Saturday, December 08, 2007

பெரியார் தளம்!

திராவிடர் கழகம் சார்பில் ஏற்கனவே அறிமுகப்படுத்திய பெரியார் தளம் பற்றி ஒரு நினைவூட்டலே இப்பதிவு.

பெரியார் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல இக்காலக்கட்டத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது பெரியார் தளம். இத்தளத்தில் அய்யாவின் நூல்கள் மின்னூல்களாக மாற்றப்பட்டு தளவிறக்கம் செய்யும் வகையில் இபெரியார் என்ற பகுதி உள்ளது. ஆசிரியர்.கி.வீரமணி அவர்களின் நூல்கள் மற்றும் திராவிட கருத்துக்களை வெளிப்படுத்தும் நூல்களும் இப்பகுதியில் உள்ளது.

பெரியார் இணைய தொலைக்காட்சி மற்றும் பெரியார் இணைய வானொலி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் பவள விழா நிகழ்ச்சிகள் பெரியார் இணைய தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த புரட்சியை புலிகள் மாவீரர் நாள் உரையின் போது நேரிடையாக ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது. டெக்னாலஜியில் புலிகள் இன்னும் முண்ணனியில் உள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். பெரியார் இணைய வானொலி டிசம்பர் மாதத்திலிருந்து முழு ஒலிபரப்பை ஆரம்பிக்கவிருக்கிறது. தற்போது நீங்கள் அய்யாவின் கருத்துக்களையும் பாடல்களையும் கேட்கும் வசதி உள்ளது.

சுயமரியாதை திருமண பதிவு செய்ய, மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கைகள் என அனைத்து பகுதிகளையும் இத்தளத்தில் காணலாம். தள முகவரி: www.periyar.org.in

வாழ்க பெரியார்! வளர்க அவர் தம் புகழ்!