Monday, December 04, 2006

சந்திக்கு வந்த சாவர்க்கரின் தேசப்பற்று:

ஒருவரின் இழிசெயல்கள் அனைத் தும் வெளிச்சத்துக்கு வந்தாலும், எதைப் பற்றியும்அவர் அவமானம் கொள்வதே இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. வினாயக் ராம் சவார்க்கரைப் பொறுத்தவரை ஒவ் வொரு ஆவணமும் அவரது ஏமாற் றுத்தனத்தை, அவரது மனதின் நச்சுத் தன்மை மற்றும் கொலை செய்வதில் அவருக்கு இருந்த தணியாத தாகம் ஆகியவற்றையே வெளிப் படுத்துகின்றன.

1966-இல் அவர் காலமானார். ஆனால் சவார்க்கர் இறந்ததற்கு அடுத்து ஆண்டில் காந்தியின் கொலயும் நானும் என்ற தனது புத்தகத்தில் காந்தி கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நாதுராமின் சகோதரர் கோபால் கேட்சே சவார்க்கரூக்கும் காந்தியைக் கொன்ற நாது ராம் கோட்சேயுக்கும் இடையே நிலவி வந்த நெருங்கிய உறவு பற்றிய செய்தியை வெளிப்படுத்தினார். மிகுந்த முயற்சியின் பேரில் காந்தி கொலை வழக்கு விசார ணையின் போது மறைக்கப்பட்டதாகும் இந்தச் செய்தி.

கொலை வழக்கில் அப்ரூவரான திகம்பர பாட் கேயின் சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருந்தபோதும், சவார்க்கர் செஷன்° நீதிபதியால் விடுவிக்கப்பட்டதன் காரணமே, திகம்பர பாட்கேயின் சாட்சியத்தை உறுதிப்படுத்த சட்டப்படித் தேவையான மற்றொரு தனிப்பட்ட சாட்சி இல்லை என் பதுதான். இத்தகவல் உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஜே.எல். கபூர் அவர்கள் 1970-ல் காந்தி கொலை பற்றி அளித்த அறிக்கை யினால் வெளியாயிற்று. காந்தி யைக் கொலை செய்ய சவார்க்கரும் அவரது கூட்டமும் ஒரு சதித்திட் டம் தீட்டி செயல்பட்டதைக் கண்டுபிடித்து அவர் கூறினார். சவார்க்கரின் மெய்க்காப்பாளர்களான அப்பா ராமச்சந்திர காசரும், சவார்க்கரின் செயலாளர் கஜனன் விஷ்ணு தாம்லேயும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவில்லை.

சவார்க்கர் இறந்த பின்பே அவர்கள் உண்மைகளை நீதிபதி கபூரிடம் கொட்டி விட்டனர். இவை மட்டுமன்றி, வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு வராத மேலும் பல சாட்சியங்கள், உண்மைகள் அவர் கைவசம் இருந்தன.அரசு ஆவணக் காப்பகச் செய்திகளின் அடிப் படையில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் 1875-ல் ஒரு புத்தகத்தை வெளியிட்டது. அந்தமானில் இருந்த தீவாந்திரச் சிறைகள் என்பது அந்த நூலின் பெயர். மதவேறுபாட்டுக் கண்ணோட்டம் கொண்டவர் என்று புகழ் பெற்ற ஆர்.சி. மஜும்தார்தான் அதனை எழுதிய ஆசிரியர்.

ஆவணங்களில் இருந்த ஒவ்வொன்றையும் சவார்க்கருக்கு ஆதரவாகவே அவர் மிகைப்படுத்திக் காட்டினார். ஆனால் ஆவணங்களை மறைக்க மட்டும் அவரால் முடிய வில்லை. அந்த ஆவணங்களே சவார்க்கரின் குட்டை முழுமையாக அம்பலப்படுத்திவிட்டன. மாபெரும் தேசபக்தர் என்று சங் பரிவாரத்தால் போற்றி வணங்கப்பட்ட சவார்க்கர் அன்றைய ஆங்கிலேய அரசுக்கு தன் வாழ்நாள் முழுவதிலும் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள், உறுதி மொழிக்கடிதங்கள் பலவற்றைப் பற்றிய செய்தி முதன் முதலாக வெளிப்பட்டது. இவ்வாறு அன்னிய ஆட்சியிடம் கருணையும் மன்னிப்பும் கோரிய ஒருவரையே சங் பரிவாரம் வழிபடும் முன்னோடியாகக் கருதியது.

இந்தியர்களின் கோரிக்கைகள் பால் அனுதாபமும் ஆதரவும் கொண்ட நாசிக் மாவட்ட ஆட்சியர் ஏ.டி.எம். ஜாக்சனின் கொலைக்காக சிறை தண்டனை வழங்கப்பட்ட சவார்க்கர் 1911-ல் அந்தமானுக்குக் கொண்டு வரப்பட்டார். கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்காக மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை இது. 1909-ல் நிகழ்ந்த இந்திய அலுவலகத்தின் கர்சான் வைலியின் கொலை , மும்பை தற்காலிக ஆளுநர் எர்ன°ட் ஹாட்சனை 1931-ல் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி, 1948 ஜனவரி 30 அன்று செய்யப்பட்ட காந்தி யின் கொலை ஆகிய மற்ற மூன்று கொலை வழக்குகளில் இருந்தும் அவர் தப்பித்துக் கொண்டார். ஆனால் இந்த வழக்கில் துப்பாக் கியைக் கையாண்டவன் வேறு யாரோ; ஆனால் கொலை செய்யத் தூண்டிவிட்டவர் சவார்க்கர்தான்.1911 முதல் 1950 வரை சவார்க்கர் அளித்த மன்னிப்புகள் மற்றும் உறுதிமொழிகளின் பட்டி யல் ஒன்று இங்கே அளிக்கப்படுகிறது. இந்த வீர தீரச் செயலுக்காத்தான் அவரது உருவப்படம் நாடாளு மன்ற மய்ய மண்டபத்தில், அவர் எவரைக் கொலை செய்யச் சதிசெய்து தூண்டினாரோ அந்த காந்தியின் படத்திற்கு எதிராக அவரது அரசியல் வாரிசுகாளால் வைக்கப்பட்டது.

1.அந்தமான் சிறையில் சவார்க்கர் 1911 ஜுலை 4 அன்று அடைக்கப்பட்டார். ஆறுமாத காலத்திற் குள் அவர் தனது கருணை மனுவை சமர்ப்பித்தார்.

2. 1913 அக்டோபர் மாதத்தில் அந்தமான் சிறைக்குப் பார்வையிடச் சென்ற வை°ராயின் நிர்வாகக் குழுவின் உள்துறை உறுப்பினரான சர் ரெஜினால்ட் கிராடக் மற்றவர்களுடன் சவார்க்கரை யும் சந்தித்தார். கருணை வேண்டிய சவார்க்கரின் கோரிக்கை பற்றிய குறிப்பு அவரது 1913 நவம்பார் 14 நாளிட்ட குறிப்பில் பதிவாகியுள்ளது. “அரசு விரும் பும் எந்த நிலையிலும் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். அரசு என்னும் பெற்றோரிடம் அடைக் கலம் தேடுவதைத் தவிர வழிதவறிப் போன மகன் வேறு எங்கு புகலிடம் தேட இயலும்?” புரட்சிக் காரராகவும், தேசப் பற்றாளராகவும் கருதப்படும் சவார்க்கரின் கடித வாசகங்கள் இவை. சவார்க்கரின் மனு கருணை காட்டத் தகுந்தது என்று கிராடக் குறிப்பாகப் பதிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட மனுக்களிலும் இது போன்ற வாசங்களே நிரம்பியிருந்தன.

3. 1920 மார்ச் 22 அன்று ஆங்கிலேய சட்ட மன்றத்தில் சவார்க்கரின் ஆதரவாளான ஜி. எ°. கோபார்டே முன் வைத்த கேள்வி இதுதான்: “தாங் கள் விடுதலைசெய்யப்பட்டால், ராணுவத்தில் சேர்ந்து ஆங்கில சாமாராஜ்யத்துக்கு போரில் நாங்கள் சேவை செய்வோம் என்றும், சிர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், அதனை வெற்றி பெறச் செய்வோம் என்றும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உறுதுணையாக இருப்போம் என்றும் சவார்க்கரும் அவரது சகோதரரும் 1915 மற்றும் 1918ம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பியது உண்மை தானா?” உள்துறை அமைச்சர் சர் வில்லியம் வின் சென்ட் பதிலளித்தார்: இரண்டு மனுக்கள் ஒன்று 1914-லும் மற்றொன்று 1917-லும் வினாயக் தாமோதர் சவார்காரிடமிருந்து போர்ட் பிளேர் கண்காணிப் பாளர் மூலம் வந்து சேர்ந்தன. முந்தைய கடிதத்தில் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கினால் போரின் போது அரசிற்கு எந்த நிலை யிலும் சேவை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். இரண் டாவது மனுவில் பின்னர் கூறப்பட் டது மட்டும் இருந்தது. வின்சென்ட் 1914 என்று குறிப்பிட்ட 1913-ல் ஒரு விண்ணப்பமும் 1917-ல் இன்னொரு விண்ணப்பமும் அனுப்பப்பட்டன.

4. முதன் முதலாக இங்கு வெளியிடப்பட்டுள்ள 1920 மார்ச் 30 நாளிட்ட ஆவணம் ஆசிரியர் தனது புத்தகத்தில் சொல்லத் தவறியதைத் தெரிவிக்கிறது. அது கோழைத்தனமானது. காலம் கடக்கும் முன் தனது வழக்கைக் கூற ஓர் இறுதி வாய்ப்பு அளிக் கும்படி அதில் சவார்க்கர் கெஞ்சிக் கேட்டிருந்தார். அய்ந்து மாதங்களுக்கு முன் சவார்க்கருக்கு ஏற்பட்ட வயிற்றுக் கடுப்பு நோய் குணமடைந்து விட்டது என்று வின்சென்ட் தெரிவித்தார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அரவிந்த கோஷின் சகோ தரர்கள் பாரின் மற்றும் இதரர்களின் வழக்குகளைக் குறிப்பிட்டு அவர் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொண்டார். “ தீவிரமான சதித்திட்டம் ஒன்றிற்காக அவர்கள் போர்ட் பிளேரில் இருந்தார்களா என்றே அய்யப்பட வேண்டியுள்ளது.” என்று விசுவாசம் நிறைந்த சவார்க்கர் கூறினார். “இது போன்ற தீவிரவாத அமைப்பில் நம்பிக்கை கொண்டவனல்ல நான். குரேபாட்கின் அல்லது டால்°டாய் போன் றோரின் அமைதி நிறைந்த தத்துவரீதியிலான தீவிரவாதத்தைக் கூட ஏற்றுக் கொள்பவனல்ல நான். புரட்சி மனப்பான்மை கொண்ட எனது கடந்த காலத்தைப் பற்றி நான் கூறவருவது இதுதான்: மன்னிப்பைக் கோரி பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இப்போது மட்டுமல்லாமல், 1914 மற்றும் 1918-ஆம் ஆண்டுகளிலும் கூட அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வேன் என்றும் திரு மாண்டேகு அத்தகைய சட்டம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியதும் நான் அதன் வழி நிற்பேன் என்றும் அரசுக்கு எனது கருத்துகளைத் தெரிவித்து கடிதங்கள் எழுதியுள்ளேன். அவரது சிர்திருத்தங்களும் மற்றும் அது பற்றிய பிரகடனமும் எனது கருத்துகளை உறுதிப்படுத்தின. ஒழுங்கு முறையிலான, அரசமைப்பு சட்டப்படியான முன் னேற்றத்திலும் நான் நம்பிக்கை கொண்டிருப்பதாக வும் அதற்கு ஆதரவாக நிற்க நான் தயாராக இருப்பதாகவும் சமீபத்தில் நான் வெளிப்படையாக சபதம் ஏற்றுள்ளேன்.”“அரசமைப்புச் சட்டப்படியான வழியைப் பின்பற்றி நடப்பது, ஆங்கில ஆட்சியின் கரங்களைப் பலப்படுத்தி, இருவருக்குமிடையே ஓர் அன்புப் பிணைப்பை உருவாக்கி, ஒருவருக் கொருவர் உதவி செய்து கொண்டு வாழ்வதற்காக என்னால் இயன்ற அளவு பாடுபட முயல்வது என்னும் எனது திடமான நோக்கத்தை வெளிப் படுத்துவதில் நான் உண்மையானவ னாக இருக்கிறேன். இந்தப் பிரக டனத்தின் மூலம் தனது பெருமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ள இந்த மாபெரும் ஆங்கிலப் பேரரசு எனது மனத்தை வென்று அதனை ஆதரிக் கச் செய்தது.” அவரது நாட்டுப் பற்றுக்கு இதனை விட வேறு சான்று வேண்டுமா !இவ்வாறு சவார்க்கர் தன் கடிதத்தை முடிக்கிறார்: “அரசு நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்ட நியாயமான காலம் வரை அரசியலில் பங்கெடுத்துக் கொள்வ தில்லை என்ற உறுதிமொழியை அளிக்க நானும் எனது சகோதரரும் விருப்பமுடன் தயாராக இருக்கி றோம். இதுவோ அல்லது வேறு எந்த ஒரு உறுதி மொழியோ எடுத்துக் காட்டாக, நாங்கள் விடுதலை செய்யப்பட்ட புன், ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் இருப்பது அல்லது எங்களது நடவடிக்கை பற்றி காவல்துறைக்கு அவ்வப்போது தெரிவிப்பது என்பது போன்ற எந்த வகையான நிபந்தனைகளையும், அவை அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உண் மையான நோக்கம் கொண்டவை என்பதால், நானும் எனது சகோதரரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம்.

5. 1995 ஏப்ரல் 7 அன்று ஃப்ரண்ட்லைனில் வெளியிடப்பட்டிருந்த அவரது 1924-ஆம் ஆண்டின் மன்னிப்புக் கடிதத்தில் அளிக்கப்பட்டிருந்த உறுதி மொழிகள் உள்ளிட்ட அனைத்திலும் இழவான வகையில் மன்னிப்பு கோருவது, எந்த வகையான நிபந்தனைகளுக்கும் உட்படுத்திக் கொள்வது என்ற ஒரு போக்கே காணப்படுகிறது.

6. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் படுவதைத் தவிர்க்க பம்பாய் காவல்துறை ஆணையருக்கு 1948 பிப்ரவரி 22 அன்று எழுதிய கடிதத்தில்: “அரசு விரும்பும் எந்த ஒரு காலம் வரையிலும் எந்த வித மத அல்லது அரசியல் செயல்பாடுகளிலும் நான் பங்கெடுத்துக் கொள்ளா மல் இருப்பேன்.”

7 . பம்பாய் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சாக்ளா மற்றும் நீதிபதி கஜேந்திரகட்கர் ஆகியோ ருக்கு 1950 ஜுலை 13 அன்று சவார்க்கர் எழுதியுள்ள கடிதத்தில்: “ஓராண்டு காலத்திற்கு எந்த ஒரு அரசி யல் நடவடிக்கை யிலும் ஈ டுபடாமல் பம் பாயில் உள்ள எனது வீட்டுக்குள்ளேயே இருப் பேன்” என்று தெரிவித்துள்ளார். இந்து மகா சபைத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார்.1939 அக்டோபர் 9 அன்று வை°ராய் லின்லித்கோ பிரபுவுக்கும் சவார்க்கருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பைப் பற்றி மர்ஜியா கசோலலி குறிப்பிடுகிறார்: இந்த தேசியவாதி அப்போது கூறுகிறார்: “இப்போது நம் இருவரது நோக்கங் களும் நலன்களும் ஒன்றாகவே உள்ளவை. இதனால் நாம் இருவரும் இணைந்தே செயலாற்ற வேண்டும்.” எவ்வாறு செயலாற்றவேண்டும்? காந்திக்கும் காங்கிரசுக்கும் எதிரா கச் செயல்பட வேண்டும் என்ற கருத்தே இது என்பதில் எந்த வித அய்யமுமில்லை. (“1930-ஆம் ஆண்டுகளில் இந்துத்வாவின் அயல்நாட்டு ஒப்பந்தங்கள்” என்ற அவரது கட்டுரை 2000 ஜனவரி 22 எகனாமிக்° அன்ட் பொலிடிகல் வீக்லி என்ற பத் திரிகையில் வெளிவந்துள்ளது.)

இது போன்ற சவார்க்கர் பற்றி வெளிவரும் தகவல்கள் அவரது வாரிசுகளையும் பெரும்கவலை கொள்ளச் செய்துள்ளது. பாபர் மசூதி இடிப்பதற்கு முன் 1992 டிசம்பர் 5 அன்று வாஜ்பேயி ஆற்றிய பேச்சு ஒன்று 2005 பிப்ரவரி 28 அவுட்லுக் இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அதே காலவாக்கில் வெளியிடப்பட்ட மலாய் கிருண்ஷ்ணதர் அவர்களின் ஓபன் சீக்ரட் (வெளிப்படையான ரகசியங் கள்) என்ற புத்தகம் பாபர் மசூதி இடிப்பில் அத்வானிக்கு உள்ள பங்கை வெளிப்படுத்துகிறது (பக்கம் 442௪43)இதுபோன்று ஒவ்வொரு ஆவணமும் வெளிச் சத்துக்கு வரும்போது, அவர்கள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போகிறவர்களாகவே இருக்க வேண்டும்.-

நன்றி: ஃப்ரண்ட் லைன் 8-4-2005தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.

Source: Unmaionline

1 Comments:

Blogger மாசிலா said...

நல்ல பதிவு.

நிறைய வெட்கத்துக்குரிய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.
இதுபோன்ற நாதாரியையா அத்வானி-வாஜ்பேயி&கூட்டம் தலையில் தூக்கி வைத்து ஆட்டம் போடுகிறது?

தேவை விழிப்புணர்வு. தேவை கவனம்.

நன்றி.

December 05, 2006 2:09 am  

Post a Comment

<< Home