Tuesday, December 12, 2006

"பிள்ளையார்" கதை

சிவனின் மனைவி பார்வதி குளிக்கப் போகையில் குளிக்குமிடத்தில் வேறுயாரும் வராமல் இருக்க தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளை உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும் படி செய்து அதை வாயிற்படியில் உட்கார வைத்து யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லி குளிக்கச் சென்றதாகவும், பின்னர் பரமசிவன் உள்ளே வர அப்போது ஆண் பிள்ளை அவரைத் தடுக்க, கோபம் கொண்ட பரமசிவன் அவன் தலையை அறுத்து எறிந்துவிட்டு பரமசிவன் உள்ளே செல்ல, அங்கு பார்வதி எப்படி உள்ளே வந்தீர்கள் என்று கேட்க, பரமசிவன் வாசலில் இருந்தவனின் தலையை வெட்டி விட்டு வந்ததாக கூற, உடனே பார்வதி உருண்டு, புரண்டு அழுததாகவும், பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்ட தலையை ஒட்டவைத்து உயிர் கொடுக்க லாம் என்று கருதி அங்குவர, வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானை யின் தலையைவெட்டி முண்டமாக கிடந்த குழந்தை யின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிர் கொடுத்து பார்வதியை திருப்தி செய்ததாக கதை சொல்லப் படுகிறது.

நம் சிந்தனைக்கு:

திரட்டுகின்ற அளவுக்கு பார்வதியின் உடம்பில் அழுக்கென்றால் பார்வதி குளித்து எத்தனையோ வருடம் ஆகியிருக்கவேண்டும். வெட்டப்பட்ட தலை எங்கு போயிருக்கும், அப்படியே தொலைந்து போனாலும் அதை பரமசிவனால் கண்டு பிடிக்க முடியாதா?. உலகுக்கு படியளக்க சென்ற பரமசிவனை சோதிக்க பார்வதி ஒரு எறும்பை ஒரு டப்பாவுக்குள் அடைத்து அதை தன் சேலை முந்தானையில் முடிந்து வைத்ததாகவும் ஆனால் பரமசிவன் அதற்கும் ஒரு தானியம் போட்டாராம். அவ்வளவு சக்தி படைத்த வர் வெட்டுண்ட தலையை கண்டு பிடிக்க முடியாதா?

Source: Unmaionline

4 Comments:

Blogger மாசிலா said...

வயிறு வலிக்க சிரித்தேன் ஐயா.
இந்த கதை எனக்கு இதுவரை தெரியாது.
எப்படிதான் இது போன்ற பொய் மூட்டைகளை நம்ப வைத்து மக்களை ஏமாற்ற துணிந்தர்கள் இந்த அயோக்கியர்கள்? கடைசியில்
வெட்கம் தான் மிஞ்சுகிறது. இந்தியாவில் மட்டும்தான் இது போன்ற ஏமாற்று வேலைகள் நடக்கும். இந்த மட்டிகளின் வீராப்பு வேறு எங்கும் செல்லாது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.இதனால்தான் இந்நாட்டை இவர்களின் கோட்டையாக மாற்ற கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
'கார்டூன்' பட்ங்கள் தயாரிப்பதற்கு இவர்கள் கதை மிக நன்றாகவே இருக்கும்போல் தெரிகிறது. வயிறு வலிக்க கொஞ்சம் சிரித்தாவது கவலைகளை மறக்கலாம்.

December 12, 2006 1:44 pm  
Blogger nagoreismail said...

நீங்கள் எழுதியிருக்கும் சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடந்தது பிள்ளையாருக்குத் தானா? தவிர, அந்த தலை எங்கு தான் போச்சு?
நாகூர் இஸ்மாயில்

December 13, 2006 7:32 pm  
Blogger K.K.A said...

Dears That was damilshied by Load Vishnu may your life will be closed shortly.

November 04, 2010 2:14 pm  
Blogger K.K.A said...

Dear Mr.MohamedIsmail, Don't hurt the Hidues Feel. you don't like that type of stories please keep your mouth with your contorl don't publish others.

November 04, 2010 2:21 pm  

Post a Comment

<< Home