Saturday, December 16, 2006

ஜீயர் - சங்கராச்சாரியார் குடுமிச்சண்டை

நம் கள நண்பர்களின் நினைவுக்காக...

சண்டை போடுதல் பகைமை நெருப்பைக்கக்குதல், பிளவுகளை உண்டாக்குதல், வெறுப்பை உமிழ்தல், நான் பெரியவன் நீ சிறியவன் என்று சீற்ற மொழி பேசுதல் என்பவையெல்லாம் பார்ப்பன மதத்தின் ரத்தவோட்டமாகும்.

பிறவியில் பேதம் பேசும் மதத்தில் இவை இருக்கத் தானே செய்யும்!

பார்ப்பனரல்லாதாரை இழிவு படுத்துவதில் ஒன்று சேர்ந்து சண்டை போடும் ஜீயர்களும், சங்கராச்சாரியார்களும், அவர்களுக்குள்ளேயே சிண்டு பிடி சண்டையாம் கோதாவுக்குள் குதிப்பதுண்டு. அந்தச் `சுவையான’ காட்சி அண்மையில் அரங்கேறி கோவணம் கட்டத் தெரியாத சிறுவன் கூட பின்பொறியால் சிரிக்கும் நிலை ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் அய்தராபாத் சென்றிருந்த காஞ்சி சங்கராச் சாரியார் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயில் மற்றும் ஜீயர்பற்றி தாறுமாறான கருத்து களை கக்கினார்.

ஸ்ரீமத் நாராயண ஜீயர், மடாதிபதியே அல்ல; அவர் மதபோதகர் மட்டுமே. திரு மலையைப் பொறுத்தவரையில் அவர் ஒரு வழிக்போக்கர். ராமானுஜருக்கும் திருமலைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் கூறுவதெல்லாம் அவர்களே எழுதிக் கொண்ட கதைகள்தான். திருமலையில், ஆதிசங்கரர்தான் யந்திரத்தை ப்ரதிஷ்டை செய்தார். அதனால்தான் இவ்வளவு கூட்டமும் பணமும் வருகிறது. நாங்கள் விஷ்ணுவையும் வணங்குவதால் எங்களுக்குத்தான் திருமலைக் கோயிலில் உரிமையுண்டு. நாங்களே நேராகத் திருவேங்கட வனைப் பூஜை செய்ய உரிமை பெற்றவர்கள். கோயிலில், வைகா நஸ முறைப்படி பூஜைகள் நடப்பதால், இக்கோயிலில் வைணவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே, ஸ்ரீவைஷ்ணவ ரான ஸ்ரீமத் நாராயண ராமானுஜ ஜீயர் வைகாநஸக் கோயிலான திருக்கோயிலின் நிர்வாகங்களில் தலையிடக் கூடாது’’ என்று வாய்க்கோணிய போக்கில் தடிப்பான கருத்துகளை வாரி இறைத்தார்.

சும்மா விடுவார்களா நாமதாரிகள்? வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.கலியன் ராமானுஜ ஜீயர் சுவாமி (நாங்குனேரி) எம்பார் ஜீயர் சுவாமி (திருப்பெரும்புதூர்) யது கிரிகதிராஜ ஜீயர் (மேல் கோட்டை திருநாரா யணபுரம் கருநாடகம்) ஸ்ரீவரதஎத்திராஜ ஜீயர் சுவாமிகள் (திருப்பெரும்புதூர்) அழகிய மணவாள ஜீயர் சுவாமிகள் (காஞ்சிபுரம்) ஆகியோர் செய்தி யாளர்களை அழைத்து மார்ச்சு 16-ஆம் தேதி சென்னையில் சாங் கோபாங்கோமாக பேட்டி அளித்து சங்கர மடத்தின் கபட சந்நியாசியாகிய ஜெயேந்திரரைக் கிழி கிழி என்று கிழித்துத் தள்ளிவிட்டனர்.

சாமியார்களுக்குள் சண்டை வந்தால் புழுத்த பூனை குறுக்கே போகாது என்கிறபடி நிலைமை ஆகி விட்டது. இதற்குப் பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் மக்கள் மத்தியில் நடமாடும்போது முக்காடு போட்டுக் கொண்டு தான் போக வேண்டும். அவ்வளவுக் கிழிப்பு, அக்குவேர், ஆணிவேராக அலசலோ அலசல்!

ஆத்திரக்காரர், அறிவிலி, பொய்யர் காஞ்சிமடம் ஆதி சங்கரரால் தோற்றுவிக்கப்பட்டதல்ல - என்று ஜெயேந்திரரையும் காஞ்சி மடத்தையும் மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துத் தள்ளி விட்டார்கள் பார்ப்பனர்கள் - அதுவும் சங்கராச்சாரியார், ஜீயர் என்கிற தகுதியில் உள்ளவர்கள் எந்த அளவு பண்பாட்டோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு கண்ணிறைந்த எடுத்துக்காட்டாகும்.

லோகத்துக்கே அருளுபதேசம் செய்பவர்களாம் இவர்கள் - இந்த நாட்டுக்கு மட்டுமல்ல லோகத்துக்கே குருவாம் இவர்கள். இவர்களின் யோக்கியதை எந்தக் கதியில் உள்ளது என்பதை இவர்களின் குடுமிபிடிச் சண்டையில் விழுந்த வார்த்தைக் குப்பைகள் மூலம் எளிதாகத் தெரிந்து கொண்டு விடலாம்.

இவர்களுக்குள் ஏற்படும் சண்டை இன்று நேற்று ஏற்பட்டதல்ல - தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது. 2000 நவம்பர் மூன்றாம் தேதி யன்று இதே காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சர°வதி திருப்பதி கோயில் கருவறைக்குள் நுழைந்து மூல விக்ரகத்தைத் தொட்டு ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி நேரம்) அர்ச்சனை செய்தார். அர்ச்சகர்கள் தடுத்தும் அடியாள்தனமாக உள்ளே புகுந்து அடம் பிடித்து அந்த வேலையில் ஈ டுபட்டார். அப்பொழுது அது பெரும் புயலைக் கிளப்பியது. வைணவப் பேரவைகள் கண்டனக் கணைகளை அள்ளி வீசின. எங்கள் ஜீயர்களே கடவுளின் திரு மேனியைத் தொடுவதில்லை என்கிறபோது யார் இந்த ஜெயேந்திரர் எங்கள் பெருமாளின் திருமேனியைத் தீண்ட என்று எகிறிக் குதித்தார்கள். அதனை காஞ்சி சங்கராச்சாரி யார் அர்ச்சகருக்குள் ஏற்பட்ட பிரச்சினை என்று திசை திருப்பப்பார்த் தார்; விடவில்லை வைணவப் பேரவையினர். நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார் ஜெயேந்திரர்.

திருவானைக் காவல் கோயிலுக்குள் ஆதிசங்கரர் சிலையைக் கொண்டு போய் வைக்க முயற்சி செய்தார் ஜெயேந்திரரின் குருநாதர் சந்திரசேகரேந் திர சர°வதிஅன்று. சைவர்களின் கடும் எதிர்ப்புப்புயலால் பின் கால் பிடறியில் இடிபட ஓட்டம் பிடித்தார்.

இப்பொழுதுகூட பழனி கோயிலில் சித்தர் போகரால் நிர் மாணிக்கப்பட்ட நவபாஷாண சிலையை மறைக்கும் வகையில் ஜெயேந்திரர் காஞ்சி மடத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு பொம்மையைக் கொண்டு போய் வைத்து கலவரத்திற்குக் கத்தியைத் தீட்டியுள்ளார். நீதிமன்றம் வரை வழக்குச் சென்றுள்ளது. இவர்களின் வழக்கமே கலவரம் செய்வது - காலித்தனம் செய் வது - அமைதியைக் குலைப்பது தான். அவ்வப்பொழுது வாங்கிக் கட்டிக் கொண்டாலும் ஜெயேந்திரரின் உடம்பில் மட்டும் உரைப் பதில்லை.

அகோபில மடத்து ஜீயரான அழகிய சிங்கர் `கல்கி’ (11.4.1982) இதழுக்கு அளித்த பேட்டி சுவையானது. திருவரங்கம் வைஷ்ணவக் கோயிலின் கோபுரத்தைச் சீர் செய்ய காஞ்சி சங்கராச்சாரியார் பண உதவி செய்துள்ளாரே - அதேபோல சிவன் கோயில் திருப்பணிகளுக்கு நீங்கள் நிதி உதவி செய்வீர்களா என்பது கேள்வி. அதற்கு ஜீயர் சொன்ன பதில்:

``நான் சிவன் கோயிலுக்குச் செல்ல மாட்டேன். ஏன்னு கேட்டா... ஸ்ரீமத் நாராயணன் தான் எல்லாத் தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என் னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்தப் பிர்மா சங்கரனைப் படைத்தான் என்று கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். பிர்ம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம் தான். தப° பண்ணி அந்தப் பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும் அதேபோல சிவன் எத்தனை யோயாகம் பண்ணி, கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சா°திரம் இருக்கு. இவங்கல்லாம் புண்ணியம் பண்ணி, தப° பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால் நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட் சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள். நான் தான் தெய்வம் என்று சொல்லிக்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு . ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்கு பணம் லும் தர மாட்டேன்’’ என்று அழகிய சிங்கர் ஜீயர் பிளந்து கட்டினாரே! (`கல்கி’ 11.4.1982)எந்த ஏட்டில் இந்தப் பேட்டி? `கல்கி’யில் என்பது சாதாரண மானதா?

இப்படி உன் கடவுள் சிறிசு, என் கடவுள் பெரிசு என்று பிள்ளை விளையாட்டு டும் இவர்கள்தான் கடவுளே இல்லை என்கிற நம்மைப் பார்த்துச் சீறுகிறார்கள். கடவுள் பக்தர்கள் முதலில் அவர்களுக்குள் யார் சொல்லும் கடவுள் உண்மையான கடவுள் என்று முடிவுக்கு வரட்டும் - அதற்குப் பின் நம்மிடம் மோதிட முன் வரட்டும். அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை - ளேயே சமாதானம் இல்லை - அவர்களுக்குள்ளேயே அன்பும், பண்பும், அமைதியான ணோட்டமும் இல்லை. இவர்கள்தான் ஊரை, உலகத்தை உய்விக்கப் போகிறார்களாம். இவர்கள் உய்விக்கப் போவது ஒருபுறம் இருக்கட்டும். மதத்தின் பெயரால் மனித ரத்தத்தைக் குடிக்காமல் இருந்தால் போதாதா என்பது தான் நல்லெண்ணம் உள்ளவர்களின் நறுக்குத் தெறித்த கேள்வியாகும்.

சிறீரங்கம் போகாமல்தான் இருப்போமா?

Article by மின்சாரம்

1) கடவுள் நம்பிக்கையைப் பழித்தவர், ஹிந்து தெய்வங்கள்பற்றி மிகக் கேவலமாகப் பேசியவர், தெய்வங்களின் சித்திரங்களைச் செருப்பாலடித்தவர், விநாயகர் சிலைகளை உடைத்தவர் பெரியார். அவர் சிலையை, ஒரு கோவிலுக்கு முன்பாக வைப்பது, உள் நோக்கத்துடன் செய்யப்படுகிற காரியமே!’’ என்று வாய் நீளம் காட்டியுள்ளார் - பூணூல் திருமேனியான திருவாளர் `சோ’ ராமசாமி (`துக்ளக்’ 20.12.2006).

பொத்தாம் பொதுவில் பேசுவது என்பது கீழ்த்தரமான குணமாகும். கடவுள் நம்பிக்கையாளரை தந்தை பெரியார் எப்பொழுதுமே பழித்ததில்லை; தவத்திரு குன்றக்குடி அடிகளாரை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளை எந்த அளவுக்கு மதித்தார் என்பது ஊருக்கும் உலகுக்கும் தெரியுமே. தந்தை பெரியாரின் மனிதப் பண்பை பாராட்டாதார் யாருமிலர். கடவுள் நம்பிக்கை என்பதை பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு அவர் விமர்சித்திருக்கிறார்.

கடவுள் நம்பிக்கைதான் எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் மூல ஊற்று என்பதே அவரின் ஆழமான அறிவியல் கணிப்பு! உலகில் தோன்றிய சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் தெரிவித்த கருத் துகளை ஜீரணிக்க முடியாமல் ஆத்திரப்படுபவர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இருக்கவே செய்திருக்கிறார்கள்.

(2) ஹிந்து தெய்வங்கள்பற்றி மிக மிகக் கேவலமாகப்பேசியவராம்.

ஹிந்துதெய்வங்களை யாரும் கேவலமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஹிந்து தெய்வங்களின் ஆபாசமான பிறப்புகளும் (எடுத்துக்காட்டு, அரி, அரன் என்கிற இரு ஆண் கடவுள்களுக்கும் பிறந்தவன்தான் ஹரிஹரப்புத்திரன் என்ற அய்யப்பன்) கேவலமான நடத்தைகளும் (எடுத்துக்காட்டு: தாருகாவனத்து ரிஷிப் பத்தினிப் பெண்களை சிவன் கற்பழித்தான்) மனித சமூகத்திற்குக் கேடானவை. கடவுள்களே இவ்வளவுக் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டு இருந்தால், அவற்றை நம்பும் மக்களின் ஒழுக்க நிலை என்னாவது என்ற சமூகக் கவலையுடன், மானுடப் பற்றுடன் விமர்சிப்பது எப்படி ``கேவலமான’’ தாகும்? இந்தக் கேவலத்தை வழிபட வேண்டும் என்று கூறுபவர் கள்தான் உண்மையிலேயே மக்களைக் கேவலப்படுத்துபவர்கள் அல்லவா!

3) தெய்வங்களின் சித்திரங்களைச் செருப்பால் அடித்தவர்.

இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு. 1971-இல் சேலத்தில் நடத்தப்பட்ட மாநாட்டின் போது ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை பெரியார்மீது செருப்பு வீசியவர்கள்யார்? இன்றைய பா.ஜ.க.வின் முன்னோடியான ஜனசங்கத்தினர்தாம். அந்தச் செருப்பு பெரியார்மீது விழாமல் தடுக்கப்பட்டு, எந்த நோக்கத்துக்காக அன்று ஜனசங்கத்தினர் தந்தை பெரியார்மீது செருப்பை வீசினார்களோ, அதன் தன்மையைப் புரிந்து கொண்டு பேரணியில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் படத்தினை தொண்டர்கள் செருப்பு அபிஷேகம் செய்தனர் என்பதுதான் உண்மை.

1971 முதல் இன்று வரை திருவாளர் `சோ’ இந்த உண்மையின் பின்னணியை அப்படியே கருந்திரை போட்டு மறைத்துவிட்டு கோயபல்சு பிரச் சாரம் செய்து வருகிறார் என்பது அவரின் தகுதியை நிர்ணயிப்ப தாகும். மற்றபடி தந்தை பெரியாரோ -திராவிடர் கழகமோ ஒரு போராட் டமாக அறிவித்தோ, அறிக்கை வாயிலாகத் தெரிவித்தோ எந்தக் கடவுளையும் செருப்பாலடிக்கச் சொல்லவில்லை என்பதை ஆணித் தரமாகத் தெரிவித்துக் கொள்கி றோம். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

4) விநாயகர் சிலையை உடைத்தவர் பெரியார் என்பது இனனொரு குற்றச்சாற்று

மகாராட்டிரத்தில் விநாயகனை முன்னிலைப்படுத்தி பால கங்காதர திலகர் மதவாத அமைப்பினைத் தூக்கி நிறுத்தினார். தமிழ்நாட்டிலும் கடைவிரித்து போனி செய்யலாம் என்று நினைத்தபோது, விநாயகர் கடவுள் சக்தி வாய்ந்தவர் என்ப தெல்லாம் பொய்ப் பிரச்சாரம், வெறும் மண் உருண்டைதான், சிலைகள்தான்; அவற்றிற்கு எந்தவித சக்தியும் கிடையாது என்பதை நிரூபிக்க, முன்கூட்டியே தேதியையும் அறிவித்து (27.5.1953) அந்த நாளில் நாடெங்கும் விநாயகன் சிலை உடைப்புப் போக்ரட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார். கோயிலுக்குள் இருக்கும் விநாயகர் சிலைகளையோ, பொம்மைகளையோ கவர்ந்து வந்து உடைக்கச் செய்யவில்லை. கடைகளில் விற்கும் விநாயகர் பொம்மைகளைக் காசு கொடுத்து வாங்கி வந்து உடைக்கச் செய்தார்.

கடவுள் இல்லை அதற்குச் சக்தியும் இல்லை என்று நிரூபணம் செய்து காட்டுவதற்காக ஒரு செயல்முறை விளக்கத்துக்காகசெய்து காட்டப்பட்ட ஓர் அறப்போராட்டம்தான் அது. இதனைக் கொச்சைப் படுத்திக் காட்ட முனைபவர்களின் மூளைதான் விஷமத்தனமானது - கொச்சைத்தனத்துக்குக் குத்தகை போனதுமாகும்.

இவற்றை மட்டுமே உண்மைக்கு மாறாக உயர்த்திப் பிடித்துக் காட்டும் இந்தக் கும்பல் - தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், ஜாதி ஒழிப்புக் கொள்கைகள், பெண்ணுரிமைக் கோட்பாடுகள், மனிதநேயச் செயல்பாடுகள், சமூகநீதி எண்ணங்கள் இவற்றைப்பற்றிப் பேசுவ தில்லையே ஏன்?

பெரியார் ஒரு தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக் ரட்டீ°, மூடநம்பிக்கைகளின் கடும் எதிரி என்று அய்.நா.வின் யுனெ°கோ விருது வழங்கியதே அதைப்பற்றி கணக்கில் கொள்ளாத தேன்?

இவற்றின் அடிப்படையில் தந்தை பெரியார் சிலையைக் கோவில்களுக்குமுன் நிறுவுவதில் என்ன தவறு என்று இன்னொரு கோணத்தில் காணத் தவறுவது - ஏன்?

காரணம் உண்டு; இந்த மாபெரும் தலைவர் அல்லவா பார்ப்பன ஆதிக்கத்தை ஆணிவேர் வரை சென்று அழித்தார்; அவர்களின் பாதுகாவல் அரண்களான ஹிந்து மதத்தையும், அவற்றின் ஆபாசமான கடவுள்களையும் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டி வெற்றியும் பெற்றார். அந்த ஆத்திரத்தின் தாக்குதலால் துடிதுடித்தவர்களின் துஷ்ட வார்த்தைகள்தான் இவை.இதற்கெல்லாம் பதிலடி சவுக்கைக் கட்டைகஇளால் அல்ல - சத்தான நமது கொள்கை வழிப் பிரச்சாரக் கோடை இடிப் பெரு முழக்கம்தான்!

Thursday, December 14, 2006

கோயில் முன் சிலை - குடியா மூழ்கியது?



கும்பகோணத்தையடுத்த பட்டீசுவரத்தில் பாடல்பெற்ற தலம் என்று பக்தர்கள் போற்றும் கோயில் முன்தான் தந்தை பெரியார் சிலை பல்லாண்டுக் காலமாக இருந்து வருகிறது. அதனால் துரும்பு அளவு பிரச்சினைகள் எழுந்ததுண்டா? சிறீரங்கம் அரங்கநாதன் கோயில் முன் பெரியார் சிலை வைக்கலாமா என்று வினா எழுப்புவோர் சிந்திக்கட்டும்.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனிக்கட்டுத் தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிர் நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக் கூடிய அளவு மேல்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போராமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்த சோம்பேறிகளின் காலிலும் விழுந்த மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.

புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு, சொம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப் பூவையும் அந்த சொம்புக்கு சுத்திக்கொண்டு, `வெங்கிடாசலபதி கோவிந்தா’’ என்றும், ``நாராயணா கோவிந்தா’’ என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா என்றுதான் கேட்கின்றேன்.

மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, தலை மயிரும் தாடி மயிரும் வளர்ந்து வெரும் மஞ்சள் நனைத்த துணிகட்டிக் கொள்வதும், மேளம் வைத்துக் கொள்வதும், பெண்டு பிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும், வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின்மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும்படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்ற கணக்கு வைத்த சேர்த்து எடுத்துக் கொள்வதும், ஆன பண மூட்டை கை கட்டிக் கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளி கம்பியை குத்துக் கொண்டு போதாக்குறைக்கு தெருவில் கூட்டமாய் கோவிந்தா + கோவிந்தா + கோவிந்தா என்று கூப்பாடு போட்டு வீட்டு வீட்டுக்கு கடை கடைக்கு காசு பணம் வாங்கி ஒரு பகுதியை ரயிலுக்கு கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும், ஆண்களும், பெண்களும் தலை மொட்டை அடித்துக் கொள்வதும் அந்த மலை சொனைத் தண்ணீரில் குளிப்பதும். அந்த பட்டைநாமம் போட்டுக் கொள்வதும், கொண்டு போன பணத்தை கடாரத்தில் காணிக்கையாகக் கொட்டுவதும், ஆண்களும், பெண்களும் நெருக்கடியில் இடிபடுவதும், பிடிபடுவதும், வெந்ததும் வேகாததுமான சோற்றை தின்பதும், மற்றும் பல சோம்பேறிகளுக்கும், மேகவியாதிகாரருக்கும் வேக வைத்ததோ விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டையிலும், வேர்களிலும் செய்த மாமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்ளுவதும், மலைக் காய்ச்சலோடு மலையை விட்டு இறங்கி வருவதும், வீட்டுக்கு வந்து மகே°வரபூசை `பிராமண சமார்த்தனை’’ செய்வதும், தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப் போன மக்களுக்கோ, நாட்டுக்கோ, ஒழுக்கத்திற்கோ, மதத்திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.திருப்பதிக்கு போய்வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க் குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டு விட்ட தாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாரவது பார்த்திருக்கின்றோமா என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீன மான காரியத்திற்காக நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்குப் போட்டார்களா என்று கேட்கின்றேன்.

அய்யப்பன் கதை கேளுங்கள்!

சாமியேய்ய்ய்ய்ய்ய்........ ச..... ர...... ண......ம் அய்யப்பா...............

கார்த்திகை மாதம் பிறந்தால் இந்தச் சத்தம் காதைக் கிழிக்கும்.
அத்து மீறி நம் அமைதியைக் கெடுக்கும். இந்தக் கூச்சல் கடந்த 50 ஆண்டுகளாகத்தான். அதற்கு முன் தமிழன் பழனி முருகனுக்குத்தான் காவடி எடுத்தான். இந்த கேரள இறக்குமதி, பக்தி போதையில் இருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்தது. நவம்பர், டிசம்பரில் சபரிமலைக்குப் போக வாங்கும் கடன், வட்டியோடு குட்டி போட்டு அடுத்த நவம்பர் வரையிலும் நீள்வதும் உண்டு.பணம் படைத்தவர்கள் பொழுதைப் போக்க, கேரளாவின் இயற்கையை ரசிக்க சபரிமலைப் பயணம் ஒரு சாக்காகப் போய்விட்டது. அதைப் பார்த்த பாமரனும் கடன்பட்டான்.

எதிலும் புதியதைத் தேடும் மனித மனம் கடவுளிலும் புதியதைத் தேடியதன் விளைவே அய்யப்ப தரிசனம். தமிழ்நாட்டுக் கடவுள்கள் மதிப்பிழந்தனர். மலையாளக் கடவுளுக்குக் கொண்டாட்டம்.மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தான் கேட்டார். “குன்றக்குடி முருகனுக்கும், பழனி தண்டாயுதபாணிக்கும் ‘பவர்’ குறைந்துவிட்டதா?” என்று.

நாற்பத்தெட்டு நாள் விரதம், காலில் செருப் பணியக் கூடாது, உறவினர் யாராவது இறந்தால்கூட பிணத்தைப் பார்த்து இறுதி மரியாதை செய்யப் போகக் கூடாது. பக்தி உறவுகளைக் கூட பிரித்தது.இந்த அய்யப்பசாமி வேடம் பூண்டால் நாற்பத்தெட்டு நாள் நல்ல உணவு கிடைக்கும். வீட்டில் யாரும் திட்ட மாட்டார்கள், நல்ல மரியாதை, அதுவும் சாமி... சாமி... என்று.இந்தச் சலுகைகளால் பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களும், ஊர் சுற்றும் இளைஞர்களும் அய்யப்பன் சாமி ஆனார்கள். தண்டச்சோறுகளுக்கு கூடுதல் மரியாதையுடன் மூக்குப் பிடிக்க உணவு. இவைதான் அய்யப்பன் மக்களுக்குத் தந்தவை. உழைக்கத் தூண்டும் கடவுள் என ஒன்றுகூட இல்லை; எல்லாம் பணம் பிடுங்கும் கடவுளர்தான்.

தமிழர்களின் செல்வம் பக்தியின் பேரால் திருப்பதி உண்டியல் மூலமாக ஆந்திராவிற்கும், மூகாம்பிகை கோயில் மூலமாக கர்நாடகாவிற்கும், அய்யப்பன் கோவில் மூலமாக கேரளாவிற்கும் செல்கிறது.

சபரிமலை தரிசனம் பற்றி இந்த ஆண்டு வந்த ஒரு செய்தி. அய்யப்பன் கோயில் படி பூஜைக்கு முன்பதிவு 2013 ஆம் ஆண்டு வரை முடிந்து விட்டதாம். இந்த சிறப்பு படி பூஜைக்கு கட்டணம் ரூ. 25,001. இப்படி முன்பதிவு செய்துள்ளவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாம். அதற்கு அடுத்தபடியாகத்தான் ஆந்திர, கர்நாடக, கேரள பக்தர்கள் உள்ளார்கள். தமிழன் எவற்றிலெல்லாம் முதலிடத்தில் இருக்கிறான் பார்த்தீர்களா?சரி... அந்த அய்யப்பன் கதைதான் அவ்வளவு ஒழுக்கமானதா? ஓரினச் சேர்க்கையால்தான் எய்ட்° என்னும் உயிர்க்கொல்லி நோய் வருவதாகச் சொல்கிறார்கள் மருத்துவ அறிவியலார்கள். அந்த எய்ட்°க்கு முன்னோடி இந்த அய்யப்பன் என்பதை இக்கதையில் படியுங்கள் புரியும்.

அரிகரசுதன்அரி (விஷ்ணு), அரன் (சிவன்) ஆகியோரின் மகனே சபரிமலையில் இருக்கை செய்யப் பட்டிருக்கும் மூர்த்தி என்று நம்பப்படுகின்றது. பல பாடல்களிலும் அந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. துர்வாசர் என்ற மாமுனிவர் ஒருமுறை காடு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தபொழுது, கற்பக மரத்தின் பூக்களால் கோத்த ஒரு மாலையுடன் நின்றுகொண்டிருந்த மேனகையைக் கண்டார். முனிவர் கேட்ட பொழுது அவள் அதை அவருக்குக் கொடுத்தாள். அந்த மாலையை தலையில் சூடிக்கொண்டு முனிவர் தேவலோகத்துக்குச் சென்றார். அப்பொழுது தேவேந்திரனான இந்திரன் அய்ராவதம் என்ற யானையின் மீதேறி வந்து கொண்டிருந்தான். துர்வாசர் மாலையை இந்திரனுக்குப் பரிசாக அளித்தார். அவன் அதை முகர்ந்து பார்த்தபின் யானையின் மத்தகத்தில் வைத்தான். மாலையின் உறுத்தலால் யானை துதிக்கையால் அதை எடுத்து முகர்ந்து பார்த்து விட்டு கீழே போட்டது. தான் கொடுத்த மாலையை இந்திரன் அவமதித்ததாக தவறாக எண்ணிய மாமுனிவர் தேவலோகத்தின் சிறப்பு அழிந்து போகட்டும் என்று சாபமிட்டார். அதன் பலனாக தேவர்களுக்கு நரைதிரை மூப்பு உண்டானது. யாகங்கள் முடங்கின. கடைசியில் பிரம்மாவின் உதவியுடன் அவர்கள் மகாவிஷ்ணுவைச் சந்தித்து முறையிட்டனர். எல்லா வித மூலிகைகளையும் கொண்டு வந்து பாற்கடலில் போட்டபிறகு மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தால் அதிலிருந்து அமுதம் பொங்கி வருமென்றும் அதை உண்டால் நரைதிரை மூப்பு மாறுமென்றும் விஷ்ணு சொன்னார். அதன்படி அவர்கள் பாலாழியைக் கடையத் தொடங்கினர்.

தேவர்களால் அதனைச் செய்ய இயலாமல் போனதும் அவர்கள் அசுரர்களையும் உதவிக்கு அழைத்தனர். ஒரு பக்கம் தேவர்களும் மறுபக்கம் அசுரர்களும் நின்று கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது பாலாழியிலிருந்து பலவும் பொங்கி வந்தன. கடைசியில் அமுதம் நிறைந்த கமண்டலத்துடன் தன்வந்திரியும் வெளிவந்தார். இந்தச் சமயத்தில் அமுத கலசத்தைப் பறித்துக் கொண்டு அசுரர்கள் பாதாளத்துக்குச் சென்றனர். அதைக் கைப்பற்ற தேவர்களால் முடியவில்லை. அப்பொழுது மகாவிஷ்ணு அழகிய ஓர் இளம் பெண்ணின் வேடத்தில் பாதாளத்துக்குச் சென்றார். தான் தன்வந்திரியின் தங்கை என்றும் பாலாழியை கைவிட்டுக் கரையேறியதும் தேவர்களும் அசுரர்களும் சென்று விட்டதால் அனாதையாகிவிட்ட தான் தகுந்த வரனைத் தேடி நடப்பதாகவும் சொன்னாள். இதைக் கேட்டதும் அசுரர்கள் ஒவ்வொருவரும் அவளை மணம் புரிய விரும்பினர். அவர்களுக்கெல்லாம் அவள் அமுதத்தைப் பரிமாறிக் கொடுக்க வேண்டுமென்றும் கடைசியில் அவர்களில் ஒருவரை மணம் புரிய வேண்டுமென்றும் அவர்கள் சொன்னார்கள். மோகினி அதற்கு சம்மதித்தாள்.

அவள் சொன்னாள்: “நீங்களெல்லோரும் கண்களை மூடுங்கள்; நான் அமுதத்தைப் பரிமாறுகிறேன். கடைசியாக கண்ணைத் திறப்பவர் எனக்குப் பரிமாறி விட்டு என்னை மணம் புரிந்து கொள்ளுங்கள்.”அசுரர்கள் அனைவருக்கும் மோகினியை மணம் புரியவேண்டும் என்ற ஆசை இருந்ததனால் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தனர். இந்தச் சமயத்தில் மோகினி அமுதத்துடன் தேவலோகத்துக்குச் சென்றுவிட்டாள். தேவர்கள் அமுதம் உண்டு ஆற்றல் பெற்றனர். அந்தச் சமயத்தில் சிவன் அந்த இடத்தில் இல்லை. பிறகு மோகினியைக் கண்ட சிவன் அவளழகில் மயங்கி அவளுடன் இணைந்தான். அதன் பலனாகத் தொடையிலிருந்து அய்யப்பன் பிறந்தான். இவ்வாறு அரி, அரன் ஆகியோரின் மகனாகப் பிறந்ததாலேயே அரிகரசுதன் என்ற பெயர் சபரிமலையிலுள்ள கடவுளுக்கு உண்டானதாம். ஆண் கடவுளான சிவனும் இன்னொரு ஆண் கடவுளான விஷ்ணுவும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்கள் என்றும், அதன் மூலமாக ஒரு குழந்தை பிறந்தது என்றும் கதை புராணங்களிலோ இதிகாசங்களிலோ இல்லை. ஆனால், பாலாழியைக் கடைந்ததும் அமுதம் எடுத்ததும் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

மோகினி வடிவமெடுத்த விஷ்ணுவைக் கண்டதும், தன்னுடைய மனைவியான பார்வதி அருகில் இருப்பதைக்கூட பொருட் படுத்தாமல் சிவன் காமத்துடன் நெருங்கினாராம். கடைசியில் அவருக்கு சுக்கில வெளிப்பாடு உண்டானது என்றும் அது விழுந்த இடங்கள் பொன்னும் வெள்ளியும் விளையும் பிரதேசங் களாக மாறின என்றும் பாகவதம் கூறுகின்றது (சுக்கிலம் பொன்னும் வெள்ளியுமாக மாறும் என்ற மூடத் தனத்தை இப்பொழுது நாம் விட்டு விடுவோம்). விஷ்ணுவுக்கு கர்ப்பம் உண்டான கதையோ பிரசவம் ஆன கதையோ பாகவதத்தில் இல்லை.மோகினி வடிவை விஷ்ணு எடுக்கக் காரணம் அமுதத்தைக் கைப்பற்றத்தான் என்றல்லவா பாகவதம் கூறுகின்றது. ஆனால், ப°மாசுரனைக் கொல்வதற்காக அவர் மோகினி வடிவம் எடுத்ததாக இன்னொரு கதையும் உண்டு. ஆனால், அந்தக் கதை புராணங்கள் எதிலும் இல்லை.

இந்த ப°மாசுரனைப் பற்றி வடமொழிப் புராணங்கள் எதிலும் எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை. ஆனால், மராத்தி மொழியில் எழுதப்பட்ட ‘சிவலீலாம்ருதம்’ என்ற நூல் ப°மாசுரனைப் பற்றி குறிப்பிடுகின்றது. அது பின்வருமாறு: ப°மாசுரன் சிவனின் ப°மப்(நீறு) பொடியிலிருந்து பிறந்தான். ப°மாசுரனின் தீவிர சிவபக்தியைக் கண்டு காட்சியளித்த சிவன், விரும்பிய வரத்தைக் கேட்கும்படிச் சொன்னார். அதன்படி ப°மாசுரன், தன்னுடைய கையை நான் யாருடைய தலையில் வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாக வேண்டும் என்ற வரத்தை கேட்டு வாங்கினான். வரம் கிடைத்த மகிழ்ச்சியில் அகங்காரம் கொண்ட ப°மாசுரன் உலகம் முழுமைக்குமே கெட்ட கனவாக விளங்கினான். உடனே மகாவிஷ்ணு ஒரு மோகினியின் வடிவில் தோன்றினார். தன்னுடைய பாவனைகளால் அசுரனை மயக்கியபின் ‘முக்தி நடனம்’ ஆரம்பித்தார். அந்த நடனத்தினிடையில் ப°மாசுரன் தன்னுடைய கையை தன் தலையிலேயே வைத்து மரணமடைந்தான்.இவ்வாறு மோகினி வடிவம் எடுத்த விஷ்ணுவிடம், அந்த உருவத்தைக் காட்டும்படி சிவன் வேண்டியதாக இன்னொரு கதை உள்ளது. இந்தக் கதையிலும் விஷ்ணுவுக்கும், சிவனுக்குமிடையேயுள்ள உடலுறவில் சா°தா பிறந்த தாகச் சொல்லப்படவில்லை. பிற புராணங்களிலும் இத்தகைய ஒரு கதையில்லை.

கட்டுப்பாடற்ற உடலுறவும் அராஜகத் தன்மையும் சர்வசாதாரணமாக நிலவிய காலத்தில் எவரோ உண்டாக்கிய ஓர் ஆபாசமே இயற்கைக்கு முரண்பாடான சிவ-விஷ்ணு உடலுறவு கதை. (நூல்: சபரிமலை அய்யப்பன்,உண்மையும் கதைப்பும்)- இதுதான் கதை. இதுபோக சபரிமலைக்கு கூட்டம் சேர்க்க ஏராளமான குட்டிக் கதைகளையும் சொல்வார்கள். காடு-புலி என்றெல்லாம் புருடா வேறு. உடலை வருத்திக் கொண்டு, பொருளை இழந்து சபரிமலைக்குச் செல்ல வேண்டுமா என்ற ஓர் அக்கறையில் கேள்வி கேட்டால் உடனே பதில் வரும். என்ன சாமி இப்படிக் கேக்குறீங்க. சின்ன பாதை பெரிய பாதை எதுல நடந்தாலும் உடலுக்கு நல்லது. காலையில வேகமாக எந்திரிச்சு குளிச்சு சுத்த பத்தமா இருந்தா உடம்பு புத்துணர்ச்சியாக இருக்கும். எல்லாம் ஒரு காரணமாத்தான் இந்த சடங்கெல்லாம் என்பார்கள். சடங்கு - சம்புரதாயங்களெல்லாம் இப்படி உடலைப் பயிற்சிக்கு உட்படுத்தியிருந்தால் இந்தச் செய்தி ஏன் வருகிறது? படியுங்கள்:

அய்யப்பன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து 4 கி.மீ. தூரம் செங்குத்தான மலைப் பாதையில் நடக்க வேண்டும். வயதானோர், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாசக் கோளாறால் அவதிப்படுவோர் பெரிதும் சிரமப் படுகின்றனர்.இவர்கள் நலன்கருதி திருவாங்கூர் தேவ°வம் போர்டு பம்பை-நீலிமலையேற்றம். அப்பாச்சி மேடு -சபரிமலை நடைபாதயில் 12 இடங்களில் ஆக்ஸிஜன் சுவாச மையங்களை அமைக்க முடிவு செய்தது.இதுமட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்துகள், இதய நோய் மருத்துவர்கள் எல்லாம் தயாராக வைக்கப்பட்டிருக்கிறதாம். அய்யப்பனால் எதுவும் ஆகாது. துளிகூட பயனில்லை என்பது இதிலிருந்து தெரியவில்லையா?காடு, மலை தாண்டி தன்னைப் பார்க்க வரும் தனது ரசிகர்களையாவது அய்யப்பன் காக்க வேண்டாமா?

அய்யப்பன் கதையும் அறிவுக்குப் பொருந்தாதது; தற்கால நடப்பும் எந்தப் பயனையும் தராது. இந்த அய்யப்பன் வழிபாடு தேவைதானா? கடவுள் பக்தி எப்படி குடும்பத்தைச் சீரழிக்கும் என்பதை சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நன்றாய்க் காட்டினார் தங்கர்பச்சான். அய்யப்பன் ரசிகர்களே நீங்கள் இன்னும் திருந்தாத அப்பாசாமிகள் தானா?

Wednesday, December 13, 2006

திருப்பதி வெங்கடாசலபதி

ஏமாற்றுப் பேர் வழிகளை நம் நாட்டில் என்ன சொல்லுவார்கள்? நல்லா குழைத்து நாமம் போட்டான் என்று தான் சொல்லுவார்கள். அப்படி அவர்கள் சொல்லு வதில் ஆழமான அர்த்தமும், அனுபவரீதியான அத்தாட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

திருப்பதியில் வெங்கடாசலபதி என்ற ஒரு சாமி இருக்கிறது; அதற்கு ஏழுமலையான் என்ற பெயரும் உண்டு. அதன் நெற்றியில் நெடு நாமம் சாத்தப்பட்டு இருக்கும். எத்தனைக் கோடி மக்களுக்கு இந்தக் கல் முதலாளி நாமம் சாத்தியிருந்தால் அந்தக் கோவிலுக்கு ரூ.7,500 கோடி சொத்து சேர்ந்திருக்கும்.இந்த இதழ் `இந்தியா டுடே’ (4.10.2006) இந்தக் கோயிலின் சொத்துக் கணக்கைத் தோராயமாகச் சொல்லியிருக்கிறது.
நிலம் ரூ.15,000 கோடி.
கட்டடங்கள் ரூ.1,500 கோடி.
நகைகள் ரூ.30,000 கோடி.
நிதி ரூ.20,000 கோடி.

கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது.நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் உண்டியல் வசூலாம். இந்த மாதம் வரை இந்த ஆண்டில் மட்டும் கோயில் வருமானம் ரூ.900 கோடி. லட்டு வியாபாரம் மூலமும் லட்டாய் பணம் குவிகிறது. கொஞ்சம் தான் ரூ.28 கோடி.

திருப்பதி வெங்கடாசலபதி அடித்து வைக்கப்பட்ட விக்ரகம் வியர்வையைச் சிந்தி உழைத்த உழைப்பால் சம்பாதித்த பணமா இது? ஏதாவது தனியே தொழிற்சாலை ஏற்படுத்தி ஆலைகளை உண்டாக்கி அவற்றில் கிடைத்த வருமானமா இது?அது ஓர் அசையாப் பொருள். அஃறிணை வ°து! சிற்பியின் கைவண்ணம்! (நாங்கள் செதுக்கி வைத்தது தானே கடவுள்! மற்றபடி கடவுளைக் கண்டவர்கள் யார்? என்று பிரபல கணபதி °தபதியின் `கல்கி’ (11.6.2006) பேட்டியை நினைவில் கொள்க!)

இதற்கென்று வேறு சக்தி ஏது?இதற்கு ஏதோ சக்தியிருப்ப தாக விளம்பரம் செய்து, பாமர மக்களின் பேராசையையும், அச்சத்தையும் முதலீடாக்கி, அவர்களிடமிருந்து பறித்த (ப்)மகா சுரண்டல் தான் இவ்வளவுப் பணமும்!பக்தி என்ற பெயரால் அப்பாவி மக்களுக்கு நாமம் போட்ட (ஏமாற்றிய) பெரும் பணம்தான் இது.கதை கட்டுகிறார்கள்; இந்தக் கடவுளைத் தரிசித்தால், உண்டியலில் பணம் போட்டால், நகைகளைக் காணிக்கையாகக் கொடுத்தால் நினைத்தது நடக்குமாம்! நோய்கள் குணமாகுமாம்! வியாபாரம் நல்லா நடக்குமாம்!

தந்தை பெரியார் சொல்லுவது போல முட்டாள்கள் படித்தவர்களிடத்திலும் உண்டு; படிக்காத பாமரர்களிடத்திலும் உண்டு.நடிகர் அமிதாப்பச்சன் தன் நோய் தீர்ந்தால் திருப்பதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டாராம். நோய் தீர்ந்தபின் வேண்டிக் கொண்டபடி பெருமாளின் கைகளை தங்கத்தாலும், வைரத்தாலும் அலங்காரம் செய்து ஆனந்தக் கடலில் குதித்தாராம்.`மனசாட்சியை’த் தொட்டு சொல்லட்டும்; நடிகர் அமிதாப்பச்சன் திருப்பதி ஏழுமலையானின் அருளை, சக்தியை நம்பி மருத்துவரிடம் செல்லவேயில்லையா? வைத்தியம் பார்த்துக் கொள்ளவேயில்லையா இவர்களைப் போன்ற படித்த பாமரர்கள், தன்னம்பிக்கையற்றவர்கள் நாட்டில் இருக்கும்போது பாமர மக்களின் நிலை என்ன? வெங்கடாசலபதிக்கு நோயைத் தீர்க்கும் சக்தியிருந்தால் வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரியை திருப்பதி தேவ°தானம் நடத்துமா? எள் மூக்கு முனை அளவுக்கு இந்த இடத்தில் கொஞ்சமோ கொஞ்சம் அறிவைச் செலவழிக்கக் கூடாதா?

சினிமாக்காரர்கள் வாங்கும் கறுப்புப் பணம் இந்த வகையில் காணிக்கையாகச் செலுத்தப்படுவதும் உண்மை தானே? மறுக்க முடியுமா?தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம் என்று பஜனைப் பாடுகிறார்கள். அன்றாடம் ஏடுகளில் நாம் படிக்கவில்லையா? திருப்பதிக்குச் சென்ற பக்தர்கள் பலி! திருப்பதி சென்று சாமி கும்பிட்டு வந்த குடும்பத்தினரின் வேன் விபத்தில் சிக்கி அத்தனைப் பேரும் மரணம்! திருப்பதி கோயில் விடுதிகளில் குடும்பத்தோடு தற்கொலை என்று செய்திகள் வருவதில்லையா? இதுதான் ஏழுமலையானின் சக்திக்கு அடையாளமா? நம்பியவர்களை ஏழுமலை யான் கைவிடார் என்பது இது தானா?அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?எப்படி சிந்திப்பார்கள்?

பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுமே தந்தை பெரி யார் சும்மா வா சொன்னார் நாக்கைப் பிடுங்கு மாறுதான் அழுத்தமாகச் சொன் னார் ஆனாலும் ஏமாறு கிறார்களே, என்ன செய்ய!தாஜ்மகாலைக் கட்டிய மன்னன் ஷாஜகான் ஒரு பெரிய தங்கச் சங்கிலியை ஏழுமலை யானுக்கு அணிவித்தானாம்!ஜகாங்கீரும் விலை மதிப் பற்ற கற்கள் பதித்த ஆபர ணங்களை திருப்பதி கோவி லுக்கு வழங்கினாராம். ஆங்கி லேயர் ஆட்சியில்கூட அரசர் ஜார்ஜும், அரசி விக்டோரி யாவும் தங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நகைகளை திருப்பதிக் கோவிலுக்குத் தானங் களாகக் கொடுத் தார்களாம் `இந்தியா டுடே’ பட்டியலிடு கிறது.

ஆர்.எ°.எ°. காரர்கள், சங்பரிவார்க் கும்பல் என்ன செய்யப் போகிறதாம்? அவ மானம் அவமானம்!! ஏழு மலையானுக்கே அவமானம்!!! இருந்தும் இருந்தும் துலுக்கனி டத்திலும், கிறி°தவனிடத் திலுமா தானம் வாங்குவது என்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்களா?ஓர் உண்மையைத் தெரிந்து கொண்டால் சிலருக்கு அதிர்ச் சியாகக்கூட இருக்கலாம். இந்தத் திருப்பதிசாமி கோவி லின் பூர்வாந்திரம் என்ன?

நாமம் போட்ட இந்த வெங்கடாசலபதி யாராலும் உருவாக்கப் படவில்லை; சுயம்பு தானாகவே தோன்றியது என்று கதை கட்டுகிறார்களே இதன் உண்மையான வரலாறு என்ன? மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனாதா° ஒரு நூலையே எழுதியுள்ளார்.``வெங்கடாசலபதி கடவுள் இருக்கும் திருப்பதி கோயில் என்பது தென்னகத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவக் கோயிலாகும். வெங்கடாசல பதியின் வடிவம் பல நூற் றாண்டுக் காலமாகப் பிரச் சினைக்குரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. சிலர் அந்தக் கடவுளை விஷ்ணு என்றும், வேறு சிலர் சிவா என்றும், சக்தி என்றும், °கந்தா என்றும், ஹரிஹரன் என்றும் பலவாறாகக் கருதுகிறார்கள்.

உண்மையிலேயே திருப்பதிக் கோயில் என்பது தொடக்கத்தில் புத்தர் கோயிலாகவே இருந்தது; உள்ளே இருக்கும் மூர்த்தி சிலை என்பது புத்தபிரானே ஆவார்.புத்த மார்க்கம் இந்தியா வில் வீழ்ச்சி அடைந்தபோது அது பார்ப்பனீயத்தால் தங் களுடைய வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றப்பட்டது.புத்தர் கோயில் வைஷ்ணவ கோயிலாக இப்போதுள்ள தன்மையில் பார்ப்பன மயமாக்கப்பட்டது அப்பொழுது இருந்த பார்ப்பனப் பண்டிதர்களால்!தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு அடிப்படையிலே இந்தக் கருத்தை இந் நூலில் நூலாசிரியர் நிறுவி யுள்ளார். பந்தர்பூர், பூரி செகந் நாதம், சபரிமலை அய்யப்பன் இவையெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகாரங் களாகவே இருந்து, பிற் காலத்தில் இந்துக் கோயில் களாக மாற்றம் செய்யப் பட்டுள்ளன.7ஆம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை புத்த மார்க்கம் வீழ்ச்சி அடைந்த கால கட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும், சிறப்பாக தென்னிந்தியாவிலும், புத்த விகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில் களாக மாற்றப்பட்டுள்ளது பற்றி இந்நூல் விவரிக்கிறது.

’’மராட்டியத்தைச் சேர்ந் தவர் கூறுவது ஒருபுறம் இருக் கட்டும். நம் ஊர் மயிலை சீனி வெங்கடசாமி என்னும் ஆராய்ச்சியாளர் பவுத்தமும் தமிழும் என்ற ஒரு தனி நூலையே எழுதி இருக் கிறாரே!தமிழ்நாட்டில் எந்தெந்த கோவில்கள் எல்லாம் புத்தர் கோவில்களாக இருந்து பிற்காலத்தில் இந்துக் கோயில் களாக மாற்றப்பட்டன என்பதை தக்க ஆய்வுகள் மூலம், ஆதாரங்கள் மூலம் நிரூபித்து இருக்கிறாரே! புத்தருக்குச் சா°தா என்ற பெயர் உண்டு. பிற்காலத்தில் அய்யப்பன் என்ற கடவுளைக் கற்பித்து சா°தா என்று பெயர் சூட்டினர். புத்தருக்கு விநாயகர் என்ற பெயருண்டு; விநாயகர் என்றால் தலைவர் என்று பொருள். அரசக் குடும்பத்தைச் சேர்ந்த புத்தரை விநாயகர் என்று அழைத்தனர். பிற்காலத்தில் அந்த விநாயகர் என்ற பெயர் பிள்ளையார் சாமிக்குச் சூட்டப்பட்டு, புத்தர் சிலைகள் எல்லாம் நாடெங்கும் பிள்ளையார் (விநாயகர்) சிலைகளாக உருக்குலைத்து விட்டனர் என்று கூறுகிறார் மயிலை சீனி வெங்கடசாமி.

புத்தர் அரசக் குடும் பத்தைச் சார்ந்தவர் என்பதால் குறிப்பிட்ட மரத்திற்கு அரச மரம் என்று பெயர் சூட்டப்பட்டது. அங்கெல்லாம் புத்தர் சிலைகள் எழுப்பப்பட்டன. பிற்காலத்தில் பவுத்தம் வீழ்ச்சியுற்று பிராமணீயம் வீறு கொண்டபோது அந்த அரசமரத்தடி விநாயகரான புத்தரின் சிலைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு, பிள்ளை யார் விநாயகராக்கப்பட்டு, அந்த இடங்களில் எல்லாம் குடியமர்த்தப்பட்டார். அப்படி தூக்கி எறியப்பட்ட புத்தர் சிலைகள் எல்லாம் குளங்களில் துணி துவைக்கப் பயன்பட்டன என்பதுதான் எதார்த்தம்.நாகப்பட்டினத்தில் அய்ம் பொன்னாலான புத்தர் சிலையைத் திருடி திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்து ரெங்கநாதன் கோவிலுக்கு மதிற் சுவர் எழுப்பினான் என்று தஞ்சைவாணன் கோவை கூறுகிறதே!அந்த நேரத்தில் (புத்தர் சிலையைத் திருடிய நேரத்தில்) திருமங்கை கடவுட் தன்மை உடையவராக இருந்தார் ஆதலால் அவரைக் குற்றம் சொல்வார் எவரும் இலர் என்று அந்த நூல் எழுது கிறதே இதைவிட பித்த லாட்டத்திற்குப் பிறந்த பித்த லாட்டம் வேறு ஒன்று இருக்க முடியுமா?பார்ப்பான் உயிர், ஜீவனம் கோயிலில், அதன் கருவறைக் குள் இருக்கும் குழவிக் கல்லில் இருக்கிறது அது அழிந்தால் பார்ப்பனர்களும் அழிந்து விடுவார்கள்; அதனால்தான் கோயில் கட்டுவது, பக்தியைப் பரப்புவது என்கிற வேலையில் பார்ப்பனர்கள் சதா ஈடுபட்டு வருகிறார்கள் என்கிற தந்தை பெரியாரின் சிந்தனை தெரு வுக்குத் தெரு வடிக்கப்பட வேண்டிய கல்வெட்டு அல் லவா! தமிழர்களே, சிந்திப்பீர் களாக!

நாமம்

கடவுளுடைய பாதம்தான் `நாமம்’ என்றால் அந்த `நாமம்’ கடவுளுடைய நெற்றியில் இருப்பானேன்? தந்தை பெரியார்

மதச் சின்னத்தில் ஏராளமான வித்தியாசம்?

``இது மட்டுமல்ல, மதச் சின்னங்கள் விஷயத்தில் ஒரு நாமம் (மதச் சின்னங்கள் எல்லாம் என்றால் ஒரே மாதிரிதான். உலகம் பூராவும் இருக்கிறது. இந்துக்கள் பெரும்பான்மையோர் தேசமே இந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்று சொன்னால், ஒரு யுனிஃபார் மிட்டி உண்டா? அவர்களுக்குள்ளே யூனிட்டியும் இல்லை, அய்க்கியமும் இல்லை. சீர்மையும் இல்லை.)ஒருவர் விபூதி, ஒருவர் கறுப்புப் பொட்டு, ஒருவர் சந்தனக் கீறல். ஒருவர் முத்திரை, ஒருவருக்கு நெடுக்கு , ஒருவருக்கு குறுக்கு இப்படியாகப் பல மாறுதல்கள் ஏற்படுவானேன்?.(1926+இல் தந்தை பெரியார் அவர்கள் சென்னிலைமலையில் இப்படி பேசியிருக்கிறார்.)``இந்த வித மாறுதல்களோடு இருப்பதற்கு காரணங்கள் ஆளுக்கு ஒருவிதமாய் சொல்வானேன்?’’ சரி, இருப்பது மோசம் அல்ல. ஏம்ப்பா அப்படியிருக்கிறதென்றால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வியாக்கியானம் செய்கிறார்கள். ``அவரவர்களுக்குத் தெரிந்த வியாக்கியானத்தை விளக்கத்தை அவரவர் சொல்லக்கூடியதாக இருப்பானேன்?’’

சாமிகளுக்குள்ளும் புகுத்துவானேன்?

‘’இந்த வித்தியாசங்களை சாமிகளுக்கும் புகுத்துவானேன்?’’(இவன் நாமம் போட்டுத் தொலைக்கட்டும். இவன் குறுக்கே, நெடுக்கே கோடு போடட்டும். இவன் கடவுளுக்கும் அதே மாதிரி பிரித்து விட்டான். இது நாமம் போட்ட கடவுள். இது விபூதி போட்ட கடவுள். இது தென் கலை நாமம். இது வடகலை நாமம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?)நடுவில் சிகப்பு நாமத்திற்குப் பெயர் என்ன?``நாமம் என்பது என்ன வென்று கேட்டால் சிலர் சுவாமியின் பாதம் என்று சொல்லுவார்கள்’’ நாமம் ஏன் போடுகிறாய் என்றால் உனக் குத் தெரியாதய்யா, இது விஷ்ணு பாதம். நடிவேள் ராதா அவர்கள் இதை கேள்வியாகக் கேட்டு நடிப்பு ரீதியாகக் கூடச் சொல்லுவார்கள். `வெள்ளை நாமம் இரண் டும் பாதம். ஆனால், நடுவில் உள்ள சிகப்பு நாமத்திற்குப் பெயர் என்ன?’’ பெரியார் எப்படி கேள்வி கேட்கிறார் பாருங்கள்

சுவாமியின் பாதம் கடவுளின் நெற்றியில் ஏன்?

அப்படியே சுவாமியின் பாதம் என்பதை ஒப்புக் கொள்வோமேயானால், சுவாமியின் பாதத்தை சுவாமியின் நெற்றியில் போய் வைப்பானேன்? ``இந்த நாமத்திற்கும் பாதம் வைத்த நாமம். பாதம் இல்லாத நாமம் என்பதாக வடகலை, தென்கலை என்ற ஒருவருக்கு ஒருவர் உதை போட்டுக் கொள்வானேன்?’’ அய்யா அவர்கள் கோவை கொங்குநாட்டுத் தமிழிலே சொல்லியிருக்கின்றார். ``உதை போட்டுக் கொள்வது’’ என்று.

காஞ்சிபுரம் யானைக்கு எந்த நாமம்?

உங்களுக்குத் தெரியும். காஞ்சிபுரம் யானைக்கு என்ன நாமம் போடுவது என்று இன்னமும் முடிவு பண்ண வில்லை. இன்னமும் கே° பெண்டிங்கில் இருக்கிறது. தலைமை நீதிபதி வீராசாமி அவர்களிடத்திலே கூட இந்த வழக்கு வந்தது. மதுராந்தகம் யானை, காஞ்சிபுரம் யானை என்று பல இடங்களில் இருக்கும் யானை களுக்கு வடகலை நாமம், தென் கலை நாமம் என்று நிரந்தரமான சண்டை. சிறீரங் கத்தில் கூட கொஞ்ச நாட் களுக்கு முன்னாலே அந்தத் தகராறு வந்தது.

வடகலையா? தென்கலையா?

வெள்ளைக்காரர்கள் காலத்தில் ``பிரிவி கவுன்சில்’’ என்று ஒன்று இருந்தது. மதம் என்பது எந்த அளவுக்கு போகிறது? இந்த சின்னத்தின் விளைவு என்ன என்பதை வழக்கில் சொன்னார்கள்.வடகலை என்றால் என்ன? தென்கலை என்றால் என்ன வென்று புரியுமா? லண்டன் பிரிவி கவுன்சிலில் பார் அட்லா வெள்ளைக்காரர்கள்தான் வாதாடுவார்கள். இங்கிலாந்து வழக்குக்குரிய கட்டு மட்டும் தான் போகும். அவனுக்கு வடகலை என்றால் என்ன என்று தெரியாது. அதேபோல தென்கலை என்றால் என்ன வென்று தெரியாது. நீதிபதிக்கு புரியும்படியாக எடுத்துச் சொன்னார்கள். வழக்கறிஞர் சொன்னார்: No my Lord, this is nothing but fight between ‘‘Y’’ and ‘‘U’’ என்று சொன்னார்.

`ஒய்’க்கும் `யு’க்கும் சண்டை

அப்பொழுதுதான் வெள் ளைக்கார நீதிபதிக்கே புரிந்தது. ``ஒய்’’க்கும், ``யு’’க்கும் இடையே நாமம். அதனால்தான் லண்டன் பிரிவி கவுன்சில் வரை வந்திருக்கின்றார்கள். இன்ன மும் வழக்கு இருக்கின்றது. நீங்கள் ஏதோ வேடிக்கையாக, சிரிப்பதற்காக சொல்லக் கூடியது அல்ல என்று நினைக்கவேண்டாம். நாமம் யாருக்குப் போடுவது? கோயில் யானைக்கு. காஞ்சிபுரத்தில் அதற்கப்புறம் மூன்று யானை செத்துப் போய்விட்டது. நூறு வருடம், நூற்றி இருபத் தைந்து வருடம் வழக்கு நடந்தால் எவ்வளவு காலத் திற்குத்தான் அந்த யானை இருக்கும்?

நாமத்திற்கு கணக்குச் சண்டை

``இவைகளில் ஒரு நாமம், மூன்று நாமம், பதினோரு நாமம் என்ற கணக்குச் சண்டை எதற்கு?’’ பெரியார் சொன்னால் அத்தாரிட்டேடிவாக எடுத்துக் கொள்ளவேண் டும். ஏனென்றால் பெரியார் குடும்பம் அதிகமான அளவுக்கு நாமம் போட்ட மாதிரி வேறு எந்த குடும்பமும் நாமம் போட்டிருக்க முடியாது.

அய்யா அவர்களுடைய முழுப் பெயரே நீளமான பெயர்

அய்யா அவர்களுடைய முழுப் பெயரைக் கேட்டாலே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். `வெங்கட ராமானுஜ’ என்று சொல்லி வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவ்வளவு நீண்ட பெயரை வைத்திருக் கின்றனர். அதனால்தான் ராமசாமி, கிருஷ்ணசாமி என்றெல் லாம் தன்னுடைய பிள்ளை களுக்கும் பெயர் வைத்தார். ``இந்துக்களிலேயே ஒரு சாரார் இந்த நாமத்தைப்பற்றிக் கேவலமாகப் பேசுவானேன்’’

விபூதி பூசுகிறவரும் நாமம் பூசுகிறவரும்

விபூதி பூசுகிறவர்களைப் பார்த்தால் நாமம் போடுகிறவர் களை கேலியாகப் பேசுவார் கள். °மார்த்தர்கள் என்று சொல்லும்பொழுது, அவர்கள் இவர்களை ஒத்துக் கொள்வ தில்லை. இவர்கள் அவர்களை கேலி பண்ணுவார்கள். அந்தக் காலத்திலே சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் இந்த சண்டைகளை ரொம்ப விளக்கமாக மக்கள் மத்தியிலே எடுத்துச் சொல்லுவார்கள். விபூதி பட்டை பூசிய வரைப் பார்த்து அந்த மூன்று முருங்கக் காயை எங்கிருந்து பறித்தீர்கள்? என்று நாமம் போட்டவர் கேட்பாராம். விபூதி பூசியவர், நாமம் போட்டவரைப் பார்த்து சொன்னாராம், இந்த இரண்டு கிளைகள் இருக்கிறது பாருங் கள், அதில் ஏறித்தான் பறித் தோம் என்று சொன்னார் களாம். இப்படியெல்லாம் நிறைய அந்த காலத்தில் சாதாரணமாக சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

மதங்களும், சின்னங்களும் எதற்குப் பயன்பட்டன?

ஆகவே ஒருத்தருக்கு ஒருத்தர் கேலி பண்ணுவதற்குத் தான் இவர்களுடைய மதங் களும், சின்னங்களும் பயன் பட்டிருக்கின்றதே தவிர, வேறு உருப்படியான காரியத்திற்குப் பயன்படவில்லை. ``இதை மற்ற தேசத்தாரும் ஒப்புக் கொள்ளாததேன்? லிங் கத்தையும், ஆவுடையானைப் பற்றியும் பலவிதமாக பேசு வானேன்? நமது சுவாமிகளு டைய பெயரெல்லாம், குறிகள் எல்லாம், நமது தமிழ் பாஷை யில் இல்லாமல் அந்நிய பாஷையாகிய ஆரிய பாஷை யில் இருப்பானேன்? (கை தட்டல்). சுவாமிஜியை பூஜிப் பதற்கு நமக்கும், சுவாமிஜிக் கும் மத்தியில் ஒரு அன்னியன் இருப்பானேன்? அந்நிய பாஷையில் மந்திரங்களும், தோத்திரங்களும் இருப்பா னேன்? ஆளுக்கு ஒருவிதமாக பூசை செய்வானேன்? இதற்கு நாம் பணம் கொடுப்பானேன்?’’ (கைதட்டல்) என்று அய்யா அவர்கள் இப்படி கேள்வி கேட்கின்றார்.

எத்தனை காலம்தான் சுரண்டுவார்?

பார்ப்பனர் இந்த நாட்டில் நுழைந்தது முதல் அவர்கள் உளறி வைத்த (அ) கிறுக்கி வைத்த வேதங் கள், உபநிஷத்துகள் மற்றும் புராண இதிகாசங்கள் அத்தனையும் உழைக்கும் வகுப்பாராகிய திராவிடர் களைச் (தமிழர்களை) சுரண்டி உடல் நோகாமல் வாழ்வதற்கே!

அவைகளில் பெரிய தத்துவங்களைப் போல் பிறப்பு, ஆத்மா - அவற்றை நிலை நிறுத்த ‘கர்மா’ அதனால் விளையும் பாப - புண்ணியங்கள், மோட் சம் - நரகம் ஆகியனவற்றிலிருந்து விடுபட ‘தர்மம்’ என்ற ஒரு வழியைக் கண்டு பிடித்து இன்றும் நம்மைச் சுரண்டிக் கொண்டே இருக்கின்றனர். படித்த சில பாமர ஆன்மீகத் தமிழர்களும், இதற்குத் துணையாயிருந்து “ஆழ்வார்” வாங்கிக் கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை!

வாழ்நாள் முழுதும் இந்தச் சுரண்டலை எதிர்த்துப் போராடியவரே நம் அறிவு ஆசான் தந்தை பெரியார்.பார்ப்பனச் சுரண்டலுக்கு ஓர் எடுத்துக் காட்டு. இந்த பார்ப்பன சுரண்டலை “தர்மமாக” பார்ப்பனர் அல்லாத ‘விருஷ்ணி’ குலத்து வந்த கிருஷ்ணன் பெயரில் “வைஷ்ணவ தர்மம்” என மகாபாரதத்தில் கூறப்படுகிறது.‘யமலோகம்’ என்னும் ஒரு கற்பனை உலகத்தைப் படைத்து, அங்கு சுகமாக செல்ல வழி சொல்லப்படுகிறது.

“தேவர்களையும், பிராம்மணர்களையும் பூஜிப்ப வர்களுமாக இருக்கிறார்களோ, அவர்கள் இந்த மனுஷ்யலோகத்திலிருந்து மனைவிகளுடனும், பந்துக்களுடனும் சுகமாக (யமபுரம்) செல்லுகின் றனர்” (பக்கம் 292 அத். 100 ஆ°வ மேதிக பர்வம், ஸ்ரீமகாபாரதம்)“எவர்கள் வேதாத்தியனம் செய்த பிராமணர்களுக் குப் “பலவிதமான தானங்களை”க் கொடுக்கிறார் களோ அவர்கள் அதன் பயனாகச் சுகமாக (பிரேதபுரம் - யமலோகம்) செல்லுகின்றனர்” (பக்கம் 292).

பார்ப்பானுக்குத் தர வேண்டிய பலவிதமான தானங்கள் யாவை? பக்கம் 292, 293, 294, 295ஆம் பக்கங்களில் ஒரு நீண்ட பட்டியலே தரப்படுகிறது.அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கின்றீர்களா? இதோ அந்த பட்டியல்:

அன்னம் பால் கட்டை - பாதுகைபசு நெய் தோட்டம்செருப்பு தயிர் குதிரைவண்டிகுடை வெல்லம் மாட்டுவண்டுபடுக்கை தேன் யானைகட்டின தேர்இருக்கை கனிகள் பொன்நுணி வாசனை மலர்கள் ஆபரணங்கள் எள் வெள்ளிபானம் எண்ணெய் பவழம்பட்சணங்கள்நீர்நிலைகள் முத்துநெய் சேர்ந்த அன்னம் தண்ணீர் பூமிகன்னிகைமற்றும்தீபம், வீடு, மண்டபம், தீர்த்த பாத்திரம், குடம், கமண்டலம், தலைக்கு எண்ணெய், குடிக்க நீர், கால் கழுவ நீர்.

வாசகர்களே! எழுதிய வேகத்தில் சில விடுபட்டுப் போயிருக்கலாம்.“மானிட லோகத்திற்கும், யமலோகத்திற்கும் தூரம் என்ன?” யாரோ கேட்பது காதில் விழுகிறது.அதற்கும் (288ஆம் பக்கம், ஆ°வேதிக பர்வம், மகாபாரதம்) பதில் உண்டே! எண்பத்தா றாயிரம் போஜனை தூரம்! அதாவது ஆறு லட்சத்து எண்பத்து எட்டாயிரம் மைல்கள்! (6,88,000)அந்த தூரத்தைக் கடப்பது எப்படி?

இவ்வளவு “அளந்தவர்கள்” அதைத் தானா கிறுக்காமல் விடுவார்கள்?மேற்கண்ட தானங்களைப் பார்ப்ப னர்களுக்கு வாரி வாரிக் கொடுத்தால் யமலுகத்திற்கு நம்மை ஏற்றிச் செல் லும் வண்டிகள் இதோ தயார்! காளைகள் பூட்டப்பட்ட விமானங் கள்! நம்மை வரவேற்க அங்கே அணிய மாய் உள்ள அழகிகள் (அப்ஸரஸிகள்!)யானை, குதிரை, சக்ரவாகம், ஆகியவை பூட்டப்பட்ட பொன் மயமான விமானங்களில், இசை வாணர் இசைபாட, பொன் போன்ற நிறமுள்ள அழகிகளால் வணங்கப்பட்டு, தேவகன்னி கைகளால் சூழப்பட்டு யமலோகம் செல்கின்றனர்.சாரசப் பறவைகள், அன்னங்கள், மயில்கள், புலிகள் பூட்டப்பட்ட வண்டிகளில் யமபுரம் செல்லலாம். சிலர் கேட்கலாம். “பார்ப்பான் உளறலுக்கு ஓர் எல்லையில்லையா? இவற்றை எல்லாம் எப்படி நம்புவது?

இவற்றைப் படிக்கும்போது மைடியர் பூதம், வேப்பிலைக்காரி, ராஜராஜே°வரி போன்ற “சீரியல்”களைப் பார்ப்பது போல் உள்ளதே!” என்று நம்மில் பலர் எண்ணி நகையாடலாம்.நம்பினால் நடராஜா! நம்பாவிட்டால் எமராஜா!மேற்கண்ட ‘சீரியல்’களைப் பார்ப்பதற்கு எத்தனை ‘பாமரத் தமிழர்’ உள்ளனரோ அதற்குக் குறையாத எண்ணிக்கையில் “தர்மம் என்றால் பார்ப்பானுக்குக் கொடுப்பதுதான்,” என்று நம்புகின்ற ஆன்மீகத் தமிழர்கள் உள்ளனரே!“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறாரே!“வள்ளுவர் சொன்னது வாழ்க்கைக்கு உதவாது” என்பது அவர்களின் முடிவு.அதனால்தான் பார்ப்பானும், பார்ப்பான் பிடியில் உள்ள “நம்மவர்” ஊடகங்களும் நம்மை அடியோடு ஓடி, ஓடி சுரண்டுகின்றன.

Tuesday, December 12, 2006

"பிள்ளையார்" கதை

சிவனின் மனைவி பார்வதி குளிக்கப் போகையில் குளிக்குமிடத்தில் வேறுயாரும் வராமல் இருக்க தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளை உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும் படி செய்து அதை வாயிற்படியில் உட்கார வைத்து யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லி குளிக்கச் சென்றதாகவும், பின்னர் பரமசிவன் உள்ளே வர அப்போது ஆண் பிள்ளை அவரைத் தடுக்க, கோபம் கொண்ட பரமசிவன் அவன் தலையை அறுத்து எறிந்துவிட்டு பரமசிவன் உள்ளே செல்ல, அங்கு பார்வதி எப்படி உள்ளே வந்தீர்கள் என்று கேட்க, பரமசிவன் வாசலில் இருந்தவனின் தலையை வெட்டி விட்டு வந்ததாக கூற, உடனே பார்வதி உருண்டு, புரண்டு அழுததாகவும், பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்ட தலையை ஒட்டவைத்து உயிர் கொடுக்க லாம் என்று கருதி அங்குவர, வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானை யின் தலையைவெட்டி முண்டமாக கிடந்த குழந்தை யின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிர் கொடுத்து பார்வதியை திருப்தி செய்ததாக கதை சொல்லப் படுகிறது.

நம் சிந்தனைக்கு:

திரட்டுகின்ற அளவுக்கு பார்வதியின் உடம்பில் அழுக்கென்றால் பார்வதி குளித்து எத்தனையோ வருடம் ஆகியிருக்கவேண்டும். வெட்டப்பட்ட தலை எங்கு போயிருக்கும், அப்படியே தொலைந்து போனாலும் அதை பரமசிவனால் கண்டு பிடிக்க முடியாதா?. உலகுக்கு படியளக்க சென்ற பரமசிவனை சோதிக்க பார்வதி ஒரு எறும்பை ஒரு டப்பாவுக்குள் அடைத்து அதை தன் சேலை முந்தானையில் முடிந்து வைத்ததாகவும் ஆனால் பரமசிவன் அதற்கும் ஒரு தானியம் போட்டாராம். அவ்வளவு சக்தி படைத்த வர் வெட்டுண்ட தலையை கண்டு பிடிக்க முடியாதா?

Source: Unmaionline

பரமசிவனின் திருவிளையாடல்

துரோணாச்சாரி பாண்டவர் களின் குரு. அர்ச்சுனனுக்கு அபார மானவில் வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவன். ஏகலைவன் எனும் ஆதிவாசி - கிரிஜன் - வித்தை கற்றுக்கொள்ள இவனை அணுகினான். என்ன ஜாதி என்று கேட்டான் துரோணாச்சாரி. ஆதிவாசி என்றான் ஏகலைவன்! தாழ்ந்த ஜாதிக்காரனுக்குச் சொல் லித்தர மாட்டேன். இது சத்திரியர் களுக்குரியது என்றான்.

ஏகல்யவா (இப்படித்தான் வடமொழியில் பெயர்) போய் விட்டான். ஒரு மண்பொம்மையை வைத்து அதன் முன்னால் பயிற்சி தொடங்கி வில்வித்தையில் மிகத் திறமை பெற்றவனானான். அவனது திறமையை ஒரு நாள் கண்ணால் கண்ட துரோணன் அவனது குரு யார் என்று கேட்டான். தாங்கள் தான் என்றான் ஏகல்யவன். குரு தட்சணையாக உன் வலது கட்டை விரலை கொடு என்றான் குரு. நம் ஆள் வெட்டிக் கொடுத்து விட்டான். (தொடர்ந்து இன்று வரை அவாளுக்குக் கொட்டிக் கொடுத்துக் கொண்டு வருகிறான்) குரு மகிழ்ந்தான்... பயல் இனிமேல் நாணேற்றி அம்பு தொடுக்க முடி யாதல்லவா என்று குரூரச் சந் தோஷப்பட்டான் துரோனாச்சாரி!

தெரிந்த கதைதானே எனச் சொல்லாதீர்கள்.துரோணனுக்கு ஒரு மனைவி உண்டு. பிரம்மச்சரியம், கிருக°தம், வானப்பிர°தம் பின்னர்தான் சன்யாசம். காஞ்சி மடத் தலைவர் போன்று பிரம்மச்சர்யம் முடிந் ததும் "டிரிப்பிள் ஜம்ப்' செய்து சன்யாசம் வாங்கியவரல்லர் துரோணர். (கட்டினால் தான் மனைவியா? மனைவியோடு வாழ்ந்தால்தான் கிருக°தமா? தலைக் காவேரி "ஜாலி டூர்" கிருக°தம்தானே என்றெல்லாம் கேட்கப்படாது)

துரோணர் மனைவி கிருபி (சரியாகப் படியுங்கள் - குரூபி அல்ல) என்பவள் நிரம்ப அழகு! 'ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே' என்று வெளிப்படையாகவே சொல்லக் கூடிய அழகு. அவளழகு மூன்று லோகத்திலும் பிரசித்தம். முக் கண்ணன் கவனத்திற்கும் அவளழகு போனது. பார்த்தான் பரமசிவன். அப்படியே உருகிப் போனது - அவனது மனதுதான்!"அடைந்தால் மகாதேவி. இல்லையேல் மரணதேவி என வீரப்பா வசனம் பேசிக் கொண்டான் மனதுக்குள். (60 வயதுக்கு மேற்பட்டவர்கட்கு இந்த வசனம் வந்த சினிமா பார்த்த நினைவிருக்கும்)

ஒரு நாள் -வழக்கம் போல கிழட்டு "பிராமணன்" வேடம் போட்டுக் கொண்டு - (சிவனடியார் என்றால் அப்படித்தான் ஒப்பனை செய்து கொள்ள வேண்டும்) துரோணர் இல்லாத நேரத்தில் வீட்டுக்குப் போய் பிச்சை கேட்டான், பிச்சாண்டி!கிருபி வெளியே வந்தாள். சிவனடியாரைப் பார்த்தாள். உள்ளே அழைத்தாள். கை, கால் அலம்பிக் கொள்ளச் செம்பில் நீர் தந்தாள். பிச்சாண்டியும் கழுவிக் கொண்டு உள்ளே போனான்.ஆசனம் தந்து அமரச் சொன்னாள். அமர்ந்தவன் முன் இலை வைத்து அமுது படைத்தாள். வாய் திறந்தான் பிச்சாடணன் - பரமசிவன்.

"அம்மையே! அடியவனுக்கு ஓர் அவா""சொல்லுங்கள், சுவாமி""வெறும் அமுதுண்டு போக வரவில்லை, நான்""வேறென்ன வேண்டும்? தயங்காமல் சொல்லுங்கள். அடிய வள் தட்டாமல் செய்கிறேன்""புதிதாக ஏதும் செய்ய வேண்டாம்""புதிர் போடாமல் சொல்லுங் கள், சுவாமி""ம்... ம்... நீ ஆடை ஒன்றும் அணியாமல் - அம்மணமாக வந்து அமுது படைக்க வேண்டும். அதுதான் என் நெடுநாள் அவா""அதற்கென்ன சுவாமி! அப்படியே" என்று கூறிய கிருபி மளமளவெனச் சேலையை அவிழ்த்து எறிந்துவிட்டுக் கையில் கரண்டியை எடுத்தாள் - குழம்பு ஊற்ற.

பரமசிவன் °தம்பித்து விட்டான். கண்கள் அவளது குறியையே குறி வைத்து பார்த்தன. அவன் ஜென்ம சாபல்யமடைந்து விட்டது போன்ற பெரு மகிழ்ச்சி அவன் உடலெங்கும் பரவியது. மாறன் கணை தைக்க வேண்டிய இடத்தில் தைத்து விட்டது.சோற்றில் முனிவனின் மனைவி குழம்பு ஊற்றுவதற்கு முன்னால் - முப்புரமெரித்த விரிசடைக் கடவு ளின் காமாந்தகாரத்தால் - மன விகாரத்தால் - உடலில் விவகார மாகி - குழம்புக்குப் பதில் விந்து ஊற்றப்பட்டுவிட்டது. முனிவனின் மனைவி பதைபதைத்தாள். "அய்யோ, அடியவர் அன்ன மருந்துவதற்குமுன் அபச்சாரமாகி விட்டதே! வேறு அமுது படைக்க வேண்டும்" என்று எண்ணி விந்துடன் கூடிய சோறு இருந்த இலையை எடுத்தாள் கிருபி.

"பெண்ணே! நான் இச்சித்து வந்தது நிறைவேறி விட்டது. இந்தச் சோற்றை வாசலில் கட்டியிருக்கும் குதிரையின் முன் வை. அது சாப்பிடட்டும்" என்று கூறிப் போய்விட்டார். ஆணின் தவிப்பு அடங்கி விட்டது.குதிரைக்கு விந்து நிறைந்த சோற்றை வைத்தாள். குதிரை சோறு தின்றது.

அசுவத்தாமன் பிறந்தான்.

இராம.கோபாலனுக்கு நெரிகட்டியது

Article by மின்சாரம்

சிறீரங்கத்தில் தந்தை பெரியாரின் சிலை என்றதும் பார்ப்பனர்களுக்கு நெரி கட்டிவிட்டது. இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திருவாளர் இராம. கோபால அய்யர்வாள் வழக்கம்போல தமது உளறல் பாராயணத்தைப் பாட ஆரம்பித்து விட்டார்.கேள்வி மன்னன் என்ற நினைப்பு அவருக்கு - அதுதான் கேள்விகளைத் தொடுத்துள்ளார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஒழுங்கான கேள்விகளைக் கேட்க புத்திசாலித்தனம் வேண்டும். இவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் வேடிக்கையானவை. ``நாட்டில் ஆயிரம் இடம் இருக்கும்போது குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவில் முன்பு சிலை அமைக்க வேண்டும் என்பதன் காரணம் என்ன? அந்த இடம் பெரியார் பிறந்த இடமா? அல்லது மறைந்த இடமா? இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும் - இது ஒரு கேள்வி என்று கேட்டுள்ளார் இராம. கோபால வா(ல்)ள்.

திருவாளர் இராம. கோபாலவாளின் `ஆசைப்படி’ இன்னும் ஆயிரம் ஆயிரம் இடங்களில் கண்டிப்பாக தந்தை பெரியார் சிலையை வைப்போம் - கவலைப்பட வேண்டாம். சிறீரங்கம் பெரியார் பிறந்த இடமா - அல்லது மறைந்த இடமா என்று கேட்கிறார். இந்தக் கேள்வியை காந்தியாரிடமிருந்து, பாலகங்காதர திலகர் வரை சம்பந்தப்படுத்திக் கேட்க முடியுமே - ஏன் கேட்கவில்லை?

திருவரங்கத்தில் தந்தை பெரியார் சிலை வைக்கக் கூடாது என்பதற்காக மடடும் `குயுக்தியாக’ இந்தக் கேள்வி கிளம்புகிறது என்று தானே பொருள். பெரியார் ஓர் ஊருக்கோ குறிப்பிட்ட இடத்துக்கோ மட்டும் சொந்தமானவர் அல்லர். ஒட்டு மொத்தமான தமிழர் சமுதாயத்துக்கே சொந்தமானவர் `தந்தை பெரியார்’ கட்சி, ஜாதி மதங்களைக் கடந்து போற்றப்படுபவர்; ``தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீ°’’ என்று அய்.நா.மன்றத்தால் பாராட்டப்பட்டு விருது அளிக்கப்பட்டவர். அத்தகைய ஒரு தலைவருக்கு ஈரோட்டில் மட்டுமோ, வேலூரில் மட்டுமோ, சென்னையில் மட்டுமோதான் சிலை வைக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது பித்துக்குளித்தனம்தான்!

உத்தரப்பிரதேசத்தில் லக்னோவிலும், ஆந்திர மாநில விசாகப்பட்டினத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும்கூட தந்தை பெரியார் சிலை வைக்கப்பட உள்ளதே - அப்பொழுது என்ன செய்யப்போகிறார்? ஒருக்கால் `தற்கொலை’ செய்து கொண்டு விடுவாரோ! கருத்துகளைக் கருத்துகளால் சந்திக்க முடியாத தொடை நடுங்கிகள் இப்படி கீழ்த்தரமான புத்தியின் - கேவலமான சிந்தனையின் வெளிப்பாடாகத் தங்களைத் தாங்களே அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள்படும்.

பெரியார் பிறந்த இடத்திலோ, மறைந்த இடத்திலோ தான் சிலை வைக்க வேண்டும் என்று கூறுகிற இதே பேர் வழிதான், அதே வரியில் பெரியார் சிலை வைக்க நாட்டில் ஆயிரம் ஆயிரம் இடங்கள் இருக்கிறனவே என்று கூறுகிறார். ஏனிந்த முரண்பாடு? புத்தி பேதலிக்கும்போது, ஆத்திரம் அலைமோதும்போது இப்படித்தான் முரண்பாடுகள் பிய்த்துத் தின்னும். அந்த `நோய்க்கு’ ஆளாகி இருக்கிறார் போலும்! கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபடும் கோவில் இருக்கும் ஸ்ரீரங்கமாம் - அதனால் அங்கு பெரியார் சிலை கூடாதாம் - இப்படி ஒரு (வி)வாதம். மற்ற மற்ற ஊர்களில் எல்லாம் கோயில்கள் இல்லையா? அந்தக் கோயில்களில் உள்ள கடவுள்களுக்கெல்லாம் சக்தியில்லையா - பவர் கட்டா? அவர்கள் சொல்லுகிறபடி திருவாளர் ரெங்கநாத பெருமாளுக்குச் சக்தியிருக்குமேயானால், பெரியார் சிலையை எழுப்பாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? அவர் சக்திதான் ஊரறிந்ததாயிற்றே. பல ஆண்டுகளுக்குமுன் அக்கோயில் தீ பிடித்து எரிந்தபோது பள்ளிகொண்ட ரெங்கநாதன் சிலையும் வெடித்துச் சிதறவில்லையா? அதன்பின் பூர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, வேறு சிலையும் வைக்கப்படவில்லையா? தீயையே கட்டுப்படுத்த முடியாத அந்தத் தூங்கும் சாமி (பள்ளிகொண்டான்) யார் என்ன செய்தாலும், ஒரு துரும்பைக்கூட அசைக்கும் சக்தியற்றது அல்லவா!

நாட்டில் பீதி ஏற்பட்டுள்ளதாம். தமிழ்நாடு அமைதியாகத் தானிருக்கிறது. பீதி தமிழ்நாட்டில் அல்ல - இராம. கோபாலன் கூட்டத்துக்குத்தான். 1973 டிசம்பர் 24-இல் பெரியார் மரணம் அடைந்து விட்டார் என்று மனப்பால் குடித்துக் கொண்டு இருந்தோம் - அந்த ஆசையில் மண் விழுந்து விட்டதே என்கிற சுயநலத்தில் பீதியாகிக் கிடக்கிறார்கள். ஆற்றில் அடித்துப் போகப்பட்ட குள்ளநரி `உலகம் போச்சு, உலகம் போச்சு!’ என்று கத்திய கதைதான் இது. காப்பாற்றப்பட்டுக் கரையில் சேர்த்தவுடன் அப்படிக் கத்தியதற்கு விளக்கம் சொன்னதாம் அந்தக் குள்ளநரி.``என்னைக் காப்பாற்றாமல் விட்டு இருந்தால் நான் செத்து இருப்பேன் அல்லவா, அப்படியானால் என்னைப் பொருத்தவரை உலகம் போச்சுதானே’’ என்று விளக்கம் சொல்லிற்றாம். இராம. கோபாலனின் இந்தக் கத்தல் அந்தக் குள்ள நரி கதையைத் தான் நினைவூட்டுகிறது. மத்திய அரசு தலையிட வேண்டுமாம்; கோணிப்பைக்குள் இருக்கும் பூனை இதன் மூலம் வெளிவந்து விட்டதே!

நாட்டில் மதக் கலவரத்தை எந்த வகையிலாவது உருவாக்கி, கலைஞர் தலைமையிலான அரசுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்கிற உள்நோக்கம் இதில் புதைந்து கிடக்கிறது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? தமிழர்கள் கட்டுப்பாடாக இருந்து, வன்முறைக்கு வன்முறை என்கிற ரீதியில் செயல்படாமல், உணர்ச்சி வயப்படாமல், தந்தை பெரியார் கருத்துகள் பரவிடக் கூடாது என்பதற்காகத்தானே இவ்வளவுக் கூச்சல் போடுகிறார்கள்? அந்த எண்ணத்தைத் தோற்றோடிப் போகச் செய்யும் வகையில் முன்னிலும் பன் மடங்காக கொள்கைப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுதான் அந்தச் சக்திகளுக்குக் கொடுக்கும் மரண அடியாக இருக்க முடியும் என்கிறார் தமிழர் தலைவர்.

மூலபலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர்முறை என்று அறிஞர் அண்ணா சொன்னார்களே, அதனை நினைவில் கொள்வோம் - வீறு கொள்வோம் - வெற்றி கொள்வோம்! ஓர் அஃறிணைப் பொருளை, ஒரு திடப் பொருளை, கல்லை அல்லது செம்பை, அல்லது பல உலேகங்களானான ஒரு பொம்மையை நிற்க வைத்தும், படுக்க வைத்தும், சில இடங்களில் நடனமாடுவது போல உருவாக்கியும் வைத்து, அது கடவுள் என்றும், சர்வ சக்தி வாய்ந்தது என்றும், கேட்ட வரம் கொடுக்கும் என்றும், இந்தந்த காணிக்கைகளைக் கொடுக்க வேண்டும்,, இன்னின்ன காணிக்கைகளைக் கொடுத்தால் இன்னின்ன வரங்கள் கிடைக்கும் என்றும் மளிகைக் கடை ஜாபிதாபோல் பட்டியலிட்டுக் காட்டி, பாமர மக்களின் பக்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சுரண்டல் தொழிலை நடத்திக் கொண்டு இருக்கும் பார்ப்பனர்கள் அலறுவதன் காரணம் நன்றாகவே புரிகிறது. அவர்களின் பிழைப்பே, சுரண்டல் தொழிலே, ஜாதி ஆதிக்கமே அந்தக் குழவிக்கல்லை வைத்தேதான் இருக்கிறது என்கிற காரணத்தால், அதற்கு மரியாதை போய் விட்டால் தங்கள் பிழைப்பின் அ°திவாரமே நொறுங்கிப் போய் விடுமே என்கிற பதைபதைப்பில் - அச்சத்தில் ஆடிப் போய் விட்டார்கள் என்று தெரிகிறது.

பேசாமல் கிடந்தாலாவது சிறீரங்கத்தோடு இப்போதைக்கு முடிந்து போயிருக்கும். இவர்கள் செய்த விஷமத்தனத்தால், தந்தை பெரியார் சிலை ஊருக்கு ஊர், ஏன் வீதிக்கு வீதிகூட வரப் போகிறது.பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர, புத்திசாலிகள் இல்லை என்றார் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்; பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே முன்புத்தி கிடையாது என்பார் தந்தை பெரியார் - இவை உண்மை என்பதைத்தான் இராம. கோபாலக் கூட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆடட்டும், இன்னும் ஆடட்டும் - அதிகமாகவே ஆடட்டும்! வட்டியும், முதலுமாகச் சேர்ந்து பெற்றுக் கொள்வார்கள்.

Monday, December 11, 2006

வெறுப்பின் மறுபெயர் வேதம்

Article By - - சாரு நிவேதிதா
Source - AsuranMalar

பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போடீநு விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம். இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்-தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது. முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை. வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான். மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காடீநுச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். வேதத்தை முற்றாக அறிந்தவன், வேதாந்தி என அழைக்கப்பட்டான். வேதத்தில் இல்லாததே இல்லையென்று இன்றளவும் கருதப்படுகிறது. நான்கு வேதங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும், பின்னர் முடிவிலிருந்து ஆரம்பம் வரை தலை கீழாகவும் ஓதத்தெரிந்தவர்கள் கனபாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது... தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று. ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன.

இந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுபவர்கள் புரோகிதர்கள். `வாத்தியார்’ என்று பார்ப்பனர்களின் பேச்சு மொழியால் அழைக்கப் படும் அப்புரோகிதர்கள் அந்த சுபகாரியத்தின்போது ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை மணிக்கணக்கில் ஓதுவார்கள். அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்!

ஒரு சுப தினத்தின்போது `என்னை எதிர்ப்பவர்கள் நாசமாகப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள்வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக்கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அரு வருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித் துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. உதாரணமாக: `நான் தேனைவிட தேனாயுள்ளேன். மதுரத்தைவிட மதுவாயுள்ளேன். நீ என்னையே தேன் மிகும் சாகையாக விரும்பு’ `எனது சலனம் தேன் மயம். என் கமனம் தேன்மயம். நான் மொழியால் தேன் மயமாய் மொழிகிறேன். நான் தேன் தோற்றமாக வேண்டும்’ (அதர்வண வேதம்; காண்டம் : 1,34 தேன் மயம்)

ஆனால் இந்தக் கவித்துவத்தையும் மீறி வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது: துவேஷம், எதிரிகள் மீதான துவேஷம். எதிரிகள் யார் என்று பார்த்தால் பார்ப்பனர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள். அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள். `இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அவர்களது சிரங்களைத் துண்டித்திடுக’ `எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல்வோம்’ (அத்தியாயம்:சம்ஹாரம்).
`எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’
`சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’
`தனது மகனையும் சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக’
`அக்னியே! எங்களைத் துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்து விடு’
`இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்;
உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’
`இந்திரா’ சத்துரு சேனையை மயக்கம் செய்க. அதன் கண்களைப் பிடுங்கு’`அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக’`இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனதுவயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள்.எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு’

இப்போது புரிகிறதா, சில சாமியார்கள் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது ஒன்றும் சா°திரங்களுக்கு விரோதமானதல்ல என்பதும், வேதங்களைப் பின்பற்றியே அவர்கள் அக்காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும்? ஆனால் என்ன செடீநுவது? 3000 ஆண்டு-களுக்கு முன்பு இப்போது இருப்பதுபோல நீதிமன்றங்கள் இல்லை என்பதை சாமியார்கள் மறந்து விடுகின்றனர். மேலே கூறியுள்ள சுலோகங்கள் அனைத்தும் அதர்வண வேதத்தில் உள்ளவை. இப்படியே அந்த வேதத்தில் 20 காண்டங்கள் உள்ளன. எதிரிகளும் தங்களுக்கு அடிமை-யாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற `அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு `உன்னத’ குணாம்சம்; சுய நலம். நானும் என் இனத் தைச் சார்ந்தவர்களும் மட்டு-மே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்-திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெடீநுயையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செடீநுது எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேத மந்திரங்கள் முழக்கவும் இத்த-கைய சுய நலத்தையும் துவேஷத்தை யும்தான் முழங்குகின்றன. இன்றைய சாமியார்கள் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் எதிரி களைக் கொலை செடீநுகிறார்களே, அதே கதை தான் வேதங்கள் முழுக்கவும் விரவிக் கிடக்கிறது. `ஜயித்த பொருள் நம்முடையது. தோன்றுவது நம்முடையது. ருதம் நம்முடையது. தேஜ° நம்முடையது. பிரம்மம் நம்முடையது. சுவர்க்கம் நம்முடையது. யக்ஞம் நம்முடையது. பசுக்கள் நம்முடையது’ அதர்வண வேதத்தில் ஜயகோஷம் என்ற அத்தியாயம். `நான் சொல்வதை ஜயிக்க வேண்டும். நான் செல்வம் மிகுந்தவனாக வேண்டும்; நீ என்னில் செல்வத்தை அளி’

அதர்வண வேதம் செல்வம் என்ற அத்தியாயம். `அடுத்தவன் அழிய வேண்டும்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற `உயரிய’ கருத்தை வலியுறுத்தும் வேத மந்திரங்களை இங்கே மேற்கோள் காட்டுவது மிகவும் சிரமமானது. ஏனென்றால் எல்லா மந்திரங்களுமே அப்படித்தான் உள்ளன. நான்கு வேதங்களில் அதர்வண வேதம் மட்டும் சிறிது பரவாயில்லை என்று கூறலாம். ஏனென்றால், அதிக காமம் பற்றியசில கவித்துவமான பகுதிகள் உள்ளன. ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப்பாடல்கள் `இந்திரனே இங்கு வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களையெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும் எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும்’ இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552. விஞ்ஞான வளர்ச்சியுற்ற இன்றைய கால கட்டத்தில் இத்தகைய வெற்றுச்சொற்களுக்கு எந்த அர்த்தமுமே இருக்க முடியாது. நாகரிக வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த ஓர் இனம் (ஊடயன்) எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகஇயற்கையையும் வானுலகில் வசிப்பதாக அவர்கள் நம்பிய தேவர்களையும் துணைக்கு அழைத்த பிரார்த்தனைப் பாடல்களே வேதங்கள். அந்நியர்களைக் குறித்த இவர்களது பயமே சுயநலமாகவும் துவேஷமாகவும் மாறியுள்ளது. ஆனால், தமிடிநப் பாரம்பரியமோ `இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே. இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான். இப்படிப்பட்ட சிந்தனையின் ஒரு கீற்றைக் கூட நான்கு வேதங்களிலும் காண முடியவில்லை. எனவே `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிடிந மரபுக்கு `இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. எனவே, வேதங்களைப் பற்றிய `ஜீபூம்பா’ கருத்துகள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.

சபரிமலை மகர ஜோதி மர்மம்

அய்யப்பனுக்கு கூட்டம் சேர்க்க செய்யப்படும் ஒரு செப்படி வித்தையை அம்பலப் படுத்துகிறோம்.

மல்லிகைப்பூ விற்கவும், கருவாடு விற்கவும் தான் விளம்பரம் தேவையில்லை; ஆனால் கடவுள் வியாபாரம் செய்யக் கண்டிப்பாய் விளம்பரம் வேண்டும்.விளம்பரமில்லாமல் எந்தக் கடவுளாலும் வாழ முடியாது. இது ஆண்டாண்டு கால உண்மை. தேர், திருவிழா, பூஜை, புன°காரம், விரதம், நேர்த்திக் கடன், வேண்டுதல், படையல் இவையெல்லாம் இல்லாமல் எந்தக் கடவுளாவது உண்டா? இதையெல்லாம் விட கூட்டம் சேர்க்க கூடுதலாக அற்புதம் புரிந்ததாகக் கதைகள் பரப்பப் படும். அப்படி அய்யப்பனுக்காகப் பரப்பப்பட்ட புளுகுதான் மகரஜோதி.

பழனி மலையாண்டிக்கு தைப்பூசம் மட்டும் தான் வசூல். ஆனால் அய்யப்பன் வணிகர்களான, கேரளக்காரர்கள் ஆண்டுதோறும் மூன்று முறை பக்த சிகாமணிகளை வரவழைத்து கறந்து விட ஒரு ‘டெக்னிக்’ வைத்திருக்கிறார்கள். கார்த்திகை தொடக்கத்தில் நடைதிறப்பின் போது ஒரு முறை; மகர ஜோதி தரிசனம் என்று ஒரு முறை; ‘விஷீ’ என்று கூறி ஒருமுறை; இப்படி 3 தடவை வசூல் நடக்கிறது.

சபரிமலையில் பொன்னம்பலமேடு என்னும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தானாகத் தோன்றும் ஜோதிதான், மகர ஜோதி என்னும் மகா அற்புதம் என ஒவ்வொரு ஆண்டும் ஒரு பித்தலாட் டம் நிகழ்த்தப்படுகிறது.முதலில் ஓர் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் ஒன்று தானாகத் தோன்ற முடியாது; அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படித் தோன்றுகிறதென்றால் அது நிச்சயம் மனித வேலையாகத் தான் இருக்கமுடியும். இதைக் கண்டுபிடிக்க கேரளப் பகுத்தறிவாளர் கள் முயன்று. அம்பலப்படுத்தினார்கள்.


“1925-க்கு முன்பாக பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு எனும் தெய்வீக ஒளி காட்சியளிப்பதாக வயதான பெரியவர்கள் யாரும் சொன்னதில்லை. 1940க்குப் பிறகே இந்தக் கதை பரவியது” என்கிறார் ஜோசப் எடமருகு. இவர் கேரளாவைச் சேர்ந்த இந்தியப் பகுத்தறி வாளர் சங்கத் தலைவர். பொன்னம்பல மேடு யாரும் ஏற முடியாத மலை என்று கூறுவது தொலைவிலிருந்து பார்ப்பவர்களால் நம்பக் கூடியது. ஆனால் பனி படர்ந்த அண்டார்ட்டிகாவிலும், இமயத்திலுமே மனிதன் சென்று விட்ட பிறகு இந்த மலையெல்லாம் மிகச் சாதாரணம் என்கிறார்கள் மலையேறும் மனிதர்கள். துளியும் பகுத்தறியாது எதையும் பக்திக் கண் கொண்டு மட்டுமே பார்க்கும் சபரிமலை சா°தாவின் ரசிகர்களால் இந்த மலையேற்றப் பயணத்தை உணர முடியாது. அதனால்தான் பொன்னம்பல மேடு கதையும் அவர்களால் நம்பப்படுகிறது.


பொன்னம்பல மேட்டின் மகரஜோதி எப்போது முதன்முதலில் அம்பலப்படுத்தப்பட்டது என்பதை சபரிமலை அய்யப்பன் - உண்மையும் கதைப்பும் என்னும் நூல் எடுத்துக் காட்டுகிறது.“1940-களுக்குப் பிறகு பரப்பப்பட்ட மகர விளக்கின் தெய்வீகக் கதையை முதன்முதலாக உடைத்துக் காட்டியவர் பகுத்தறிவாளர் சங்கத்தின் தீவிர பணியாளரான எம்.ஆர்.எ°. நாதன்தான். அவர் எழுதிய ‘சபரி மலையும் மகர விளக்கும் சூஷணோபாதிகள்’ என்ற நூலை 1974இல் நாங்கள் கோட்டயத்திலிருந்து வெளியிட்டோம். மேட்டில் மலைப்பண்டாரங்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றும் அவர்கள் தம்முடைய தேவைக்காக மாலை வேளைக்குப் பிறகு ஏற்றுகின்ற நெருப்பே சபரிமலையிலிருந்து பார்க்கும்போது காணப்படுகின்றது என்றும் அக்காலத்தில் எல்லோருக் கும் நன்கு தெரிந்திருந்தது. காடுகளில் அலைந்து திரிந்து காட்டிலுள்ள பொருள்களைச் சேகரித்து வாழ்க்கை நடத்திய இக்கூட்டத்தினர் சபரி மலைக் கோயிலின் சுற்றுப்புறங்களிலும் பற்பல காலங்களில் வாழ்ந்து வந்தனர். பொன்னம்பல மேட்டைத் தவிர மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த சமதளப் பகுதியான வரயாட்டுமேடு, அருணமுடி, குருநாதன் மண்ணு முதலிய இடங்களிலும் மேற்கூறிய மலைவாசிகள் கூட்டமாக வாழ்ந்தனர். ஆடை அணிதலிலும் பேச்சிலும் தமிழ் முறைகளுடனேயே இவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.

அன்றெல்லாம் சபரிமலைக் கோயிலில் விழா நடை பெறும்போது மட்டும் பொன்னம்பல மேட்டில் ஒளி காணப்படவில்லை. சிறிதும் பெரியதுமான ஒன்றுக்கும் மேற்பட்ட தீப்பிழம்புகள் இரவின் பெரும்பாலான யாமங்களிலும் தெளிவாகவும் மங்கலாகவும் மேட்டில் காணப்பட்டது. பொன்னம்பல மேட்டில் மண்ணோடு மண்ணாகி விட்ட பண்டைக்கால கோயிலைப் பற்றிய விவரங்கள் மலைவாசிகளிடமிருந்து கிடைத்ததும் சா°தா வுக்கு மேட்டுடன் தொடர்பு உண்டென்று கதை புனையப்பட்டது. இந்தப் பொய்ப் பிரசாரத்துக்கு விளம்பரம் கிடைக்கத் தொடங்கியதும் கோயிலுக்காக சிலர் மேட்டிலுள்ள தீபத்தை உருவாக்கினர். மலைவாசிகளை மனமறிய நீக்கி நிறுத்திக் கொண்டு ஒரு பிரச்சார தந்திரம் என்ற முறையில் சில செல்வாக்குப் படைத்தவர்கள் தீபக் காட்சியினை ஏற்பாடு செய்தனர். மகர விளக்கு நாளில் மாலை நேரத் தில் (தீபாராதனை சமயம்) மட்டும் ஒரு தீப்பிழம்பினை ஏற்றுவது என்ற திட்டம் உருவானது. அதன் ‘தெய்வீக’மான அங்கீகாரத்திற்கு சபரிமலையில் பிரச்சார வேலையும் நடத்தினர். எனினும் மகர விளக்கு தவிர்த்த நாட்களிலும் மேட்டில் இரவு நேரங்களில் தீப் பிழம்புகள் காணப்பட்டன. சபரிமலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியுள்ள வயதான பக்தர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர்.

பொன்னம்பல மேட்டைச் சுற்றியுள்ள வனப்பிர தேசங்களையும் நிலைக்கல், ஆங்கு மூழி, சீதத்தோடு முதலிய கிழக்குப் பகுதியிலுள்ள காடுகளை அழித்தாலும் பொன்னம்பல மேட்டில் அடிக்கடி அன்னியர்கள் வருவதாலும் காலப்போக்கில் மலைப் பண்டாரங்கள் மேட்டிலிருந்து வெளியேறி விட்டனர். இதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் சந்தர்ப்பத்துக்கேற்றபடி திரித்து எழுதப் பட்டன. சுருக்கமாகச் சொன்னால் பழைய ‘மகர விளக்கு’, ‘மகர ஜோதி’ என்ற புதிய சிறப்புக்குக் காரணமானது. ‘பொன்னம்பல மேடு ஒருபோதும் செல்லமுடியாத இடமாக இருந்ததில்லை என்பது கவனிக்க வேண்டிய உண்மை. சபரிமலைக் கோயிலுக்கு வடகிழக்கேயுள்ள உப்புப்பாறை, படிஞ்ஞாறு பாறை (மேற்கு பாறை) ஆகிய மலைகளைக் கடந்து பச்சைக் கானத்தின் உள்ளேயுள்ள பாதையில் சிறிது தூரம் சென்ற பிறகு மேற்கு நோக்கி திரும்பினால் மேட்டை அடையலாம். இந்த ரகசிய பாதை வழியாக மேட்டுக்குச் சென்றுதான் தீபத்தை ஏற்றுவோர் முற்காலங்களில் தீப காட்சியைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தனர். சபரி மலையிலிருந்து மேட்டுக்கு நேராக பயணம் செய்து மேட்டை அடைவது பெரும் சிரமம். சபரிமலைக்கு நேராகவுள்ள மேட்டின் பகுதி அவ்வளவுக்குச் செங்குத்தாக உள்ளது. அடர்ந்து வளர்ந்த காட்டு மரங்களுக்கிடையே பயணம் செய்ய இயலுமென்றாலும், மேற்கூறிய காரணத்தால் இந்த வழியாக மேட்டை அடைவது சிரமம்தான். படிஞ்ஞாறு பாறை வழி யாகச் செல்லும் பயண தூரம் அதிக மென்றாலும் சிரமமின்றி மேட்டை அடைய முடியும்.“பதினெட்டாம்படி ஏறிச் செல்கின்ற திருவாபரணப் பெட்டியை மேல் சாந்தி (தலைமை பூசாரி) வாங்கி கோயிலிலுள்ள சிலைக்கு நகைகளை அணிந்த பிறகு தீபாராதனைக்காக நடை திறக்கும் பொழுது 21 சர வெடி முழங்கும். இந்தச் சரவெடியின் ஓசை மேட்டில் கேட்டவுடன் அங்கே இருப்பவர்கள் ஜோதியை ஏற்றுவார் கள். இதுதான் நடைமுறை வழக்கம். ஆனால், தொடர்ந்து செய்யும் வெடி வழிபாடுகளின் ஓசை காரணமாக பல ஆண்டுகளிலும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாமலும் போனதுண்டு. திருவாபரணப் பெட்டி பதினெட்டாம்படியில் ஏறுவதற்கு முன்பாக மேட்டில் தீபம் உயர்ந்தது சில ஆண்டுகளில் விவாதப் பொரு ளாகவும் ஆனது.”-இப்படித்தான் மகரஜோதியைப் பரப்பியிருக்கிறார்கள்.கேரளப் பகுத்தறிவாளர்கள் மகர ஜோதி தீபக் காட்சியை அரங்கேற்று வதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என தொடர்ந்து முயன்று வந்துள்ளனர்.

எம்.ஆர்.எ°. நாதன் சொல்கிறார்: 1973 ஜனவரி 13ஆம் தேதி பத்தனம்திட்டையிலிருந்து வாங் கிய சில வெடிப் பொருள்களுடன் கொல்லம் - கக்கீ (பம்பை) ஃபா°ட் பாசஞ்சரில் பம்பை அணைக்குப் பயணமானேன். அன்று என் துறை யைச் (Kerala State Electricity Board) சேர்ந்த நண்பர்களுடன் பம்பையில் தங்கினேன். மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு சில நண்பர்களுடன் பொன் னம்பல மேட்டுக்குப் பயணமானேன். பம்பை - வண்டிப் பெரியார் பாதை யில் 2 கி.மீ. சென்று கொச்சு பம்பையை அடைந்தோம்; கொச்சு பம்பையிலி ருந்து கிழக்கு நோக்கி மின்வாரியம் அமைத்த ஜீப் பாதை வழியாக 4 கி.மீ. பயணம் செய்து மேட்டுக்கு அருகில் சென்றடைந்தோம். ஜீப் பாதை முடிவடைகின்ற பகுதி ஏ-பாய்ண்ட் (A Apoint) என்றழைக்கப்படுகின்றது. ஜீப் பாதையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மலைமீது ஏறி மேட்டின்மீது மாலை 4.40 மணிக்கு சென்று சேர்ந்தோம். மின் வாரிய ஊழியர் களையும் வனக் காவலரையும் தவிர, திரு. கடக்கல் ராகவன் பிள்ளையின் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட ‘பரம பக்தர்களும்’ மேட்டில் இருந்தனர். வெடிப் பொருள்களையும் எண்ணெய் பந்தங்களையும் அவர்களும் தேவையான அளவுக்குக் கொண்டு வந்தனர். “பொன்னம்பல மேட்டை சுற்றிப் பார்த்த பிறகு நாங்கள் அனைவரும் பாறைக்கு அருகே குழுமினோம். எங்களுக்கு அறிமுகமில்லாத பலரும் அங்கே இருந்தனர். சபரிமலையிலுள்ள பக்தர்களுடைய சரண கோஷம் இரைச்சல் போல காதில் வந்து மோதியது. நாங்கள் தொலை நோக்கியைப் பயன்படுத்தி சபரி மலைக்கோயில் வளாகத்தைக் கவனித்தோம். கோயில் வளாகம் படிப்படியாக புகை வளையங்களால் மூடப்பட்டது. சபரிமலையிலுள்ள வெடிகளின் ஓசை எப்பொழுதும் கேட்டுக் கொண்டேயிருந்தது. கடைக்கல் குழுவினர் ஒலி பெருக்கியின் வழியாக பக்திப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். பாறைகளுக்கிடையே வேலிபோல நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் பந்தங்களுக்கு தீ கொளுத்தப்பட்டது.


கம்பக் கட்டு வெடிக்கான பொருள்களனைத்தும் தயாராக்கப்பட்டன. அ°தமன சூரியனின் செங்கதிர் களால் சூழப்பட்டிருந்த பொன்னம்பல மேடு படிப் படியாக இருளில் ஆழ்ந்தது. எண்ணெய் பந்தங்கள் தெளிவாக ஒளிர்ந்தன. பெரிய பந்தங்கள் சுடர்விட்டு எரிந்தன. அகில இந்திய வானொலி நிலையத் தோழர் நேர்முக வருணனையில் கூறியது ஏறத்தாழ பின்வருமாறு அமைந்திருந்தது: ‘பொன்னம்பல மேட்டில் இதோ மகர ஜோதி தோன்றியிருக்கின்றது. எவ்வளவு அற்புதகரமான காட்சி. பக்தர்கள் எல்லாவற்றையும் மறந்து அய்யப்பனின் புகழைப் பாடுகின்றனர்; சரண கோஷமிடுகின் றனர். பொன்னம்பல மேட்டில் ஒரு தீபம் அல்ல, ஒன்றுக்கும் அதிகமான தீபங்கள் இப்பொழுது காட்சி யளிக்கின்றன. தீபங்களுடைய ஒரு வரிசையே இப் பொழுது காணப்படுகின்றது. அது ஓர் ஒளிவட்டம் தான்; வருணனைக்கு அப்பாற்பட்ட ஒளிவட்டம்; பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்ற தெய்வீக ஒளி!’


“அய்யப்ப பக்தர்களுடைய சரண ஒலியின் ஆரவாரம் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்தச் சமயத்தில் எங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் ஒரு எவர்சில்வர் தட்டு நிறைய கற்பூரத்துடன் முன்னோக்கி வந்து கற்பூரத் துக்கு தீ கொளுத்தினார். அவருடைய வசதிக்காக நாங்கள் விலகி நிற்க வேண்டும் என்ற உத்தரவும் வந்தது. ஒளியினால் பந்தத்தை மங்கச் செய்த இந்த தீபம், சபரிமலையில் மிகவும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்ற வருணனையும் கூச்சலும் வானொலியில் கேட்டன. ஜோதி ஓர் ஏமாற்று வேலையே என்பதை பக்தர்களுக்கு அறிவிக்க தகுந்த தருணம் அதுதான் என்று நாங் கள் முடிவெடுத்தோம். கம்பக் கட்டுகளை அகற்றுவதற்காக வந்தவர்களைத் தந்திரமாக தடுத்தபடி கம்பக் கட்டுக்கு தீ கொளுத்த உத்தரவிட்டோம். வாணங்கள் வானில் சீறிப் பாய்ந் தன. ஜோதி வானில் உயர்வதாக வும் அது வானில் பல நிறங்களை அடைவதாகவும் வானொலியில் கேட்டது. பிறகு அறிவிப்பாளர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நாங்கள் குலுங்கி குலுங்கி சிரித்தோம். அதைத் தொடர்ந்து மேட்டையே நடுங்க வைத்த ஒரு பெரிய கம்பக் கட்டி வெடி வெடித்தது. தீ விபத்து உண்டா காமல் இருப்பதற்காக வனக் காவலர்கள் அங்கெல்லாம் ஓடி நடந்து தீயை அணைத்தனர். மகர ஜோதியை முறியடிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்மையில் கடைக்கல் குழுவினரிடம் இல்லை. ஒரு சாகசப் பயணம் என்ற முறையில் மேட்டை அடைந்த அவர்கள் விரத நியதிகளோடு வந்த அய்யப்ப பக்தர்கள்தான். அவர்கள் தங்களுடைய பயணத்தின் குறிக்கோளை முதலிலேயே வெளிப் படுத்தவும் செய்தனர். எங்களுடைய ஆர்வத்துக்கு அனுமதியளித்து தீப காட்சியை அலங்கோலப்படுத்துவதில் அவர்களும் பங்கேற்க நேர்ந்துவிட்டது. மகர ஜோதி இவ்வளவு காலமும் ஒரு மோசடி வேலை தான் என்று தோன்றியதால் தான் அகில இந்திய வானொலி நிலைய வருணனயாளர் ஒலிபெருக்கிக் கருவியை நண்பரிடம் கொடுத்துவிட்டு விலகியிருக்க வேண்டும். புதிய வருண னையாளர் ஒரு சாட்சியைப் போல் நின்று ஏதேதோ வார்த்தைகளை உதிர்த்தாரே தவிர ஜோதியைப் பற்றியோ மேட்டைப் பற்றியோ ஒரு வார்த்தை பேச வில்லை.

மூடநம்பிக்கையாளர்களுடைய சரண கோஷம் நின்றுவிட்டதால் அவர்கள் ‘மனக் குழப்ப’மடைந் திருப்பதாக நாங்கள் புரிந்து கொண்டோம். இதை எழுதுபவரின் லட்சியமும் அதுவாகத்தான் இருந் தது. வனக் காவலர்கள் பரி மாறிய சர்க்கரைப் பொங்கலை உண்டபிறகு நாங்கள் மேட்டிலிருந்து இறங்கி பம்பைக்குச் சென்றோம்.”(எம்.ஆர்.எ°. நாதன்,‘சபரிமலையும் மகரவிளக்கும் சூஷணோபாதிகள்’ பக். 8-20)கேரள பகுத்தறிவாளர்கள் மகரஜோதி மடமையைத் தோலுரித்த போதும் அய்யப்ப சேவா சங்கமும் தேவ°வம் போர்டும் பொய்ப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
1983-ல் ஒரு முறை 150-க்கும் அதிகமான பகுத்தறிவாளர்கள் பொன்னம்பல மேட்டிற்குச் சென்றனர். அப்போது அவர்களை காவல் துறையின் கடுமை யாகத் தாக்கினார்கள். பின்னர் காவல் துறையினர் உதவியுடன் மகர ஜோதி ஏற்றப்பட்டது என்கிறார் ‘ரணரேகை’ பகுத்தறிவு மாத இதழ் ஆசிரியர். கல்லி யூர் பிரசன்னராஜ். இவர் தனது இதழில் மகர ஜோதியை அம்பலப்படுத்துவதற்காக பொன்னம்பல மேடு சென்று வந்த விவரங்களை விரிவாக எழுதியிருக்கிறார்.

சிறு சிறு குழுக்களாகச் சென்ற பகுத்தறிவாளர்கள் காவல் துறையினரின் கட்டுப்பாடுகளை மீறி பொன் னம்பல மேட்டை நோக்கி நடந்தனர்.“சபரிமலைக்கு நேராக பொன்னம்பல மேட்டில் சற்று விலகி நிற்கின்ற ஒரு பாறையின் மீதுதான் எல்லா ஆண்டும் மகர ஜோதியை ஏற்றிக் காட்டுவார்கள் என்பதை அறிந்திருப்பீர்களல்லவா? கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஓட்டுநராகப் பணி யாற்றும் கோபி என்பவர்தான் ஜோதியை ஏற்றினார். ஆனால், கடந்த ஆண்டு கோபி வரவில்லை; இன்னொருவர் தான் ஏற்றினார். இந்த ஆண்டு கோபி தான் ஏற்றினார். மகரஜோதியை ஏற்ற வேண்டிய நேரமானதும் எங்கள் பக்கத்தில் சில காவலர்கள் மட்டுமே நின்றனர்; மற்றவர்கள் ஜோதியை ஏற்ற வேண்டிய பகுதிக்குச் சென்றனர். 150-க்கும் மேற்பட்ட பகுத்தறி வாளர்களைத் தவிர பம்பை - கொச்சு பம்பை வாசி களும் காவல் துறையினரும் உள்பட 250 பேர் அங்கே இருந்தனர். வழக்கத்துக்கு மாறாக இந்த முறை பெண்களாக அங்கேயிருந்தவர்கள் வண்டிப் பெரியாரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மனைவியும் மகளும்தான்.


“ஜோதியை ஏற்ற வேண்டிய நேரமானதும் சபரிமலையிலிருந்து சிக்னல் விளக்கு மேட்டினை நோக்கி மின்னியது. அப்பொழுது முதலிலேயே தயா ராக வைக்கப்பட்டிருந்த கற்பூரத்தைக் கொளுத்தி உயர்த் திக் காட்டி விட்டு தாழ்த்தினர். உடனே வானொலியிலி ருந்து பின்வருமாறு வருணனை கேட்டது: ‘இதோ மகரஜோதி காணப்படுகின்றது; அந்த மகரஜோதி மத்தாப்புப் போல உயர்ந்தபின் தாழ்ந்துவிட்டது’.


“இரண்டாவதாகவும் கற்பூரத்தைக் கொளுத்தி உயர்த்தியபோதிலும் அது உடனே அணைந்து விட்டதால் வருணனையில் எதுவும் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். மூன்றாவது முறையாக கற் பூரத்தை உயர்த்திய பொழுதுதான் மீண்டும் வருண னையில் ‘அதோ ஜோதி மீண்டும் உயருகின்றது; மக்க ளனைவரும் கைகூப்பி வணங்குகின்றனர்’ என்று கேட்டது.‘அவ்வாறு மூன்று முறை மகர ஜோதியைக் கொளுத் திக் காட்டிய பின்பு இந்த ஆண்டிலுள்ள மகர ஜோதி மோசடி முடிவுற்றது. அவர்கள் பொன்னம் பலமேட்டிலிருந்து கீழே இறங்கினர். அவர்கள் அனைவருக்கும் பின்னால் வரிசையாகச் செல்லும் படி எங்களிடம் காவல்துறையினர் சொன்னார்கள். எங்களுக்குப் பின்னால்தான் காவல் துறையினர் வந்தார்கள்’ (மகரஜோதி° தட்டிப்பும் பொன்னம் பல மெட்டிலே போலீ° மர்த்தனமும், பக். 10-20)இவ்வாறு காவல்துறையினரின் உதவியுடன் தான் இப் பொழுது பொன்னம்பல மேட்டில் மகர விளக்கை ஏற்றுகின்றனர். ‘மனித’ பாதச்சுவடு படாத இடத்தில் அற்புதமாக காட்சியளிக்கின்ற மகர விளக்கு’ என்ற கதை முழுமையாக முறியடிக்கப்பட்டுவிட்டது.


1990ஆம் ஆண்டு பகுத்தறிவாளர்களின் உண்மை விளக்கப் பேரணி தொடர்பான பிரச்சினையின் போது, அன்றைய கேரள முதலமைச்சர் ஈ.கே. நாயனார், “தேவ°வம் போர்டுதான் மகரஜோதியை ஏற்றுகின்றது என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம்தான், பகுத்தறிவாளர்கள் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லும் பேரணியை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.


கடவுளின் பெயரால், ஒரு புரட்டு காலம் காலமாக நடந்து வருகிறது. அதை ஆதாரபூர்வமாக பகுத்தறிவாளர்கள் நிரூபிக்கிறார்கள். இதற்குப் பின்னும் சபரிமலை சா°தாவை நோக் கிச் சென்று தம் பொருளையும், அறிவையும் இழக்கும் பக்தர்களை என்னவென்பது?

Source: Unmaionline

Saturday, December 09, 2006

காமராசர் பேசுகிறார்

“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள். யார் பேசுகிறார்கள் என்று தெரியுமா? இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள். நீ ஏழையாய் இருப்பது, ஏழையாய் இருக்க வேண்டும் என்பது உன் தலை எழுத்து (கடவுள் கட்டளை) என்று கூறி ஏமாற்றுகிறார்கள். தங்களின் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும் சூழ்ச்சியே அது."

"உழைக்கவேண்டியதே ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால் அந்தத் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம். எழுதவேண்டியது அவசியம் என்றுதான் சொல்லுகிறேன். எனவே கடவுள் பெயரைச் சொல்லி உங்களை ஏமாற்றுகிறவர்கள்தான் என்னைக் கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்று சொல்லுகிறார்கள். இப்படிப்பட்டவர்களோடு தி.மு.கவும் இப்போது சேர்ந்து கொண்டிருப்பதுதான் விந்தையாக உள்ளது. ரஷியாவிலும் அமெரிக்காவிலும் செல்வம் செழித்து வருகிறது. அங்கு இவை எல்லாம் குறுக்கிடவில்லை. அந்த நாடுகளைப் போன்று நம்முடைய நாட்டிலும் செல்வம் பெருக வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. அதற்காகப் பாடுபடவேண்டும். அதிகம் உழைக்க வேண்டும். சோம்பேறித்தனமாக இருந்தால் பயன்படாது. கடவுளை எண்ணிக் கொண்டு கைகட்டிக் கொண்டிருந்தால் எப்படிச் சாப்பிடுவது?”

“அவனவன் தலை எழுத்துப்படி நடக்கட்டும் என்பதுதான் சுதந்திராக் கட்சியின் தத்துவமாக உள்ளது. எவன் தலையில் எவன் எழுதினான் என்று சொல்லட்டுமே! தலை எழுத்து என்று ஒன்று உண்டென்றால் அதை மாற்றியே ஆகவேண்டும். இதற்காகவே சண்டை போடுகிறேன்.”

“அன்று பள்ளிகளை மூடினார் ராஜாஜி. நான்தான் காங்கிரசிலிருந்து போகச் சொன்னேன். அந்தக் கோபம் அவருக்கு இன்னும் தீரவில்லை. 53இல் செய்ய முடியாததை எல்லாப் பள்ளிகளையும் மூட முடியாமற்போனதை இப்போது செய்யப் பார்க்கிறார். அதுவும் தி.மு.க.வைக் கொண்டு செய்துவிட நினைத்துச் சூழ்ச்சி செய்கிறார். இந்தச் சூழ்ச்சி என்னிடம் பலிக்காது. மக்கள் அறிவற்றவர்களாகவே இருக்கவேண்டும் என்பது அவர் தர்மம். தாம் தர்மத்தைக் காப்பதாக ராஜாஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் இல்லை என்றால் தர்மமே இல்லாமல் போய்விடுமா? இவர் தர்மம்தான் என்ன? 1953இல் தான் பார்த்தோமே குலக்கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளிகளை மூட முயற்சித்தார். அந்த முயற்சியில் தோல்வி கண்டார். இப்போது தி.மு.க.வின் உதவி கொண்டு நிறைவேற்ற எண்ணுகிறார். ராஜாஜியைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் சதி இனி ஒன்றும் பலிக்காது. நான் இருக்கும் வரை அதைப் பலிக்க விட மாட்டேன். பயப்படவும் மாட்டேன். ஏழை ஏழையாகவே இருக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். அவரது தர்மம் அப்படிச் சொல்கிறது. அதை மாற்றியே தீருவேன். தனி ஒருவனாக நிற்க வேண்டி வந்தாலும் அதை மாற்றியே தீருவேன்.

“உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளை இந்த நாட்டில் நீண்ட காலமாக இருந்துகொண்டு மக்களை மடமையில் ஆழ்த்தி வருகின்றன. இந்த நாட்டிலே உயர்ந்த சாதி என்பவன் அயோக்கியனாய், திருடனாய், சோம்பேறியாய் இருந்தாலும் அவன் உயர்ந்த சாதியில் பிறந்தவன் என்பதற்காக உத்தமன் ஆகிவிடுகிறான். உதாரணமாகப் பாரதத்தில் வரும் தர்மன் ஆட்சியை, தன் உடன்பிறப்பை, தன் மனைவியை, ஏன் தன்னையே அடகு வைத்துப் பகடையாடினான். அவனை நம் நாடு தர்மவான் எனப் போற்றுகிறது. உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதற்காகச் சமுதாயக் குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். ஆனால் தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் நாணயப் பொறுப்புள்ளவனாக இருந்தாலும் இனப் பாகுபாடு அவனை முன்னுக்கு வராமல் தடுக்கிறது. இப்பிளவைப் போக்கி அனைவரும் சமம் என்ற ரீதியிலே மக்களை மக்களாக நடத்துவதுதான் சமதர்மம்.”

Source: Unmaionline.com

Friday, December 08, 2006

பெரியாவா... சின்னவா... (பகுதி 2)

சின்னவா: நமஸ்காரம் அண்ணா...

பெரியவா: நம்ஸ்காரம் ஓய். செளக்கியமா.

சின்னவா: செளக்கியம்மண்ணா... செய்தியல்லாம் பரபரப்பா இருக்குதே பார்த்தேளா?

பெரியாவா: எந்த நீயூஸ சொல்றேள்?

சின்னவா: புது டெக்னிக்கா வியாபாரத்த பெருக்கரா பார்த்தேளா? திருப்பதி - சபரிமலைல..

பெரியவா: அப்படியா.. நான் பார்க்கல... என்ன அது..

சின்னவா: எஸ்.எம்.எஸ்ல தேங்கா உடைக்க திருப்பதில ஏற்பாடு பண்ணிருக்கா. செல்போன் வழியா எஸ்.எம்.எஸ் அனுப்புனா திருப்பதில தேங்கா உடைக்கப் போராளாம். அதுக்கு 30ரூபாயாம்.

பெரியவா: எஸ்.எம்.எஸ் அனுப்பரவாளுக்கு எப்படி தெரியும். தேங்கா உடைச்சாளா இல்லையானுட்டு. சரி நாமே ஏன் காட்டி கொடுக்கனும். அவா இப்படி முட்டாள இருந்தாத்தான் நாம் பொழைக்க முடியும். சபரிமலைல்ல என்ன விசேஷம்..

சின்னவா: மலைக்கு ரூ. 210 பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்பினா அனுப்புவோருக்கு ஒரு டின் அரவணை பாயாசம், ஒரு பாக்கெட் அப்பம், ஒரு பாக்கெட் பஸ்மம் மற்றும் சந்தன வில்லைகள், 10 மில்லி அபிஷேக நெய், ஒரு பாக்கெட் மாளிகைபுரத்து அம்மனின் மஞ்சள் மற்றும் குங்குமம், ஒரு பாக்கெட் வாவர் சுவாமியின் மிளகு மற்றும் விபூதி, ஒரு ஐயப்பனின் லேமினேட் செய்யப்பட்ட புகைப்படம் ஆகியவை பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும்ன்னு சொல்லியிருக்கா..

பெரியவா: இது நல்லாயிருக்கே. தோராயமா கணக்கு போட்டாலே ரூ30 தாண்டாதே. போஸ்டல் செலவ சேத்து கணக்கு போட்டாக்கா 50 தாண்டாதே. நல்ல லாபம் தான். நாமலும் ஏதாவது பண்ணனும்...

சின்னவா: அது தான் நம்ப கைத்தடிங்க கிட்டல்லாம் சொல்லியிருக்கேன். புதுசா ஏதாவது பிசினஸ் ப்ளேன் போடச் சொல்லி. சீக்கிரம் வந்துருவா. ஐஐஎம் டைரக்டர் கிட்ட பேசியிருக்கேன். எல்லாம் நம்மவாதான். பயப்படாதீங்கோ.

(பெரியாரடி: சிடி வியாபாரம் பண்ணுங்கோ.. நல்லா ஓடும்)

பெரியவா: வேற சேதி ஏதேனும் இருக்கா?

சின்னவா: அந்த அபிஷ்டு ராமசாமி சிலைய உடைச்சுட்டா இந்து மக்கள் முண்ணனி பசங்க சேர்ந்து..

பெரியவா: அந்த சோவுக்கு எதுக்கு சில எப்ப உடைச்சா.. இப்பல்லாம் நம்மல பத்தி எழுதறதே இல்ல. கேட்டா சர்குலேசன் பாதிக்கும்ன்னு சொல்றான். வேணும் அவனுக்கு..

சின்னவா: நான் சொல்றது பெரியார் சிலைய சீரீரங்கத்துல உடைச்சுட்டாலாம்.

பெரியவா: நல்ல சேதிதான். சும்மா நம்ம பிசினஸ் நடக்குர எடுத்துல வந்து இப்படி பண்ணினா உடைக்க வேண்டியது தான்...

சின்னவா: அதனால நம்ம சேலம் மடத்துல பூந்து இவா உடைச்சுட்டாலாம்.

பெரியவா: அய்யோ? அப்படியா? எவ்வளவு நஷ்டம். விசயம் தெரிஞ்சா மக்கள் வரமாட்டாங்க.. பத்திரிக்கைக்கு போன் போட்டு சொல்லு விசயம் வரமா இருக்க... நான் அப்படியே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்.

Wednesday, December 06, 2006

ராஜபக்சவுடன் மணிசங்கர ஐயர்

சில நாட்களுக்கு முன் செய்தி:


இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் மண் யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் பட்டினிச்சாவில் மடிய வைக்கும் இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தை எதிர்த்து தமிழ்நாட்டுத் தமிழ் மாநகர முதல்வர்கள் அனவரும் கட்சி வேறுபாடின்றி ராஜபக்ச தலைமை தாங்கும் மாநாட்டை ஒட்டு மொத்தமாக தவிர்த்துக் கொண்டார்கள். ஆயிரக் கணக்கான தமிழர்கள் ராஜபக்சவின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தி தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனரென இலங்கையின் சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் செய்தி வெளியிட்டதைப் பார்த்துப் பூரித்துப் போன ஈழத்தமிழர்களின் கண்களை உறுத்தியது வாயெல்லாம் பல்லாக மகிந்த ராஜபக்சவுடன் மணிசங்கர ஐயர் காட்சியளிக்கும் படம்.

ஈழத்தமிழர்களின் வாழ்வில் அமைதி நிலவ வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு இன்னல் விளைவிப்பவர்களை எதிர்ப்பதில் தமிழ்நாடு முழுவதும் சாதி, சமய, கட்சி வேறுபாடின்றி ஒன்று படுவோம் என முழுத் தமிழகமும் ஒன்று பட்டு நிற்கும் போது, ஒரேயொரு தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர், அதுவும் தமிழ்நாட்டில் தமிழ் கொஞ்சும், தமிழ் வளர்த்த, "கரவின்றி நன்மாமலர் கொண்டே இரவும் பகலுந் தொழுவார்கள் சிரமொன்றிய செஞ்சடையான்வாழ் வரமாமயிலாடுதுறையின்" தமிழர்களின் உறுப்பினர் மட்டும் மகிந்தவை வரவேற்கப் போகின்றாராம், மகிந்தவுடைய நட்பும், அவருடன் காட்சியளிக்கும் புகைப்படமும், தமிழர்களின் உணர்வை மதிப்பதை விட முக்கியமானதாக மணிசங்கரனின் சிந்தனைக்குப் புலப்பட்டுள்ளது.

தற்போதைய செய்தி:

மணிசங்கர ஐயர் ஏன் ராசபக்சேவை வரவேற்றார் என்று செய்தி வெளியாகி உள்ளது. அவர் மகளின் திருமணம் தில்லியில் ராசபக்சே, சந்திரிகா முன்னிலையில் நடந்ததாம்.

நம் இனமக்களை கொன்று குவிக்கும் ஒரு பிணம் தின்னும் சாத்தான் தலைமையில் திருமணம். பலே ... பலே..


தமிழ் மக்களின் குருதியில் நனைந்தும், அவர்களின் பிணங்களின் மீது நடந்தும், ஒரு சிங்கள இனவாத தலைவன் தலைமையில் திருமணம். பலே பலே...

பாப்பான் குடுமி சும்மா ஆடாது... பார்ப்பான் வசூலைத்தான் பார்ப்பான் என்று கூறியது எழுதியது சரியாகிவிட்டதே... இப்படிப்பட்டவர்கள் இருக்கும் போது ஈழ நண்பர்களே உங்களின் சுதந்திரத்தை நீங்களே அடைய வேண்டியது தான்.

Tuesday, December 05, 2006

திருமண (சமஸ்கிருத) மந்திரத்தின் தமிழாக்கம்

சில நாட்களுக்கும் முன் தமிழ்னாடுடாக்.காமில் நண்பர் சபேசன் அவர்கள் திருமண (சமஸ்கிருத) மந்திரத்தின் தமிழாக்கத்தை போட்டிருந்தார். அதை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள இங்கே பதிக்க கடமைப்பட்டுள்ளேன்.
திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.


''சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.


இதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான். ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள்
இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)


"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.


இன்னும் ஒரு மந்திரம்:


"விஷ்ணுர் யோனி கர்ப்பயதுதொஷ்டா ரூபாணி பீசமிதுஆசிஞ்சாது ப்ரஜபதிதாதா கர்ப்பந்தாது..."


இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? ) உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.

திருமணத்தின் போது சொல்லப்படுகின்ற சம்ஸ்கிருத மந்திரத்தின் பொருளை தமிழில் அழகாக நண்பர் சபேசன் (www.webeelam.com) அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்.

அரசன் மனைவி மட்டுமல்ல, எல்லாப் பெண்டிரையும் பூப்புக் காலத்தில் பஞ்சபூதங்கள் அனுபவித்து விடுகின்றன என்று வேதம் சொல்கிறது. அப்படி பார்த்தால் ராணியும் (எந்தப் பெண்ணுமே) பத்தினி இல்லைதான்.” பெண்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வேதத்தின்படி அவர்கள் பத்தினிகள் இல்லையென்பதால் வேதத்தை நம்புகிறவர்கள் மத்தியில் “பத்தினி”ச் சண்டை ஏற்படுவதில்லை.

இந்து மதத்திற்கு வேத மதம் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆகவே வேத மதத்தைச் சேர்ந்த பெண்களை அவர்களின் பூப்புக்காலத்தில் பஞ்ச பூதங்கள் அனுபவித்துவிட்டு போய்விடுகின்றன. அவர்களும் அப்போதே தங்கள் பத்தினித் தன்மையை இழந்து விடுகிறார்களாம். இதுதான் வேதம் கூறுவதாம். சமஸ்கிருதத்தில் ஓதப்பட்ட மந்திரகங்கள் தமிழ் படித்தி பாடக்கூடாது என்பார். கொஞ்சம் சிந்தித்துபாருங்கள். அப்படி பாடினால் திருமண மண்டபத்தில் என்ன நடக்கும் என்று. அப்படி பாடுபவரின் கதி?????


இப்படிப்பட்ட மந்திரங்கள் உங்கள் திருமணங்களில் ஓதி திருமணம் நடக்கவேண்டுமா?


இப்படிப்பட்ட மந்திரங்கள் தேவையில்லை, தமிழில் வாழ்த்துங்கள் அல்லது சீர்திருத்த திருமணங்கள் நடத்துங்கள் என்றார் ஒருவர். ஆனால் அவர் (முக்கியமாக திராவிட கழகத்தினர்) தவறாக மந்திரங்களையும், வேதங்களையும் அர்த்தப்படுத்திக்கொண்டார் என்று இங்கே ஒருவர் மார்தட்டினார். இதற்கு அவர் ஏதாவது விளக்கவுரை எழுதுவாரா? பெரியார் ஏன் எதற்காக இப்படிப்பட்ட ஒரு கேவலமான வேதங்களை ஊக்குவிக்கும் ஒரு குலத்தை எதிர்த்தார் என்று புரிகிறாதா? சமஸ்கிருதம் தேவபாசை என்பதன் அர்த்தம் இப்போது நண்பர்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

Monday, December 04, 2006

சந்திக்கு வந்த சாவர்க்கரின் தேசப்பற்று:

ஒருவரின் இழிசெயல்கள் அனைத் தும் வெளிச்சத்துக்கு வந்தாலும், எதைப் பற்றியும்அவர் அவமானம் கொள்வதே இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. வினாயக் ராம் சவார்க்கரைப் பொறுத்தவரை ஒவ் வொரு ஆவணமும் அவரது ஏமாற் றுத்தனத்தை, அவரது மனதின் நச்சுத் தன்மை மற்றும் கொலை செய்வதில் அவருக்கு இருந்த தணியாத தாகம் ஆகியவற்றையே வெளிப் படுத்துகின்றன.

1966-இல் அவர் காலமானார். ஆனால் சவார்க்கர் இறந்ததற்கு அடுத்து ஆண்டில் காந்தியின் கொலயும் நானும் என்ற தனது புத்தகத்தில் காந்தி கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நாதுராமின் சகோதரர் கோபால் கேட்சே சவார்க்கரூக்கும் காந்தியைக் கொன்ற நாது ராம் கோட்சேயுக்கும் இடையே நிலவி வந்த நெருங்கிய உறவு பற்றிய செய்தியை வெளிப்படுத்தினார். மிகுந்த முயற்சியின் பேரில் காந்தி கொலை வழக்கு விசார ணையின் போது மறைக்கப்பட்டதாகும் இந்தச் செய்தி.

கொலை வழக்கில் அப்ரூவரான திகம்பர பாட் கேயின் சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருந்தபோதும், சவார்க்கர் செஷன்° நீதிபதியால் விடுவிக்கப்பட்டதன் காரணமே, திகம்பர பாட்கேயின் சாட்சியத்தை உறுதிப்படுத்த சட்டப்படித் தேவையான மற்றொரு தனிப்பட்ட சாட்சி இல்லை என் பதுதான். இத்தகவல் உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஜே.எல். கபூர் அவர்கள் 1970-ல் காந்தி கொலை பற்றி அளித்த அறிக்கை யினால் வெளியாயிற்று. காந்தி யைக் கொலை செய்ய சவார்க்கரும் அவரது கூட்டமும் ஒரு சதித்திட் டம் தீட்டி செயல்பட்டதைக் கண்டுபிடித்து அவர் கூறினார். சவார்க்கரின் மெய்க்காப்பாளர்களான அப்பா ராமச்சந்திர காசரும், சவார்க்கரின் செயலாளர் கஜனன் விஷ்ணு தாம்லேயும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவில்லை.

சவார்க்கர் இறந்த பின்பே அவர்கள் உண்மைகளை நீதிபதி கபூரிடம் கொட்டி விட்டனர். இவை மட்டுமன்றி, வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு வராத மேலும் பல சாட்சியங்கள், உண்மைகள் அவர் கைவசம் இருந்தன.அரசு ஆவணக் காப்பகச் செய்திகளின் அடிப் படையில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் 1875-ல் ஒரு புத்தகத்தை வெளியிட்டது. அந்தமானில் இருந்த தீவாந்திரச் சிறைகள் என்பது அந்த நூலின் பெயர். மதவேறுபாட்டுக் கண்ணோட்டம் கொண்டவர் என்று புகழ் பெற்ற ஆர்.சி. மஜும்தார்தான் அதனை எழுதிய ஆசிரியர்.

ஆவணங்களில் இருந்த ஒவ்வொன்றையும் சவார்க்கருக்கு ஆதரவாகவே அவர் மிகைப்படுத்திக் காட்டினார். ஆனால் ஆவணங்களை மறைக்க மட்டும் அவரால் முடிய வில்லை. அந்த ஆவணங்களே சவார்க்கரின் குட்டை முழுமையாக அம்பலப்படுத்திவிட்டன. மாபெரும் தேசபக்தர் என்று சங் பரிவாரத்தால் போற்றி வணங்கப்பட்ட சவார்க்கர் அன்றைய ஆங்கிலேய அரசுக்கு தன் வாழ்நாள் முழுவதிலும் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள், உறுதி மொழிக்கடிதங்கள் பலவற்றைப் பற்றிய செய்தி முதன் முதலாக வெளிப்பட்டது. இவ்வாறு அன்னிய ஆட்சியிடம் கருணையும் மன்னிப்பும் கோரிய ஒருவரையே சங் பரிவாரம் வழிபடும் முன்னோடியாகக் கருதியது.

இந்தியர்களின் கோரிக்கைகள் பால் அனுதாபமும் ஆதரவும் கொண்ட நாசிக் மாவட்ட ஆட்சியர் ஏ.டி.எம். ஜாக்சனின் கொலைக்காக சிறை தண்டனை வழங்கப்பட்ட சவார்க்கர் 1911-ல் அந்தமானுக்குக் கொண்டு வரப்பட்டார். கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்காக மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை இது. 1909-ல் நிகழ்ந்த இந்திய அலுவலகத்தின் கர்சான் வைலியின் கொலை , மும்பை தற்காலிக ஆளுநர் எர்ன°ட் ஹாட்சனை 1931-ல் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி, 1948 ஜனவரி 30 அன்று செய்யப்பட்ட காந்தி யின் கொலை ஆகிய மற்ற மூன்று கொலை வழக்குகளில் இருந்தும் அவர் தப்பித்துக் கொண்டார். ஆனால் இந்த வழக்கில் துப்பாக் கியைக் கையாண்டவன் வேறு யாரோ; ஆனால் கொலை செய்யத் தூண்டிவிட்டவர் சவார்க்கர்தான்.1911 முதல் 1950 வரை சவார்க்கர் அளித்த மன்னிப்புகள் மற்றும் உறுதிமொழிகளின் பட்டி யல் ஒன்று இங்கே அளிக்கப்படுகிறது. இந்த வீர தீரச் செயலுக்காத்தான் அவரது உருவப்படம் நாடாளு மன்ற மய்ய மண்டபத்தில், அவர் எவரைக் கொலை செய்யச் சதிசெய்து தூண்டினாரோ அந்த காந்தியின் படத்திற்கு எதிராக அவரது அரசியல் வாரிசுகாளால் வைக்கப்பட்டது.

1.அந்தமான் சிறையில் சவார்க்கர் 1911 ஜுலை 4 அன்று அடைக்கப்பட்டார். ஆறுமாத காலத்திற் குள் அவர் தனது கருணை மனுவை சமர்ப்பித்தார்.

2. 1913 அக்டோபர் மாதத்தில் அந்தமான் சிறைக்குப் பார்வையிடச் சென்ற வை°ராயின் நிர்வாகக் குழுவின் உள்துறை உறுப்பினரான சர் ரெஜினால்ட் கிராடக் மற்றவர்களுடன் சவார்க்கரை யும் சந்தித்தார். கருணை வேண்டிய சவார்க்கரின் கோரிக்கை பற்றிய குறிப்பு அவரது 1913 நவம்பார் 14 நாளிட்ட குறிப்பில் பதிவாகியுள்ளது. “அரசு விரும் பும் எந்த நிலையிலும் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். அரசு என்னும் பெற்றோரிடம் அடைக் கலம் தேடுவதைத் தவிர வழிதவறிப் போன மகன் வேறு எங்கு புகலிடம் தேட இயலும்?” புரட்சிக் காரராகவும், தேசப் பற்றாளராகவும் கருதப்படும் சவார்க்கரின் கடித வாசகங்கள் இவை. சவார்க்கரின் மனு கருணை காட்டத் தகுந்தது என்று கிராடக் குறிப்பாகப் பதிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட மனுக்களிலும் இது போன்ற வாசங்களே நிரம்பியிருந்தன.

3. 1920 மார்ச் 22 அன்று ஆங்கிலேய சட்ட மன்றத்தில் சவார்க்கரின் ஆதரவாளான ஜி. எ°. கோபார்டே முன் வைத்த கேள்வி இதுதான்: “தாங் கள் விடுதலைசெய்யப்பட்டால், ராணுவத்தில் சேர்ந்து ஆங்கில சாமாராஜ்யத்துக்கு போரில் நாங்கள் சேவை செய்வோம் என்றும், சிர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், அதனை வெற்றி பெறச் செய்வோம் என்றும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உறுதுணையாக இருப்போம் என்றும் சவார்க்கரும் அவரது சகோதரரும் 1915 மற்றும் 1918ம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பியது உண்மை தானா?” உள்துறை அமைச்சர் சர் வில்லியம் வின் சென்ட் பதிலளித்தார்: இரண்டு மனுக்கள் ஒன்று 1914-லும் மற்றொன்று 1917-லும் வினாயக் தாமோதர் சவார்காரிடமிருந்து போர்ட் பிளேர் கண்காணிப் பாளர் மூலம் வந்து சேர்ந்தன. முந்தைய கடிதத்தில் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கினால் போரின் போது அரசிற்கு எந்த நிலை யிலும் சேவை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். இரண் டாவது மனுவில் பின்னர் கூறப்பட் டது மட்டும் இருந்தது. வின்சென்ட் 1914 என்று குறிப்பிட்ட 1913-ல் ஒரு விண்ணப்பமும் 1917-ல் இன்னொரு விண்ணப்பமும் அனுப்பப்பட்டன.

4. முதன் முதலாக இங்கு வெளியிடப்பட்டுள்ள 1920 மார்ச் 30 நாளிட்ட ஆவணம் ஆசிரியர் தனது புத்தகத்தில் சொல்லத் தவறியதைத் தெரிவிக்கிறது. அது கோழைத்தனமானது. காலம் கடக்கும் முன் தனது வழக்கைக் கூற ஓர் இறுதி வாய்ப்பு அளிக் கும்படி அதில் சவார்க்கர் கெஞ்சிக் கேட்டிருந்தார். அய்ந்து மாதங்களுக்கு முன் சவார்க்கருக்கு ஏற்பட்ட வயிற்றுக் கடுப்பு நோய் குணமடைந்து விட்டது என்று வின்சென்ட் தெரிவித்தார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அரவிந்த கோஷின் சகோ தரர்கள் பாரின் மற்றும் இதரர்களின் வழக்குகளைக் குறிப்பிட்டு அவர் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொண்டார். “ தீவிரமான சதித்திட்டம் ஒன்றிற்காக அவர்கள் போர்ட் பிளேரில் இருந்தார்களா என்றே அய்யப்பட வேண்டியுள்ளது.” என்று விசுவாசம் நிறைந்த சவார்க்கர் கூறினார். “இது போன்ற தீவிரவாத அமைப்பில் நம்பிக்கை கொண்டவனல்ல நான். குரேபாட்கின் அல்லது டால்°டாய் போன் றோரின் அமைதி நிறைந்த தத்துவரீதியிலான தீவிரவாதத்தைக் கூட ஏற்றுக் கொள்பவனல்ல நான். புரட்சி மனப்பான்மை கொண்ட எனது கடந்த காலத்தைப் பற்றி நான் கூறவருவது இதுதான்: மன்னிப்பைக் கோரி பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இப்போது மட்டுமல்லாமல், 1914 மற்றும் 1918-ஆம் ஆண்டுகளிலும் கூட அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வேன் என்றும் திரு மாண்டேகு அத்தகைய சட்டம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியதும் நான் அதன் வழி நிற்பேன் என்றும் அரசுக்கு எனது கருத்துகளைத் தெரிவித்து கடிதங்கள் எழுதியுள்ளேன். அவரது சிர்திருத்தங்களும் மற்றும் அது பற்றிய பிரகடனமும் எனது கருத்துகளை உறுதிப்படுத்தின. ஒழுங்கு முறையிலான, அரசமைப்பு சட்டப்படியான முன் னேற்றத்திலும் நான் நம்பிக்கை கொண்டிருப்பதாக வும் அதற்கு ஆதரவாக நிற்க நான் தயாராக இருப்பதாகவும் சமீபத்தில் நான் வெளிப்படையாக சபதம் ஏற்றுள்ளேன்.”“அரசமைப்புச் சட்டப்படியான வழியைப் பின்பற்றி நடப்பது, ஆங்கில ஆட்சியின் கரங்களைப் பலப்படுத்தி, இருவருக்குமிடையே ஓர் அன்புப் பிணைப்பை உருவாக்கி, ஒருவருக் கொருவர் உதவி செய்து கொண்டு வாழ்வதற்காக என்னால் இயன்ற அளவு பாடுபட முயல்வது என்னும் எனது திடமான நோக்கத்தை வெளிப் படுத்துவதில் நான் உண்மையானவ னாக இருக்கிறேன். இந்தப் பிரக டனத்தின் மூலம் தனது பெருமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ள இந்த மாபெரும் ஆங்கிலப் பேரரசு எனது மனத்தை வென்று அதனை ஆதரிக் கச் செய்தது.” அவரது நாட்டுப் பற்றுக்கு இதனை விட வேறு சான்று வேண்டுமா !இவ்வாறு சவார்க்கர் தன் கடிதத்தை முடிக்கிறார்: “அரசு நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்ட நியாயமான காலம் வரை அரசியலில் பங்கெடுத்துக் கொள்வ தில்லை என்ற உறுதிமொழியை அளிக்க நானும் எனது சகோதரரும் விருப்பமுடன் தயாராக இருக்கி றோம். இதுவோ அல்லது வேறு எந்த ஒரு உறுதி மொழியோ எடுத்துக் காட்டாக, நாங்கள் விடுதலை செய்யப்பட்ட புன், ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் இருப்பது அல்லது எங்களது நடவடிக்கை பற்றி காவல்துறைக்கு அவ்வப்போது தெரிவிப்பது என்பது போன்ற எந்த வகையான நிபந்தனைகளையும், அவை அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உண் மையான நோக்கம் கொண்டவை என்பதால், நானும் எனது சகோதரரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம்.

5. 1995 ஏப்ரல் 7 அன்று ஃப்ரண்ட்லைனில் வெளியிடப்பட்டிருந்த அவரது 1924-ஆம் ஆண்டின் மன்னிப்புக் கடிதத்தில் அளிக்கப்பட்டிருந்த உறுதி மொழிகள் உள்ளிட்ட அனைத்திலும் இழவான வகையில் மன்னிப்பு கோருவது, எந்த வகையான நிபந்தனைகளுக்கும் உட்படுத்திக் கொள்வது என்ற ஒரு போக்கே காணப்படுகிறது.

6. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் படுவதைத் தவிர்க்க பம்பாய் காவல்துறை ஆணையருக்கு 1948 பிப்ரவரி 22 அன்று எழுதிய கடிதத்தில்: “அரசு விரும்பும் எந்த ஒரு காலம் வரையிலும் எந்த வித மத அல்லது அரசியல் செயல்பாடுகளிலும் நான் பங்கெடுத்துக் கொள்ளா மல் இருப்பேன்.”

7 . பம்பாய் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சாக்ளா மற்றும் நீதிபதி கஜேந்திரகட்கர் ஆகியோ ருக்கு 1950 ஜுலை 13 அன்று சவார்க்கர் எழுதியுள்ள கடிதத்தில்: “ஓராண்டு காலத்திற்கு எந்த ஒரு அரசி யல் நடவடிக்கை யிலும் ஈ டுபடாமல் பம் பாயில் உள்ள எனது வீட்டுக்குள்ளேயே இருப் பேன்” என்று தெரிவித்துள்ளார். இந்து மகா சபைத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார்.1939 அக்டோபர் 9 அன்று வை°ராய் லின்லித்கோ பிரபுவுக்கும் சவார்க்கருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பைப் பற்றி மர்ஜியா கசோலலி குறிப்பிடுகிறார்: இந்த தேசியவாதி அப்போது கூறுகிறார்: “இப்போது நம் இருவரது நோக்கங் களும் நலன்களும் ஒன்றாகவே உள்ளவை. இதனால் நாம் இருவரும் இணைந்தே செயலாற்ற வேண்டும்.” எவ்வாறு செயலாற்றவேண்டும்? காந்திக்கும் காங்கிரசுக்கும் எதிரா கச் செயல்பட வேண்டும் என்ற கருத்தே இது என்பதில் எந்த வித அய்யமுமில்லை. (“1930-ஆம் ஆண்டுகளில் இந்துத்வாவின் அயல்நாட்டு ஒப்பந்தங்கள்” என்ற அவரது கட்டுரை 2000 ஜனவரி 22 எகனாமிக்° அன்ட் பொலிடிகல் வீக்லி என்ற பத் திரிகையில் வெளிவந்துள்ளது.)

இது போன்ற சவார்க்கர் பற்றி வெளிவரும் தகவல்கள் அவரது வாரிசுகளையும் பெரும்கவலை கொள்ளச் செய்துள்ளது. பாபர் மசூதி இடிப்பதற்கு முன் 1992 டிசம்பர் 5 அன்று வாஜ்பேயி ஆற்றிய பேச்சு ஒன்று 2005 பிப்ரவரி 28 அவுட்லுக் இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அதே காலவாக்கில் வெளியிடப்பட்ட மலாய் கிருண்ஷ்ணதர் அவர்களின் ஓபன் சீக்ரட் (வெளிப்படையான ரகசியங் கள்) என்ற புத்தகம் பாபர் மசூதி இடிப்பில் அத்வானிக்கு உள்ள பங்கை வெளிப்படுத்துகிறது (பக்கம் 442௪43)இதுபோன்று ஒவ்வொரு ஆவணமும் வெளிச் சத்துக்கு வரும்போது, அவர்கள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போகிறவர்களாகவே இருக்க வேண்டும்.-

நன்றி: ஃப்ரண்ட் லைன் 8-4-2005தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.

Source: Unmaionline

கடவுளைப் பற்றி இவர்கள்

எந்த ஒரு கடவுளால் அல்லது மதத்தால் ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியவில்லையோ! ஓர் அனாதையின் பசித்த வாய்க்கு உணவளிக்க முடியவில்லையோ! அந்தக் கடவுளையும், மதத்தையும் நான் ஒருபோதும் நம்புவதற்கில்லை.- சுவாமி விவேகானந்தர்

கடவுள் - இந்த நான்கு எழுத்துச் சொல் பல கோடி மக்களை சோம்பேறிகளாக மாற்றியிருக்கிறது. திறமைமீது நம்பிக்கை குறைந்து கடவுளிடம் கையேந்த வைத்திருக்கிறது.- சிங்காரவேலர்

நான் ஒரு கம்யூனி°ட். கடவுளை நம்புவது இல்லை. கம்யூனி°டுகள் கடவுளை நம்புவதில்லை. மனிதனை நம்புகிறவர்கள். மனிதனை நேசிப்பவர்கள்.- சேகுவேரா

விதியில் நம்பிக்கை வைக்காதே! உன்னுடைய வலிமையின்மீது நம்பிக்கை கொள். உன் அடிமைத்தனத்தை நீக்குவதற்காக கடவுளை நம்பிக்கொண்டிராதே.- டாக்டர் அம்பேத்கர்

கடவுள் இருப்பாரேயானால் அவர் நல்லவர் என நாம் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? அவர் கருணைமிக்கவர்; மாந்தருடைய குழந்தைகளைப் பற்றி அக்கறை கொள்பவர் என நாம் எப்படி நிரூபிக்க முடியும்?- இங்கர்சால்

மனிதனே கடவுளைப் படைத்தான் என்று நான் உணர்கிறேன். வாழ்க்கையின் தொடக்கத்தைப் பற்றிய ஒரு மறைபுதிர், எப்போதுமே இருக்கிறது. காலத்தின் தொடக்க நிலைக்குப் பின்னோக்கிச் சென்று சிந்திக்க விரும்புகிறேன். ஆனால் நம்பிக்கை வைக்கத்தக்க அளவுக்கு கடவுள் பயனுள்ளது என்று நான் நினைக்கவில்லை. இதற்கெல்லாம் ஓர் அவசியம் இருப்பதாக தெரியவில்லை. இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கிறபோது அறிவியல் ஞானத்தை நம்புவதே இப்போது மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.- சத்யஜித்ரே (வங்க கலைஞர்)

தேச பக்தரும், முன்னாள் தினமணி ஆசிரியருமான டி.எ°. சொக்கலிங்கம் அவர்கள் 12.7.1933இல் ‘காந்தி’ இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து, “தெய்வத்தின் பெயரால் உலகில் நடக்கும் அக்கிரமங்களைப் போல வேறு எதன் பெயராலும் நடக்கவில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் தரகனாக எப்போது புரோகிதன் ஏற்பட்டானோ, மோட்சமோ நரகமோ அவன் தயவால்தான் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது மனிதன் உள்ளத்தில் தோன்ற ஆரம்பித்ததோ அப்போதே மனிதனின் சுயேச்சை உணர்ச்சியும் ஒழுக்கமும் கெட்டுப்போக ஆரம்பித்தன.மனிதனின் ஒழுக்கத்தை விருத்தி செய்வதற்காகத் தோன்றிய மதம் முடிவாக ஒழுக்கக் கேட்டிற்கு மூலமாய் நின்றது. காம வெறி கொண்ட அயோக்கியர்களுக்கும் ஒரு காசுக்கும் உதவாத மூடர்களுக்கும் சன்னியாசம் ஒரு சரியான புகலிடமாய் இருக்கிறது.

பெரியார் இல்லையென்றால்...?

முதலில் பெரியார் கொள்கை என்ன என்பதை பார்க்க வேண்டும். மனிதனை, மனி தன் அடக்கி, ஒதுக்கி, மட்டம் தட்டி நடக்கக் கூடாது. மனிதன் (எல்லோரும்) மானமும் அறிவும் உள்ளவர்களாக வாழவேண்டும் என்பதுதான் பெரியார் கொள்கையின் அடிப்படை. இதை ஏற்றுக் கொள்ளாத உலக நாகரிக சமுதாயம் ஏதாவது இருக்க முடியுமா?இந்தக் கொள்கை, உலகம் முழுவதும் குறிப் பாக நமது சமுதாயத்தினரிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

எதையும் ஆராய்ந்து பார்த்து அதன் மெய்ப் பொருள் காண்க. அதுவே அறிவு என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் கூறினார்.“உன்னையே நீயறிவாய். ஏன், எதற்கு என்று கேள்வி கேள். கேள்வி கேட்காமல் கீழ்ப்படியாதே” என்றிக்ர் சோக்ரடீ°. அப்படிக் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிதல் என்பது விலங்குகளின் குணம், இயல்பு என்றார் அவர்.

மனிதர்கள் - குறிப்பாக தமிழர்கள் மானமும் அறிவும் உடையவர்களாக வாழவேண்டும். மூடத் தனங்கள் அழிய வேண்டும் என்றார் பெரியார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆரியம் பரப்பி வந்த இருட்டை அகற்ற வந்த ஒளிவிளக்குத் தான் பெரியார் கொள்கை.

பெரியார் கொள்கையைச் சொல்லி சிலர் பணம் சம்பாதித்தார்கள். சிலர் பதவி பெற்றார்கள். சிலர் அரசியல் நடத்தினார்கள். அதையும் கூட தமது கொள்கை நீர்த்துப் போய்விட்டதாகப் பெரியாரே ஒப்புக் கொள்ளமாட்டார். எப்படியோ, ‘சூத்திரர்கள்’ வந்துவிட்டார்களே என்று பாராட்டத்தான் செய்வார்!இரண்டாயிரம் ஆண்டு பிரச்சாரத்தை, காலங் காலமாக நமது இரத்தத்தோடு ஊறிப்போன ஒன்றை, ஓர் 50 ஆண்டுகளில் ஓர் அளவுக்காவது பெரியார் மாற்றியிருக்கிறார் என்றால் அது அவரது கொள்கைத் தோல்வியையா காட்டும்? முன்பு ஆரியர் - சூத்திரர் என்று இரு பிரிவினை இருந்தது. இப்போது சூத்திரர்களே தங்களுக்குள் சிலர் மேல் சாதி, பிறர் கீழ் சாதி என்று திடீரென ஆதிக்க சக்திகளாக ஆக முற்படுகிறார்கள். இது தான் அவலம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஏறத்தாழ அய்ம்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமையைப் பார்த்தால் பெரியார் கொள்கை வெற்றிதான் பெற்றிருக்கிறது. இப்போது சூத்திரர்கள் கோவிலுக்குள் போக முடிகிறது. பெரிய பதவிகள் வகிக்க முடிகிறது. பிறருக்கு சமமாக நடக்க முடிகிறது. இதெல்லாம் பெரியார் இல்லாமல் சாத்தியப்பட்டு இருக்குமா?

Sunday, December 03, 2006

கடவுள் பற்றி காமராசர்

தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோயில் பழம்பெ ருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந் தன. கோயில் கோபுரத்திலெல் லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளையெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களை யெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயி ருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் ண்டனர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங் கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரி வட்டமும் கட்டிக் கொள்வார். தீபா ராதனையைத் தொட்டுக் கொள்வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார்... விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக் கணும் அதுதான் மனுஷ நாகரிகம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக்கூடாதில்லியா.... அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே...!” என்பார்.

தலைவர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக் கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து, “இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு...?” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.“ஏன்ய்யா... குருக்கள்.... நீங்க எவ் வளவு காலமா இந்தக் கோயி லுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க.... இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரியாதா...? எந்த வருஷத்து ப°ஸு (க்ஷரள)? எத்தனை கிலோமீட்ட ருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம் பித்ததும் குருக்கள் உள்பட எல் லோரும் ஆடிப் போனார்கள். தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண் ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழ மாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புன°காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு... அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காம ராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர். தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும்.

இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு...!’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப் பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க...!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலை வர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச் சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன். “கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்... பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தி யங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.

“கடவுள்னு ஒருத்தர் இருக் கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?”“ இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண் ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபி ஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா...?” என்றார்.

நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலி ருக்கே...” என்று ஆரம்பிக்கவும். அவரே, “அக்னாடி°ட்டுன்னு” சொல்றீயா...? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா... மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்... ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவ லைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேற ணும்னுதானே ஒவ்வொரு மடாதி பதியும் நினைக்கிறான்... இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா...?” என்று கேட்டார்.”

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக்கிறீங்களா...? இருந்திருந்தா இந்த அயோக் கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே...! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட் டாரே...?” என்றேன்.“மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண் ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்...? ரொம்ப அயோக்கியத்தனம்...!” என்றார் காமராசர்.

எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா.....? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழுநாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை...?” என்று கேட்டேன்.“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி - ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்”னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே.... அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக் கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்னென்°” பண்றவனோட வேலை. “நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத் திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே...! தனிப்பட்ட முறை யில நான் கோவில், பூஜை, புன°காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்...” என்று மிகத் தெளிவாகப் பேசினார்.

“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா...?” எனக் கேட்டேன்.“அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில் லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்... எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்....?’ அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்.... அந் தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ் டியாவாவது வளருமால்லியா...?”“பதினெட்டு வருஷமா மலைக் குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக் குப் பி.ஹெச்.டியா கொடுக்கி றாங்க...? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்.

பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் °டேடசு’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலாமில்லியா....” ஊருக்கு நூறு சாமி... வேளைக்கு நூறு பூஜைன் னா.... மனுஷன் என்னிக்கு உருப்படறது...? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்..... வறுமை - சுகாதாரக்கேடு.... ஏற்றத் தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு.... பூஜைன் னேன்.....? ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்...?”தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர் சாலை, பெரியாரை நான் கண்டெடுத்தேன்.

“அப்படியானா.... நீங்க பல தெய்வவழிபாட்ட வெறுக்கிறீங்களா.... இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா....?” என்று கேட்டேன்.அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல்... “லட்சுமி, சர°வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபல மான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா...? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதி லேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறி°தவ மதத்தி லேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக் கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்....? அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்... காங்கிர° - கம்யூ னி°ட் - தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்... மதம் மனிதனுக்குச் சோறு போடுமா...? அவன் கஷ்டங்களப் போக்குமா...? இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு...? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா... நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே...! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே....! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்...?” தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்த மான முடிவை அவர் வைத்திருப்ப தைப் பார்த்து நான் வியந்தேன்.

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே... அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே...?” என்று வினாத் தொடுத்தேன்.தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “டேய்... கிறுக்கா... நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்....? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவு ளாக்கிட்டேன்னேன்....! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயக னுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறா னில்லையா... அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப் பட்டிருக்கிற விஷயங் கள எடுத்துக்கணும். ஆசாமிய ட்டுபுடணும்.” ....காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக் கள் ராமனை, கிருஷ்ணனைக்கும் பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.... புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத் திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங் கள அடிமையா ஆக்கிவச்சிருக் கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவ ராத்திரி கதையைச் சொல்லி சர° வதி பூஜை பண்றான். விக்னே° வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களை யும் தன்னோட மதத்தின் பிடிக் குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவிள கொண் டாடுனதுமில்ல... எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல... புதுசு கட்டுன துமில்ல... பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்...” என்று விளக்கினார். “மதம் என்பதே மனிதனுக்கு அபின்...!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே...?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன். தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போன தில்ல. மனிதனைச் சிந்திக்க வைக் காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல... பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா...? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழி யில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டி யல்ல கொண்டு போய்க் கொட் றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக் கையை வளர்த்திருக்கா? படிச்ச வனே அப்படித்தான் இருக்கான் னேன்....” என்றார்.

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவ முண்டா...? அதிலேருந்து எப்போ விலகுனீங்க...?” இது நான்.“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு... எல்லாம் ‘பார்பர் ஷாப்’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப் பானா...?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.

“அப்படியானா... மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே... அதப்பத்தி....?” என்று கேட்டேன்.“அடுத்த மனுஷன் நல்லாருக் கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த் தனை. இதுல நாம சரியா இருந்தா... தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்...!” காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லா மல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா...?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.-

சொன்னவர்:-திரு. சீர்காழி பெ. எத்திராஜ்முன்னாள் மேலவை உறுப்பின