Monday, January 29, 2007

இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை:

புரபசர் இந்திரா எம்.ஏ., (சா°திரி காவ்ய திரு. வித்யாலங்கார் எம்.ஓ.எல்., முதலிய பட்டம் பெற்றவர்) எழுதிய பழைய இந்தியாவில் பெண்கள் நிலை என்னும் புத்தகத்தில் உள்ளவற்றிலிருந்து எடுத்துப் பிரசுரிக்கப்பட்டதாகும். அதாவது அவர்கள் பெண்களைப்பற்றி இந்து மத ஆதாரங்கள், வேத சா°திரங்கள், புராண இதிகாசஙகள் ஆகியவைகளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுபவைகளைத் தொகுத்துக் குறிப்பிட்டிருப்பதாவது:

எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டு வரும் எந்த அளவிலும் நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைகாரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோலப் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விட மாட்டார்கள்.

நாசகாலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்று வாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்பு, நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால், எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள். (மகாபாரதம்)

இதிகாசங்கள் காலத்தில் இருந்து சாதுவாகிய மன்னன் யதிஷ்டனும் பெண் களின் இயல்பை மிகக் கேவலமாக வெறுக்கத் தகுந்த முறையில் கண்டித்திருக்கிறான். (புத்தக ஆசிரியர்)

அதாவது: பெண்ணின் அறிவு, கண்டுபிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது. (மகாபாரதம் அனுஷன் பர்வதம் 39-+8)

பெண்களின் அறிவைப் பார்த்துத்தான் பிரக°பதியும் இதர பெரும் அறிவாளிகளும் அறிவுக்கான கொள்கைகளை வகுத்திருக் கிறார்கள் என்று தெரிகிறது. (மேற்படி 39-+40)

பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்புப் போன்றவள். பெண் மாய்க்கும் (வஞ்சகி) குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள். தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள் + விரும்ப மாட்டார்கள். (மேற்படி 432+23)

உயிரைக் கொல்லும் அதர்வண மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். (மேற்படி 43+24)ஒருவன் கூடி வாழ ஒத்துக் கொண்டாலும், பின்னர் மற்றவர்களுடன் கூடிக் கொண்டு முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவிருப்பார்கள். (மேற்படி 43+24)

அவர்கள் ஓர் ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடைய மாட்டார்கள். (மேற்படி 43+24)

ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பெறாமைப் படக் கூடிய (நல்ல தன்மை) ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின் சம்பந் தத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப்படிக்கில்லாமல் வேறுவிதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண் டால், அவன் நிச்சயமாக அழிந்து போவான். (மேற்படி 43+24)

எல்லா மனிதர்களும் கடவுளாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள். பாட்டன் இவர்கள் மனத்திலுள்ளதை அறிந்து, மனிதர்களின் வீழ்ச்சிக்காகப் பெண்களைச் சிருஷ்டி செய்தார்.ஆகவே, பெண்கள் மனித சமுதாயத்தின் வீழ்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால், அவர்கள் நிலையற்ற +- °திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது.இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும், அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையி-னாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும் இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள். (மனு 9.15)

உலகம் தோன்றியது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலைத் தண்ணீர்போலச் சலனப்புத்தியுடையவர்கள். வாள் போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள். (இராமாயணம் ஆரண்ய காண்டம் + 13+5+6)

பெண்களின் முகங்கள் பூக்களைப் போன்றவைகள்; அவர்கள் மொழிகள் தேன் போன்றவைகள்; அவர்களது உள்ளம் சவரக் கத்தியின் கூர்மையைப் போல் கெடுதி செய்யக்கூடியது; அவர்களது உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவர்கள் யாருமில்லை. (இராமயணத்திற்குப் பிந்திய காவியங்களில்)

ஒரு பெண்ணால் உண்மையாக நேசிப்படுகிறவர் யாருமிருக்க முடியாது.ஒரு பெண் தன் நோக்கத்தை பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள்.பெண்கள் இரக்கமில்லாமல் புலிக்கு ஒப்பிடப்பட்டிருக் கிறார்கள். கொடுமைப்படுத்தப்பட்டிருக்க஼br />?றார்கள். இழிவு படுத்தப்பட்டிருக்கிறார்கள். (பாகவத °கந்தம் 4+14, 42.8+4+36)

பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்.பெண் இனத்திற்கே கீழ்க்கண்ட 8 குணங்களும் உரிமையானவைகள், பொய், நிலையில்லாமை, வஞ்சகம், மூடத்தனம், பேராசை, மாசு, கொடுமை, துடுக்குத்தனம். (சுக்ரா 3+163)

பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டின்மீது அடிகள் கொடுக்கலாம். (அர்த்த சா°திரம் 3+3+50)

ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளாப்பினாலோ அடிக்கலாம்.சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள் + அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களைக் கொன்றுவிடலாம்.உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணைச் சக்ரா கொன்றிருக்கிறார்.உலகம் தூங்கக் கூடாது என்று விரும்பியதற்காகக் காவ்ய மாதா என்ற பெண் விஷ்ணு கையினால் கொல்லப்பட்டாள்.``ஆ°ரமங்களில் செய்யப்பட்ட யாகங்களை, சடங்குகளை தடுத்ததற்காகத் தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்.’’ (இராமாயணம் 25+17)

குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்-குரியதன்று. வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது’’``அதர்வண வேதத்தில் ஆண் மகவை விரும்புகிற-தேயல்லாது பெண் மகவை விரும்புகிறதில்லை.பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும்; இங்கே ஆண் மகவு பிறக்கட்டும்’’ (அதர்வண வேதம் 6+2+3)

``புங்கா கடவுளை வணங்குவதன் மூலம் ஆண்மகவே பிறக்கட்டும். பெண் மகவு பிறக்க வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.(மேற்படி 8+6+25)

`பெண் குழந்தைகள் சாக வேண்டியவர்கள்’’ (காதபாசன் ஹிதா (27+ஏ)``ஆனால் இது பழக்கத்தில் மகளைக் கலியாணம் செய்து கொடுப்பதனால் தொடர்பற்றதாக இறந்தவர்களாகக் கருதப்படுகிறது’’

``யுத்தத்தில் எதிரியிடமிருந்து பிடிபட்ட பெண்களோ, அல்லது விவாக சம்பந்தமாகக் கட்டாயப்படுத்தப்பட்டவளோ, இவர்களில் எவரையும் மனிதப் பிறவி என்று கருதாமல் தட்டுமுட்டுச் சமான்களைப் போலவே நடத்தவேண்டும்.’’(ரிக் வேதத்தைக் குறித்து எழுதிய பிரபல ஆசிரியரான டாக்டர் அபினாஷ் சந்திரதா° கூறுகிறார்).

``இதை இதிகாச காலத்திலும் காணலாம். அதாவது பஞ்ச பாண்டவர்களின் மனைவியாகிய துரவுபதியை யுதிஷ்டிரான் சகுனியுடன் சூதாடும்போது பணயமாக வைத்தான்’’ (மேற்படி)

``யாரும் கேட்காமலே, தனது மனைவியையும், தான் மதிக்கும் எல்லாவற்றையும், இராஜ்ய உரிமை-யையும் தாமாகவே பரதனுக்கு அதுவும் சந்தோஷமாகக் கொடுப்பதாக இராமன் வாயால் சொல்லுவதாக வால்மீகி எழுதியிருக்கிறார். (இராமாயணம் ஆசிரியர்)அந்நாளில் மனைவியைச் சாமானைவிட மேலாக மதிக்கவில்லை என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணங்கள் வேண்டும்? (புத்தக ஆசிரியர்)

``ஒரு சூதாடுபவன் தனது மனைவியை விட்டுப் பிரிய மனம் தாங்காமல் வருந்துகிறான். தனது மனைவி அழகாயிருப்பதனால் மட்டுமல்ல, பிரியமாயிருப்-பதனால் மட்டுமல்ல, அவள் உற்ற தோழியாகவும், சிறந்த ஊழியாளாகவுமிருப்பதனால்.’’ (ரிக்வேதம் 10.3124)

``சூதாட்டத்தில் தனது கவனம் அதிகமாக ஈடுபட்டிருக்கையில், மற்றவர்கள் தங்கள் கைகளைத் தனது மனைவியின்மீது போடுகிறார்கள் என்று அந்தச் சூதாடி பிறிதொரு இடத்தில் குறிப்பிடுகிறான்.’’ (ரிக்வேதம் 10+31+24)

``அந்த நாளில் (பண்டைய நாளில்) மனைவியின் நிலைமை அடிமையின் நிலைமையைவிட நல்ல நிலைமையே என்று சொல்லுவதற்கில்லை’’ (மேற்படி)

``பெண்ணின் நேசம் ஒரு பொழுதும் நிலையான-தன்று. அவளுடைய மனம் கழுதை போன்றது’’ இது மதத்தில் ஆரிய மதத்தில் அவர்களது வேத சா°திர புராண இதிகாசங்களில் காணப்படுபவை-களிலிருந்து பொறுக்கியெடுத்த சில குறிப்புகளாகும் இவை. இனியும் இதுபோலவும், இன்னும் மோசமாகவும் எவ்வளவோ குறிப்புகள் வேறு பல ஆதாரங்களில் இருக்கின்றன. பொதுவாக எல்லா மதங்களும் பெண்களைச் சிறிதாவது தாழ்மையாகத்தான் மதிக்கின்றன. வடநாட்டில் பெண்கள் எல்லா மதத்தாராலும் பெரிதும் மறை பொருளாகவே கருதப்படுகிறார்கள்.

நன்றி - விடுதலை

Friday, January 12, 2007

மகர ஜோதி மர்மம்

சில மாதங்களுக்கு முன் மகர ஜோதி மர்மம் தொடர்பாக இப்பதிவை பதித்திருந்தேன். அதன் பதிப்பை பார்க்க : இங்கே சொடுக்கவும்..


கள நண்பர்கள் எவ்வளவு தூரம் இதன் நம்பகத்தன்மையை எடுத்துக்கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. நேற்று இரவு என்.டி.டி.வி தொலைக்காட்சியில் மகரசோதி பற்றி விரிவான ஒரு செய்தி தொகுப்பை போட்டார்கள். அதில் மகர சோதி மர்மம் பற்றியும், அதை செய்த சிலரின் பேட்டிகளையும், விறகு எரித்து ஜோதி உருவான இடத்தையும், விறகு எரிந்த அடையாளங்களையும் காட்டினார்கள். என்.டி.டிவி தளத்தில் இருந்த ஒரு செய்தி உங்களுக்காக.

Sabarimala miracle claims disputed

Thursday, January 11, 2007

பெரியார் படப் பாடல் - பகவான் ஒருநாள்....

பகவான் ஒருநாள்.... பாடல்
எழுதியவர்: வைரமுத்து
பாடியோர்: மதுபாலகிருஷ்ணன் குருசரண், சூர்யபிரகாஷ், முரளிதரன்

லட்சுமண அய்யர்: பகவான் ஒருநாள்....ஆகாயம் படைச்சார் பூமியும் படைச்சார்வாயு அக்கினி ஜலமும் படைச்சுட்டு...கடைசியாத் தானே மனுஷாளப் படைச்சார்கடவுள் உலகத்தப் படைச்சார் -

ராமசாமி :இருக்கட்டும் - கடவுள யாரு ஓய் படைச்சார்?
(பெரியார்)

(கடவுள்...)லட்சுமணன்:கடவுள யாரு படைக்கமுடியும் ஓய் அவா சுயம்பு
பின்பாட்டு:ஆமா...
லட்சுமணன்:தானா உண்டானவா
பின்பாட்டு:ஆமா...
லட்சுமணன்:தான் தோன்றி
பின்பாட்டு:ஆமா...

ராமசாமி: கண்காணா உன் கடவுள்தான்தோன்றி ஆகிறப்போ -கண் கண்ட பேரண்டம்தான்தோன்றி ஆகாதோ?

(கடவுள்...)லட்சுமணன்:அசுரகுணம் உள்ளவாதான் - இப்படி அப°வரமாக் கேள்வி கேப்பா... தேவகுணம் இருந்தா இப்படிக்குதர்க்கமாப் பேசமாட்டா

ராமசாமி: இந்திரன் யாரு ஓய்...

லட்சுமணன்:தேவர்குலத் தலைவன்

ராமசாமி: இராவணன் யாரு ஓய்

லட்சுமணன்:அசுரர் குல அரசன்

ராமசாமி: காட்டில் இருந்த முனிவன் மனைவியின்கற்பைக் கெடுத்தவன் இந்திரன்
கவர்ந்து சென்ற மாற்றான் மனைவியைக்கற்போடு விட்டவன் இராவணன்
இப்பச் சொல்லும்குணத்தில் உயர்ந்தவன் யார்?தேவனா?அசுரனா?

லட்சுமணன்:அசுரகுலத்திலயும் அப்பப்போ நல்லவா இருந்திருக்காளே!நந்தனுக்கு மோட்சம் கொடுக்கலியோ நடராஜப் பெருமான்?

பின்பாட்டு:இல்லயா பின்ன?

ராமசாமி: நந்தனுக்கு மோட்சம் கொடுத்தீரா தீயிட்டு எரிமூட்டிமோசம் புரிந்தீரா?
மோட்சம் தந்தது.. மோட்சம் தந்ததுமுற்றிலும் உண்மையென்றால் -
அவன்சந்ததியெல்லாம் சந்நிதியிழந்து சந்தியிலே ஏன் நின்றான்?

லட்சுமணன்:மனுஷாளா இருந்தா மடியா இருக்கணுமோ இல்லியோ?தீட்டுன்னு பெரியவாதெரியாமலா சொன்னா?

ராமசாமி: தீட்டு என்னய்யா தீட்டு...
குடிக்கிற தண்ணியத் தொடப்படாது
குளத்துலயும் கால் படப்படாது
எப்படிய்யா வரும் சுத்தம்?
ஒங்க மேலதான் குத்தம்
குளிக்காத பசுவக் கும்புடுறீங்க
அதக்குளிப்பாட்டும் மனுசன ஏனய்யா கொல்றீங்க?

ராமசாமி: புராணம் இதிகாசம் - வெறும் பொய் மோசம்
பொய் பேசிப் பேசியே பொய்யாப் போச்சே தேசம்!!

லட்சுமணன்:புராணம் இதிகாசம் பொய்யில்லேங்காணும்

ராமசாமி: அப்படியாங்காணும் ஆதாரம் கூறும்!

லட்சுமணன்:அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்டகோடு மூணும்
அப்படியே இருக்குது ஓய் அழியலையே பாரும்

ராமசாமி: ஓகோ!முதுகத் தொட்டதும் மூணுகோடு விழுந்திருச்சோ?ஏங்காணும்!சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா - இல்லசீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?

லட்சுமணன்:நீர் விதண்டாவாதி. பேசப்படாது

ராமசாமி: இனிமேதான் சுவாமி பேசவே போறேன்

Tuesday, January 09, 2007

கடவுளா நீ கல்லா

பெரியார் படப் பாடல் - கடவுளா நீ கல்லா என்று தொடங்கும் பாடல்

கடவுளா நீ கல்லா கடவுளா நீ கல்லா
மேலோர் என்று சிலரை படைத்து கீழோர் என்று பலரை படைத்தால்
கடவுளா நீ கல்லா
நாயும் பூனையும் நடந்த்தால் புண்ணியம் மனிதர் நடந்த்தால் பாவம் என்றால்
கடவுளா நீ கல்லா
தண்ணீர் விழுந்தால் பாறையும் கரையும் எங்கள் கண்ணீர் விழுந்தும் கறையவில்லையே
கடவுளா நீ கல்லா

எங்கள் நிலங்களை அபகரித்தீர் அபகரித்தீர் அபகரித்தீர்
எங்கள் குலங்களை மறுதலித்தீர் மறுதலித்தீர் மறுதலித்தீர்
கால்நடை உலவிடும் வீதியில் எங்கள் கால்களை அபகரித்தீர் அபகரித்தீர்

வெளவ்வால் நுழைகிற கோவிலில் எங்கள் வாசலை அடைத்துவிட்டீர் அடைத்துவிட்டீர்
சூத்திரன் நுழைந்திட சாத்திரம் இல்லை என்று சூத்திரம் எழுதிவிட்டீர் சூத்திரம் எழுதிவிட்டீர்
நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்
நாங்கள் என்ன நாங்கள் என்ன எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்

கடவுளா நீ கல்லா கடவுளா நீ கல்லா

இந்த கோவிலை அமைத்தது யார் அமைத்தது யார் அமைத்தது யார்
உச்சியில் கோபுரம் சமைத்தது யார் சமைத்தது யார் சமைத்தது யார்
எங்கள் கைகளும் கால்களும் தீண்டியிராவிடில் கோவில்கள் ஏதுவும் இல்லை

எங்கள் தோளைத் தொடமால் கடவுளர் யாரும் கருவறை சேர்ந்ததில்லை
உறுதியில் உழுதவன் வேர்வையிடாவிடில் பூசைகள் ஏதுவும் இல்லை பூசைகள் ஏதுவும் இல்லை

மனிததர்மங்கள் பொதுவாகட்டும் மனுதர்மங்கள் உடையட்டும் மனுதர்மங்கள் உடையட்டும்
வானவில்லில் மட்டும் இனி வர்ண பேதம் இருக்கட்டும் வர்ண பேதம் இருக்கட்டும்

கடவுளா நீ கல்லா
மேலோர் என்று சிலரை படைத்து கீழோர் என்று பலரை படைத்தால்
கடவுளா நீ கல்லா
நாயும் பூனையும் நடந்தால் புண்ணியம் மனிதர் நடந்த்தால் பாவம் என்றால்
கடவுளா நீ கல்லா


தண்ணீர் விழுந்தால் பாறையும் கரையும்

எங்கள் கண்ணீர் விழுந்தும் கறையவில்லையே

கடவுளா நீ கல்லா

Saturday, January 06, 2007

பெரியார் படப்பாடல்கள்

பாடல் வெளியீட்டு விழா முடிந்து நீண்ட நாட்களாக கடையில் கேட்டு ஒருவழியாக இன்று பெரியார் ஒலித்தட்டை வாங்கி பாடல்களை கேட்டுவிட்டேன். பலர் வாழ உழைத்திட்ட ஒரு மாமனிதரின் வரலாற்றை பதித்திட்ட ஒரு காவியத்தின் பாடல்கள்.

வைரமுத்துவின் வரிகளுக்கு வித்யாசாகர் இசை அமைத்த முத்தான பாடல்கள். 50 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் இசை அமைந்துள்ளது. பாடல் வரிகளை சுலபமாக பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் இசை.

பகவான் ஆகாயத்த படைச்சான், கடவுளா இல்லை கல்லா என்று தொடங்கும் இரு பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அனைத்து பாடல்களும் அருமை. பகவான் ஆகாயத்த படைச்சான் பாடல் கதா காலேட்சபம் அல்லது போட்டி பாடல் வகையில் அமைந்துள்ளது. படம் வெளிவந்தால் தெரியும் எந்த வகை என்று.

சில வரிகள்:

அணிலுக்கு ராமன் முதுகில தடவியாதால் 3 வரிகள் வந்ததாம். அப்புறம் ஏன் சீதைக்கு முதுகில் வரிகள் இல்லை. அப்படின்னா ராமன் சீதைய தொடவில்லையா?

நாய், பூனை எல்லாம் போலாம். மனிதன் போகக்கூடாதா?

குளிக்காத மாட்ட கும்பிடறான். குளிக்கற மனிதனை கொல்றான்.

கற்பழித்த இந்திரன் கடவுள். மாற்றான் மனைவியை கற்புடன் காத்த ராவணன் அசுரனா?

இது போல பல வரிகள். நல்ல கேள்விகள் - பதில் தான் கிடைப்பதில்லை.

நட்புடன்,
பகுத்தறிவு

Tuesday, January 02, 2007

செஞ்சோலை படுகொலைக்கு சோவின் பதில்:

கேள்வி: `செஞ்சோலையில், ராணுவத் தாக்குதலுக்குப் பலியான குழந்தைகளை, விடுதலைப்புலிகள் கடத்தி வைத்திருந்தனர்? என்கிறாரே அதிபர் ராஜபக்ஷே?


பதில்: விடுதலைப்புலிகளின் தன்மை ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஒன்று என்பதால், இது `பொய்’ என்று ஒதுக்கி விட முடியாது. - இப்படி ஒரு பதில்.

ராஜபக்ஷே சொல்லுவது மெய்யா, பொய்யா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்காக அந்தக் குழந்தைகளைக் குண்டு போட்டுக் கொன்றது நியாயம்தான் என்று சொல்லுவது எத்தகைய ஈவு இரக்கமற்ற செயல். இவர்கள்தான் மற்றவர்களைப் போய் ஈவு இரக்கமற்ற அரக்கர்கள் என்று கூசாது கூறுகின்றனர். அந்தக் குழந்தைகளில் அக்கிரகாரக் குஞ்சு ஒன்று இருந்திருந்தால் இப்படி எழுதுவார்களா? அதிலும்கூட அவாள் பாசம் தனியானதுதான்.

`சோ’ கூட்டத்துக்கு ஒரு கனிவான வேண்டுகோள்!

எங்கள் தமிழர்களிடையே இன்னும் முழுமையான அளவுக்கு இன உணர்ச்சி வந்திடவில்லை. நீவிர் எழுதிக் கொண்டு வருவது போதுமானதல்ல. இன்னும் அதிகமாகத் தாக்கி எழுத வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு விஷத்தைக் கக்குகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு எங்கள் மக்களுக்கு மான உணர்ச்சி வரும். மானத்தையும், ரோஷத்தையும் உண்டாக்கத்தான் சுயமரி யாதை இயக்கம் உண்டாக்கப்பட்டது என்று எங்கள் தலைவர் தந்தை பெரியார் கூறியதுண்டு. நீங்களும் இன்னொரு பக்கம் அந்தக் கைங்கரியத்தைச் செய்தால் உங்களுக்குக் கோடி `புண்ணிய’மாக இருக்கும்! செய்யுங்கோ!