Monday, March 12, 2007

ஆண்டவனுக்கும் மேல் அவாளே!

கோயில் கருவறைக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள சிலையும் சாமி அந்த சாமிக்கு அன்றாடம் பூஜை செய்யக் கூடிய பார்ப்பானும் சாமி அந்தக் கடவுள் கழுத்திலும் பூணூல் இந்தப் பார்ப்பான் கழுத்திலும் பூணூல். என்ன காரணம்? விளங்கவில்லையா? மனுதர்மம்படி இந்த உலகத்தைப் பார்ப்பானுக்காகவே பிர்மா படைத்தார். அந்தப் பார்ப்பானுக்குத் தொண்டூழியம் செய்ய, அடிமைச் சேவகம் செய்யவே சூத்திரர்களைப் பிர்மா தன் உடலின் கீழ்ப்பாகமான பாதங்களி லிருந்து பாடத்தார் என்று கூறுவதுதானே மனுதர்மம்?
அந்த மனுதர்மத்தைத்தானே புனேயில் நடைபெற்ற ஆர்.எ°.எ°., மாநாட்டில் ரதத்தில் வைத்து ஊர் வலமாக எடுத்துச் சென்றனர்.ஒரு செய்தி அனேகமாக எல்லா ஏடுகளிலுமே வெளி வந்தது. 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் பதித்த தங்கப் பூணூல் திருப்பதி ஏழுமலையானுக்குப் பக்தர் ஒருவரால் அளிக்கப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

கடவுள் சகலத்தையும் கடந்தவர் என்று சரி கம பத னிசா பாடும் பார்ப்பனக் கூட்டம்தான் கடவுளுக்கே பூணூல் போடுகின்றது.கடவுள் சகலத்தையும் கூட கடந்தவர்தான் ஒரே ஒரு விதி விலக்குப் பூணூல். எதைக் கடந்தாலும், இழந்தாலும் அவரால் பூணூலை மட்டும் இழக்கவே முடியாது. காரணம் என்ன? அந்தக் கடவுளை உண்டாக்கியவனே பூணூல் அணிந்த பார்ப்பான்தானே!

கடவுளின் கழுத்திலும் பூணூல், பார்ப்பான் கழுத்திலும் பூணூல். பக்தன் என்ன நினைப்பான்? அடேயப்பா இவ்வளவு சக்தியா இந்த அய்யர்வாளுக்கு? கடவுளிடம் காரியம் ஆக வேண்டும் என்றால் இவாளின் காலைக் கெட்டியாகப் பிடித்துவிட வேண்டியதுதான் என்கிற எண்ணம்தானே வரும்?அதற்குத்தான் இந்த ஏற்பாடு! விஷயம் இவ்வளவு சுளுவாகப் புரிகிறதே இது ஏன் நம் `சூத்திர’ முண்டங்களுக்குப் புரிவதில்லை என்று புத்தியைக் கசக்கி மோந்து பார்த்தும் பயனில்லை. புத்தியைத்தான் பக்தி என்கிற லகான் கொக்கிப் போட்டு இழுக்கிறதே! சும்மாவா சொன்னார் பெரியார், பக்தி வந்தால் புத்தி போய் விடும் என்று.

இந்தப் பக்தர் இப்பொழுது திருப்பதி ஏழுமலையானுக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் பூணூல் பூட்டுவது ஒருபுறம் இருக்கட்டும். இப்பொழுது கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு சுண்டிப்போய், வெளிரிப்போய் அலைந்து கொண்டு இருக்கிறாரே திருவாளர் ஜெயேந்திர சர°வதி என்ற காஞ்சி சங்கராச்சாரியார் (?) மூன்று கிலோ தங்கத்தினாலான பூணூலை திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவித்தாரே! (`மாலை மலர்’ 16.3.2002). அப்பொழுதே அடியார்கள் அட்டியின்றிப் புரிந்து கொண்டு இருக்க வேண்டுமே!
உருவமற்ற கடவுள் என்று கூறி, உருவம் அமைத்து, அனைத்து உயிர்களையும் அவர்தான் படைத்தார் என்று கூறி அவருக்குப் பெண்டாட்டி, வைப்பாட்டிகளை ஏற்பாடு செய்து, பிள்ளைக் குட்டிப் பட்டியல்களையும் கொடுத்து, எங்கும் நிறைந்தவர் எம்பிரான் என்று கூறி அதே நேரத்திலே அவர் குடியிருக்கக் கோயிலும் கட்டி, கல்லினுள் தேரைக்கும் அவர்தான் படியளக்கிறார் என்று அளந்து கொட்டிவிட்டு, அவருக்கே ஆறு கால பூஜை, ஆறு கால, படையல்கள்போட்டு, ஆசாபாசத்திற்கு அப்பாற்பட்டவர் என்று அளந்து கொட்டிவிட்டு, இன்னொரு பக்கத்திலே பகவானுக்கும் பள்ளியறையை ஏற்பாடு செய்து பக்கத்தில் பகவானியையும் படுக்க வைத்து, ஆண்டுக்கு ஒருமுறை வைப்பாட்டி வீட்டுக்கும் தூக்கிச் சென்று, இவ்வளவு தெருப் புழுதிகளும் நடப்பதைப் பற்றிக் கவலைப் படாதவர்களா பகவான் கழுத்தில் பூணூல் இருப்பதுபற்றி சிந்திக்கப் போகிறார்கள்?

கண்ணுக்குத் தெரியாதவர் கடவுள், அய்ம்புலனுக்கும் அப்பாற்பட்டவர் ஆண்டவன்; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் அவர் நீக்கமற நிறைந்தவர் என்று கூறிவிட்டுச் சென்றால் கடவுள் இருப்பைக் காப்பாற்ற முடியுமா? சரி, சரி இருந்து விட்டுப் போகட்டும் என்று துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போய் விடுவார்களே மக்கள்! அப்புறம் அக்கிரகாரத்தின் அடுப்புகளில் அவரைக்காய் சாம்பார் கொதிக்க வேண்டாமா?

சூத்திரன் கையில் இருக்கும் நாலு காசுப் பார்ப்பானின் சுருக்குப் பைக்குள் எப்படி வந்து சேரும்?சூத்திரன் கையில் பணம் சேர்ந்தால் அது பார்ப்பானுக்கு ஆபத்தாக முடியும் என்கிறதே மனுதர்மம். (அத்தியாயம் 10 சுலோகம் 129)அந்தப் பணத்தை ஜேப்படி செய்யக் கண்டுபிடித்த சுரண்டல் தத்துவம்தான் இந்தக் கோயில் வகையறாதிகள்!

பார்ப்பான் எவ்வளவுக் கவனமாக எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து வைத்திருக்கிறான், தப்பித் தவறிக்கூட மற்றவனுக்குப் புத்தி வந்து விடக் கூடாது. விழுகிற அடி முழுவதும் ஒரு மையப் புள்ளியிலேயே விழுந்து கொண்டிருக்க வேண்டும் என்கிற சாணக்கியத்தனம் அவாளின் ஏற்பாட்டில் ஆழமாகவே இருக்கிறது.

வேதங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, இதிகாசங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, புராணங்களைப் பிளந்து பார்த்தாலும் சரி கடவுளும் பார்ப்பானும் ஒன்று என்பதையும் விஞ்சி, கடவுளுக்கு மேலும் பார்ப்பான் ஒரு பிடி அதிகம் என்கிற கவர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்யும்.வேதத்தைப் பற்றி அடடே, இந்த வேதியபுரத்தார் எப்படியெல்லாம் வெட்டிக் குவிக்கின்றனர். உள்ளே நுழைந்தால் விவகாரமே வேறுதான். ரிக் வேதத்திலிருந்து இதோ ஒரு பாடல் (62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)`தேவாதீனம் ஜெகத் ஸர்வம்மந்த்ரா தீனம் துதேவதாதன்மந்த்ரம் பிரம்மணாதீனம்பிராமணா மம தேவதா’இதன் பொருள்:இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; எனவே பிராமணனே நமது கடவுள். அவனையே தொழ வேண்டும்’’ போதுமா?

வேதங்களை பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது என்று ஆக்கி வைத்திருந்த தந்திரம் இப்பொழுதாவது புரிந்திருக்க வேண்டுமே.வேதங்களைப் பார்ப்பனர் ஒற்றைக் காலில் நின்று ஓங்கிப் போற்றுவதில் உள்ள நயவஞ்சகம் இதுதான். வைதீகமாக இருந்தாலும் லௌகீகமாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் என்கிற மனுதர்மக் கோட்பாட்டையும் (அத்தியாயம் 9; சுலோகம் 317) கவனிக்க வேண்டும்.

வேதம் இப்படி மனு°மிருதி இப்படி என்றால் இந்துக்களின் பொக்கிஷம் என்று பூட்டி வைத்திருக்கிறார்களே கீதை அதன் ஆசிரியனான கிருஷ்ண பகவான் சமாச்சாரம் தான் என்ன?

ஒரு முறை ஸ்ரீவைகுந்த வாசனாகிய நீலமேக சாமள வண்ணனாகிய கிருஷ்ண பரமாத்வை பிரம்மப் புத்திரனாகிய நாரதர் தரிசிக்க வந்தார். வெகு நேரமாகக் காத்துக் கொண்டும் இருந்தார். காரணம் அப்பொழுது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பூஜையறையில் இருந்தார்.நாரதனுக்கோ இருப்புக் கொள்ளவில்லை. இவரோ சகல உயிர்களுக்கும் அதிபதி. இவரே இன்னொருவரைப் பூஜிக்கிறார் என்றால் அது எப்படி? அய்யனின் அய்யப்பாடு நியாயந்தானே?பூஜையறையிலிருந்து வெளியே வந்த சாமள வண்ணனைக் கேட்டே விட்டார் நாரதர்.பூஜையறையில் தொங்கிக் கொண்டிருந்த திரைச் சீலையை கிருஷ்ண பரமாத்மா விலக்கினார். என்ன ஆச்சரியம்! நாரதனின் தலையே சுற்றி விட்டது. அவரால் பூஜிக்கப்பட்ட விக்ரகம் பிரம்மக்ஷ்வரூபமாகிய பிராமணனுடைய வடிவம். பூணூல் தொங்கும் திருமேனி!இந்தத் திரைகளும், திரை விலகல்களும் காட்சிகளும் எதற்கு?ஆனானப்பட்ட பகவான் கிருஷ்ணனே பிராமணனை வணங்குகிறான்; பூஜை செய்கிறான்; நாம் எம் மாத்திரம் என்ற நினைப்பை நம் நெஞ்சங்களில் பதியம் போடத்தானே இந்தப் புரட்டு?

ஆண்டவன் சமாச்சாரங்களில் அறிவைப் பயன்படுத்தக் கூடாது என்று பாகவதர்கள் ஏன் கூறுகிறார்கள் என்பது புரிகிறதா? நம்பு நம்பினால் நடராஜா, நம்பாவிட்டால் எமராஜா என்று வேறு பயமுறுத்தி வைத்துள்ளார்களே!
வேதமாயிற்று, பகவான் கிருஷ்ணனாயிற்று, பிறகு இதிகாசமும், இராமனும் இன்னொரு காட்சியில் இடம் பெற வேண்டாமா?

வாயு புத்திரனான அனுமான் பிராமண வடிவத்தோடு ஸ்ரீராமபிரான்முன் தோன்றுகிறான். அவ்வளவுதான் மகாவிஷ்ணுவின் அவதாரமாகி ஸ்ரீமான் ராமபிரான் என்ன செய்கிறான்? சாஷ்டாங்கமாக அந்தப் பிராமணச் சிறுவனின் பாதார விந்தங்களிலே நெடுஞ்சாண் கிடையாக வீழ்கிறான்.அதிர்ந்து போனான் அனுமான். `அய்யன்மீர் நான் வானரக் குலத்தில் தோன்றியவன். இந்த அற்பன் காலில் அவதாரக் கடவுளாகிய தாங்கள் வீழ்வது சரியல்லவே என்று துடியாய்த் துடிக்கிறான். அதற்கு இராமன் சொல்லும் பதில் அதுதான் முக்கியம் அதை வெளிப்படுத்துவதுதான் இந்தக் காட்சியை அரங்கேற்றுவதற்கான காரணமும் கூட!

``நான் பிராமணனைக் கண்ட மாத்திரத்தில் அவனை வணங்குவது என் கடமையாகும். ஆகவே உண்மையான பிராமணனாக இருந்தால் என்ன, போலிப் பிராமணனாக இருந்தால் எனக்கென்ன?’’ என்று விடையிறுத்தான். இராமாயண இதிகாசத்தின் நோக்கம் ஒரு சின்ன இடத்திலேயே விரிவாகவே தெரிந்துவிடவில்லையா?

அரசன் என்று எடுத்துக் கொண்டாலும் மற்றவர்களுக்குத்தான் அவன் அரசனே தவிர, பார்ப்பனர்களைப் பொறுத்தவரை சந்திரன்தான் அவர்களின் அரசன் என்று யஜுர் வேதம் கூறுகின்றது.``ஏஷவோமீ ராஜா; ஸேரமோ°மாகம்ப்ராஹ்மணானாம் ராஜ’’என்று கூறுகிறது அவாளின் யஜுர் வேதம்.இந்தப் பின்னணியில் தான் காஞ்சிபுரம் `வரதராஜ பெருமாள் கோயில் கொலை புகழ் திருவாளர் ஜெயேந்திர சர°வதிவாள் 9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் `தாம்ப்ரா°’ எனப்படும் பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’’ என்ற நூலை வெளியிட்டுப் பேசியது பலருக்கும் மறந்து போயிருக்கலாம் என்றாலும் கருஞ்சட்டைக்காரர்களுக்கு மட்டும் எப்பொழுதும் நினைவில் இருந்து கொண்டே இருக்கும்.

``எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந் திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய் தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார்! மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோதும் அந்தணர்தான் குரு வாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட அப்புறம்தான் அந்தணன்தான் முதலில். (`நக்கீரன்’ 15.11.2002)


இதற்குப் பதவுரை, பொழிப்புரையும் தேவையோ!

ஹிந்துமதம், வேதம், °மிருதி, உபந்நிஷத்துகள், இதிகாசம், புராணங்கள் கடவுள்கள் என்கிற ஏற்பாடுகளை எல்லாம் ஒன்றாய்ப் போட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டிப் பார்த்தால் கடைசியில் மிஞ்சுவது பிராமணன் தான் கடவுளுக்கு மேல் அல்லது கடவுளுக்கு நிகர்!`கரிய மாலினுங்கண்ணுதலானிலுங்கூரிய தாமரைமேலுறை வானிலும்பெரியாரந்தணர்’’முத்தொழில்களின் கர்த்தாக்களாகிய கடவுள்களைக் காட்டிலும் பார்ப்பான்தான் பெரியவன் என்று எழுதி வைத்திருக்கிறார்களே!திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வைரக் கற்கள் பதித்து தங்கத்தினால் பூணூல் அணிவதன் தாத்பரியம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!

9 Comments:

Anonymous Anonymous said...

Good one

March 12, 2007 1:12 pm  
Blogger கருப்பு said...

பகுத்தறிவு,

அருமையான ஆராய்ச்சிப் பதிவு. வழக்கம்போல பூனூல் போட்ட பார்ப்பன அம்பிகள் வந்து தாங்கள் சொன்ன ராமன் அனுமன் கதாபாத்திரங்களை வைத்து தங்களின் கும்மிகளை ஆரம்பிக்க நேரிடலாம்.

March 12, 2007 1:18 pm  
Blogger லக்கிலுக் said...

அது சரி! :-)))))

March 12, 2007 1:28 pm  
Blogger NSK said...

சில கோயில்களில(ISCON 'plaza') 'credit card accepted' என்று பலகை வைத்திருக்கிறார்கள்.......நவீன மயமாகும் மடைமை.

நல்ல பதிவு.

March 12, 2007 2:02 pm  
Blogger கார்மேகராஜா said...

அருமை!

March 12, 2007 3:02 pm  
Anonymous Anonymous said...

//இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; எனவே பிராமணனே நமது கடவுள்//

இன்று உலகில் எந்த ஒரு ஆலயத்திலும் பணி செய்யும் பிராமணர் எவரும் தம்மைக் கடவுள்
என்று கூறிக்கொள்வது கிடையாது.

அதே நேரம் கடவுளைக் கையாளாகப் பயன்படுத்தி அவரவர் தேவையைப் பூர்த்தி செய்தமைக்காகவும் ஒன்றும் அவருக்கு கூலியும் வழங்கப்படுவதும் இல்லை.

இக்காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத பல அம்சங்கள் இருந்தும் முற்றிலும் மறைந்து போகாத ஒரு பழைய அமைப்பு முறையின் ஆதாரமாகக் கடவுள் நம்பிக்கையும் அதன் அடையாளமாக வழிபாட்டு முறைகளும் அதைச் செய்பவராகப் பிராமணர்களும் இருக்கின்றனர்.

இது தான் நிதர்சனம்.

இவ்வமைப்பு முறையில் மாற்றம் வேண்டுமெனில் அதில் குறிப்பிட்ட ஒரு ஸ்தானத்தை மட்டும் வகிக்கும் பிராமணரை குற்றவாளியாகக் கருதி தூற்றுவதில் மட்டும் குறியாயிருந்து பயனில்லை.

March 12, 2007 3:40 pm  
Blogger Thamizhan said...

புரியாத மந்திரத்தில் மயங்கி புரிந்துகொள்ள் வேண்டிய தந்திரத்தில் ஏமாந்து காசையும் அதைவிட முக்கியமான மானத்தைக் கையேந்தி இழந்து நிற்கும் மனிதர்கள் தெரிந்து கொண்டால் சரி.

March 12, 2007 9:49 pm  
Blogger kalappal kumaran said...

well said...
some tamilan living like a paarppaan.first we must eradicate this kind of evil tamilans.
please visit my blogger
www.kalappal.tk
nanRi

December 08, 2007 2:58 pm  
Blogger புரட்சி தமிழன் said...

அருமையான பதிவு இதில் யாரும் கும்மிகளை ஆரம்பிப்பதில் எதிர் தரப்பினருக்கு கடினமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்

December 14, 2007 11:00 am  

Post a Comment

<< Home