Saturday, December 16, 2006

ஜீயர் - சங்கராச்சாரியார் குடுமிச்சண்டை

நம் கள நண்பர்களின் நினைவுக்காக...

சண்டை போடுதல் பகைமை நெருப்பைக்கக்குதல், பிளவுகளை உண்டாக்குதல், வெறுப்பை உமிழ்தல், நான் பெரியவன் நீ சிறியவன் என்று சீற்ற மொழி பேசுதல் என்பவையெல்லாம் பார்ப்பன மதத்தின் ரத்தவோட்டமாகும்.

பிறவியில் பேதம் பேசும் மதத்தில் இவை இருக்கத் தானே செய்யும்!

பார்ப்பனரல்லாதாரை இழிவு படுத்துவதில் ஒன்று சேர்ந்து சண்டை போடும் ஜீயர்களும், சங்கராச்சாரியார்களும், அவர்களுக்குள்ளேயே சிண்டு பிடி சண்டையாம் கோதாவுக்குள் குதிப்பதுண்டு. அந்தச் `சுவையான’ காட்சி அண்மையில் அரங்கேறி கோவணம் கட்டத் தெரியாத சிறுவன் கூட பின்பொறியால் சிரிக்கும் நிலை ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் அய்தராபாத் சென்றிருந்த காஞ்சி சங்கராச் சாரியார் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயில் மற்றும் ஜீயர்பற்றி தாறுமாறான கருத்து களை கக்கினார்.

ஸ்ரீமத் நாராயண ஜீயர், மடாதிபதியே அல்ல; அவர் மதபோதகர் மட்டுமே. திரு மலையைப் பொறுத்தவரையில் அவர் ஒரு வழிக்போக்கர். ராமானுஜருக்கும் திருமலைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் கூறுவதெல்லாம் அவர்களே எழுதிக் கொண்ட கதைகள்தான். திருமலையில், ஆதிசங்கரர்தான் யந்திரத்தை ப்ரதிஷ்டை செய்தார். அதனால்தான் இவ்வளவு கூட்டமும் பணமும் வருகிறது. நாங்கள் விஷ்ணுவையும் வணங்குவதால் எங்களுக்குத்தான் திருமலைக் கோயிலில் உரிமையுண்டு. நாங்களே நேராகத் திருவேங்கட வனைப் பூஜை செய்ய உரிமை பெற்றவர்கள். கோயிலில், வைகா நஸ முறைப்படி பூஜைகள் நடப்பதால், இக்கோயிலில் வைணவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே, ஸ்ரீவைஷ்ணவ ரான ஸ்ரீமத் நாராயண ராமானுஜ ஜீயர் வைகாநஸக் கோயிலான திருக்கோயிலின் நிர்வாகங்களில் தலையிடக் கூடாது’’ என்று வாய்க்கோணிய போக்கில் தடிப்பான கருத்துகளை வாரி இறைத்தார்.

சும்மா விடுவார்களா நாமதாரிகள்? வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.கலியன் ராமானுஜ ஜீயர் சுவாமி (நாங்குனேரி) எம்பார் ஜீயர் சுவாமி (திருப்பெரும்புதூர்) யது கிரிகதிராஜ ஜீயர் (மேல் கோட்டை திருநாரா யணபுரம் கருநாடகம்) ஸ்ரீவரதஎத்திராஜ ஜீயர் சுவாமிகள் (திருப்பெரும்புதூர்) அழகிய மணவாள ஜீயர் சுவாமிகள் (காஞ்சிபுரம்) ஆகியோர் செய்தி யாளர்களை அழைத்து மார்ச்சு 16-ஆம் தேதி சென்னையில் சாங் கோபாங்கோமாக பேட்டி அளித்து சங்கர மடத்தின் கபட சந்நியாசியாகிய ஜெயேந்திரரைக் கிழி கிழி என்று கிழித்துத் தள்ளிவிட்டனர்.

சாமியார்களுக்குள் சண்டை வந்தால் புழுத்த பூனை குறுக்கே போகாது என்கிறபடி நிலைமை ஆகி விட்டது. இதற்குப் பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் மக்கள் மத்தியில் நடமாடும்போது முக்காடு போட்டுக் கொண்டு தான் போக வேண்டும். அவ்வளவுக் கிழிப்பு, அக்குவேர், ஆணிவேராக அலசலோ அலசல்!

ஆத்திரக்காரர், அறிவிலி, பொய்யர் காஞ்சிமடம் ஆதி சங்கரரால் தோற்றுவிக்கப்பட்டதல்ல - என்று ஜெயேந்திரரையும் காஞ்சி மடத்தையும் மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துத் தள்ளி விட்டார்கள் பார்ப்பனர்கள் - அதுவும் சங்கராச்சாரியார், ஜீயர் என்கிற தகுதியில் உள்ளவர்கள் எந்த அளவு பண்பாட்டோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு கண்ணிறைந்த எடுத்துக்காட்டாகும்.

லோகத்துக்கே அருளுபதேசம் செய்பவர்களாம் இவர்கள் - இந்த நாட்டுக்கு மட்டுமல்ல லோகத்துக்கே குருவாம் இவர்கள். இவர்களின் யோக்கியதை எந்தக் கதியில் உள்ளது என்பதை இவர்களின் குடுமிபிடிச் சண்டையில் விழுந்த வார்த்தைக் குப்பைகள் மூலம் எளிதாகத் தெரிந்து கொண்டு விடலாம்.

இவர்களுக்குள் ஏற்படும் சண்டை இன்று நேற்று ஏற்பட்டதல்ல - தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது. 2000 நவம்பர் மூன்றாம் தேதி யன்று இதே காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சர°வதி திருப்பதி கோயில் கருவறைக்குள் நுழைந்து மூல விக்ரகத்தைத் தொட்டு ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி நேரம்) அர்ச்சனை செய்தார். அர்ச்சகர்கள் தடுத்தும் அடியாள்தனமாக உள்ளே புகுந்து அடம் பிடித்து அந்த வேலையில் ஈ டுபட்டார். அப்பொழுது அது பெரும் புயலைக் கிளப்பியது. வைணவப் பேரவைகள் கண்டனக் கணைகளை அள்ளி வீசின. எங்கள் ஜீயர்களே கடவுளின் திரு மேனியைத் தொடுவதில்லை என்கிறபோது யார் இந்த ஜெயேந்திரர் எங்கள் பெருமாளின் திருமேனியைத் தீண்ட என்று எகிறிக் குதித்தார்கள். அதனை காஞ்சி சங்கராச்சாரி யார் அர்ச்சகருக்குள் ஏற்பட்ட பிரச்சினை என்று திசை திருப்பப்பார்த் தார்; விடவில்லை வைணவப் பேரவையினர். நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார் ஜெயேந்திரர்.

திருவானைக் காவல் கோயிலுக்குள் ஆதிசங்கரர் சிலையைக் கொண்டு போய் வைக்க முயற்சி செய்தார் ஜெயேந்திரரின் குருநாதர் சந்திரசேகரேந் திர சர°வதிஅன்று. சைவர்களின் கடும் எதிர்ப்புப்புயலால் பின் கால் பிடறியில் இடிபட ஓட்டம் பிடித்தார்.

இப்பொழுதுகூட பழனி கோயிலில் சித்தர் போகரால் நிர் மாணிக்கப்பட்ட நவபாஷாண சிலையை மறைக்கும் வகையில் ஜெயேந்திரர் காஞ்சி மடத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு பொம்மையைக் கொண்டு போய் வைத்து கலவரத்திற்குக் கத்தியைத் தீட்டியுள்ளார். நீதிமன்றம் வரை வழக்குச் சென்றுள்ளது. இவர்களின் வழக்கமே கலவரம் செய்வது - காலித்தனம் செய் வது - அமைதியைக் குலைப்பது தான். அவ்வப்பொழுது வாங்கிக் கட்டிக் கொண்டாலும் ஜெயேந்திரரின் உடம்பில் மட்டும் உரைப் பதில்லை.

அகோபில மடத்து ஜீயரான அழகிய சிங்கர் `கல்கி’ (11.4.1982) இதழுக்கு அளித்த பேட்டி சுவையானது. திருவரங்கம் வைஷ்ணவக் கோயிலின் கோபுரத்தைச் சீர் செய்ய காஞ்சி சங்கராச்சாரியார் பண உதவி செய்துள்ளாரே - அதேபோல சிவன் கோயில் திருப்பணிகளுக்கு நீங்கள் நிதி உதவி செய்வீர்களா என்பது கேள்வி. அதற்கு ஜீயர் சொன்ன பதில்:

``நான் சிவன் கோயிலுக்குச் செல்ல மாட்டேன். ஏன்னு கேட்டா... ஸ்ரீமத் நாராயணன் தான் எல்லாத் தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என் னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்தப் பிர்மா சங்கரனைப் படைத்தான் என்று கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். பிர்ம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம் தான். தப° பண்ணி அந்தப் பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும் அதேபோல சிவன் எத்தனை யோயாகம் பண்ணி, கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சா°திரம் இருக்கு. இவங்கல்லாம் புண்ணியம் பண்ணி, தப° பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால் நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட் சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள். நான் தான் தெய்வம் என்று சொல்லிக்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு . ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்கு பணம் லும் தர மாட்டேன்’’ என்று அழகிய சிங்கர் ஜீயர் பிளந்து கட்டினாரே! (`கல்கி’ 11.4.1982)எந்த ஏட்டில் இந்தப் பேட்டி? `கல்கி’யில் என்பது சாதாரண மானதா?

இப்படி உன் கடவுள் சிறிசு, என் கடவுள் பெரிசு என்று பிள்ளை விளையாட்டு டும் இவர்கள்தான் கடவுளே இல்லை என்கிற நம்மைப் பார்த்துச் சீறுகிறார்கள். கடவுள் பக்தர்கள் முதலில் அவர்களுக்குள் யார் சொல்லும் கடவுள் உண்மையான கடவுள் என்று முடிவுக்கு வரட்டும் - அதற்குப் பின் நம்மிடம் மோதிட முன் வரட்டும். அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை - ளேயே சமாதானம் இல்லை - அவர்களுக்குள்ளேயே அன்பும், பண்பும், அமைதியான ணோட்டமும் இல்லை. இவர்கள்தான் ஊரை, உலகத்தை உய்விக்கப் போகிறார்களாம். இவர்கள் உய்விக்கப் போவது ஒருபுறம் இருக்கட்டும். மதத்தின் பெயரால் மனித ரத்தத்தைக் குடிக்காமல் இருந்தால் போதாதா என்பது தான் நல்லெண்ணம் உள்ளவர்களின் நறுக்குத் தெறித்த கேள்வியாகும்.

2 Comments:

Blogger மாசிலா said...

முட்டாள்கள்கள், மூட நம்பிக்கைகாரர்கள், பொய் பித்தலாட்டக்காரர்கள், சுரண்டல் பேர்வழிகள் ஆகியவர்களுக்கு புத்திமதி கூற ஆசைப்படுவது, விழலுக்கு இறைத்த நீர்தான். உண்மையில் தூங்குபவனை சிலுவில் எழுப்பி விடலாம். தூங்கும்போல் நடிக்கும் இதுகளை எழுப்பவே முடியாதய்யா!

இதை விட்டுவிட்டு, பெரியார்வழி கொள்கையாளர்களை ஒன்று திரட்ட, போர் குணம், போர் செய்யும் கலை, எதிர்ப்பு சக்தி, அஞ்சா நெஞ்சம், திடகாத்திரம், நெஞ்சில் உறுதி, உடற்யிற்சி, நேர்மை தவராமை, வீரம், தீரம், அன்பு, சமுதாய, கலாசார, பண்பாட்டு பற்று, பாதுகாப்பு, குறிக்கோலை அடையும் முறை, திட்டமிடுதல், நேரம் தவராமை, ஒழுக்கம், ஆகியவை போன்ற அனைத்து மன, உள மற்றும் உடல் பயிற்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தேவையான விடயங்களை சேகரித்து, அறிவுரை கொடுத்து, பயிற்சி கொடுத்து பலமுள்ள சமுதயத்தை உருவாக்க இப்போதிருந்தே பாடுபடுவோம். வரும் இளைய தலைமுறைக்கு அழகிய தமிழகத்தை பரிசாக அளிப்போம்.

போர்கலையில் முதல் பாடம் : நம் எதிரிகளை ஒருகாலும் நம்மைவிட தாழ்ந்தவனாக எடைபோடவே கூடாது!

December 16, 2006 3:40 pm  
Blogger Thamizhan said...

நான்்தான் க்டவுள்.என்னை எவன் என்ன செய்துவிட முடியும்?இந்தியத்துணைக்கண்ட்டத்துத் தலைவர் உலகம் போற்றும் விஞ்ஞானி ஆனால் அவர் கீழே் தரை்யிலே நான் நாற்காலியிலே என்று திமிருடன் படமெடுத்து உலகுக்குப் பறைசாற்றிய் ஆணவம் இன்னும் அடங்கவில்லையே.காஞ்சி நாலு சங்கர மடங்களில் ஒன்று என்பதே பொய் என்று அனைவரும் நிரூபித்த பின்னும் ஊரை ஏமற்றித் திமிருடன் ஊர்வலம் வ்ருவதை மானங்கெட்டச்செயல் என்றுதானே சொல்ல்வேண்டும்.பல மடையர்கள் படித்த கேரளாவிலும் இருக்கிறார்களே அரசு மரியாதைக்கொடுக்க,இல்லை சூழ்ச்சியா?

December 17, 2006 8:57 am  

Post a Comment

<< Home