Monday, November 27, 2006

குழந்தையும் குடுமியும்...

குழந்தையும் குடுமியும்...

குடுமி1: வாங்கோண்ணா... நமஸ்காரம்.

குடுமி2: நம்ஸ்காரம் ஓய். நமஸ்காரம்

குடுமி1: எண்ணாண்ணா இந்தப்பக்கம் காத்தடிக்குது...

குடுமி2: இல்ல ஓய். சித்த காத்தாட இருக்கலாம்ன்ட்டு...

குடுமி1: ஓ சரி சரி.. நியுஸ் பாத்தேலா.. நம்ம குழந்தைய பத்தி...

குடுமி2: எந்த நியுஸ பத்தி சொல்லறேல்..

குடுமி1: அதாண்ணா, நம்ம குழந்த சொர்ணமால்யா பத்தி தட்ஸ் தமிழ் இணைய தளத்தில வந்திருக்கே...

குடுமி2: பார்த்தேன் ஓய். நீர் பார்த்தீரா .. குழந்த நடிச்சத சிடில...

குடுமி1: அது வந்து... பார்த்துட்டேன்ணா.. குழந்த சும்மா அம்பாள் மாதிரி சும்மா நெகு நெகுன்ன இருக்கா போங்கோ..

குடுமி2: ரொம்ப வழியாத ஓய். நானும் பார்த்தேன். ஆமா யார இருக்கும் இந்த படத்த எடுத்தது. நம்ம வயசுக்கு இதல்லாம் ஒண்ணு புரியல..

குடுமி1: நம்ம குழந்தைய படம் எடுக்க எந்த சூத்திரனுக்கு தைரியம் இருக்க.. ஏற்கனவே நம்ம காஞ்சியல வச்சி குழந்தைய விசாரிச்சாங்க.. கூட்டி கழிச்சி பார்த்த கணக்கு சரியா வருதுண்ணா..

குடுமி2: அப்படிங்கர ஓய். சரி நம்மவாக்கு இத மாதிரி செய்ய குழந்தைக்கு குடுத்து வச்சிருக்கணும்.

குடுமி1: ஏண்ணா இது தப்பில்லையா. அவாளுக்கு தான் தேவதாசின்னு இருந்தாலே.. இப்ப ஏன் நம்ம குழந்தையவே...

குடுமி2:அது அந்த காலம். இப்பல்லாம் சினிமா நடிகைக்கு தான் க்ரேஸ்.. மனுதர்மப்படி இதெல்லாம் நாம செஞ்சா தப்பே இல்ல. இப்ப ஒரு கொலை கோவில்ல நடந்திச்சி. மனு தர்மப்படி நம்மவாக்கு என்ன தண்டனை தெரியும்மில்ல. சும்மா மொட்டை அடிச்சா போச்சு. அதே சூத்திரா பண்ணா தலைய எடுத்துடனும். இப்ப சிவன் சொத்து குலம் நாசம்ன்னு நாம சொல்றொம். ஆனா அத நாம் ஆண்டு அனுபவிக்கலையா. அத எதுக்காக சொன்னோன். நம்மாவ தவிர யாரும் கொள்ளை அடிக்க கூடாதுன்னு தான்.


குடுமி1: அப்ப அந்த கொலைய?

குடுமி2: கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கங்கரேன் ஓய்.

குடுமி1: புரிஞ்சிரிச்சிண்ணா நேக்கு... ஏண்ணா இப்ப நம்ம தொழிலுக்கு வேட்டு வெச்சிருவாங்கலாட்டம் இருக்கே இந்த அபிஷ்டு ஆட்சியில.
குடுமி2: அதெப்படி முடியும். நாம அனுபவிக்கறத .. சூத்திரனுக்கு விட்டுவோமா. கேஸ் போட்டாசில்ல ..அடுத்து நம்மவா ஆட்சி வந்தா மாத்திடலாம் இந்த சட்டத்த..

குடுமி1: ஆனா நம்மவா ஆட்சில தான் காஞ்சி பெரியவாமேல கேஸ் போட்டாங்க. அப்புறம் எப்படி.

குடுமி2: நம்மவாகுல்ல ஆயிரம் இருந்தாலும் கோவில் சொத்த அனுபவிக்கரதுக்கு விடமாட்டா ஓய். அவங்க ரெண்டு பேருக்கும் அந்த ஆஸ்பத்திரி பிரச்சனை. அதான் அப்படி ஆய்டிச்சி. அபிஸ்டு இதையே பண்ணிருந்தா விட்டுவோமா. இப்ப கேஸ்ல ஏதாவது பண்ணா ஆட்சி சட்டம் ஒழுங்கு கெட்டுத்துன்னு நம்ம சோ எழுதுவா.. அப்புறம் எல்லாம் பேச ஆரம்பிப்பா. பொய்ய 100 தடவ சொன்னா உண்மையாயிடும்மில்ல.. புரிய்தா ஓய்..

குடுமி1: புரிஞ்சிடிச்சிண்ணா..!

குடுமி2: சரி ஓய் பார்க்கலாம் நாளைக்கு..

Saturday, November 25, 2006

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஜெயேந்திரர் கைதான தினத்திலிருந்து அவரைப்பற்றிய பல செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செய்திகளில் ஒன் றிரண்டில் என் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ‘நடந்தது என்ன?’ என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று பல பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி அலை வரிசைகளும், என்மீது அன்பு வைத்திருக்கும் பலரும் கேட்டு வருகிறார்கள்.

வாழ்க்கையில் பல சோதனைகளைக் கடந்து வந்திருக்கும் நான், இப்பொழுது தேவையற்ற பரபரப்புகளிலிருந்து ஒதுங்கி வாழவே ஆசைப்படுகிறேன். ஆனாலும், என் னைப்பற்றிய செய்திகளை நானே சொல்லாமல், ஆளாளுக்கு நினைத்தபடி எழுதுவதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதாலேயே உங்களை யெல்லாம் சந்திக்கிறேன்.
உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். ‘அனுராதா ரமணன்’ என்கிற தனிப்பட்ட நபராக என் னைப் பார்க்காமல், உங்கள் சகோதரி உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வார்த் தைகளாகவே இவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.

சங்கர மடம் அழைப்பு1992-ஆம் ஆண்டு “சுப மங்களா” என்ற பத்திரி கையின் ஆசிரியராக இருந்து விலகி, “வளை யோசை” என்ற சொந்தப் பத்திரிகை நடத்தி நான் நஷ்டப்பட்டிருந்த நேரம்; சங்கர மடத்தில் இருந்து ஒரு ஆன்மீக பத்திரிகை வெளிவர இருப்பதாகவும், அது தொடர்பாக என்னை ஜெயேந்திரர் பார்க்க விரும் புவதாகவும் அழைப்பு வந்தது.

காஞ்சி சங்கர மடத்தின் மீதும், பரமாச்சார்யாள் மீதும் மிகுந்த மதிப்பு வைத் திருக்கும் குடும்பத்தில் வளர்ந்தவள் நான். ‘கட வுளே அழைத்திருக்கிறார்’ என்று சொல்லித்தான் என் தந்தை அனுப்பி வைத்தார். என்னை அழைத்துப் போக சங்கர மடத்திற்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்மணி வந்தார். அவருடைய காரிலேயே காஞ்சிக்கு அழைத்துப் போனார்.

முதல் சந்திப்பில் ஜெயேந்திரர் ‘அம்மா’ என்ற ஆன்மீகப் பத்திரிகை பற்றி விவரித்து, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்குமாறு என்னிடம் சொன்னார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். பத்திரிகை தொடர்பாக ஜெயேந்திரருடன் பேச ஒவ்வொரு முறையும் அந்தப் பெண் மணியே என்னைத் தன் காரில் காஞ்சிக்கு அழைத்துப் போவார். பத்திரிகை தொடர்பாக முழுமையான ஈடுபாட்டுடன் பலயோச னைகளை நான் முன்வைத் தேன்.

மதிய நேரம்பக்தர்களைச் சந்தித்து முடித்து ஜெயேந்திரர் ஓய் வெடுக்கும் மதிய நேரத்திலேயே ஒவ்வொரு முறை யும் சந்திப்பு நடந்தது. அந்த அறையில் ஒரு மூலையில், காணிக்கையாக வந்த பணத்தை எண்ணிப் பிரித்து அடுக்கும் வேலை யில் வேத பாடசாலை மாணவர்கள் மும்முரமாயி ருப்பார்கள். மற்றபடி நான், என்னை அழைத்துப் போகும் பெண்மணி, ஜெயேந்திரர் என்று மூவர் மட்டுமே அந்த அறையில் இருப்போம். பத்திரிகை பற்றி பேசும்போது, யாருடைய இடையூறும் இருக்க வேண்டாம் என்று அந்த மாணவர்களை ஜெயேந்திரர் வேறு வேலையாக வெளியே அனுப்பி விடு வதும் உண்டு.

முதல் நான்கு சந்திப்புகளில் ஆன்மீகத்தைப்பற் றியே இருந்த ஜெயேந்திர ரின் பேச்சு, திடீரென்று ஆபாசத்திற்கு மாறியது. அதிர்ந்து போனேன். எழுதிக் கொண்டிருந்ததிலிருந்து நிமிர்ந்து பார்த்தால், மேலும் அதிர்ச்சி, என்னை அழைத்துப் போயிருந்த பெண்மணியும், அவரும் இருந்த நெருக்கமான நிலை கண்டு புயலால் தாக்கப்பட்டவள்போல் நிலைகுலைந்து போனேன்.
காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர் கேவலமான காமுகன் பேசுவதுபோல் சில தகாத வார்த்தைகளைச் சொல்லி என்னைப்பற்றியும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அதிர்ச்சி

ஆத்திரமும், அதிர்ச்சியும் என்னை நடுக்க, பதறி எழுந்தேன். ‘ச்சீ, நீ ஒரு மனுஷனா?’ என்று கத்தினேன். ‘இது உனக்குக் கிடைக்கும் பாக்கியம்’ என்று அந்தப் பெண்ணும் ஏதோ உளறினார். ‘வழக்கம்போல இவ கிட்டயும் சொல்லித்தானே அழைச்சிட்டு வந்தே?’ என்று அவர் அந்தப் பெண் ணிடம் கேட்டு, ‘இல்லை’ என்று அந்தப் பெண் சொன்னதால் அதிர்ந்தார். அந்தப் பெண்ணைப் பலவாறு திட்டினார்.

உடனடியாக அந்த அறையை விட்டு வெளி யேற முற்பட்டேன். அந்தப் பெண் என்னைவிட வலு வானவர். தடுத்து நிறுத்தி னார். ‘இதோ பார், சம்மதித்தால் உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறேன். இது என் இருப்பிடம், சுற்றி இருப்பவர்கள் என் மனிதர்கள். கணவனை இழந்த பின்னும், பொட்டும், அலங்காரமுமாக சுற்றிக் கொண் டிருப்பவள் நீ. என்னைப்பற்றி வெளியே நீ சொன்னால், உன் னுடன் தொடர்பு வைத்திருப் பதாக பத்து ஆண்களை உனக்கு எதிராக சாட்சி சொல்ல வைக்கும் செல்வாக்கு எனக்கு இருக்கிறது’ என்று ஜெயேந் திரர் சொல்ல, திரும்பிப் பார்க்காமல் வெளியேறி னேன். அந்தப் பெண் என் பின்னாலேயே வந்து சமா தானம் செய்ய முற்பட்டார்.

அழுகை

உள்ளே இருக்கும் மனிதரின் உண்மையான முகம் தெரியாமல், வெளியே காத்திருக்கும் நூற்றுக் கணக்கான பக்தர்களைப் பார்த்ததும், அழுகை குமுறிக் கொண்டு வந்தது. அந்தப் பெண்ணிடம் பேசக்கூடப் பிரியப்படா மல், அவர் காரைத் தவிர்த்து, ப° பிடித்து சென்னை திரும்பினேன். வீட்டிலும் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அன்றிரவு தூக்கம் போனது. பெண் எழுத்தாளராக இருந்துகொண்டு, பெண் களைக் கேவலப்படுத்தும் மனிதர்களைப்பற்றி வெளியே சொல்லாமல் மறைப்பதா என்று தவிப்பு ஒரு பக்கம், இந்த உண்மை வெளிப்பட்டால், ஒரு தனி மனிதனின் கேவலமான நடவடிக்கைகளால், இரண்டாயிரம் ஆண்டு களுக்குமேல் மிகச் சிறந்த பாரம்பரியம் கொண்ட சங்கர மடத்தின் மேன் மையே குலைந்து, நாட்டி லேயே பெரும் கலவரம் மூள நான் காரணமாகி விடுவேனோ என்ற தவிப்பு இன்னொரு பக்கம் என்று மனதில் போராட்டம்.

மறுநாளே அந்தப் பெண் என் வீடு தேடி வந்தார். வாய்க்கு வந்தபடி கத்தினார். என்னைக் கன்னத்தில் அறைந்து என் பெற்றோரையும் தாக்கினார்.
அடிபட்டு பொறி கலங்கிப்போன நான், உடனடியாக எனக்கு சிநேகிதியாக விளங்கிய ஒரு பெண் போலீ° அதிகாரியைச் சந்தித்து உடைந்து அழு தேன். நடந்தவற்றைக் கூறி னேன். துடித்துப் போனார். ‘எழுத்துப் பூர்வமாக புகார் கொடு. உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று ஆதரவாகச் சொன்னார்.

ஆனால், என் பெற்றோரைப் போலவே, கோடிக் கணக்கானவர்கள் மதிக்கும் சங்கர மடத்தின்கவுர வத்தையே பாதிக்குமே என்று புகார் கொடுக்கத் தயங்கினேன். போலீ° பாதுகாப்பை மட்டும் வேண்டினேன். உடல் ரீதியாக அடிபட்டதிலும், மன ரீதியாக பெரும் கொந்தளிப்பிற்கு ஆளான திலும், அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கேயே செயலிழந்து விழுந்தேன். உடனடியாக ஒரு வாகனம் வரவழைத்து என்னை போலீ° அதிகாரியான அந்த சிநேகிதி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பக்கவாதம்

என் இடதுகால் பக்க வாதத்தினால் பாதிக்கப் பட்டு விட்டதாக மருத்து வர்கள் சொல்லி சிகிச்சை களுக்கு ஏற்பாடு செய்தனர். தனிமையில் என் அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு உண்மைகளை அவரிடமும் சொன்னேன். மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். பொங்கி அழுதார். கிட்டத்தட்ட அடுத்த ஒரு வருடத்திற்கு எந்தப் பத்திரிகைக்கும் எழுத முடி யாதபடி என் உடல் நிலை மோசமாகவே இருந்தது.

இதற்கிடையில் ஜெயேந்திரரிடமிருந்து மறுபடி மிரட்டலும், கேட்கும் பணம் தருவதாக பேரங்களும் தொடர்ந்தன. எதையும் நான் பொருட் படுத்தவில்லை. ஜெயேந்திரர் கைப்பட எழுதியதாக ஒரு மன்னிப் புக் கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்டிய அவருடைய உதவியாளர் அதைக் கையோடு வாங் கிப் போய்விட்ட சம்பவமும் நடந்தது.

மன்னிப்பு

என்னிடம் நேரில் மன்னிப்பு கேட்க விரும்புவ தாக ஜெயேந்திரரிடமிருந்து மீண்டும் மீண்டும் தூது வர, மிகுந்த வற்புறுத் தலுக்குப் பின் என் நெருங் கிய உறவினர் துணை வர சென்னையில் தங்கியிருந்த ஜெயேந்திரரை சந்திக்கச் சம்மதித்தேன். என்னை சந்தித்ததும், “போதாத காலம். என் புத்தி பிசகி விட்டது. மன்னித்து விடு. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று ஜெயேந்திரர் கேட்டார். “காவியைத் துறந்துவிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற பதவியிலிருந்து இறங்கி சாதாரண மனிதராக வெளிநடப்பு செய்யுங்கள். கடவுள் உங்களை மன்னிப்பார்” என்றேன். ஆனால், என் காதுபட அங்கே வந்திருந்த வேறொரு வி.அய்.பி., பெண்ணை வர்ணித்து அவர் தரக்குறை வாகப் பேசியதும் கொதித்துப் போனது மனது.

உண்மைத் தொடர்

ஜெயேந்திரர் துறவிக் கோலத்தைத் துறக்க வில்லை. எத்தனையோ அப்பாவிக் குடும்பங்களும், குறிப்பாய்ப் பெண்களும் ஜெயேந்திரர் போன்றவர் களின் உண்மையான முகத்தைத் தெரிந்துகொள்ளாமல், பத்திற்குள்ளாவதைத்தடுக்கு பொறுப்பு எனக்கிருப்பதாக உள் மனம் அரித்துக் கொண்டே இருந்ததால், மிகுந்த யோச னைக்குப் பிறகு, ஒரு பத்தி ரிகையில் என் பெயரைச் சொல்லாமல் ஒரு உண்மைத் தொடர் எழுதத் தொடங்கினேன். ஜெயேந்திரருக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கு காரணமாக அத்தொடர் முழுமையாக வெளிவரும் முன், நிறுத்தப் பட்டது.

சமூகத்தில் எனக்கு அவரால் தொடர்ந்து பல இன்னல் கள் இழைக்கப்பட்டன. என் உயிருக்கே ஆபத்து வரும் என்று மிரட்டல்கள் வந்தன. என்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த சில பெரிய மனிதர் களின் நல்லெண்ணத்தால் தான் நான் உயிர் பிழைத்திருந்தேன் என்றுகூட சொல்வேன். அவர்களுக்கு என் றைக்கும் நன்றிக் கடமைப் பட்டிருக்கிறேன்.

என் மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பும் வரையிலாவது உயிர் பிழைத்தி ருக்க வேண்டுமே என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் வாழ்ந்திருந்தேன்.

பக்குவப்பட்டது

யோகா வகுப்புகளுக் குப் போய் வந்து என் மனம் மேலும் பக்குவப் பட்ட ஒரு கட்டத்தில், ஜெயேந்திரர் ஒன்றும் தெய்வப் பிறவி அல்ல, சாதாரண மனிதன்தானே என்று, அந்த தனி மனி தனை மன்னித்து மறக்கும் நிலையை ஏற்றேன்.

பெண்களுக்கு துணையிருக்க வேண்டிய பெண் தெய்வங்களே ஸ்ரீ ஜெயேந்திரரைப் போன்றவர்களின் அநியாயங் களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதா என்று கோவில் களில் குமுறி அழுதிருக்கிறேன். தெய்வங்கள் இப்போது ஜெயேந்திரரை வேறு வழியில் பொதுவிற்குக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு எதிராக எதையும் சொல்லிவிடாதே என்ற மிரட்டல்கள் ஒரு புறம், உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள் என்று வற்புறுத் தல்கள் ஒருபுறம். மறுபடியும் சொல்கி றேன். இந்த மேடையை ஜெயேந்திரருக்கு எதிராக குற்றம் சுமத்த நான் பயன் படுத்தியதாக நினைக்க வேண்டாம். யாரிடமிருந் தும் எந்த ஆதாயத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. எந்த நீதிமன்றத்திலும் நான் அவர்மீது வழக்கு தொடர வில்லை.

தவறான தகவல்கள்

எதைப்பற்றியும் சொல்லாமல், அமைதியாக இருப் பதையே நான் விரும்பி னேன், விரும்புகிறேன். ஆனால், ஜெயேந்திரருடன் என்னைத் தொடர்பு படுத்தி யூகங்களின் அடிப் படையில் தவறான தகவல் களை சில பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்ததால் இந்த தன்னிலை விளக் கத்தை நான் தர முடிவு செய்தேன். ஜெயேந்திரரையும், என்னை காஞ்சிக்கு அழைத் துப்போன பெண்ணை யும் மேலும் இழிவுபடுத் தும் சில விவரங்களை நான் இங்கே முழுமையாக சொல் லாமல் தவிர்த்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு உறுதியை மட்டும் என்னால் தர முடியும். நான் சொன்னவை அத்தனையும் பொய்க் கலப்பற்ற சத்திய வார்த் தைகள்.

உங்கள் மனதில் எழுகின்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த அறிக்கையி லேயே விடைகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து என்னைத் தொடர்ந்து வேறு கேள்விகள் கேட்டு துரத்தாதீர்கள். ஏற்கெ னவே மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்.

துணிச்சல்

என்னைப் போல பாதிப்புக் குள்ளாகி வெளியே சொல்ல முடியாத வேறு சில பெண்களும் நிச்சயம் இருப்பார்கள். அவர்களும் துணிச்சல் கொண்டு பிற்பாடு வெளியே வரக் கூடும். ஒரு தனிப்பட்ட மனிதரின் மோசமான அணுகு முறை பற்றி நான் வெளிப் படையாக சொல்லியிருக் கிறேனே தவிர, நான் பெரிதும் மதிக்கிற காஞ்சி மடத்தையோ, இந்துக்களின் உணர்வுகளையோ அவமதிக்கும் எந்த நோக்க மும் சிறிதளவும் எனக்கு இல்லை.

பத்திரிகைகளையும் என்னையும் பிரித்து பார்க்க முடியாதபடி, என் வாழ்வின் முக்கியத் திருப்பங் களில் எல்லாம் பத்திரிகை கள் பெரும் பங்கு வகித் திருக்கின்றன. இப்போதும் உங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரியாகவே என்னை நினைத்து மேற்கொண்டு என்னைப்பற்றிய அவதூறுகளை எழுதாமல் நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு அனுராதா ரமணன் தனது அறிக்கை யில் கூறியிருக்கிறார்.

Monday, November 20, 2006

தமிழர்களே, உஷார்! உஷார்!!

பெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் பார்ப்பனர்கள் இன்றுகூட குறை சொல்வதன் பொருள் என்ன?

இன்று வரையிலும் பார்ப்பனர்கள் தங்களின் பிறவி உயர் ஜாதித்தனம் என்கிற திமிரிலிருந்து விடுபடவில்லை என்பதற்கான அடையாளமே அது! பெரியாரும் அவர்கள் கண்ட தன்மான இயக்கமும் சொன்னது என்ன? பிறப்பின் அடிப்படையில் எந்த மனிதனும் உயர்ந்தவனும் அல்ல + தாழ்த்தவனும் அல்ல என்பதுதான்.

இந்தக் கொள்கையை எதிர்ப்பவர்கள் யாராக இருக்க முடியும்? அவர்கள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வெறுக்கத் தக்கவர்கள்தானே? திருவாளர் `சோ’ ராமசாமியும், பார்ப்பன சங்கத்தாரும், சங்கர மடத்தாரும், காவி கட்சியாரும். ஆலிங்கனம் செய்து கொண்டு பெரியாரை கொச்சைப்படுத்த முயல்வதன் மூலம் மக்கள் மத்தியில் கொச்சைத்தனமாக வெறுக்கப்படுகிறார்கள். இவர்கள் என்னதான் குடலைக் கிழித்துக் கொண்டு `குறக்கலி’ வித்தை காட்டினாலும் மக்கள் மத்தியில் பார்ப்பனர்கள் குற்றவாளிகளாகத் தான் திகழ்கிறார்கள். வஞ்சகர்களாகத்தான் பேசப்படுகிறார்கள், சூழ்ச்சிக்காரர்கள் என்றுதான் கணிக்கப்படுகிறார்கள்.

இடஒதுக்கீட்டின் காரணமாக 69 சதவீத மக்கள் பயன் பெறுகிறார்கள் என்றால், அதனை எதிர்ப்பதன் மூலம் பார்ப்பனர்கள் வெகு மக்களின் கண்டனங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது மட்டுமல்ல; இன்னும் ஜாதி ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க மறுக்கும் கொடியவர்கள் என்று அசிங்கப்படும் நிலைக்கு ஆளாகிறார்கள்.`ஃபைனான்சியல் எக்°பிர°’ என்னும் ஆங்கில ஏட்டில் (12.11.2006) திருவாளர் சோ ராமசாமி எழுதியுள்ள கட்டுரையில் இழையும் மையப்பகுதி 2006+ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் பாசி°டுகளே என்பதற்கான சாட்சியமாகும். தந்தை பெரியார்மீது பாய்கிறார். வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போகக் கூடாது என்று சொன்னவர்; பார்ப்பனரல்லாத மேல்ஜாதிக் காரர்களுக்காகப் பார்ப்பனர்களை எதிர்த்தவர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அவர் ஒன்றும் செய்து விடவில்லை. அதனால்தான் திராவிடர் இயக்கத்தினை தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரிப்பதில்லை என்று சகட்டுமேனிக்கு வெறியைக் கக்கியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள், தகவல்களைக் கொஞ்சம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து போட்டால் இந்தப் பார்ப்பனர்கள் கொட்டிய பதர்கள் ஒரு நொடியில் பறந்து போய்விடும்.பிரிட்டீஷ் முதலிய எல்லாவித முதலாளித்துவ ஆட்சியிலிருந்து இந்தியாவைப் பூரண விடுதலை செய்வது என்று தீர்மானம் போட்டவர் தந்தை பெரியார். வெள்ளையர்களை எதிர்த்து காங்கிர°காரராக இருந்து குடும்ப உறுப்பினர்கள் சூழ போர்க்களங்கள் கண்டவரும் அவரே! அந்த வகையில் காந்தியாருக்கும் பெரியார் வழிகாட்டி!சுதந்திரப் போராட்ட வீரருக்கான விருது மத்திய அரசால் பெரியாருக்கு வழங்கப்பட்ட விவரம், கூடத் தெரியாத `அம்பியாக’ எழுத லாமா?

வெள்ளையனே வெளியேறு என்கிற இயக்கம் வெடித்தபோது ஜகா வாங்கி, காங்கிர°காரர்களாலேயே `ஆக°டுத் துரோகி’ என்று அழைக்கப்பட்ட ஆச்சாரியார்தானே இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்?பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு அரசு பணம் கொடுத்தற்காகக் கூக்குரல் போடும் இந்தக் கூட்டம் ஆக°டுத் துரோகிக்கு எப்படி கவர்னல் ஜெனரல் பதவி கொடுக்கலாம் என்று எழுதுகோல் பிடித்ததுண்டா?

தன் தியாகத்துக்காக கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தையே ஆச்சாரியார் எழுதிக் கேட்டதுபோல, சுதந்திரப் போராட்டத்தில் தானும் தமது குடும்பத்தினரும் ஈடுபட்டுச் சிறை சென்றதற்காக தியாகி மானியமா கேட்டார் பெரியார்?

வெள்ளைக்காரன் ஆட்சி கட வுள் கொடுத்த அருள் என்றும், வெள் ளைக்காரன் ஆட்சி நீடிக்க கடவுள் அருள் புரிய வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்கள் யார்? பார்ப்பனர்கள் தலைமை தாங்கிய காங்கிர° மாநாடுகளில்தானே இந்தக் கூத்துகள் எல்லாம் நடந்தன? இல்லை என்று மறுக்க முடியுமா?

முதல் வருடம் காங்கிர° மாநாட்டுக்குத் தலைமை வகித்த வக்கீல் பார்ப்பனர்கள் அடுத்த வருடம் உயர்நீதிமன்ற நீதிபதிகளான மர்மம் என்ன?காங்கிர° நிதியில் குருகுலம் நடத்தச் சொன்னால் அதிலும் பார்ப்பனர்கள் + சூத்திரர்கள் என்று பேதாபேதம் செய்த வ.வே.சு. அய்யர்கள்தான் அவாள் பார்வையில் சுத்தம் சுயம் பிரகாசமான 22 காரட் தேசப் பக்த திலகங்கள் + அப்படித்தானே?வெள்ளைக்காரனோடு நகமும் சதையுமாக இணைந்து ராமராஜ்யம் அமைப்போம் என்று சொன்னதைப் புரிந்து கொண்ட பெரியார் அதன் உண்மைப் பொருள் பார்ப்பன ராஜ்யம்தான் என்பதை மிகச் சரியாகவே கணித்து, அந்த ராமராஜ்யமான சுதந்திர ராஜ்யம் வேண்டாம் என்று ஒளிவு மறைவின்றி உரைத்ததில் என்ன குற்றம்?

காங்கிரசில் இருந்தபோது சேலம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை `ஹிந்து’ ஏடு தன் நூற்றாண்டு விழா மலரில் வெளியிடவில்லையா!வெள்ளைக்காரன் ஆளும்போதே பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும்; அப்படிக் காணாவிட்டால் இங்கே னுநஅடிஉசயஉல (ஜனநாயகம்) இருக்காது; மாறாக பார்ப்பன நாயகம் தான் இருக்கும் என்றாரே!சொல் சுத்தம், அறிவு சுத்தம், நாணய சுத்தம், தொண்டு சுத்தம் என்று எல்லா வகையிலும் ஒளிர்விட்ட + நெருப்பில் அழுக்குத் தங்காது என்கிற அறிவியல் சூத்திரமான தந்தை பெரியாரைப்பற்றி எழுதிட கைகள் நடுங்க வேண்டாமா?

நேர்மையான நெஞ்சங் கொண்டவர்களிடத்தில்தான் இதனை எதிர்பார்க்க முடியும்?தந்தை பெரியார் கணித்ததுதானே இப்பொழுது நடக்கிறது. சுதந்திரம் அடைந்த கையுடன், சென்னை மாகாணத்தில் அமலில் இருந்த வகுப்புவாரி உரிமையின் கழுத்தில்தானே கத்தி வைத்தார்கள்? `சுதந்திர’ இந்தியாவை இதுவரை ஆண்ட பிரதமர்கள் யார் யார்? 51 வருடம் ஒரு மாதம் 29 நாள்கள் இந்தியாவை ஆண்ட பிரதமர்கள் பார்ப்பனர்கள்தானே?

குடியரசான 56 ஆண்டுகளில் 51 ஆண்டுகள் ஆண்டவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா? இன்னும் தீண்டாமை ஒழிப்பு பஜனை பாடிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, ஜாதி ஒழிப்பை அரசமைப்புச் சட்டத்தில் ஏற்ற முடியவில்லையே!தந்தை பெரியார் கட்டளைப்படி கறுஞ்சட்டைத் தோழர்கள் பத்தாயிரம் பேர் அரசமைப்புச் சட்டத்தை எரித்து சாம்பலை பிரதமருக்கு அனுப்பி வைத்தும்கூட மனித சுதந்தரத்துக்கு எதிரான ஜாதி பாதுகாப்பாகத்தானே ஜமக்காளம் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.சுதந்திரம் இருக்கும் இடத்தில் ஜாதி இருக்கலாமா?

ஜாதி இருந்தால் அங்கு சுதந்திரம் இருக்குமா என்ற தந்தை பெரியாரின் வினாவுக்கு சுதந்திர இந்தியாவின் பதில் என்ன?ஆண்டுக்கு ஒருமுறை பூணூலைப் புதுப்பிக்கும் சோ ராமசாமிகள் சொல்லுவார்களா?

பூணூல் புதுப்பிப்பு என்பது ஜாதி ஒழிப்புக்கான ஆயுதம் தீட்டலா?பார்ப்பனர்களை எதிர்த்தது பார்ப்பனரல்லாத உயர் ஜாதிக்காரர்களுக்குத் தானாம்?

தாழ்த்தப்பட்டவர்களுக்கக்க ஒன்றும் செய்யவில்லையாம், இதுவும் ஒரு சிண்டு முடியும் வேலைதான்!தன்னுடைய இலட்சியத்திற்கு யார் கிடைத்தாலும் தந்தை பெரியார் அவர்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது உண்டே! பொப்பிலிகளும் பனகல்களும் தந்தை பெரியார் பார்த்த திசையில் ஆட்சியைச் செலுத்தியவர்களாயிற்றே!மருத்துவக் கல்லூரியில் சேர சம°கிருதம் படிக்க வேண்டும் என்று இருந்த தடையை பனகல் அரசரைக் கொண்டுதானே பெரியார் தகர்த்தெறிந்தார்.பார்ப்பனர்களின் ஏகபோகமாக இருந்த இந்துக் கோயில்களின் நிர்வாகச் சிண்டை இழுத்துப் பிடிக்கும் ஒரு சட்டத்தை ஒரு பனகல் அரசரைக் கொண்டுதானே தந்தை பெரியார் நிறைவேற்றச் செய்தார்?முத்தையா முதலியார் என்ற பார்ப்பனரல்லாத உயர் ஜாதிக்காரரைக் கொண்டு தானே வகுப்புவாரி உரிமை என்கிற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரச் செய்து சவுண்டிகளுக்குச் சம்மட்டி அடி கொடுக்கச் செய்தார்?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாடுபடவில்லையாம். வைக்கம் போராட்டம் என்ன உயர் ஜாதிக்காரர்கள். தெருவில் நடக்கும் சிவில் உரிமைக்காகவா?மாகத் என்னும் ஊரில் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுக்கும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடுப்பதற்கு தமக்கு உந்து சக்தியாக இருந்தது பெரியார் ராமசாமியின் வைக்கம் போராட்டம்தான் என்று அண்ணல் அம்பேத்கரே சொன்னதெல்லாம் `சோ’ கூட்டத்திற்குத் தெரியுமா?

ஆதி திராவிடர் (பஞ்சமர்) பொது வீதிகளில் நடந்து செல்லலாம் என்று ஆணை பிறப்பித்த ஆட்சி எது? நீதிக்கட்சி ஆட்சியல்லவா? (ழுடி 2660 டிக 25.9.1924)

பள்ளிகளில் ஆதி திராவிடர் மாணவர்களைச் சேர்க்காவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும் என்று சுற்றறிக்கை விட்டவர் தாலுகாபோர்டு தலைவரும், தந்தை பெரியாரின் சீரிய தொண்டருமான சிவகங்கை இராமச்சந்திரனார் என்ற உண்மை தெரியுமா?பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்க மறுத்தால், அதன் உரிமம் ரத்துச் செய்யப்படும் என்று ஆணை பிறப்பித்தவர் ஜில்லா போர்டு தலைவரும் சுயமரியாதை இயக்கத்தின் தலைவருமான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் என்பது சங்கராச்சாரியாரின் சீடர்களுக்குத் தெரியுமா?

கொலைக்குற்றவாளியாகத் திரிந்தாலும் சங்கராச்சாரியார்களை ‘பெரியவாள்’ என்று அழைக்கும் + துதிக்கும் பேர் வழிகள் பெரியாரைக் கொச்சைப்படுத்த முனைகிறார்கள் தமிழர்களே, உஷார்! உஷார்!!

Thanks - Viduthalai

Friday, November 17, 2006

Wear Helmet

Tuesday, November 14, 2006

நூற்றுக்கு நூறு உண்மை

மடத்திலுள்ள சுவருக்கு மட்டு மல்ல; இங்கு சுற்றிச் சுழலும் காற் றுக்குக்கூட காது இருக்கும். சின்ன அதிருப்தியை வெளிப்படுத் தினால்கூட அது ஜெயேந்திரருக் குத் தெரிந்துவிடும் அவ்வளவு தான்! கூப்பிட்டு `குங்குமம் கொடுத்து’ அனுப்பி விடுவார் என்பான். இந்த குங்குமம் கொடுத்து அனுப்புவார் என்பதற்கு, `கவனித்து விடுவார் கள்’ என்று வேறொரு அர்த்தமும் இருக்கிறது. அதாவது எதுவும் நடக்கும். அதைக் கண்டு கொள்ளக் கூடாது. அப்படி கண்டுகொண்டால் ஏதாவது ஒரு விதத்தில் கவனிப்பு தான் என்று அதற்கு அர்த்தமாம்.

இரவு பத்து மணிக்குமேல் ஜெயேந்திரருக்கு வேண்டியவர் களை மடத்துக்கு அழைத்து வருவது, சமயம் பார்த்து அவர் களை வெளியே அனுப்புவது என்று நடந்த ஒவ்வொன்றை யும் சுவார°யமாகக் கூறுவான். ஆக, ஜெயேந்திரருக்குப் பெண்கள் சகவாசம் இருந்ததென்பது நூற்றுக்கு நூறு உண்மை.அதுவும் அந்த மனுஷா (பெரியவர்) புத்தி ஆரம்பத்தி லிருந்தே அப்படித் தான்.

மகா பெரியவர் இருந்தப்போ நடந்த முதல் தவறைச் சொல்கிறேன். அப்போ அந்தப் பகுதி யிலிருந்த வங்கி அதிகாரி ஒருவர் அடிக்கடி மடத்திற்கு வருவார். அவரது மனைவியும் வருவார்.எப்படியோ ஜெயேந்திரரின் கண் அந்தக் குடும்பப் பெண்மணிமீது விழுந்து விட்டது. இந்தத் தகவல் மகா பெரியவருக்குத் தெரிந்து ரொம்பவே வேதனைப் பட்டாராம்.உடனே, ஜெயேந்திரரைக் கூப்பிட்டு கடுமையாக எச்சரித்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில்தான் ஜெயேந்திரர் தண்டத்தைப் போட்டுவிட்டு மடத்தை விட்டு வெளியேறினார்.

ஜெயேந்திரரின் பூஜை பலனுக்காக ஆறு பேர் மடத்திற்குள்ளாகவே நித்திரை சமாதியாகிட்டதாகவும் சொல்வான். அவன் சொல்வதெல்லாம் மர்மமாகவே இருக்கும். மேலும் ஒரு மாதிரி சகிக்க முடியாத நீலப்பட விஷயத்தையும் கண்ணன் சொல்வதுண்டு.

டாக்டர்.சீனிவாசன்,
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சர°வதிவி°வா மகாவித்யாலயாவின் முன்னாள் பதிவாளர்
(குமுதம் ரிப்போர்ட்டர் 23-12-2004)

Source from Viduthalai.com

Wednesday, November 08, 2006

புரோக்கர் வேலை செய்த நாரதர்

சிந்தித்து வாழ்வதற்கு கல்வி அடிப்படையாக அமை கிறது. கல்வியின் வழியில் கவின்மிகு வாழ்க்கை வாழ தமிழ் இலக்கியங்கள், சுடராக நிற்கின்றன. இச்சுடரொளியில் வாழ்ந்த தமிழ் இன முன்னோடி களின் பாதை நமக்குப் பாடமாகயிருக்கிறது. தமிழ் இனம், தலைநிமிர்ந்து நடக்க, இத்தகைய செம்மையான வழியிருந்த போதிலும், மதம் என்கிற மயானப் பாதையில் செல்வது ஏன்?இப்படி மதப்பாதையில் சென்ற ஒரு மங்கை மானம் இழந்த கதையொன்றை நக்கீரனில் நவின்றுள்ளார் தாத்தாச்சாரியார். கடவுளே காமுகனாக களம் புகுந்த இக்கதையைப் படித்த பின்பாவது, இழிவான மதப்பாதையைப் பழித்து இனிய பாதையில் நடப் பார்களா பக்தர்கள்?

27.11.2005 நக்கீரனில்:- பஞ்சாப் மாநிலம், ஜலந்தர்-பிருந்தா கணவன் மனைவி. இவர்களின் வாழ்க்கை அமைதியாகயிருந் தது. இவர்களின் மகிழ்ச்சியான வாழ்வை சீர்குலைக்க புரோக்கராக நுழைகிறார், நாரதர். ஒரு நாள் ஜலந்தர் தனியாகயிருக்கும்போது, நாரதர் அவனைச் சந்திக்கி றார். “என்ன ஜலந்தர்? நீயோ சிவனை வழிபடுகிறாய் உன் மனைவியோ விசுணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால், சிவனுடைய மனைவி பார்வதியையே அடையலாமே, எதற்கு இந்த பிருந்தாவுடன் போரா டிக் கொண்டிருக்கிறாய்? இந்த பிருந்தாவை விட அந்தப் பார்வதி எவ்வளவு அழகு” என புரோக்கர் போல் இழைந்தார் நாரதர்.

நான் பார்வதியை அடைய வழி என்ன? என ஜலந்தர் கேட்டான்.“சிவனுக்கு சாம வேதம் மிக வும் பிடித்தமான ஒன்று. எங்கே சாம வேதம் ஒலித்தாலும் அந்தப் பக்கம் போய்விடுவான். சாம வேதம் பாராயணம் செய்ப வர்களைப் பிடித்து நல்ல சத்தமாக சாம வேதம் ஒலிக்கச் செய், அதனைக் கேட்டு சிவன் மயங்கியி ருக்கும் வேளையில் கயி லாயத்திற்குச் சென்று காரியத்தை முடித்து விடு” என புரோக்கர் நாரதர் திட்டம் கொடுக்கிறார். இத்திட்டப் படி ஜலந்தர் செயல்பட்டான். சாம வேதம் கேட்டு சிவன் லயித்தி ருக்க கயிலாயம் சென்று கட்டிப் பிடித்தான் பார்வதியை ஜலந்தர்.

ஜலந்தர் காம வேதம் ஓத, ஈடு கொடுக்க இயலாத பார்வதி கத்துகிறாள். இங்கே பார்வதியும் ஜலந்தரும் மஞ்சத்தில் கிடக்க அங்கே கணவனைக் காணாது பிருந்தா தவிக்கிறாள். தனது பரம தெய்வமான விசுணுவிடம் தன் கணவனைத் தேடித் தரும்படி வேண்டுகிறாள். தவிக்கும் பக்தையை தழுவும் நோக்கத்தில் ஜலந்தரைப் போல் வேடமிட்டு காமுகன் விசுணு பிருந்தாவுடன் மஞ்சத்தில் இணைகிறான். இங்கே பார்வதியின் இடைவிடாத அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிவன் ஜலந்தர் பார்வதி இணைந்திருந்த நிலைகண்டு கடுங்கோபத்தில் ஜலந்தர் தலையை வெட்டுகிறான். வெட்டுப்பட்ட தலை - விசுணு பிருந்தா மஞ்சத்தின் அருகில் ஓசையுடன் விழுகிறது! இதனைக் கண்டு பிருந்தா அதிர்ச்சியடைகிறாள். வேடம் கலைத்து தன் சுயரூபத்தைக் காட்டுகிறான் விசுணு. பக்தையான என்னையே கெடுத்து விட்டாயே! சண்டாளனே!! நீ கல்லாகப் போ!!! என சபித்தாள் பிருந்தா.

இப்படி ஹிந்து மத ஒழுக்கக்கேட்டை விவரித்து எழுதியிருக்கிறார் தாத்தாச்சாரியார்.தாத்தாச்சாரியார் ஹிந்து மதம் என்கிற குட்டையில் ஊறிய மட்டை. இவரே, ஹிந்து மதம் எப்படிப்பட்ட ஒழுக்கக் கேட்டை அடிப்படையாகக் கொண்டது என்றும், மதத்தின் கதாநாயகர்களே இழிவானவர்களே என்றும் எச்சரிக்கிறார். இதைவிட ஒரு மட்டமான மதம் உலகில் உண்டா?இத்தகைய மதத்தில் தமிழர்களா?கற்பழிப்பவனெல்லாம் கடவுள் என்றால், எத்தனை பயல்களுக்கு கோயில் கட்டுவது?

Tuesday, November 07, 2006

சூத்திரர்கள் ஆக்கிய கடவுள்களை...

சூத்திரர்கள் ஆக்கிய கடவுள்களை...தந்தை பெரியார்

(13.4.1971 இல் திண்டுக்கல்லில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

இவ்வளவு தெளிவான காலத்தில் நம் மக்களில் பலருக்கு இன்னும் அறிவு ஏற்படாததற்குக் காரணம், மானங்கெட்ட தன்மையோடு அறிவிற்கு ஏற்காத வகையில் கடவுளையும், மதத்தையும், சாஸ்ரத்தையும், கடவுள் கதைகளையும் ஏற்படுத்தி அதனை நம்பும்படியாகச் செய்து விட்டதாலேயே ஆகும். உலகில் உள்ள மக்கள் தொகையில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களே ஆவார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே மற்ற நாட்டு மக்கள் அறிவு வளர்ச்சி பெறுகின்றனர்.

கடவுள் நம்பிக்கையின் காரணமாகவே நம் நாட்டு மக்கள் இன்னும் அறிவு பெறாமல் வளர்ச்சியடையாமல் இருக்கிறார்கள். இந்தக் கடவுளில் நாம் கைவைக்க ஆரம்பித்த பின்தான் இன்று நம் மக்கள் ஓரளவு வளர்ச்சி பெற்று வருகின்றனர்.நம் நாட்டிற்கு வந்த பெரிய கேடு கடவுள்.

கடவுளின் பெயரால் மதம், மதத்தின் பெயரால் சாஸ்திரம் என்பதெல்லாம் ஆகும். ஒரு மனிதன் இராமனை, முருகனை, கணபதியை நம்புகின்றான் என்றால் அவனை விட அடிமுட்டாள் எவனுமிருக்க முடியாது. இவற்றை உற்பத்தி செய்திருக்கின்ற கதைகளைப் பார்த்தால் பார்ப்பனர்கள் விட அறிவற்ற ஒரு காட்டுமிராண்டி உலகத்திலேயே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு மடத்தனமாக, காட்டுமிராண்டித் தன்மையுடையதாக அவற்றைக் கற்பித்திருக்கின்றான். அவனால் கற்பிக்கப்பட்ட கடவுள்களைத் தான் நம் மக்கள் ஏற்றுக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.இன்னும் எத்தனை நாளைக்கு மக்கள் மடையர்களாக இருப்பார்கள். இல்லாத சாமியை செருப்பாலடித்தது உன் மனதைப் புண்படுத்துகிறது என்றால், இத்தனை ஆயிரம் மக்களைச் சூத்திரர்கள் என்று சொல்லக்கூடிய வகையில் நான் மட்டும் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளக் கூடிய வகையில் நீ ***** வைத்துக் கொண்டிருப்பதும் எங்கள் மனதைப் புண்படுத்துமா இல்லையா? என்று கேட்கின்றேன். எங்களை இழி மக்களாக, சூத்திரர்களாக ஆக்கிய கடவுளை செருப்பால் மட்டுமல்ல, வேறு எதனால் வேண்டுமானாலும் அடிக்கலாமே!

இந்து மதக் கொள்கைகளும், சாஸ்திரங்களும், புராணங்களும், கடவுள்களும் இருக்கின்ற வரை நாம் மனிதர்களாக முடியாது. பார்ப்பனர்கள் சாஸ்திரப்படி எந்தக் கொலையும் செய்யலாம், எந்த அயோக்கியத்தனமான அதருமத்தையும் செய்யலாம்; என்பது தருமமாக இருக்கிற வரை எப்படி மனிதன் யோக்கியனாக இருக்க முடியும். இந்தக் கடவுள் மதம் சாஸ்திரங்களைக் காரித்துப்ப வேண்டும்; தீயிட்டுக் கொளுத்தவேண்டும்.இந்தக் காரியத்தை நான் இன்று செய்யவில்லை. 40 வருடங்களாகச் செய்து வருகின்றேன். திருமதி. இந்திராகாந்தி அம்மையாரே நான் இதை 35 வருடங்களாகச் செய்து வருகிறேன் என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

மனிதன் ஒரு சிட்டிகை சாம்பலை நெற்றியில் இட்டுக் கொண்டால் அவன் செய்த பாவம் எல்லாம் போகும் என்று சொன்னால், எந்த மனிதன் பாவம் செய்யாமல் இருப்பான்? செம்மண் பட்டையடித்துக் கொண்டால் பாவம் போகும் என்றால், எந்த மனிதன் அயோக்கியத்தனம் செய்யாமல் இருப்பான்?நம் மக்கள் அறிவுள்ளவர்களாக வேண்டும். நம் நாடு மற்ற உலக நாடுகளைப் போன்று வளர்ச்சியடைய வேண்டும். மற்ற உலக மக்களைப் போன்று நம் மக்களும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசையாகும்.

நான் சொன்னதைப் போல் பலர் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டிருக்கிறார்கள். காந்தியார் கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. மதத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது; காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று சொன்ன 56ஆம் நாள், பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் காந்தியைப் போல் சுட்டுக் கொன்றிருப்பார்கள். காந்தியை மகாத்மாவாக்கி விளம்பரம் செய்து மகானாக்கியது பார்ப்பனர்கள்; அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களே அவரைக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று.நான் பார்ப்பனர்கள்ன் தயவில் இல்லை. என்னைப் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். என் ஒருவனைக் கொன்றால் காந்தியைப் போன்று நாதியற்றுப் போகாது. பலர் கொல்லப்படுவார்கள். கலகம் ஏற்படும். பார்ப்பனர்கள் தப்ப முடியாது என்பதால்தான் என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்னைக் கொல்வது சிரமம் என்பதால் அல்ல! என்னைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டிருப்பதாகப் புராணங்கள் சரித்திரம் வரையில் இருக்கிறது.

நாம் கெட்டதற்குக் காரணம் நாம் இந்து என்று சொல்லிக் கொண்டதாலேயே ஆகும். இந்து என்பது பார்ப்பானால் உண்டாக்கப் பட்டதே தவிர, எந்தப் புராண இலக்கியத்திலும் இந்து என்பதற்கு ஆதாரமில்லை. பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்கக்கூடாது, மதக் குறியான சாம்பல் மண் பூசக் கூடாது, கோயிலுக்குப் போகக் கூடாது, எதற்காக நீங்கள் கோயிலுக்குப் போக வேண்டும்? அதனால் எவனோ பார்ப்பனர்கள் தின்ன வேண்டும் என்பதோடு நாமெல்லாம் முட்டாளாகிறோம். இதைத் தவிர வேறு பயன் பலன் என்ன? என்பதைச் சிந்திக்க வேண்டும். நாமெல்லாம் பகுத்தறிவாளர்களாக வேண்டும்.

Article edited. For full details please check http://viduthalai.com/20061103/news09.htm

Wednesday, November 01, 2006

குழிபறிக்கும் கூட்டம் - ஓர் எச்சரிக்கை

குழிபறிக்கும் கூட்டம் - ஓர் எச்சரிக்கை

மூன்று பார்ப்பனப் பிரமுகர்கள் தனியிடத்தில் சந்தித்து தி.மு.க., ஆட்சியை எப்படிக் கவிழ்க்கலாம் என்று சதியாலோசனை நடத்தினர் என்கிற ``பெட்டிச் செய்தி’’ நேற்றைய ``விடுதலை’’யில் வெளிவந்தது. இது உண்மையா என்ற தலைப்பில் பதித்திருந்தேன்.இவ்வார `துக்ளக்’ இதழைப் படித்தவர்களுக்கு `சோ’ என்ற வடிவத்தின் மூலம் பார்ப்பனர்களின் உள்ளக்கிடக்கை எத்தகையது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

40 பக்கங்களில் பெரும்பாலும் தி.மு.க., மீதும், அதன் தலைவர் கலைஞர் அவர்கள் மீதும் சேற்றை வாரி இறைக்கும் `கும்பாபிஷேகம்’ அதிகமாகவே நடந்திருக்கிறது.அவாளின் புழுக்கம் எத்தனை டிகிரியில் இருக்கிறது என்பதற்கு இந்த இதழ் ஒரு `தர்மா மீட்டர்’ ஆகும். அட்டைப் படத்தில் தொகையறா தொடங்கி, 38 ஆம் பக்கத்தில் மங்களம் பாடும்வரை அவாள் பாஷையில் கூறவேண்டுமென்றால் ஒரே ``துவேஷக் கணைகள்’’ தாம்! `துக்ளக்’கின் பாணி எப்படியென்றால், பா.ஜ.க., மீது குறை கூறினாலும், அதனை நிவர்த்திக்க என்ன செய்யவேண்டும் என்கிற விஷயதானம் நிரம்பவே இருக்கும். செல்வி ஜெயலலிதா விடயத்திலும் இந்தப் பாணிதான்!குறைகளைச் சுட்டிக்காட்டுவதுபோலத் தோன்றும். அந்தக் குறைகளை அக்கட்சிகள் களைந்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்கிற உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடுதான் அவை. அந்த நல்ல நிலை என்பதற்கு அர்த்தம் அவாள் நலனைப் பாதுகாப்பது என்பதாகும்.

ஆனால், தி.மு.க.,மீது சுமத்துவது குறைகள் அல்ல - பெரும்பாலும் அபாண்டங்கள்தான். மக்கள் மத்தியில் விஷத்தைத் தூவும் நோக்கம் அதில் குத்திட்டு நிற்கும். பா.ஜ.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் கூறுவதுபோல வழிமுறைகள் அதில் சிறிதும் இருக்காது - வெறும் குற்றப் பத்திரிகையாகவே இருக்கும்.தலையங்கப் பகுதி - தி.மு.க.,வின் வெற்றியை `துக்ளக்கால்’ ஜீரணிக்க முடியவில்லை என்பதை பறைசாற்றுகிறது.அத்தோடு நிறுத்தி விட்டால் போதுமா? தி.மு.க.,வைத் தோற்கடிக்கவேண்டுமே - அதுதானே அவாளின் ஆர்ப்பரிக்கும் உள்ளம் - அதற்கொரு வழியைச் சொல்லுகிறது.

``தமிழகத்தில் பலமான எதிர்க்கட்சியாக வேண்டுமானால், அ.தி.மு.க.,வையும், தே.மு., தி.க.,வும் தனித்து நின்று அதை சாதிக்க முடியாது. இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாகவே பலமான கூட்டணி உள்ள கழகமே வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதை தி.மு.க., உணர்ந்த மாதிரி அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் உணர்ந்ததாகத் தெரியவில்லை’’ என்று மிகவும் துயரப்பட்டு எழுதியிருக்கிறது.

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அவருக்கு இருக்கும் அக்கறை எத்தகையது என்பதற்கு இந்த `சந்து’ செய்விக்கும் வேலையே எடுத்துக்காட்டாகும் எம்.ஜி.ஆருக்காக வேவு வேலை பார்த்தவராயிற்றே - இப்பொழுது மட்டும் சும்மா இருப்பாரா?கேள்வி - பதில் பகுதியை எடுத்துக்கொண்டால் மொத்தம் 28 கேள்விகளில் 22 கேள்வி - பதில்கள் இதே பாணியில்தான்! கேள்வி கேட்பவர்கள் அத்தனைப் பேரும் கலைஞரையும், தி.மு.க.,வையும் நோக்கி மட்டும்தான் மடல் விடுக்கிறார்களா? இல்லை தயாராகத் துடித்துக் கொண்டு இருக்கும் பதில்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வினாக்களா என்கிற நியாயமான அய்யம் ஏற்படத்தான் செய்யும். அந்த அளவுக்கு அரட்டைக் கச்சேரி நடத்தித் தள்ளியிருக்கிறார். 28 கேள்விகளில் 22 கேள்விகள் தி.மு.க.,மீதும், கலைஞர் மீதும் வீசப்பட்ட அவதூறுச் சகதி என்றால், மீதிக் கேள்வி - பதில்கள் அத்தனையும் இட ஒதுக்கீட்டின் மீது திராவக வீச்சுதான்!``எச்சரிக்கை’’ பகுதியில் தாழ்த்தப்பட்டோர்களுக்குப் பதவி உயர் வில் இட ஒதுக்கீடு குறித்து குழி பறித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடித் தீர்த்து இருக்கிறார். இருக்காதா?

தாழ்த்தப்பட்டோருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்ட வடிவம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது ஒரே ஒரு எதிர்ப்பு வாக்கு - அது `சோ’ ராமசாமியுடையதுதான். தமிழின உணர்வுக்கும், சமூகநீதிக்கும் எதிர்த்திசையில் இருக்கும் இந்த மனிதர்களை சரியாக அடையாளம் காணாமல் `துக்ளக்’கைக் காசு கொடுத்து வாங்கும் தமிழர்கள், இனியாவது திருந்தவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!