நாமம்
கடவுளுடைய பாதம்தான் `நாமம்’ என்றால் அந்த `நாமம்’ கடவுளுடைய நெற்றியில் இருப்பானேன்? தந்தை பெரியார்
மதச் சின்னத்தில் ஏராளமான வித்தியாசம்?
``இது மட்டுமல்ல, மதச் சின்னங்கள் விஷயத்தில் ஒரு நாமம் (மதச் சின்னங்கள் எல்லாம் என்றால் ஒரே மாதிரிதான். உலகம் பூராவும் இருக்கிறது. இந்துக்கள் பெரும்பான்மையோர் தேசமே இந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்று சொன்னால், ஒரு யுனிஃபார் மிட்டி உண்டா? அவர்களுக்குள்ளே யூனிட்டியும் இல்லை, அய்க்கியமும் இல்லை. சீர்மையும் இல்லை.)ஒருவர் விபூதி, ஒருவர் கறுப்புப் பொட்டு, ஒருவர் சந்தனக் கீறல். ஒருவர் முத்திரை, ஒருவருக்கு நெடுக்கு , ஒருவருக்கு குறுக்கு இப்படியாகப் பல மாறுதல்கள் ஏற்படுவானேன்?.(1926+இல் தந்தை பெரியார் அவர்கள் சென்னிலைமலையில் இப்படி பேசியிருக்கிறார்.)``இந்த வித மாறுதல்களோடு இருப்பதற்கு காரணங்கள் ஆளுக்கு ஒருவிதமாய் சொல்வானேன்?’’ சரி, இருப்பது மோசம் அல்ல. ஏம்ப்பா அப்படியிருக்கிறதென்றால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வியாக்கியானம் செய்கிறார்கள். ``அவரவர்களுக்குத் தெரிந்த வியாக்கியானத்தை விளக்கத்தை அவரவர் சொல்லக்கூடியதாக இருப்பானேன்?’’
சாமிகளுக்குள்ளும் புகுத்துவானேன்?
‘’இந்த வித்தியாசங்களை சாமிகளுக்கும் புகுத்துவானேன்?’’(இவன் நாமம் போட்டுத் தொலைக்கட்டும். இவன் குறுக்கே, நெடுக்கே கோடு போடட்டும். இவன் கடவுளுக்கும் அதே மாதிரி பிரித்து விட்டான். இது நாமம் போட்ட கடவுள். இது விபூதி போட்ட கடவுள். இது தென் கலை நாமம். இது வடகலை நாமம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?)நடுவில் சிகப்பு நாமத்திற்குப் பெயர் என்ன?``நாமம் என்பது என்ன வென்று கேட்டால் சிலர் சுவாமியின் பாதம் என்று சொல்லுவார்கள்’’ நாமம் ஏன் போடுகிறாய் என்றால் உனக் குத் தெரியாதய்யா, இது விஷ்ணு பாதம். நடிவேள் ராதா அவர்கள் இதை கேள்வியாகக் கேட்டு நடிப்பு ரீதியாகக் கூடச் சொல்லுவார்கள். `வெள்ளை நாமம் இரண் டும் பாதம். ஆனால், நடுவில் உள்ள சிகப்பு நாமத்திற்குப் பெயர் என்ன?’’ பெரியார் எப்படி கேள்வி கேட்கிறார் பாருங்கள்
சுவாமியின் பாதம் கடவுளின் நெற்றியில் ஏன்?
அப்படியே சுவாமியின் பாதம் என்பதை ஒப்புக் கொள்வோமேயானால், சுவாமியின் பாதத்தை சுவாமியின் நெற்றியில் போய் வைப்பானேன்? ``இந்த நாமத்திற்கும் பாதம் வைத்த நாமம். பாதம் இல்லாத நாமம் என்பதாக வடகலை, தென்கலை என்ற ஒருவருக்கு ஒருவர் உதை போட்டுக் கொள்வானேன்?’’ அய்யா அவர்கள் கோவை கொங்குநாட்டுத் தமிழிலே சொல்லியிருக்கின்றார். ``உதை போட்டுக் கொள்வது’’ என்று.
காஞ்சிபுரம் யானைக்கு எந்த நாமம்?
உங்களுக்குத் தெரியும். காஞ்சிபுரம் யானைக்கு என்ன நாமம் போடுவது என்று இன்னமும் முடிவு பண்ண வில்லை. இன்னமும் கே° பெண்டிங்கில் இருக்கிறது. தலைமை நீதிபதி வீராசாமி அவர்களிடத்திலே கூட இந்த வழக்கு வந்தது. மதுராந்தகம் யானை, காஞ்சிபுரம் யானை என்று பல இடங்களில் இருக்கும் யானை களுக்கு வடகலை நாமம், தென் கலை நாமம் என்று நிரந்தரமான சண்டை. சிறீரங் கத்தில் கூட கொஞ்ச நாட் களுக்கு முன்னாலே அந்தத் தகராறு வந்தது.
வடகலையா? தென்கலையா?
வெள்ளைக்காரர்கள் காலத்தில் ``பிரிவி கவுன்சில்’’ என்று ஒன்று இருந்தது. மதம் என்பது எந்த அளவுக்கு போகிறது? இந்த சின்னத்தின் விளைவு என்ன என்பதை வழக்கில் சொன்னார்கள்.வடகலை என்றால் என்ன? தென்கலை என்றால் என்ன வென்று புரியுமா? லண்டன் பிரிவி கவுன்சிலில் பார் அட்லா வெள்ளைக்காரர்கள்தான் வாதாடுவார்கள். இங்கிலாந்து வழக்குக்குரிய கட்டு மட்டும் தான் போகும். அவனுக்கு வடகலை என்றால் என்ன என்று தெரியாது. அதேபோல தென்கலை என்றால் என்ன வென்று தெரியாது. நீதிபதிக்கு புரியும்படியாக எடுத்துச் சொன்னார்கள். வழக்கறிஞர் சொன்னார்: No my Lord, this is nothing but fight between ‘‘Y’’ and ‘‘U’’ என்று சொன்னார்.
`ஒய்’க்கும் `யு’க்கும் சண்டை
அப்பொழுதுதான் வெள் ளைக்கார நீதிபதிக்கே புரிந்தது. ``ஒய்’’க்கும், ``யு’’க்கும் இடையே நாமம். அதனால்தான் லண்டன் பிரிவி கவுன்சில் வரை வந்திருக்கின்றார்கள். இன்ன மும் வழக்கு இருக்கின்றது. நீங்கள் ஏதோ வேடிக்கையாக, சிரிப்பதற்காக சொல்லக் கூடியது அல்ல என்று நினைக்கவேண்டாம். நாமம் யாருக்குப் போடுவது? கோயில் யானைக்கு. காஞ்சிபுரத்தில் அதற்கப்புறம் மூன்று யானை செத்துப் போய்விட்டது. நூறு வருடம், நூற்றி இருபத் தைந்து வருடம் வழக்கு நடந்தால் எவ்வளவு காலத் திற்குத்தான் அந்த யானை இருக்கும்?
நாமத்திற்கு கணக்குச் சண்டை
``இவைகளில் ஒரு நாமம், மூன்று நாமம், பதினோரு நாமம் என்ற கணக்குச் சண்டை எதற்கு?’’ பெரியார் சொன்னால் அத்தாரிட்டேடிவாக எடுத்துக் கொள்ளவேண் டும். ஏனென்றால் பெரியார் குடும்பம் அதிகமான அளவுக்கு நாமம் போட்ட மாதிரி வேறு எந்த குடும்பமும் நாமம் போட்டிருக்க முடியாது.
அய்யா அவர்களுடைய முழுப் பெயரே நீளமான பெயர்
அய்யா அவர்களுடைய முழுப் பெயரைக் கேட்டாலே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். `வெங்கட ராமானுஜ’ என்று சொல்லி வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவ்வளவு நீண்ட பெயரை வைத்திருக் கின்றனர். அதனால்தான் ராமசாமி, கிருஷ்ணசாமி என்றெல் லாம் தன்னுடைய பிள்ளை களுக்கும் பெயர் வைத்தார். ``இந்துக்களிலேயே ஒரு சாரார் இந்த நாமத்தைப்பற்றிக் கேவலமாகப் பேசுவானேன்’’
விபூதி பூசுகிறவரும் நாமம் பூசுகிறவரும்
விபூதி பூசுகிறவர்களைப் பார்த்தால் நாமம் போடுகிறவர் களை கேலியாகப் பேசுவார் கள். °மார்த்தர்கள் என்று சொல்லும்பொழுது, அவர்கள் இவர்களை ஒத்துக் கொள்வ தில்லை. இவர்கள் அவர்களை கேலி பண்ணுவார்கள். அந்தக் காலத்திலே சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் இந்த சண்டைகளை ரொம்ப விளக்கமாக மக்கள் மத்தியிலே எடுத்துச் சொல்லுவார்கள். விபூதி பட்டை பூசிய வரைப் பார்த்து அந்த மூன்று முருங்கக் காயை எங்கிருந்து பறித்தீர்கள்? என்று நாமம் போட்டவர் கேட்பாராம். விபூதி பூசியவர், நாமம் போட்டவரைப் பார்த்து சொன்னாராம், இந்த இரண்டு கிளைகள் இருக்கிறது பாருங் கள், அதில் ஏறித்தான் பறித் தோம் என்று சொன்னார் களாம். இப்படியெல்லாம் நிறைய அந்த காலத்தில் சாதாரணமாக சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
மதங்களும், சின்னங்களும் எதற்குப் பயன்பட்டன?
ஆகவே ஒருத்தருக்கு ஒருத்தர் கேலி பண்ணுவதற்குத் தான் இவர்களுடைய மதங் களும், சின்னங்களும் பயன் பட்டிருக்கின்றதே தவிர, வேறு உருப்படியான காரியத்திற்குப் பயன்படவில்லை. ``இதை மற்ற தேசத்தாரும் ஒப்புக் கொள்ளாததேன்? லிங் கத்தையும், ஆவுடையானைப் பற்றியும் பலவிதமாக பேசு வானேன்? நமது சுவாமிகளு டைய பெயரெல்லாம், குறிகள் எல்லாம், நமது தமிழ் பாஷை யில் இல்லாமல் அந்நிய பாஷையாகிய ஆரிய பாஷை யில் இருப்பானேன்? (கை தட்டல்). சுவாமிஜியை பூஜிப் பதற்கு நமக்கும், சுவாமிஜிக் கும் மத்தியில் ஒரு அன்னியன் இருப்பானேன்? அந்நிய பாஷையில் மந்திரங்களும், தோத்திரங்களும் இருப்பா னேன்? ஆளுக்கு ஒருவிதமாக பூசை செய்வானேன்? இதற்கு நாம் பணம் கொடுப்பானேன்?’’ (கைதட்டல்) என்று அய்யா அவர்கள் இப்படி கேள்வி கேட்கின்றார்.
2 Comments:
ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது, ஒரு கோயில் யானைக்கு நாமம் போடுவதா பட்டையிடுவதா என்ற சர்ச்சை எழுந்ததாம், திடீரென்று யானை ஓடி விட்டதாம், எல்லோரும் யானைக்கு மதம் பிடித்ததனால் தான் ஓடி விட்டது என்றார்களாம், ஒரு பகுத்தறிவாளர் (ஐயா வழி நடப்பவர்) சொன்னாராம், இல்லை இல்லை யானைக்கு மதம் பிடிக்காததால் தான் ஓடி விட்டது என்று- நாகூர் இஸ்மாயில்
நம் மண்ணில் வந்து ஏறிக்கொண்டு நம் மூளைகளை குழப்பி சதா ஒரே வேதனை தந்து கொண்டிருக்கின்ற இந்த மட்டி கும்பல்களை எப்போதுதான் விரட்டி அடிக்கப்போகின்றோமோ? தான் வாழ்ந்தபாடும் இல்லை, மற்றவரை வாழவிட்ட பாடும் இல்லை. சரியான இரண்டாம் கெட்டான் இனம். தமிழ்நாட்டில் இருந்துதான் கிளம்ப போகிறது இதுகளுக்கு வேட்டு. இருதலை கொள்ளி எறும்பாக துடித்து கொண்டிருக்கும் இதுகளை இந்தியனை தவிர மற்ற எந்த அந்நிய நாட்டானும் சட்டைகூட செய்யமாட்டான். சனியன் ஒழியட்டும் என அழிகிறவரை தூங்குவதுபோல் நடித்து காலத்தை ஓட்டுவான். இந்த கழிசடைகள் தந்தை பெரியாரை கூற்றி ஈனமாக ஏசுவது புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதைதான்.
நல்ல பதிவு.
தொடர்க.
நன்றி.
அன்புடன் மாசிலா.
Post a Comment
<< Home