Saturday, January 06, 2007

பெரியார் படப்பாடல்கள்

பாடல் வெளியீட்டு விழா முடிந்து நீண்ட நாட்களாக கடையில் கேட்டு ஒருவழியாக இன்று பெரியார் ஒலித்தட்டை வாங்கி பாடல்களை கேட்டுவிட்டேன். பலர் வாழ உழைத்திட்ட ஒரு மாமனிதரின் வரலாற்றை பதித்திட்ட ஒரு காவியத்தின் பாடல்கள்.

வைரமுத்துவின் வரிகளுக்கு வித்யாசாகர் இசை அமைத்த முத்தான பாடல்கள். 50 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் இசை அமைந்துள்ளது. பாடல் வரிகளை சுலபமாக பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் இசை.

பகவான் ஆகாயத்த படைச்சான், கடவுளா இல்லை கல்லா என்று தொடங்கும் இரு பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அனைத்து பாடல்களும் அருமை. பகவான் ஆகாயத்த படைச்சான் பாடல் கதா காலேட்சபம் அல்லது போட்டி பாடல் வகையில் அமைந்துள்ளது. படம் வெளிவந்தால் தெரியும் எந்த வகை என்று.

சில வரிகள்:

அணிலுக்கு ராமன் முதுகில தடவியாதால் 3 வரிகள் வந்ததாம். அப்புறம் ஏன் சீதைக்கு முதுகில் வரிகள் இல்லை. அப்படின்னா ராமன் சீதைய தொடவில்லையா?

நாய், பூனை எல்லாம் போலாம். மனிதன் போகக்கூடாதா?

குளிக்காத மாட்ட கும்பிடறான். குளிக்கற மனிதனை கொல்றான்.

கற்பழித்த இந்திரன் கடவுள். மாற்றான் மனைவியை கற்புடன் காத்த ராவணன் அசுரனா?

இது போல பல வரிகள். நல்ல கேள்விகள் - பதில் தான் கிடைப்பதில்லை.

நட்புடன்,
பகுத்தறிவு

2 Comments:

Blogger Anony said...

அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் இது. பாடல்கள் காதுக்கு விருந்தளிக்கின்றன.

January 06, 2007 12:18 pm  
Blogger thiru said...

நல்ல கருத்தான பாடல்கள்! மனிதனை நினைக்கும் அனைவரும் கேட்கலாம். கடவுளை காட்டி மனிதனை வெறுப்பவர்களுக்கு எத்தனை பாடல் வந்தாலும்....?

உங்களை சென்னையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி தோழரே!

January 09, 2007 6:59 pm  

Post a Comment

<< Home