நாதியற்றது நம் தமிழினமா?


மேலே உள்ள இருபடங்களும் பிபிசி செய்தியில் வந்த புகைப்படங்கள். படத்தைப் பார்த்தும் தமிழர்களுக்கு உணர்வு வரவில்லை என்றால் பிறப்பு சந்தேகத்துக்குரியது, அர்த்தமற்றது.
தமிழினமே உமக்கு சிந்திக்கும் திறன் குறைந்துவிட்டதா? 30கிமீ தொலைவில் அங்கே கேயேந்தி ஆதரவு கேட்கும் குரல் கேட்கவில்லையா?
1983ல் கொடுத்த குரல்கள் எங்கே போய்விட்டது. ? இணைந்த கைகள் எங்கே?
அரசியலுக்கு அப்பாற்பட்டு அங்கே இன்னலுரும் நம் இனத்திற்காக ஒரு சொட்டு கண்ணீராவது விடுவாயா?
அமைதி தவழவேண்டிய நம் குழந்தைகளின் முகத்திலே குண்டுகளின் சத்தம் கேட்கமுடியாமல் காதை அடைத்துக்கொண்டிருப்பது கண்டும் உன்மனம் கலங்கவில்லையா?
நம் இனம் அழிக்கப்படவேண்டிய இனமா? நாதியற்றது நம் தமிழினமா?
தமிழா இன உணர்வு கொள்ளடா!