Wednesday, December 13, 2006

திருப்பதி வெங்கடாசலபதி

ஏமாற்றுப் பேர் வழிகளை நம் நாட்டில் என்ன சொல்லுவார்கள்? நல்லா குழைத்து நாமம் போட்டான் என்று தான் சொல்லுவார்கள். அப்படி அவர்கள் சொல்லு வதில் ஆழமான அர்த்தமும், அனுபவரீதியான அத்தாட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

திருப்பதியில் வெங்கடாசலபதி என்ற ஒரு சாமி இருக்கிறது; அதற்கு ஏழுமலையான் என்ற பெயரும் உண்டு. அதன் நெற்றியில் நெடு நாமம் சாத்தப்பட்டு இருக்கும். எத்தனைக் கோடி மக்களுக்கு இந்தக் கல் முதலாளி நாமம் சாத்தியிருந்தால் அந்தக் கோவிலுக்கு ரூ.7,500 கோடி சொத்து சேர்ந்திருக்கும்.இந்த இதழ் `இந்தியா டுடே’ (4.10.2006) இந்தக் கோயிலின் சொத்துக் கணக்கைத் தோராயமாகச் சொல்லியிருக்கிறது.
நிலம் ரூ.15,000 கோடி.
கட்டடங்கள் ரூ.1,500 கோடி.
நகைகள் ரூ.30,000 கோடி.
நிதி ரூ.20,000 கோடி.

கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது.நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் உண்டியல் வசூலாம். இந்த மாதம் வரை இந்த ஆண்டில் மட்டும் கோயில் வருமானம் ரூ.900 கோடி. லட்டு வியாபாரம் மூலமும் லட்டாய் பணம் குவிகிறது. கொஞ்சம் தான் ரூ.28 கோடி.

திருப்பதி வெங்கடாசலபதி அடித்து வைக்கப்பட்ட விக்ரகம் வியர்வையைச் சிந்தி உழைத்த உழைப்பால் சம்பாதித்த பணமா இது? ஏதாவது தனியே தொழிற்சாலை ஏற்படுத்தி ஆலைகளை உண்டாக்கி அவற்றில் கிடைத்த வருமானமா இது?அது ஓர் அசையாப் பொருள். அஃறிணை வ°து! சிற்பியின் கைவண்ணம்! (நாங்கள் செதுக்கி வைத்தது தானே கடவுள்! மற்றபடி கடவுளைக் கண்டவர்கள் யார்? என்று பிரபல கணபதி °தபதியின் `கல்கி’ (11.6.2006) பேட்டியை நினைவில் கொள்க!)

இதற்கென்று வேறு சக்தி ஏது?இதற்கு ஏதோ சக்தியிருப்ப தாக விளம்பரம் செய்து, பாமர மக்களின் பேராசையையும், அச்சத்தையும் முதலீடாக்கி, அவர்களிடமிருந்து பறித்த (ப்)மகா சுரண்டல் தான் இவ்வளவுப் பணமும்!பக்தி என்ற பெயரால் அப்பாவி மக்களுக்கு நாமம் போட்ட (ஏமாற்றிய) பெரும் பணம்தான் இது.கதை கட்டுகிறார்கள்; இந்தக் கடவுளைத் தரிசித்தால், உண்டியலில் பணம் போட்டால், நகைகளைக் காணிக்கையாகக் கொடுத்தால் நினைத்தது நடக்குமாம்! நோய்கள் குணமாகுமாம்! வியாபாரம் நல்லா நடக்குமாம்!

தந்தை பெரியார் சொல்லுவது போல முட்டாள்கள் படித்தவர்களிடத்திலும் உண்டு; படிக்காத பாமரர்களிடத்திலும் உண்டு.நடிகர் அமிதாப்பச்சன் தன் நோய் தீர்ந்தால் திருப்பதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டாராம். நோய் தீர்ந்தபின் வேண்டிக் கொண்டபடி பெருமாளின் கைகளை தங்கத்தாலும், வைரத்தாலும் அலங்காரம் செய்து ஆனந்தக் கடலில் குதித்தாராம்.`மனசாட்சியை’த் தொட்டு சொல்லட்டும்; நடிகர் அமிதாப்பச்சன் திருப்பதி ஏழுமலையானின் அருளை, சக்தியை நம்பி மருத்துவரிடம் செல்லவேயில்லையா? வைத்தியம் பார்த்துக் கொள்ளவேயில்லையா இவர்களைப் போன்ற படித்த பாமரர்கள், தன்னம்பிக்கையற்றவர்கள் நாட்டில் இருக்கும்போது பாமர மக்களின் நிலை என்ன? வெங்கடாசலபதிக்கு நோயைத் தீர்க்கும் சக்தியிருந்தால் வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரியை திருப்பதி தேவ°தானம் நடத்துமா? எள் மூக்கு முனை அளவுக்கு இந்த இடத்தில் கொஞ்சமோ கொஞ்சம் அறிவைச் செலவழிக்கக் கூடாதா?

சினிமாக்காரர்கள் வாங்கும் கறுப்புப் பணம் இந்த வகையில் காணிக்கையாகச் செலுத்தப்படுவதும் உண்மை தானே? மறுக்க முடியுமா?தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம் என்று பஜனைப் பாடுகிறார்கள். அன்றாடம் ஏடுகளில் நாம் படிக்கவில்லையா? திருப்பதிக்குச் சென்ற பக்தர்கள் பலி! திருப்பதி சென்று சாமி கும்பிட்டு வந்த குடும்பத்தினரின் வேன் விபத்தில் சிக்கி அத்தனைப் பேரும் மரணம்! திருப்பதி கோயில் விடுதிகளில் குடும்பத்தோடு தற்கொலை என்று செய்திகள் வருவதில்லையா? இதுதான் ஏழுமலையானின் சக்திக்கு அடையாளமா? நம்பியவர்களை ஏழுமலை யான் கைவிடார் என்பது இது தானா?அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?எப்படி சிந்திப்பார்கள்?

பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுமே தந்தை பெரி யார் சும்மா வா சொன்னார் நாக்கைப் பிடுங்கு மாறுதான் அழுத்தமாகச் சொன் னார் ஆனாலும் ஏமாறு கிறார்களே, என்ன செய்ய!தாஜ்மகாலைக் கட்டிய மன்னன் ஷாஜகான் ஒரு பெரிய தங்கச் சங்கிலியை ஏழுமலை யானுக்கு அணிவித்தானாம்!ஜகாங்கீரும் விலை மதிப் பற்ற கற்கள் பதித்த ஆபர ணங்களை திருப்பதி கோவி லுக்கு வழங்கினாராம். ஆங்கி லேயர் ஆட்சியில்கூட அரசர் ஜார்ஜும், அரசி விக்டோரி யாவும் தங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நகைகளை திருப்பதிக் கோவிலுக்குத் தானங் களாகக் கொடுத் தார்களாம் `இந்தியா டுடே’ பட்டியலிடு கிறது.

ஆர்.எ°.எ°. காரர்கள், சங்பரிவார்க் கும்பல் என்ன செய்யப் போகிறதாம்? அவ மானம் அவமானம்!! ஏழு மலையானுக்கே அவமானம்!!! இருந்தும் இருந்தும் துலுக்கனி டத்திலும், கிறி°தவனிடத் திலுமா தானம் வாங்குவது என்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்களா?ஓர் உண்மையைத் தெரிந்து கொண்டால் சிலருக்கு அதிர்ச் சியாகக்கூட இருக்கலாம். இந்தத் திருப்பதிசாமி கோவி லின் பூர்வாந்திரம் என்ன?

நாமம் போட்ட இந்த வெங்கடாசலபதி யாராலும் உருவாக்கப் படவில்லை; சுயம்பு தானாகவே தோன்றியது என்று கதை கட்டுகிறார்களே இதன் உண்மையான வரலாறு என்ன? மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனாதா° ஒரு நூலையே எழுதியுள்ளார்.``வெங்கடாசலபதி கடவுள் இருக்கும் திருப்பதி கோயில் என்பது தென்னகத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவக் கோயிலாகும். வெங்கடாசல பதியின் வடிவம் பல நூற் றாண்டுக் காலமாகப் பிரச் சினைக்குரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. சிலர் அந்தக் கடவுளை விஷ்ணு என்றும், வேறு சிலர் சிவா என்றும், சக்தி என்றும், °கந்தா என்றும், ஹரிஹரன் என்றும் பலவாறாகக் கருதுகிறார்கள்.

உண்மையிலேயே திருப்பதிக் கோயில் என்பது தொடக்கத்தில் புத்தர் கோயிலாகவே இருந்தது; உள்ளே இருக்கும் மூர்த்தி சிலை என்பது புத்தபிரானே ஆவார்.புத்த மார்க்கம் இந்தியா வில் வீழ்ச்சி அடைந்தபோது அது பார்ப்பனீயத்தால் தங் களுடைய வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றப்பட்டது.புத்தர் கோயில் வைஷ்ணவ கோயிலாக இப்போதுள்ள தன்மையில் பார்ப்பன மயமாக்கப்பட்டது அப்பொழுது இருந்த பார்ப்பனப் பண்டிதர்களால்!தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு அடிப்படையிலே இந்தக் கருத்தை இந் நூலில் நூலாசிரியர் நிறுவி யுள்ளார். பந்தர்பூர், பூரி செகந் நாதம், சபரிமலை அய்யப்பன் இவையெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகாரங் களாகவே இருந்து, பிற் காலத்தில் இந்துக் கோயில் களாக மாற்றம் செய்யப் பட்டுள்ளன.7ஆம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை புத்த மார்க்கம் வீழ்ச்சி அடைந்த கால கட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும், சிறப்பாக தென்னிந்தியாவிலும், புத்த விகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில் களாக மாற்றப்பட்டுள்ளது பற்றி இந்நூல் விவரிக்கிறது.

’’மராட்டியத்தைச் சேர்ந் தவர் கூறுவது ஒருபுறம் இருக் கட்டும். நம் ஊர் மயிலை சீனி வெங்கடசாமி என்னும் ஆராய்ச்சியாளர் பவுத்தமும் தமிழும் என்ற ஒரு தனி நூலையே எழுதி இருக் கிறாரே!தமிழ்நாட்டில் எந்தெந்த கோவில்கள் எல்லாம் புத்தர் கோவில்களாக இருந்து பிற்காலத்தில் இந்துக் கோயில் களாக மாற்றப்பட்டன என்பதை தக்க ஆய்வுகள் மூலம், ஆதாரங்கள் மூலம் நிரூபித்து இருக்கிறாரே! புத்தருக்குச் சா°தா என்ற பெயர் உண்டு. பிற்காலத்தில் அய்யப்பன் என்ற கடவுளைக் கற்பித்து சா°தா என்று பெயர் சூட்டினர். புத்தருக்கு விநாயகர் என்ற பெயருண்டு; விநாயகர் என்றால் தலைவர் என்று பொருள். அரசக் குடும்பத்தைச் சேர்ந்த புத்தரை விநாயகர் என்று அழைத்தனர். பிற்காலத்தில் அந்த விநாயகர் என்ற பெயர் பிள்ளையார் சாமிக்குச் சூட்டப்பட்டு, புத்தர் சிலைகள் எல்லாம் நாடெங்கும் பிள்ளையார் (விநாயகர்) சிலைகளாக உருக்குலைத்து விட்டனர் என்று கூறுகிறார் மயிலை சீனி வெங்கடசாமி.

புத்தர் அரசக் குடும் பத்தைச் சார்ந்தவர் என்பதால் குறிப்பிட்ட மரத்திற்கு அரச மரம் என்று பெயர் சூட்டப்பட்டது. அங்கெல்லாம் புத்தர் சிலைகள் எழுப்பப்பட்டன. பிற்காலத்தில் பவுத்தம் வீழ்ச்சியுற்று பிராமணீயம் வீறு கொண்டபோது அந்த அரசமரத்தடி விநாயகரான புத்தரின் சிலைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு, பிள்ளை யார் விநாயகராக்கப்பட்டு, அந்த இடங்களில் எல்லாம் குடியமர்த்தப்பட்டார். அப்படி தூக்கி எறியப்பட்ட புத்தர் சிலைகள் எல்லாம் குளங்களில் துணி துவைக்கப் பயன்பட்டன என்பதுதான் எதார்த்தம்.நாகப்பட்டினத்தில் அய்ம் பொன்னாலான புத்தர் சிலையைத் திருடி திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்து ரெங்கநாதன் கோவிலுக்கு மதிற் சுவர் எழுப்பினான் என்று தஞ்சைவாணன் கோவை கூறுகிறதே!அந்த நேரத்தில் (புத்தர் சிலையைத் திருடிய நேரத்தில்) திருமங்கை கடவுட் தன்மை உடையவராக இருந்தார் ஆதலால் அவரைக் குற்றம் சொல்வார் எவரும் இலர் என்று அந்த நூல் எழுது கிறதே இதைவிட பித்த லாட்டத்திற்குப் பிறந்த பித்த லாட்டம் வேறு ஒன்று இருக்க முடியுமா?பார்ப்பான் உயிர், ஜீவனம் கோயிலில், அதன் கருவறைக் குள் இருக்கும் குழவிக் கல்லில் இருக்கிறது அது அழிந்தால் பார்ப்பனர்களும் அழிந்து விடுவார்கள்; அதனால்தான் கோயில் கட்டுவது, பக்தியைப் பரப்புவது என்கிற வேலையில் பார்ப்பனர்கள் சதா ஈடுபட்டு வருகிறார்கள் என்கிற தந்தை பெரியாரின் சிந்தனை தெரு வுக்குத் தெரு வடிக்கப்பட வேண்டிய கல்வெட்டு அல் லவா! தமிழர்களே, சிந்திப்பீர் களாக!

7 Comments:

Blogger Sivabalan said...

மிக அருமையான பதிவு!! வாழ்த்துக்கள்!!

December 13, 2006 5:58 pm  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//அரசக் குடும்பத்தைச் சேர்ந்த புத்தரை விநாயகர் என்று அழைத்தனர். பிற்காலத்தில் அந்த விநாயகர் என்ற பெயர் பிள்ளையார் சாமிக்குச் சூட்டப்பட்டு, புத்தர் சிலைகள் எல்லாம் நாடெங்கும் பிள்ளையார் (விநாயகர்) சிலைகளாக உருக்குலைத்து விட்டனர் என்று கூறுகிறார் மயிலை சீனி வெங்கடசாமி.//

பிள்ளையார் வழிபாடு முருகன் வழிபாட்டிற்கு முந்தியது அல்ல, சங்காலதற்கு முன்பு விநாயகர் கிடையாது,

அரசமரத்தடி பிள்ளையார்கள் இப்படித்தான் உருவானார்கள்,
புத்தர் சிலைகள் அகற்றப்பட்டு அங்கெல்லாம் பிள்ளையார் சிலைகள்தான் வைக்கப்பட்டதாக எங்கேயோ படித்தேன்.

December 13, 2006 6:04 pm  
Anonymous Anonymous said...

nice post.

December 13, 2006 6:35 pm  
Blogger மோகன் காந்தி said...

அரசக் குடும்பத்தைச் சேர்ந்த புத்தரை விநாயகர் என்று அழைத்தனர். பிற்காலத்தில் அந்த விநாயகர் என்ற பெயர் பிள்ளையார் சாமிக்குச் சூட்டப்பட்டு, புத்தர் சிலைகள் எல்லாம் நாடெங்கும் பிள்ளையார் (விநாயகர்) சிலைகளாக உருக்குலைத்து விட்டனர் என்று கூறுகிறார் மயிலை சீனி வெங்கடசாமி

மிக அருமையான பதிவு!!

March 19, 2007 12:36 pm  
Blogger Unknown said...

unnakku kadavulmaela nambika illana vittru inthamathiri varalaara thappu thappa azhuthatha ,ne soldratha patha intha ulagathulayae nethan arivaali mathiri paesura athu thappu,kodikanakana nambikkai than "indhu morkkam" puriyutha unnaku pidikaalana ne nathigana irunthutupo puriyutha ,ippadi varalara thappa azhuthatha,and onething kadavulmaela nambika illathavan ippadi than difference yosikuraennu aethayavathu araikuraiya padichutu ippudi thappu thappa azhuthuvanga unnaku ippa ippadithan ithu ellum comedy thonum but manithanin sinthanaiku apparpatta visayam iruku i.e.,
1200 varusathuku munnadi ramarpalam kattapattathunu nasa thennudaiya research photola iruku
doubt iruntha search in web,
and onemore thing unnamathiri naathigan ramar palamae illanu sonnavanukaellam nosecut pannathu nasa ,athaemathiri than enga inthu kadavul nambikaiyen uruvam "tirupati".

December 24, 2013 1:32 pm  
Blogger Unknown said...

adad

December 24, 2013 1:33 pm  
Blogger Unknown said...

waste,ne nathigan ,god is like air we dont get to show,and onemorething
again dont post like this

December 24, 2013 1:35 pm  

Post a Comment

<< Home