.

“ஆமாமாம்... தமிழ்நாட்டில் பெரியார் உங்களை விரட்டிய டிச்சா, டெல்லிக்கு ஓடுவேள்... டெல்லியில விரட்டியடிச்சா அமெ ரிக்கா போய் செட்டில் ஆகி, அங்கேயும் உங்க பஞ்சாங்கத்த விக்க ஆரம்பிச்சுடுவேள்... உங்களை ஒழிக்க முடியுமோன்னோ... நீங்க கேன்சர் மாதிரி... அதுசரி பெரியாராலதான் உங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லையே... அப்புறம் ஏன்னா நோக்கு இவ்வளவு கோவம் வர்றது...” என்றேன் நக்கலாக.சேகர் ‘விடுதலை’யை படிக்கிறாரா... சிரிக்கிறாரா ஒன்றும் புரியல்லை.

அடுத்தநாள் காலைப் பொழுது மீண்டும் நாங்கள் ஒன்றாய் சேர்ந்திருந்தோம். கடையில் மின் சாரம் இல்லை. எதிரில் உள்ள மின் கம்பத்தில் மின்வாரிய ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். வெளியில் வந்து பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சியான காட்சி யாக இருந்தது அது.“சேகர்... வெளியில் வந்து பாருங்க. இந்த காட்சியை” என்றேன். சேகருக்கு முன் குருமூர்த்தியும் வந்து எட்டிப்பார்த்தான். “என்னய்யா... ஒன்றும் புரியலையே...” என்றார் சேகர்.

மின் கம்பத்தின்மீது ஏறி, கயி றைக் கட்டிக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ஊழியர் ஒருவர். அவர் பார்ப்பனர். கீழே இருந்து கொண்டு அந்த ஊழியருக்கு ஆலோசனை சொல்லி வேலை வாங்கிக் கொண்டிருந்த ஆய்வாளர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.

“யோவ்... குருமூர்த்தி, பெரியார் என்ன செஞ்சி கிழிச்சாருன்னு நேத்தி கேட்டியே... இப்ப புரிஞ்சுதா என்ன செஞ்சாருன்னு. யோவ்... சேகரு, நீ எந்தக் காலத்திலாவது பார்ப்பான் மரமேறி பார்த்த துண்டா? இப்ப பாத்துக்க.. ஆசை தீர பாத்துக்க.. குருமூர்த்திக்கு விவரம் தெரியும். அதனாலதான் அவனுக்கு கோவம் வருது... நம்ப மக்களும் புரிஞ்சுக்காம பெரியார் என்ன செஞ்சாருன்னு கேட்கிறாங்க... அவங்க புரிஞ்சிக்கிற காலம் வந்தா குருமூர்த்திக்கு இங்கே வேலையில்ல... அமெரிக்காவுக்கு டிக்கெட் வாங்க வேண்டியது தான்...” என்றேன் ஆவேசமாக... ருமூர்த்திக்கு வேர்த்துக் கொட்டியது.

மின் விசிறி நின்றதாலா? அல்லது நான் சொன்னது நடந்து விடுமோ என்ற அச்சத்தினாலா?எனக்குத் தெரியவில்லை.

1 Comments:

Blogger Thamizhan said...

Nanna sonnel pongo!
It is a pity that the question is not being asked by only Gurumoorthy but our own Moorthys.A friend of mine who is a well respected Proffessor told recently "This towel that was hanging around the waist of my grandfather and my father is hanging on my shoulder in front of all of you.That is because of Periyar."
Aringar Anna said "the MLA ,minister and all is like the towel on our shoulder,but our self respect ideology is our dothi(veshty}".
It is a pity that lot of our people care more about the towel not realizing their dothi is on the street!

December 04, 2006 3:42 am  

Post a Comment

<< Home